பக்கங்கள்

ஞாயிறு, 12 பிப்ரவரி, 2017

தந்தை பெரியாரின் கருத்துரைகள்


எனக்குச் சுயநலமில்லை என்று கருதாதீர்கள்; நான் மகா பேராசைக் காரன். என்னுடைய ஆசையும் சுயநலமும் எல்லையற்றன. திராவிட சமுதாய நலனையே என் சொந்த சுயநலமாக எண்ணி இருக்கிறேன். அச்சமுதாயத்திற்கு வேண்டிய செல்வமும் பதவியும் என்பனவற்றில் அளவற்ற ஆசை கொண்டிருக்கிறேன். அந்த சுயநலத்திற்கே நான் உழைக்கிறேன்.
***
"நம் இழிவு நீக்கம், நம்முன்னேற்றத் தடை நீக்கம், ஆரியம் சுமத்திய மூடநம்பிக்கையில் இருந்துவிடுபடுதல், பகுத்தறிவாளர்களாக - மானமுள்ள சமுதாயமாக ஆவது ஆகிய இப்படிப் பட்ட நமது வேலை, நெருப்போடு பழகுவதுபோல் பாமரமக்களிடம் பழகுவதாகும். அவர்கள் நம்பிக்கையைப் பெறவேண்டும். அவர்களைத் திருத்தியே ஆகவேண்டும் இதற்கு நல்ல பிரச்சாரம் வேண்டும். நிலைகுலைந்து சின்னா பின்னப்பட்டு கிடக்கும் மக்களை ஒன்று சேர்த்து யாவர் பலத்தையும் ஒன்றாய்த் திரட்டி ஒரு மூச்சு பார்த்தாக வேண்டியவர்களாக இருக்கிறோம். இனி நாம் சூத்திரர்களாக வாழமாட்டோம் என்பதே நமது இலட்சியச் சொல்; நமது மூச்சு."
***
"பாடுபடாமலே தின்று பருத்துக் கொண்டிருக்கும் ஒரு கூட்டத்தாருக்குப் பெயர் மேல் ஜாதியினர் - பார்ப்பனர். உழைத்து உழைத்து உருக்குலைந்து உண்ண உணவின்றி ஊர் ஊராய்ச் சென்று உயிர் இழக்கும் மக்கள் கீழ் ஜாதியினர் - சூத்திரர்கள் - பஞ்சமர்கள் நாலாவது ஜாதி, அய்ந்தாவது ஜாதி; எவ்வளவு விபரீதமான செய்கை! இதை ஒழிக்க வேண்டாமா?"
***
"சாதியின் அமைப்புகளைக் காப்பாற் றவே சாதி, மதம், சாஸ்திரம், புராணம், கடவுள், சாமி, கோவில், குளம், திருவிழா, உற்சவம், பண்டிகை, மோட்சம், நரகம் என்று வைத்து இருக்கிறார்களே தவிர, மக்களின் குறைகளை நீக்கி அவர் களுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக அல்ல."
***
"சர்க்கார் (ஆட்சி) என்பது ஒரே ஒரு ஜாதிக்கான தர்மச் சத்திரமா?"
***
"சாதி வித்தியாசம் என்பது கற்பிக் கப்பட்டதே ஒழிய வேறில்லை. வலுத் தவன் இளைத்தவனை அடக்கி வைப் பது என்பதற்கு ருஜூ (சாட்சி) ஜாதி வித்தியாசமே ஆகும். இது இன்னும் நிலைத்திருப்பது என்றால் இந்த நாடு மிருகப்பிராயத்திலிருந்து மனிதப்பிராயத் திற்கு இன்னமும் வரவில்லை என்பதைத்தான் காட்டுகிறது."
***
"தமிழனுடைய முட்டாள்தனமும் இழிதன்மையும் எது தெரியுமா? பார்ப் பான் இராம இராஜ்யம் பெறுவதற்கு ஆக அவனுக்கு அடிமையாகவும் கூலியாகவும் அமர்ந்து உதவியதேயாகும்."
***
"மனிதனை மனிதன் உட்காரவைத்து ரிக்க்ஷா இழுப்பது பரிதாபமாய் இருக்கிறது என்று கூறும் பிரதிநிதி இருக்கும் சட்டசபையில் கக்கூசு (மலக் கழிவு) எடுப்பது இழிவு, மானக்கேடு, சுகாதாரக் கேடு, பரிதாபம் என்று கூறும் பிரதிநிதிகள் ஏன் இல்லை?"
***
"கக்கூஸ் (மலக்கழிவு) எடுக்கும் தொழில் ஒரு நாட்டில் இருப்பது மனித சமுதாயத்தின் மானத்துக்குக் கேடு - இந்த முறையே கூடாது - நாடு முழுவதும் தானாகவே கழுவிக்கொண்டு போகும்படியான நவீன விஞ்ஞான முறை இருக்க வேண்டும்."
***
"பார்ப்பனர்களை மேல் ஜாதி மேலானவர்கள் என்ற கருத்துக் கொடுக்கும்படியானதும், நாமே நம்மைக் கீழ்மைப்படுத்திக் கொள்வது மான, கருத்துக் கொண்ட 'சாமி' என்றும் 'பிராமணர்' என்றும் கண்டிப்பாக நாம் அழைக்கக் கூடாது. நம் வீட்டு சமுதாய - நன்மை - தீமைகளில் நம்மைவிட உயர்ந்த ஜாதியார்
என்று சொல்லிக் கொள்பவர்களைச் சேர்த்துக் கொள் ளக்கூடாது."
***
"சுயராஜ்ஜியம் (விடுதலை) வந்த 6-மாத காலத்தில் காந்தியார் உயிரை பார்ப்பனீயம் என்னும் 'பஹிரி' பருந்து அடித்துக் கொண்டு போய்விட்டதே."
***
"எப்படிப்பட்ட தனி உருவங்களை யும், சிலைகளையும் கடவுளாகக் கொள் ளக் கூடாது. சிலைகள் கடவுள்களான தனால் தான் பார்ப்பான் உயர்ஜாதி ஆகவும் கடவுள்கள் பேரால் மக்களைச் சுரண்டி வாழவும் வகை ஏற்பட்டு விட்டது."
***
"எந்த எந்தக் கோவில்களில் பார்ப்பனர் அர்ச்சகர்களாய் இருந்து கொண்டும், பார்ப்பனர்கள் தான் பூசை செய்ய வேண்டும் என்கிற நிபந்தனை இருந்து கொண்டும் இருக்கின்றனவோ, அக்கோவில்களுக்குத் திராவிட மக்கள் செல்லக்கூடாது. சென்றாலும் அப்பார்ப் பனர்கள் மூலம் பூசை ஆராதனை செய்து கொள்ளக் கூடாது."
***
மேல் லோகம் கீழ்லோகம் மோட் சம் நரகம் பிதிர்லோகம் தேவலோகம் என்பதான புரட்டுகளுக்கு இடங் கொடுத்து அந்தக் கருத்துக்களுக்கு அடிமையாகக் கூடாது.
***
கடவுள் வேண்டுதல் என்னும் பேரால் காசு பணம் கடவுள் உண்டிக் குக் கொடுப்பது என்பது வெறும் முட்டாள் தனமாகும். வேண்டுதலுக்கு ஆக கடவுளுக்கு முடி (மயிர்) காணிக்கை கொடுப்பது என்பது வடி கட்டின முட்டாள்தனமேயாகும். இவற்றால் நமக்கு முட்டாள்தனமும் செலவும் தான் மிஞ்சும்; பார்ப் பானுக்குக் கொல்லைச் செடியின் குலை யிலிருந்து காய், பழம் உதிர்வதுபோல், பண மழை பெய்வது போல் லாபமாகும்.
***
பிரார்த்தனைகளைவிட பக்தி, கடவுள் பக்தி மிகவும் மோசமான கருத்து என்றேதான் கூற வேண்டும். அதுவும் ஒரு வியாபாரமாகத்தானே இருக்கிறது?
***
பாஞ்சாலி கதையைப் படித்து நீ பஞ்சையாகி விட்டாய். விதியை நம்பி மதியை இழந்து விட்டாய்! குழவிக் கல்லை (கடவுளை) நம்பி கோழையாகி விட்டாய்! சோதிடத்தை நம்பி சோடையாய் விட்டாய்!
***
கலை என்பதெல்லாம் மக்கள் வாழ்க்கையாகும். அறிவுப் பெருக்கத்துக் கும் பயன்பெறக் கூடியதாய் இருக்க வேண்டுமே தவிர, வெகு சிலருக்கு மாத் திரம் புரியும் படியான, ஆனந்தப்படும் படியான வெறும் அற்புதத்தையும் அதி சயத்தையும், பண்டிதத் தன்மையையும் மாத்திரமே காட்டுவதற்கு ஆக என்று இருக்கக் கூடாது
***
ஆரிய மதத்துக்கும், கலைக்கும், மொழிக்கும் அடிமைப்பட்டதாலேயே திராவிடம் - திராவிட மக்கள் இவ்விழி நிலைமைக்கு வர நேர்ந்தது.
***
ஆரியக் கலை, புராணம் பற்றிய சினிமா - நாடகம், பாட்டு, கதை - காலட் சேபம் ஆகியவைகளை திராவிட மக்கள் அடியோடு வெறுக்க வேண்டும்
***
நம் சொந்த நடவடிக்கையில், நம் குழந்தை குட்டி மனைவி வாழ்க்கையில் கூடுமான அளவு ஆரியத்தை ஒதுக்கி, திராவிடத்தைப் புகுத்த வேண்டும்
***
எதிரிகள் நமக்கு எவ்வளவு ஆத்திர மூட்டினாலும் தொல்லை கொடுத் தாலும் பலாத்காரத்தைப் பயன்படுத் தினாலும் நாம் நிதானமிழந்து விடக் கூடாது
***
நாம் மக்களில் - பிறவியில் உயர்வு - தாழ்வுகளைத்தான் வெறுக்கிறோமே தவிர யாரையும் சமத்துவமாகக் கொள் வதில் தயங்குவதில்லை. ஆகையால் சமத்துவமான காரியங்களுக்கு யாரை யும் வெறுக்கவோ, பகிஷ்கரிக்கவோ கூடாது. நமது வெற்றி கண்ணுக்குத் தெரிகிறது. அது கானல் நீரல்ல. கருத் தும் கவலையும் இருந்தால் கண்டிப்பாக அடைந்தே தீருவோம் என்ற உறுதி எனக்கு உண்டு தொகுத்தோன்: கபிலன் ('விடுதலை', 15.01.1955)
-விடுதலை ஞா.ம.,14.6.14

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக