பல்டியடிக்கும் பாசிஸ்டுகள் (கட்டுரையின் ஒரு பகுதி)
மின்சாரம்
அறிஞர் ஆபிடுயூபே கூறிய ‘‘Double Tongue’’ என்ற அர்ச்சனைக்கு அறிஞர் அண்ணா அவர்கள் ‘‘பேச நா இரண்டுடையாய்ப் போற்றி!’’ என்று அவருக்கே உரித்தான அழகு தமிழில் படம் பிடித்துக் காட்டினார் - ‘ஆரிய மாயை’ என்னும் அசைக்க முடியாத ஆதாரச் சரக்குகளைக் கொண்ட அந்த அரிய நூலில்.
அந்த நூல் தடையும் செய்யப்பட்டது - அந்த நூலுக்காக அறிஞர் அண்ணா அவர்களுக்கு 700 ரூபாய் அபராதம் அல்லது 6 மாத சிறைத் தண்டனையும் அளிக்கப்பட்டது என்பது மேலும் தெரிந்துகொள்ள வேண்டிய கூடுதல் வரலாற்றுக் குறிப்பாகும்.
1943 ஆம் ஆண்டிலேயே வெளிவந்த அந்த நூல் ஏழு ஆண்டுகளுக்குப் பின் 1950 ஆம் ஆண்டில் தடை செய்யப்பட்டது. (153-ஏ பிரிவு சட்டப்படி) அதே காலகட்டத்தில் தந்தை பெரியார் அவர்களின் ‘பொன்மொழி’ நூலுக்கும் தடை - தந்தை பெரியார் அவர்களுக்கும் அதே தண்டனை என்ப தெல்லாம் நம் இளைஞர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய - திராவிடர் இயக்கத் தீரத்தைக் குறித்த ‘தித்திக்கும்’ அத்தியாயங்கள்!
அறிஞர் ஆபிடுயூபே அப்படி என்னென்னதான் கூறினார்? தெரிந்து கொள்ள ஆர்வம்தானே இருக்கச் செய்யும்.
இதோ:
இதோ:
1807 ஆம் ஆண்டில் ஆபிடுயூபே ஆரியம்பற்றி இவ்வாறு அடுக்கி யதைத்தான் அண்ணா அவர்கள் 1943 ஆம் ஆண்டில் எடுத்துக்காட்டினார்.
ஏதோ இனம் தெரியாத வெறுப்புணர்வால் அல்ல - இனவெறுப்பின் எதிரொலியும் அல்ல - பகையுணர்ச்சியும் கிடையாது. பார்ப்பனர்கள், பார்ப்பனர் அல்லாதாரை எப்படியெல்லாம் இழித்துப் பழித்து எழுதி வைத்துள்ளனர்- நடத்துகின்றனர் என்பதால் ஏற்பட்ட தன் மான உணர்ச்சியின் உந்துதல்தான் திரா விடர் இயக்கம் பார்ப்பனர்களைப் படம் பிடித்ததும் - பிடித்துக் காட்டுவதுமாகும்.
-விடுதலை ஞா.ம.,28.1.17
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக