பக்கங்கள்

வெள்ளி, 4 மே, 2018

திருந்தாது இந்த ஜென்மங்கள் மீண்டும் பாலியல் குற்றவாளிக்கு ஆதரவாக பேரணி நடத்திய பாஜகவினர்



லக்னோ, ஏப்.29 உத்தரப்பிரதேசம் உன்னாவ் பகுதியில் சிறுமி ஒருவரை பாலியல் வன் கொடுமை செய்ததாகக் கைது செய்யப் பட்டுஇருக்கும்பாஜகசட்டமன்றஉறுப் பினர் குல்தீப் சிங் செங்காரருக்கு ஆதர வாக பாஜகவினர், பேரணி நடத்தி இருக் கிறார்கள். பாஜக சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங் செங்கார் தன்னை பாலியல் வன்புணர்வு செய்தார் என்று பெண் ஒருவர் குற்றச்சாட்டு வைத்தார். இதுபற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பெண் குடும்பத்தோடு உத்தரப்பிரதேச முதல்வரின் வீடு முன்பு சென்று தீ குளிக்க முயன்றார். அப்போதும் எம்.எல்.ஏ. குல்தீப்மீது காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு குல்தீப்பின் சகோதரரும், காவல் துறையினரும் அந்த பெண்ணின் தந்தை பாப்பு என்ற சுரேந்திர சிங்கை தாக்கி உள்ளனர். இதனால் சுரேந்திர சிங் காவல் நிலையத்திலேயே மரணமடைந்தார்.

இவ்விவகாரம் தொடர்பாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் குல்தீப்சிங் செங் கார் மற்றும் அவரது சகோதரர் கைது செய்யப்பட்டு விசாரணைக் கைதிகளாக உள்ளனர்.  இந்தநிலையில்குல்தீப்சிங்செங்கார ருக்கு ஆதரவாக உன்னாவ் மாவட்ட பாஜகவினர், பேரணி நடத்தி இருக்கிறார்கள். இந்தப் பேரணிக்கு அந்தப் பகுதியின் பாஜக உறுப்பினரும், பஞ்சாயத்து தலைவருமான அனுஜ்குமார் தலைமை வகித்து இருக்கிறார். அரசியல் பழிவாங்கும் நிகழ்விற்காக, இந்த புகார் குல்தீப் மீது போடப்பட்டு இருப்பதாக அவர் கூறியுள்ளார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஊர் மக்களை மிரட்டி, அந்த பேரணியில் நடந்து வர சொல்லி இருக்கிறார்கள். அதே போல் குல்தீப்பிற்கு ஆதரவாக கூச்சலிடவும் சொல்லியுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் ஜனவரி மாதம்8 வயது சிறுமி கோவில் பார்ப்பனப் பூசாரி, அவரது மகன், ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் மற்றும் காவல்துறை அதிகாரிகளால் பாலியல் வன்கொடுமைக்குஆளாக்கப்பட்டுகொல் லப்பட்டார். இந்தக் கொலை தொடர்பாக குற்றவாளிகளைக் கைது செய்து நீதிமன் றத்தில் ஆஜர்படுத்தச் சென்ற போது ஜம்மு காஷ்மீர் பாஜக அமைச்சர்கள் மற்றும் பாஜக பிரமுகர்கள், இந்து எக்தா மஞ்ச் அமைப்பின் பிரமுகர்கள் வழக்குரைஞர்கள் ஒன்று கூடி பேரணி நடத்தினர்.இந்தப் பேரணியில் வந்தே மாதரம் பாரத்மாதாகி ஜே, போன்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டது, மேலும் பாஜக கொடியுடன் தேசியக் கொடியையும் ஏந்திச் சென்றனர். தற்போதும் அதே போல் பாஜகவினர் உன்னாவில் பேரணி நடத்தி பாரத் மாதாகி ஜே என்றும் ஜெய்சிறீராம் என்றும் முழக்கமிட்டவாறு சென்றனர்.

-  விடுதலை நாளேடு, 29.4.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக