பக்கங்கள்

திங்கள், 16 ஜூலை, 2018

அம்பேத்கர் திரைப்படத்தில் வரும் காட்சிகள் :

மாணவன் 1: "டேய், நமக்குப் பாடம் எடுக்கப்போறவன் ஒரு தீண்டத்தகாதவனாம்!"

மாணவன் 2: "எங்க அப்பாவுக்கு இது தெரிஞ்சது, அவ்வளவுதான்"

மாணவன் 3: "இந்தத் தீண்டத்தகாதவன் நம்மகிட்ட இங்கிலீஷ்ல பேசப் போறானாம்!"

மாணவர்கள் தங்களுக்குள் சிரித்துக்கொள்கின்றனர்.

அம்பேத்கர்: "I am professor ambedkar. நான் உங்களுக்கு எடுக்கப் போற சப்ஜெட், அரசியல்-பொருளாதாரம். ஒருவேள நான் உங்களுக்கு என்ன கத்துக்குடுக்க முடியுமின்னு நீங்க நெனைச்சீங்கன்னா.. என் அறிமுகம் உங்க சந்தேகத்த போக்கும். I have a M.A and Ph.d in Public Finance from the Colombia university in new york. My thesis covered the financial history of india from 1765 to the present. In addition i am working towards an Msc from the London school of economics. இனியும் எனக்குக் கற்பிக்கத் தகுதியில்லை என்று உங்களில் யாரேனும் நினைத்தால், அவர்கள் தாராளமாக வகுப்பறையைவிட்டு வெளியே செல்லலாம்.Now!"

மாணவர்களிடையே அமைதி.

"சரி, நாம் துவங்குவோமா?"

அடுத்தக் காட்சி :

இடைவேளையின் போது Professor'களுக்கான அறையில் வைக்கப்பட்டிருந்த பானையில் அம்பேத்கர் நீர் அருந்த முயலும் போது, ஒருவர் குறுக்கிடுகிறார்.

"டாக்டர் அம்பேத்கர்!"

"யெஸ்"

"நான் Professor திரிவேதி. இந்தக் குடிதண்ணீர் இங்குப் பணிபுரியும் Professor'களுக்கு மட்டும்தான்"

"அப்படியென்றால் நான் யார்?"

"யெஸ்..யெஸ்.. நீங்களும் Professor'தான்னு நாங்க ஒத்துக்கிறோம். ஆனா ஒரு முக்கியமான விஷயம், நீங்கள் குடிக்கும் தண்ணீரை உங்கள் வீட்டிலிருந்துதான் கொண்டுவர வேண்டும்"

அம்பேத்கர் குவளையில் தண்ணீரை ஊற்றிக்கொண்டு அங்கிருக்கும் அனைவரையும் பார்த்துச் சொல்கிறார்,

"இந்தக் குடிநீரை நான் குடிப்பது மெத்த படித்த உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், நீங்கள் அருந்தும் குடிநீரை உங்கள் வீட்டிலிருந்து கொண்டுவாருங்கள்"

பின் நீரை அருந்திவிட்டுச் சொல்கிறார்,

"அல்லது தூய்மைப்படுத்துங்கள்"

அடுத்து, திரிவேதியைப் பார்த்துக் கேட்கிறார்,
"நீங்கள் திரிவேதி (அதாவது,மூன்றுவேதம் கற்றவர்). உங்களுக்குத் தீட்டுப்பட்ட நீரைத் தூய்மைப்படுத்தும் மந்திரம் தெரிந்திருக்கனுமே.. தெரியாது?"

திரிவேதி தலைகுனிகிறார்.

"தெரியாதெனில் நான் கூறுகிறேன். அமேதீஸ்டுவ சண்டாள மத்தியமாம் சாதி தூஷிட்டா ஹர்ஸமித் ஹர்ரிஷ்ட்ட ஸ்மிருதி.."

குவளையை வைத்துவிட்டு, புத்தகத்தை எடுத்துக்கொண்டு, "மீண்டுமொருமுறை சொல்லவா?" என அவரைக் கேட்டுவிட்டு, அந்த சுலோகத்தைச் சொல்லிச் செல்கிறார்.
#அண்ணல்அம்பேத்கர்💙
#அறிவாசான்💙

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக