பக்கங்கள்

திங்கள், 23 ஜூலை, 2018

*"யார் இந்த திலகர்?"*

*- மயிலாடன் -*


ஒற்றைப் பத்தி




லோக மான்ய பாலகங்காதர திலகர் என்று பார்ப்பனர்களால் ஏற்றிப்

லோக மான்ய பாலகங்காதர திலகர் என்று பார்ப்பனர்களால் ஏற்றிப் போற்றப்படுபவரின் பிறந்த நாள் இந்நாள் (1856).

‘லோக மான்ய' என்றால், உலகத்திற்கே அறிவுரை சொல்பவர் என்று பொருளாம். இவர் அப்படி என்ன  அறிவுரை கூறியிருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.

‘‘இப்பொழுது எல்லோரும் சட்ட சபைக்குச் செல்லவேண்டுமென்று முயற்சி செய்கிறார்கள். செருப்புத் தைக்கிறவனும், எண்ணெய் செக்கு ஆட்டுபவனும், வெற்றிலைப் பாக்குக் கடைக்காரனும்  (The Gobblers, The Oil Mongers, and Petty Traders) சட்டசபைக்குப் போகவேண்டும் என்று முயற்சி செய்கிறார்கள். யார் யார் எது எதற்குப் போகவேண்டுமென்ற ஒரு வரைமுறை கிடையாதா?'' என்று பேசியவர்தான் உலகத்திற்கே அறிவுரை கூறும் இந்த லோகமான்யர்.

(ஆதாரம்: டாக்டர் அம்பேத்கர் அவர்களின் ‘‘காந்தியாரும் - காங்கிரசும் தீண்டாத மக்களுக்குச் செய்தது என்ன?'' என்ற நூல்!

''இவரைப் பற்றி மேற்கோளாக அடிக்கடி கூறப்படுவது 'சுயராஜ்யம் நமது பிறப்புரிமை' என்பார் திலகர் என்ற வாசகங்கள்.

இவரது 'சுயராஜ்யம்' மனு ஆட்சி தான் என்பதற்கு மகாராஷ்டிர அரசின் கல்வித் துறை 1994-இல் வெளியிட்ட 'சத்திரபதி சாகு - சமூக ஜனநாயகத்தின் தூண்' (Chatrapathi Sahu - The Pillar of Social Democracy) என்ற நூலில், 363-364 பக்கங்களில் (“Our Law is Manu Smriti" and pointed out that the law (Manu Smriti) orders king to administer with the help of learned persons and Brahmins - (Samagra Lokmanya Tilak- Vol. V- pages 449-50)

*"நமது சட்டம் மனுஸ்மிருதிதான்" என்று கூறிய திலகர், கற்றறிந்தவர்கள் மற்றும் பார்ப்பனர்களின் உதவியுடன் அரசன் ஆட்சி நடத்த வேண்டும் என்று இந்த மனுஸ்மிருதி சட்டம் இருப்பதைச் சுட்டிக் காட்டினார்.*

Manu Smriti was to be the law of Swarajya, according to Tilak. (Tilak's speech at Yeotmal on 9th Jan 1917)

சுயராஜ்யத்தின் சட்டமாக மனு ஸ்மிருதிதான் இருக்க வேண்டும் என்று திலகர் விரும்பினார். (யோத்மாலில் 1917 ஜனவரி 9 அன்று திலகர் பேசிய பேச்சு)

"In his speech at Athani on 11th November 1917, Tilak used strong language and strong logic in denying position to different professional castes in the Legislative Council of Bombay Presidency."

*பம்பாய் மாகாண சட்ட மன்ற மேலவையில் பல்வேறுபட்ட தொழில் செய்பவர்களுக்கு இடம் அளிப்பதை எதிர்த்து திலகர், ஆதானியில் 1917 நவம்பர் 11 அன்று பேசிய தமது பேச்சில் கடுமையான மொழியில், ஒரு தீவிரமான வாதத்தை முன்வைத்தார்.*

"Tilak advised the untouchables not to take secondary education after primary education; he wanted them to learn crafts of their caste. He thus, believed in the continuation of caste professions for untouchables, and not in giving higher education to them."

*"தொடக்கக் கல்விக்குப் பின் இடைநிலைக் கல்வியைத் தொடர வேண்டாம்" என்று தீண்டத்தகாத மக்களுக்குத் திலகர் ஆலோசனை கூறினார். இதன் மூலம் தீண்டத் தகாத மக்களின் ஜாதித் தொழில்களை அவர்கள் தொடர்ந்து கடைப்பிடிப்பதை நம்பிய திலகர் அவர்களுக்கு உயர் கல்வி அளிக்கப்படுவதை எதிர்த்தார்.''*

மற்றொரு முக்கிய தகவல் உண்டு. இந்தத் திலகர் மரணமடைந்தபோது (01.08.1920) இறுதி நிகழ்ச்சியில் காந்தியார் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினார்.

அப்பொழுது திலகரின் பாடையைத் தம் தோளிலும் தூக்கவேண்டும் என்று கருதிய காந்தியார் அங்கு சென்றபோது, அங்கிருந்த பார்ப்பனர்கள், ‘நீ வைசியன், பிராமணராகிய திலகரின் பாடையைத் தூக்கக் கூடாது' என்று கூறி, காந்தியாரைப் பிடித்துத் தள்ளிவிட்டனர்.

காரணம், திலகர் அந்த அளவுக்கு வருணாசிரம வெறியர் என்பதுதான்.

*நன்றி : "விடுதலை" நாளிதழ் 23.07.2018*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக