பக்கங்கள்

புதன், 3 ஏப்ரல், 2019

என்னை மாற்றிய நூல்

"காஞ்சி சங்கராச்சாரி யார்?"




என் வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்பத்தை  ஏற்படுத்தியவன் என் நண்பன் கா.திருமாவளவன். திருச்சியில் இருந்து அவனுடைய தந்தையார் காளிமுத்து பணி மாறுதல் காரணமாக கோவில்பட்டி வந்த போது திருமாவளவனின் நட்பு ஏற்பட்டது. நான் படித்து வந்த இலக்குமி ஆலை மேனிலைப் பள்ளியில் அவனும் வந்து சேர்ந்தான். எட்டாம் வகுப்பில் பள்ளித் தோழர்கள் ஆனோம். இன்றும் தொடர்கிறது அந்த நட்பு. திராவிட இயக்கத்தின் குடும் பத்தை சேர்ந்தவன்.

அவன் தனது வீட்டில் இருந்து இரண்டு புத்தகங்களை எடுத்து வந்தான். ஒன்று, கடவுளர் கதைகள் என்ற நூல். இன் னொன்று, சங்கராச்சாரியார் யார்?

என்கின்ற நூல்.



முதலில் சொன்ன நூல். 'சாமி' என்பவரால் எழுதப்பட்டது. புராண ஆபாசங்களை புட்டுப் புட்டு வைக்கும் நூல். அந்த வயதில் அந்நூல் அதிக ஈர்ப்புக்குரியதாக இருந்திருக்கும் என்று சொல்லத் தேவையில்லை.

இரண்டாவதாகக் குறிப்பிட்ட சங்கராச் சாரியார் யார்? என்கிற புத்தகம்தான் திரும் பத் திரும்ப படிக்கத் தூண்டியது. ஆரியக் கொடுக்கின் கூர்மையை, வன்மத்தை என் சிந்தனைக்கு முதலில் உணர்த்திய முழு முதல் நூல் இது.

இந்நூல் வெளிவந்த 1983ஆம் ஆண்டு களில், சங்கராச்சாரியார் இப்போது இறந்த காலத்தில் பட்ட அவமானங்களைப்பட வில்லை. 1983களில் சங்கர்ராமன் கொலை நடக்கவில்லை. கொலை என்பது காஞ்சிபுரம் ரோட்டில் நடந்திருந்தாலும் பரவாயில்லை. வரதராஜ பெருமாள் கோவில் உள்ளேயே நடந்தது. அனுராதா ரமணனின் பேட்டிகள் அந்தக் காலத்தில் வெளிவரவில்லை. யாரோ ஒரு பெண் சொல்லி இருந்தால், சொல்லிக் கொடுத்து சொல்லி இருப்பாள் என்று உதாசீனப்படுத்தப்பட்டு இருப்பார். சொன்னது அனுராதா ரமணன். நாடறிந்த கதாசிரியர். சங்கராச்சாரியாரை முன்னர் பூஜித்தவர். பின்னர் தூற்றியவர். தூற்றியதற்கான காரணம், ஆபாசங்களின் உச்சம். எது பூஜையறையில் இருக்க வேண்டியதோ, அது பள்ளியறைக்கு ஆசைப்பட்ட காட்சிகள் அவை. இது போன்ற நிகழ்வுகள் எதுவும் நடக்காத 1983களிலேயே சங்கராச்சாரியார் யார்? என்று பேசி, இரண் டாயிரமாவது ஆண்டிலேயே உணர்த்தி யவர் திராவிடர் கழகத்தின் இன்றைய தலைவர், அன்றைய பொதுச் செயலாளர் கி.வீரமணி அவர்கள்.

இந்த புத்தகத்தின் பாணியே வித்தியா சமானது. காஞ்சி சங்கராச்சாரியார்? என்ற தலைப்பில் ஆசிரியர் கி.வீரமணி அவர் கள் பத்து நாட்கள் பேசியதை பத்திரி கையாளர் சின்னக்குத்தூசி அவர்கள் கட்டுரையாக எதிரொலி நாளிதழில் எழுதினார். அதன் தொகுப்பு தான் இந்நூல். சங்கராச்சாரியார் யார்? என்பது முக்கியத் தலைப்பாகவும், தமிழர் தளபதி வீரமணி தொடர் உரை எதிரொலியில் சின்னக்குத்தூசி கட்டுரைத் தொகுப்பு என்பது துணைத் தலைப்பாகவும் இருக்கும்.

காஞ்சி சங்கராச்சாரி யார்? என்கிற கோபக் கேள்வி எழ என்ன காரணம்?

அதற்கு சில வாரங்களுக்கு முன்னால் காஞ்சி ஜெயேந்திரரை பத்திரிகையாளர் கள் சின்னக்குத்தூசியும், ஞாநியும் சந்தித்து ஒரு பேட்டி எடுத்தார்கள். அதில் ஜெயேந் திரர் இப்படி குறிப்பிட்டார்.

கருணாநிதியை எடுத்துக் கொள்ளுங் கள்; என்னைப் பற்றி எது வேண்டுமா னாலும் சொல்லட்டும். நான் கேட்டுக் கொள்கிறேன். ஆனால் எனது பீடத்தை எதற்காக அவர் இழிவுப்படுத்திப் பேச வேண்டும். நான் வழிபடும் ஆண்டவனி டத்திலேதான் அவருக்கு தண்டனை அளிக்கும்படி முறையிட்டேன். அதன் படியே அவரும் படுத்துவிட்டார் என்கிறார் ஜெயேந்திரர். இப்படி ஜெயேந்திரர் சொன்னது 1983இல். ஜெயேந்திரர் மறைந்த பிறகு 2018இல் தான் கலைஞர் மறைந்தார் என்பது வரலாறு.

நான் வழிபடும் ஆண்டவனிடத்திலே தான் அவருக்குத் தண்டனை அளிக்கும்படி, முறையிட்டேன். அதன்படியே அவரும் படுத்துவிட்டார் என்பது என்னே ஜீவ காருண்யம்! அன்பைப் போதிக்கும் மடத் தலைவர் சொல்லும் வார்த்தைகளா இவை?

உடல்நலக்குறைவு என்பது எல் லோருக்கும் ஏற்படும். அது ஒன்றும் பெரிய சங்கதி அல்ல. சங்கராச்சாரியார்கள் இதற்கு விதி விலக்கா? தைரியம் இருந்தால் சொல்லட்டும் (பக். 7) என்று கேட்டார் வீரமணி. அத்தோடு இன்னொன்றையும் கேட்டார். இந்த சங்கர மடம் உருவாக்கப் பட்டு யார் யார் மடாதிபதிகளாக இருந்தார் கள் என்று வரிசைப்படுத்தினார் வீரமணி. சந்திரசேகரர்-மி, (1814-1851), சந்திரசேகரர் மிமி (1851-1891) சந்திரசேகரர் மிமிமி. அதன் பிறகு வந்தவர் மகாதேவர். இவர் 7 நாட்கள்தான் சங்கராச்சாரியராக இருந்தார். 7 நாளில் இறந்துவிட்டார். இதைச் சொல்லிவிட்டு வீரமணி கேட்டார்.

கலைஞர் உடல் நலம் கெட வேண்டி னேன் என்று இன்று சங்கராச்சாரியார் சொல்கிறாரே, அந்த சங்கராச்சாரியார் வாதப்படி இந்த நான்காவது மகாதேவர் பதவியேற்ற ஏழாவது நாளிலேயே இறந் தாரே. அவர் இறக்குமாறு அடுத்து வந்த சங்கராச்சாரியார் வேண்டினாரா? (பக். 9)

என்று கேட்டார். இந்த வரிசையில் வீரமணி வைத்த மிக முக்கியமான ஆதாரக் கேள்வி.

இன்று சங்கர மடம், சங்கர மடம் என் கிறார்களே இந்த, சங்கரமடம் ஆதிசங்கர ரால் உருவாக்கப்பட்டதல்ல என்பதற்கான ஆதாரங்களை வீரமணி வெளியிட்டார்.

ஆதிசங்கரர் 4 மடங்களைத் தான் உண் டாக்கினார். 5ஆவது மடமாக இவர்களே காஞ்சி மடத்தை உண்டாக்கிக் கொண்டு ஆதிசங்கரர் பெயரால் வரலாற்றுத் திரிபு செய்து வருகிறார்கள். இதற்கு ஆதாரமாக அனைத்திந்திய சங்கர பகவத்பாத சிஷ்யர் கள் எழுதிய நூலையே வீரமணி ஆதார மாகக் காட்டினார். புத்தகத்தின் பெயர் தஷிணாம் நாய பீடம் சிருங்கேரியா? காஞ்சியா? என்பதாகும்.

32 வயதுக்குள் நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்த ஆதிசங்கரர், நான்கு திசை களிலும் நான்கு பீடங்களை உருவாக் கினார். கிழக்கில் ஜெகன்னாத் பூரியிலும், தென் திசையில் சிருங்கேரியிலும், மேற்கு திசையில் துவாரகையிலும், வடக்கில் பத்ரி நாத்திலும் பீடங்களை உருவாக்கினார். இந்த நான்கு ஆம்னாய பீடங்களில் பரம்பரையாக வருபவர்களுக்கு மட்டுமே 'ஜெகத் குரு' என்ற பட்டம் உண்டு என்கிறது தஷிணாம்நாய பீடம் புத்தகம். இதற்கு ஆதாரமான நீதி மன்றத் தீர்ப்புகளையும் வீரமணி குறிப் பிட்டார். 19.11.1936 அன்று பாட்னா நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி நான்கு மடங்கள் மட்டுமே ஆதிசங்கரர் உருவாக்கியது, 5 ஆவது மடமாக சொல்லப்படும் கும்பகோணம் (காஞ்சி) மடம் ஆதிசங்கரரால் உருவாக்கப் பட்டதல்ல என்கிறது இந்தத் தீர்ப்பு.

நாங்களும் சங்கரமடம்தான் என்பதை நிரூபிப்பதற்காக தங்களுக்குத் தாங்களே எழுதிக் கொண்ட வரலாற்று நூல்களை வரிசையாக வீரமணி அம்பலப்படுத்தி இருப்பார். காஞ்சி காமகோடி பீடாதிபதியின் மடம் என்பது கும்பகோணம் மடமே தவிர, சங்கரமடம் அல்ல என்பதை வீரமணி சொல்லி இருப்பார்.

ஜாதியைக் காப்பாற்ற சங்கராச்சாரியார்கள் எடுத்த முயற்சிகள் என்று சொல்லப்படும் வரலாற்றுக் குறிப்புகள் அதிர்ச்சிக்குரியவை. அனைத்துச் ஜாதியினரும் அர்ச்சகராக முடியாத அளவுக்கு அரசியல் சட்டத்தையே உருவாக்கிய சங்கராச்சாரியார் என்ற கட்டுரை (பக். 63) முக்கியமானது.

சுதந்திர இந்தியாவில் மதத்துக்கு பாது காப்பு, இருக்குமா என்று பயந்துள்ளார் சந் திரசேகரர். எனவே, பாராளுமன்ற தூதுக் குழுவினருக்கு அனைவரையும் தந்தி அடிக்கச் சொன்னார். இந்து நாளிதழ் அலுவலகத்துக்கு வந்த பாராளுமன்ற குழுவைச் சந்தித்து இந்தக் கோரிக்கையை வைக்க தாத்தாச்சாரியார் என்பவரை அனுப்புகிறார். 'மதம் என்பது அடிப்படை உரிமைகளில் ஒன்று' என்று சந்திரசேகரர் சொல்லி அனுப்பியதாக தாத்தாச்சாரியார் சொல்கிறார். அதன்பிறகு கிரிப்ஸ் தூதுக் குழுவிலும் இதனை வலியுறுத்துகிறார். 'சட்டத்தை நாங்கள் உருவாக்கவில்லை. உங்கள் தலைவர்கள் தான் உருவாக்கப் போகிறார்கள். அவர்களைப் பாருங்கள்' என்கிறார் கிரிப்ஸ். உடனே சங்கராச்சாரி யாரின் தூதர்கள், படேலை சந்திக்கிறார் கள். அவரிடமிருந்து எதிர்பார்த்த பதில் கிடைக்கவில்லை.

உடனே, 'அகில இந்திய மடாதிபதிகள் மாநாடு கூட்டுகிறார்கள். அம்பியில் தங்கி யிருந்த சந்திரசேகரர், மூத்த வழக்குரை ஞர்களை அங்கு வரவைத்து ஆலோ சனை தருகிறார். இவர்கள் அம்பேத் கரையும் சந்திக்கிறார்கள். ஒரு மதம் அல்லது மதப்பிரிவு எதுவாக இருந்தாலும் அவர்களுக்கு முழு சுதந்திரம் உண்டு என்பது சட்டத்தில் சேர்க்கப்படுகிறது. இதன்படிதான் 1970களில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்துக்கு தடைபோடப்பட்டது. இன்று சபரிமலை கோவிலுக்கு பெண்களும் செல் லலாம் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பை சட்டத்துக்கு விரோதம் - என்று சிலர் சொல்வதற்கு காரணமும் இதுதான். அந்தளவுக்கு மதத்தை, மவுடீகத்தைக் காக்க அரசியலமைப்புச் சட்டம் வரை சென்றவர் களுடைய வரலாற்றை வரிசைப்படுத்தி இருப்பார் வீரமணி.

இந்தப் புத்தகத்தை படித்த காலத்தில், படித்த இளம் வயதில் அதிக கோபத்தை ஏற்படுத்தியது தமிழ்மொழி மீதான அவர்களின் வன்மம்தான். மொழிப் பற்று தான், இனப்பற்றை நோக்கி இழுத்துச் சென்றது என் அளவில்.

"தமிழ்மொழி தாய்மொழி என்றால் சமஸ்கிருதம் தந்தை மொழி, தமிழர் களுக்கு" என்று சொன்னார் ஜெயேந்திரர். இதைத் தான் கலைஞர் அவர்கள் விமர்சித் தார். இந்த விமர்சனம் தான் ஜெயேந்திரரை கோபப்படுத்தியது. 'ஆண்டவனிடம் வேண் டினேன், கருணாநிதி படுத்துட்டார்' என்று பேட்டி அளித்தது அதன் பிறகு தான்.

தமிழ்மொழி தாய்மொழி - சமஸ்கிருதம் தந்தை மொழி என்பதைப் போன்ற அபத் தம் வேறொன்றும் இருக்க முடியாது. இதைக் குறிப்பிட்ட வீரமணி அவர்கள், இராமலிங்க வள்ளலாருக்கும், காஞ்சி சந்திரசேகரருக் கும் நடந்த உரையாடல் ஒன்றைக் குறிப் பிடுவார். சென்னையில் ஒருமுறை சந்திர சேகரரை இராமலிங்க வள்ளலார் சந்தித் திருக்கிறார். அப்போது, "சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய் மொழி" என்று சந்திரசேகரர் கூற அதனை வள்ளலார் மறுத்துள்ளார். இதுபற்றி எழுதி இருக்கும் ஊரனடிகள், "ஆரிய அரசன் பிரகத்த னுக்கு தமிழ் அறிவுறுத்துவான் வேண்டிக் கபிலர் - குறிஞ்சிப் பாட்டைப் பாடியதனை நிகர்ப்ப, ஆரியம் மட்டுமே நன்குணர்ந்த ஆசாரியராகிய சங்கராச்சாரியாருக்கு தென் மொழிக் கடலும், வடமொழிக் கடலும் நிலை கண்டுணர்ந்த முற்றறிவினராகிய வள்ளல் பெருமானார் தமிழ் என்னும் சொல்லுக்கு ஓர் உரையும் அப்போதே செய்து சங்கராச் சாரியாருக்கு தமிழின் செவ்வியை செவியறி வுறுத்தி அருளினார் என்று குறிப்பிடுகிறார். இதன் பிறகும் தமிழை நீஷபாஷை என்று அந்தக் கூட்டம் கூறிக் கொண்டிருக்கிறது. தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க மறுக் கிறது. தமிழில் வழிபாடு செய்வதை நிரா கரிக்கிறது. தமிழ்ப் பக்தி இலக்கியங்களை புறந்தள்ளுகிறது.

இப்படியெல்லாம் ஏன் அவர்கள் இருக் கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள அன்று முதல் இன்றுவரை இருக்கும் தலை யாய நூல்களில் ஒன்று 'சங்கராச்சாரியார் யார்?' யார் என்று நாம் கேட்டால், யார் என் பதைப் புரிந்து கொண்டோம் என்பது பொருள்!

(புதிய புத்தகம் பேசுது, மார்ச் 2019)

- விடுதலை ஞாயிறு மலர் 23 .3.2019

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக