பக்கங்கள்

வியாழன், 26 மார்ச், 2020

ஆய்வுக் கட்டுரை: சமண, பெளத்த சமயச் சின்னங்களை அழித்தல்:இந்து உளவியலின் பொதுப்போக்கு - 2

புலவர் செ.ராசு

ஆழியாறு ஆதாளியம்மன்

ஆழியாறு அருகில் சமணர் கோயில் இருந்து அழிந்துவிட்டது. கோயிலில் இருந்த சமண தீர்த்தங்கரர் சிலை மட்டும் தனியாக இருந்தது. யாரோ அதன் முகத்தைச் சிதைத்தனர். பின்னர் மார்பு, வயிற்றுப் பகுதியைச் சிறிது உடைத்தனர். பின்னர் முகப் பகுதியைப் பெண்போல் ஆக்கி மார்பில் பெண் உறுப்புக்களையும் பெரிதாக அமைத்து வர்ணம் பூசிப் பெண் உருவாக மாற்றியதுடன் அதற்கு ஆதாளியம்மன் என்று பெயரும் வைத்துவிட்டனர். அருகில் உள்ள சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் ஆதாளியம்மனுக்குத் தேங்காய் உடைத்தும், சூடம் ஏற்றியும் வழிபடுகின்றனர். அருகில் விபூதித் தட்டும் வைத்துவிட்டனர்.

தீர்த்தங்கரர் தலைக்கு மேல் இருந்த சகல பாஷணம் சந்திர ஆதித்யம், நித்திய வினோதம் ஆகிய முக்குடைச் சின்னமும் இருபுறமும் இருக்கும் கவரி வீசும் சாமரேந்திர இயக்கர் உருவங்களும் அப்படியே உள்ளன.

பெயர் மாறிய /மாற்றிய தீர்த்தங்கரர்கள்

1.            திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம் அய்யம்பாளையம் அருகில் ஐவர்மலை என்ற மலை உள்ளது. அது சங்க இலக்கியம் புகழும் அயிரைமலை. அங்கு வரகுணபாண்டியனின் எட்டாம் ஆட்சியாண்டின் (870) பார்கவ தீர்த்தங்கரர் உருவம் செதுக்கப்பட்ட கல்வெட்டு உள்ளது. மற்றும் 16 தீர்த்தங்கரர் சிற்பங்களும் உள்ளன. அவற்றின் கீழ் அந்த சிற்பம் யாரால் செய்விக்கப்பட்டது என்பது ஸ்ரீஅச்சணந்தி செயல், ஸ்ரீஇந்திரசேனன் செயல் என்று வட்டெழுத்தில் கல்வெட்டும் உள்ளது. அதை அறியாமலும் புரியாமலும் அவற்றின் கீழ் பிரம்மா, விஷ்ணு, ருத்திரன், துரோணாச்சாரியார், சைந்த மகரிஷி, தருமன், பீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன், சேரன், சோழன், பாண்டியன், கிருஷ்ணர், திருவள்ளுவர், திருதராட்டிரன் என்று மனம் போனபடி எழுதியுள்ளனர்.

2.            கரூர் அருகில் உள்ள புலியூரில் சாலையோரம் ஒரு சமண தீர்த்தங்கரர் சிலை உள்ளது. அதை அப்பகுதி மக்கள் முனி அப்புச்சி என்று கூறுகின்றனர்.

3.            சேலம் மாவட்டம் மேச்சேரியிலிருந்து மேட்டூர் செல்லும் சாலையில் பொட்டனேரி என்ற ஊர் உள்ளது. பெருமாள் கோயிலுக்கு வடக்கே காட்டில் உள்ள தீர்த்தங்கரர் உருவத்தை உள்ளூர் மக்கள் சித்தர் சாமி என்று அழைக்கின்றனர்.

4.            திருப்பூர் மாவட்டம் உடுமலை _ பல்லடம் வழியில் 15ஆம் கிலோ மீட்டரில் வேலாயுதன் புதூரிலிருந்து நெகமம் செல்லும் சாலையில் பெரியபட்டி உள்ளது. அங்கு சுப்பிரமணியர் கோயில் எதிரே சமண தீர்த்தங்கரர் சிலை உள்ளது. ஊர் மக்கள் அதை தருமராஜா என்று கூறுகின்றனர்.

5.            ஈரோடு நகரில் செங்குந்தர் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதான வடகீழ் மூலையில் வேலி ஓரம் சமண தீர்த்தங்கரர் சிலை இருந்தது. மக்கள் அதை மொட்டைப் பிள்ளையார் என அழைத்தனர்.

6.            நாமக்கல் மாவட்டத்தில் அர்த்தநாரி பாளையம், திருச்செங்கோடு, மோகனூர் போன்ற பல இடங்களில் சமணக் குகைகள் பல உள்ளன. இவற்றைப் பஞ்ச பாண்டவர் கோயில் என்றே மக்கள் அழைக்கின்றனர்.

தலைவெட்டி முனியப்பன்

சமண தீர்த்தங்கரர் சிலைகள் மட்டுமல்ல புத்தர் தலையும் வெட்டப்பட்டள்ளது. சேலம் நகரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமர்ந்த நிலையில் ஒரு புத்தர் சிலை இருந்தது. யாரோ புத்தர் தலையை உடைத்துவிட்டனர். இதை அறிந்த சிலர் புத்தர் தலையை இரும்புத் தகட்டில் பொருத்தி வைத்து ஒரு சிறு கோயில் கட்டி உள்ளே புத்தர் சிலையை வைத்துவிட்டனர். புத்தருக்கு தலைவெட்டி முனியப்பன் என்ற பெயரும் வைத்துவிட்டனர். இன்று அந்தப் பெயராலேயே புத்தர் அழைக்கப்படுகிறார்.

ஏ.டி.ஹெச்.டி’  பிரச்னைக்குத் தீர்வு காணும் குங்குமப்பூ!

ஏ.டி.ஹெச்.டி (ADHD) எனப்படும் அட்டென்ஷன் டெஃபிசி ஹைபர் ஆக்டிவிட்டி டிஸ்ஆர்டர் (Attention Deficit Hyperactivity Disorder) குறைபாட்டை குணப்படுத்த குங்குமப்பூவைப் பயன்படுத்தலாம் என்று கண்டுபிடித்திருக்கிற டெஹ்ரான் மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்.

குழந்தைகள் வளரிளம் பருவத்தினர் மத்தியில் பொதுவாகக் காணப்படும் ஏ.டி.ஹெச்.டி, ஒரு நரம்பியல் உளவியல் குறைபாடு. இதைக் குணப்படுத்த பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்துகளுக்கு இணையாகக் குங்குமப்பூவும் அதன் அறிகுறைகளைக் கட்டுப்படுத்துவதாக இந்தப் பல்கலைக்கழக ஆய்வு தெரிவிக்கிறது. இதற்குக் காரணம், குங்குமப்பூவில் மனச்சோர்வைக் கட்டுப்படுத்தும், நினைவாற்றலை மேம்படுத்தும் குணங்கள் இருக்கின்றனவாம்.

விபூதிப் பூச்சில் தீர்த்தங்கரர்கள்:

சில இடங்களில் சமண தீர்த்தங்கரர் சிலைகட்கு உள்ளூர்ப் பூசாரிகள் விபூதிப் பூச்சுப் பூசியுள்ளதைக் காண்கிறோம்.

கோயம்புத்தூரில் வடக்கே கோயில்பாளையம் என்ற ஊர் உள்ளது. இலக்கியங்களில் கவசை என்றும் அரசு ஆவணங்களில் சர்க்கார் சாமக்குளம் என்றும் வழங்கப்படும் ஊர். அவ்வூரில் உள்ள ஒரு மேடையில் விநாயகருக்கு அருகில் சமண தீர்த்தங்கரர் சிலை வைக்கப்பட்டுள்ளது. விநாயகருக்குப் பூசை செய்யும் உள்ளுர் அர்ச்சகரான பண்பாரம் சமண தீர்த்தங்கரர் சிலைக்கும் விபூதி பூசிப் பூசை செய்கிறார்.

ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை _திங்களூர் சாலையில் மமுட்டித் தோப்பு என்ற இடத்தில் முதல் தீர்த்தங்கரர் ரிஷப தேவர் (ஆதி நாதர்) கோயில் உள்ளது. அங்குள்ள ரிஷப தேவருக்கும் விபூதிப் பூச்சுப் பூசப்பட்டுள்ளது.

இருந்து மறைந்த சமணர் சிலைகள்

சில கொங்கு வரலாற்று நூல்களின் சமணச் சிலைகள் உள்ளதாகக் குறிப்பிடும் இடங்களில் இன்று சமணச் சிலைகள் காணப்படவில்லை.

1934இல் திருச்செங்கோடு அ.முத்துசாமி கோனார் எழுதிய கொங்குநாடு என்னும் நூலில்,

தாராபுரத்துக்கு வடக்கே ஒரு பர்லாங் தூரத்தில் வயலிடையே ஒரு திட்டில் யட்சி, சந்திர பிரப தீர்த்தங்கரர் திருஉருவம் 5 அடி உயரத்தில் நல்ல வேலைப்பாடாகவும், அருகே சிலைகள் உடைந்தும் அநேக சிலைகள் புதைந்தும் உள்ளன.

என்று எழுதியுள்ளார். ஆனால், அவ்விடத்தில் அந்தச் சிலைகள் எதுவும் இல்லை.

1950ஆம் ஆண்டு கோவைக்கிழார் சி.எம்.இராமச்சந்திரஞ் செட்டியார் எழுதிய கொங்குநாடும் சமணமும் என்ற நூலில் காங்கேயம் சந்தை மேட்டிலும், பழங்கரை கிராமத்திலும் சமணச் சிலைகள் இருப்பதாக எழுதியுள்ளார். ஆனால், அங்கு இன்று சமண சிலைகள் எதுவும் இல்லை.

கொங்கு நாடெங்கும் பரவலாக வாழ்ந்த சமணர்கள் இன்று ஈரோடு மாவட்டம் பூந்துறை, விசயமங்கலம் ஆகிய இரண்டு ஊர்களில் மட்டும் வாழ்கிறார்கள். எந்த ஆதரவும் அற்ற நிலை. ஆதரிப்பார் இன்றி வெளியேறிய கொங்குச் சமணர்களின் அடையாளம் பாலக்காடு, வைநாடு, கருநாடக கெல்லிசூர், இராமநாதபுர அனுமந்தக்குடி, பரமக்குடி பகுதியில் காணப்படுகின்றன. பலர் சமணத்தை மறந்து மொட்டை வேளாளர் என்ற பெயரில் பிற சமுதாயத்தோடு இணைந்துவிட்டனர்.

-  உண்மை இதழ், 1-15.7.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக