இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள்பெரியார் கொள்கையின்பால் ஈர்க்கப்பட்டு, அவரது கொள்கைகளை தனது இறுதி மூச்சு உள்ளவரை பேசியும், எழுதியும் வந்தார்.
அவர் கடந்து வந்த பாதையும், வரலாற்றைப்பற்றி சிலவற்றை இங்கே தொகுத்துள்ளோம்.
19.12.1922 - கல்யாணசுந்தரம் - சொர்ணம் இணை யரின் மூத்த மகனாக 'இராமையா' (அன்பழகன்) பிறந்தார்.
1932 வரை- தொடக்கக் கல்வி
1933 - "குடந்தை மாமாங்கம் எதிர்ப்பு" - சிங்கை கோவிந்தராசன் தலைமையில் "மடமையை வளர்க்காதீர். மாமாங்கம் போகாதீர்" என்று பரப்புரை.
1939 - அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில், 'இன்டர்மிடியேட்' வகுப்பில், 'இயற்பியல், வேதியியல், பொருளாதாரம்' ஆகிய பாடங்களைப் பயிலுதல்.
1942 வரை- தென் இந்திய நல உரிமைச் சங்கம் சார்பில் சிதம்பரத்தில் நடைபெற்ற மாநாட்டில் சொற் பொழிவு, அண்ணாவின் பாராட்டு, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பி.ஏ. (ஹானர்ஸ்) தேர்ச்சி. மறைமலையடிகளின் தனித்தமிழ் இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு இராமையா என்ற பெயரை அன்பழகன் என்று மாற்றிக்கொண்டார்.
1943 - திருவாரூர், விசயபுரத்தில் இஸ்லாமியர் சங் கத்தில், சிந்து மாநிலத்தின் முன்னாள் முதல்வர், மறைந்த சிக்கந்தர் ஹயத்கான் நினைவு நாள் கூட்டத் தில் அண்ணாவுடன் கலந்து கொண்டு சொற்பொழிவு.
1943 - சிதம்பரத்தில் நடைபெற்ற நீதிக்கட்சி, போர் ஆதரவு மாநாட்டில் பெரியாருடன் சொற்பொழிவு.
1944 - கும்பகோணத்தில் நடைபெற்ற திராவிட மாணவர் (பிப்.19, 20) மாநாட்டில் ஆற்றிய உரை, பேரறிஞர் அண்ணாவின் பாராட்டுடன், திராவிட நாடு இதழில் தமிழா கேள் என்ற தலைப்பில் வெளியானது.
1944 - பி.ஏ.,ஆனர்ஸ் பட்டம் பெற்றார். திருவாரூரில் 'தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம்' கலைஞர், பேராசிரியரை அழைத்துப் பேசச் செய்தார்.
தந்தை பெரியார் கொள்கை வழியில் 98 வயதுவரை வாழ்ந்த
இனமான பகுத்தறிவுப் பேராசிரியர் க.அன்பழகன்
1944 - சேலம், நீதிக்கட்சி மாநாட்டில் நீதிக்கட்சியின் பெயர் திராவிடர் கழகமாக மாற்றம் பெற்றது - 'சண்டே அப்சர்வர்'
1944 - பி.பாலசுப்பிரமணியம் ஆங்கிலத்தில் ஆற்றிய உரையைத் தமிழில் மொழி பெயர்க்க பேரா சிரியரை அண்ணா பணித்து அதனை செவ்வனே செய்து முடித்தார்.
21.1.1945 - பெரியார் தலைமையில் பேராசிரியர் - வெற்றிச்செல்வி திருமணம்.
1945 - திராவிட இளைஞர் தூத்துக்குடி மாநாட்டில் தலைமை உரை, திருச்சி, திராவிடர் கழக மாநில மாநாடு பங்கேற்பு.
1946 - மதுரையில் கருப்புச் சட்டை மாநாட்டில் பேராசிரியர் பேச்சு. இம் மாநாட்டுப் பந்தல் எதிரிகளால் தீயிடப்பட்டது.
1947 - நெல்லையில் தி.க. மாநாட்டில் 'திராவிட நாடு' படத்தைத் திறந்து வைத்துப் பேசினார்.
1947 - கடலூரில் திராவிட நாடு பிரிவினை மாநாட் டில் திரு.வி.க.வுடன் பங்கேற்பு. 29.10.1947 - முதல் மகள் செந்தாமரை பிறப்பு.
1948 - ஈரோடு திராவிடர் கழக மாநில சிறப்பு மாநாட்டில் பங்கேற்பு.
1948 - கோவை முத்தமிழ் மாநாட்டில் பங்கேற்பு.
1948 - புதுவாழ்வு இதழ் ஆசிரியர் 17.9.1949 - தி.மு.க. தொடங்கப் பெற்று, முக்கியப் பங்கேற்று சிறப்புரை. 26.9.1949 - இரண்டாவது மகள் மணமல்லி பிறப்பு
1951 - தி.மு.க. முதல் மாநில மாநாடு, சென்னை தீவுத்திடல் பிப்ரவரி - பேராசிரியர் முழக்கம்!
1956 - திருச்சி - தி.மு.க. மாநாடு, தமிழ் இலக்கியத்தில் அரசியல் கருத்துரை - பேராசிரியர் பேச்சு
1957 - நேருவிற்குக் கருப்புக்கொடி காட்டி கைதாகி ‘5 நாள்கள் சிறைவாசம்' சட்டமன்றத் தேர்தலில் எழும்பூர் சட்டப் பேரவைத் தொகுதியில் வெற்றி பெறல்.
1959 - தி.மு.க. தொழிற்சங்கச் செயலாளராகப் பொறுப்பெற்று 1961 வரை பணியாற்றினார்.
1962 - எழும்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். சென்னை - செங்கற்பட்டு ஆசிரியர் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1964 - இந்தி எதிர்ப்பு மறியலில் ஈடுபட்டு 6 திங்கள் சிறைத் தண்டனைப் பெற்றார்.
1967 - சனவரி 1, தி.மு.க. நான்காவது மாநில மாநாடு விருகம்பாக்கம், சென்னை
1967 - திருச்செங்கோடு நாடாளுமன்றத்திற்கு திரு. காளியண்ண கவுண்டரை எதிர்த்து வெற்றி பெற்றார்.
1968 - இலண்டனில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டுக்கு தி.மு.க. சார்பாக, கலந்து கொள்ள மத்திய அரசு பேராசிரியரைத் தேர்ந்தெடுத்தது. செல்லும் வழியில் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா முதலான நாடுகளையும், மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்த அண்ணாவையும் கண்டு திரும்பினார்.
1969 - அண்ணா மறைவுற்றார் (3, பிப்ரவரி).
1969 - திருமதி வெற்றிச் செல்வி மறைவு (12.11.1969)
1971 - சென்னை புரசைவாக்கம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்வு. டாக்டர் செந்தாமரை- டாக்டர் சொக்கலிங்கம் (14.7.1971 ) மணவிழா.
1972 - மகள் டாக்டர் மணமல்லி -டாக்டர் சிவராமன் (8.9.1972) திருமணம்.
1975 - டிசம்பர் 29, தி.மு.க. அய்ந்தாவது மாநில மாநாடு, சேலம்.
1977 - புரசை சட்டமன்றத் தொகுதியிலிருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுதல் - மகன் அன்புச் செல்வன் - கல்யாணி திருமணம் (24.10.1977)
1978 - இந்திராகாந்திக்கு கருப்புக்கொடி காட்டி கைதாதல்.
1978 முதல் - தி.மு.க.வின் பொதுச் செயலாளர் (18.6.1978)
1980 - புரசை சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1980 டிசம்பர்- தி.மு.க. மாவட்ட மாநாடு, ஈரோடு.
1981 சனவரி - தி.மு.க. மாவட்ட மாநாடு, திருவண்ணாமலை
1983 - ஈழத் தமிழருக்காகக் கலைஞரும், பேரா சிரியரும் சட்டமன்றப் பதவியைத் துறந்தனர்.
1983 - மீண்டும் தி.மு.க. பொதுச் செயலாளர் (25.6.1983) ஆகுல்.
1984 - பூங்கா நகர் சட்டமன்றத் தொகுதியில் நின்று வெற்றி.
1984 - தி.மு.க. வட்ட மாநாடு, கரூர்.
1986 - அரசியல் சட்டப் பிரிவு எரித்தமைக்காக (இந்தி திணிப்பை எதிர்த்து) 10 சட்டமன்ற உறுப் பினர்களின் பதவி பறிக்கப்பட்டது.
1988 - மூன்றாவது முறையாகத் தி.மு.க. பொதுச் செயலாளர் (2.2.1988)
1989 - அண்ணாநகர் தொகுதியில்வெற்றி பெற்று கலைஞர் அமைச்சரவையில் கல்வி அமைச்சரானார். அண்ணாமலைப் பல்கலைக் கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது.
1990 - தி.மு.க. ஆறாவது மாநில மாநாடு. திருச்சி மாநாட்டுத் திறப்பாளர்.
1991 - சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பினை இழந்தார்
1991 டிசம்பர்- திராவிட இயக்கப் பவள விழா மாநாடு, மதுரை - மாநாட்டுத் திறப்பாளர்
1992 - நான்காவது முறையாக கழகப் பொதுச் செயலாளர் (2.6.1992)
1996 - தி.மு.க. எட்டாவது மாநில மாநாடு, திருச்சி.
1996 - சென்னை துறைமுகம் சட்டமன்றத் தொகுதி யில் போட்டியிட்டு வென்று கலைஞர் அமைச்சர வையில் மீண்டும் கல்வி அமைச்சரானார்
1997 - அய்ந்தாம் முறையாகக் கழகப் பொதுச் செய லாளர் (27.7.1997)
1997 - தி.மு.க. சிறப்பு மாநாடு, சேலம் மாநாட்டுத் திறப்பாளர்.
2000 - ஆறாம் முறையாகப் பொதுச் செயலாளர் (8.4.2000)
2001 - துறைமுகம் தொகுதியில் வெற்றி -மீண்டும் கல்வி அமைச்சர் ஆனார்.
2003 - ஏழாம் முறையாகக் கழகப் பொதுச் செயலாளர் (2.4.2003)
2006 - துறைமுகத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக் கப்பட்டு நிதி அமைச்சரானார்.
2008 - எட்டாம் முறையாகக் கழகப் பொதுச் செயலாளரானார் (27.12.2008)
2011 - வில்லிவாக்கம் தொகுதியில் வெற்றி வாய்ப் பினை இழந்தார்
2014 - ஒன்பதாம் முறையாக கழகப் பொதுச் செயலாளர் (9.1.2014)
2017 - முத்தமிழறிஞர் கலைஞர் உடல் நலிவுற்று இருந்தபோது கழக பொதுக் குழுவில் மு.க.ஸ்டாலின் அவர்களை கழகச் செயல்தலைவராக முன் மொழிந்தார்.
2018 - முத்தமிழறிஞர் கலைஞர் நம்மை விட்டுப் பிரிந்த போது ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பொதுக் குழுவில் மு.க.ஸ்டாலின் அவர்களை தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டதாக அறிவித்தார்.
2020 - உடல் நலிவுற்று சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் 7.3.2020இல் மறைவுற்றார்.
மறைவுற்ற பேராசிரியர் என்றும் நமக்கு மங்காத ஒளியாவார்! பாடம் எடுக்கும் பாசறையின் மங்காத முழக்கம்! அவர் வரலாறாகி வழிகாட்டுவார்!
- விடுதலை நாளேடு 7 3 20
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக