-
May 24, 2020 • Viduthalai • மற்றவை
1848 இல் ஒரு நிகழ்ச்சி நடந்தது. அப்போது இருபத்தோரு வயதான ஜோதிராவ் பூலே ஒரு பிராமண நண்பனின் திருமண ஊர்வலத்தில் பங்கேற்கத் துணிந்ததற்கு அவர் அவமானப்படுத்தப்பட்டார். புலே யின் ஜாதியை அறிந்து எரிச்சலுக்கு உள்ளான பிராமணர்கள் சிலர், அவ ரைத் திட்டினார்கள். கண்ணீரோடு பூலே வீட்டுக்குத் திரும்பினார். நடந்ததைத் தந்தைக்குச் சொன்னார். அவர் ‘இதை மனதில் வைத்துக் கொள்ளக்கூடாது' என்று சொல்லி மகனை சமாதானப்படுத்தினார். ‘‘நம்மைப் போன்ற கீழான சூத்திரர்கள் எப்படி பிராமணர்களுக்குச் சமமாக முடியும்? உன்னை நன்றாக அடிப்ப தற்குப் பதிலாக, ஏதோ விரட்டி அனுப்பி விட்டார்களே, அதுவே அவர்களின் கருணையைக் காட்ட வில்லையா?'' கீழான பிறப்பு உள்ள வர்களுக்கு இப்படி அவமரியாதை இழைக்கப்பட்ட பல சம்பவங்களை புலேயினுடைய தந்தை மகனுக்குக் கூறினார்.
இப்படிப்பட்ட தவறுகளுக்கு பிராமணர் அல்லாதவர்கள் யானை யின் காலின் கீழே இடறச் செய்து அவமானப்படுத்தப்படுவதைத் தானே பார்த்ததாகவும் கூறினார்.
ஆனால், பூலே அவருடைய தந்தையைப்போல் இல்லை. பூலே கிறித்துவப் பள்ளியில் படித்தவர். அப்போதே அவர் மனிதனின் உரிமைகள் என்ற தாமஸ் பெயனின் நூலைப் படித்திருந்தார். ஃபிரெஞ்சுப் புரட்சியும், அமெரிக்காவின் ஜன நாயகப் போரும் அவருடைய மன தில் பதிந்து போயிருந்தன. தனது சொந்த அவமதிப்பு தந்தையின் பரிதாபகரமான எதிர்வினை ஆகிய வற்றால் சமூக அடிமைத்தனத்தின் பயங்கர பிரம்மாண்டத்தை அவரால் உணர முடிந்தது. சோர்வும், கோபமும் மிஞ்ச அந்தக் கணத்தில் அவர் அடிமைப்பட்டவர்களுக்காகப் போராடவும், மீட்கவும் உறுதி கொண் டார். இந்திய சமூகத்தின் மோசமான எதிரி ஜாதி அடிமைத்தனம் என்று உணர்ந்து கொண்டார்.
உண்மை தேச பக்தி என்பது இந்த அடிமைத்தனத்தின் விலங்கு களை உடைப்பதில் இருக்கிறது.
பேஷ்வா அதிகாரத்தின் வீழ்ச்சி பிரிட்டீஷ் ஆட்சியின் நுழைவு ஒருபுறம் இருப்பினும், சமூகம் என் னவோ பிராமணச் சக்திகளின் ஆதிக்கத்தில்தான் இருந்தது. மதத் தின் தலைமைக்கு கல்வியின் மீதி ருந்த ஒற்றை ஆதிக்கமும் பிராமணர் களை இத்தகைய ஆதிக்கத்தை நிறுவ உதவி செய்தன.
பிராமண அரசியல் - சமூக உற வுகளுக்குள் வாழ்ந்த தலித் வெகு மக்கள், உயர்ஜாதி நலன்களை பொதுவான நலன்கள் என்று தவறாக எடுத்துக் கொண்டனர். மக்களின் மனங்களில் ஒரு புரட்சிக்கான கலாச் சார அடிப்படையை உருவாக்குவது தமக்கு முன்னுள்ள ஒரு சவால் என்பதைப் பூலே புரிந்துகொண்டார் - அதன் வாயிலாகத்தான் பொருளி யல், கருத்தியல் மாற்றத்தை உருவாக்க முடியும். அதனால் பார்ப்பனீயத்தின் மீதான அவரது தாக்குதல், இதுவரை ஜாதி வேறுபடுத்தலுக்கு எதிராக நடந்த முயற்சிகளைவிட வேறாக அமைந்தது.
1873 இல் சத்ய சோதக் சமாஜத்தை நிறுவினார். கல்வி மறுக்கப்பட்ட மக் களுக்குக் கல்வியின் உரிமை, பெண் கள் விடுதலை, விதவை மறுமணம், ஜோசிய நம்பிக்கை எதிர்ப்பு, பார்ப் பனப் புரோகிதரை அழைக்காமை என்ற தடத்தில் அவர் அமைப்பு பயணித்தது.
தந்தை பெரியார், பூலே போன்ற வர்கள் எத்தகைய நேர்க்கோட்டில் பயணிக்கிறார்கள் பார்த்தீர்களா?
பூலேபற்றி அண்ணல் அம் பேத்கர் இதோ கூறுகிறார்:
‘‘மற்றவர்கள் எங்கு விருப்பமோ அங்கு போகட்டும்; நாம் ஜோதிபா பூலேவின் பாதையைப் பின்பற்று வோம். நம்முடன் மார்க்சை எடுத்துச் செல்லலாம்; விட்டுவிடலாம். ஆனால், உறுதியாக, ஜோதிபாபூலே வின் தத்துவத்தைக் கைவிடமாட் டோம்.
- அண்ணல் அம்பேத்கர்.
(ஆதாரம்: ‘‘வரலாற்றில் பிராமண நீக்கம்'' - ப்ரஜ் ரஞ்சன் மணி தமிழில் க.பூரணச்சந்திரன்.)
- மயிலாடன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக