பக்கங்கள்

வியாழன், 21 மே, 2020

குடகை விட்டு விட்டு காவிரி நதி நீர் ஆணையத்தை நம்பியுள்ளோம்

Published:Updated:

குடகை விட்டு விட்டு காவிரி நதி நீர் ஆணையத்தை நம்பியுள்ளோம்

குடகை விட்டு விட்டு காவிரி நதி நீர் ஆணையத்தை நம்பியுள்ளோம்
குடகை விட்டு விட்டு காவிரி நதி நீர் ஆணையத்தை நம்பியுள்ளோம்

இந்தியாவின் ஸ்காட்லாந்து என்று அழைக்கப்படும் பகுதி கர்நாடகத்தின் குடகு மலைப்பகுதி. இது கூர்க் என்று இப்போது அழைக்கப்படுகிறது.  மூவேந்தர்கள் தமிழகத்தை ஆட்சி செய்த காலம் தொட்டே குடகு நம் தமிழகத்தின் கீழ் இருந்த சிற்றரசாகவே இருந்து வந்துள்ளது. சங்ககாலத்தில் பொன்படு நெடுவரை என்று அழைக்கப்பட்டதால்தான் அங்கிருந்து ஓடி வந்த காவிரியை 'பொன்னி' என்றே அழைத்தோம். காலம் மாறியது, மன்னர்கள் ஒழிந்தார்கள், கிழக்கிந்தியக் கம்பெனி வந்தது. 1834-ம் ஆண்டு மைசூர் அரசை கட்டுப்படுத்தி வைத்திருந்த ஆங்கிலேயர்கள் குடகை தங்கள் ஆட்சியின் கீழ் இணைத்துக்கொண்டார்கள். சுதந்திரத்துக்குப் பிறகு சமஸ்தானங்கள் இணைக்கப்பட்டு ஒருமித்த இந்தியா உருவானது. அப்போது தமிழகத்துக்கும், கர்நாடகத்துக்கும் இடையில் தனிப்பகுதியாக துளு மொழியின் அடிப்படையில் குடகு இருந்து வந்தது. மொழிவாரி மாகாணங்கள் அமைக்கப்பட வேண்டும் என்ற நிலை 1956-ம் ஆண்டில் வலுத்து வந்தது. அப்போது குடகு பகுதியை யூனியன் பிரதேசமாக்க வேண்டும் என்று மக்களால் கூறப்பட்டது. பிரதமர் நேரு தமிழகம் அல்லது கர்நாடகா என ஏதேனும் ஒரு மாநிலத்தோடு இணைந்துக் கொள்ளுங்கள் என ஆலோசனை கூறினார்.

- விகடன் இணையம்

https://www.vikatan.com/news/tamilnadu/95301-we-leave-the-coorg-and-rely-on-the-cauvery-river-water-authority.html

1956 ஆம் ஆண்டு இந்தியா மொழிவாரி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டபோது, தனிமாநிலமாக   குடகு மொழியின் அடிப்படையில் ‘குடகு’ என்கிற மாநிலம் உருவாக இருந்தது. தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் இடையில் மிகச் சிறிய பகுதி குடகு. அப்போது குடகு மக்கள் தங்களை இந்தியாவின் யூனியன் பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று பிரதமர் நேருவிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால் நேரு, யூனியனாக உங்களை இணைக்க முடியாது, ஏதேனும் ஒரு மாநிலத்தோடு இணைந்து கொள்ளலாம் என ஆலோசனை கூறினார்.


குடகு மக்கள், தமிழகத்துடன் இணையவே தங்களின் விருப்பத்தை ஒருமித்த கருத்தாக வெளிப்படுத்தினர். ஆனால் தமிழகத்தில் அப்போதிருந்த ஆட்சியாளர்கள் அதனை மறுத்து விட்டார்கள். 


தமிழகம் போல் கர்நாடகமும் முதலில் மறுத்தது. ஆனால் பிறகு சம்மதித்து தம்முடன் குடகு பகுதியை இணைத்து ஒரு மாவட்டமாக ஏற்றுக் கொண்டது.


எந்த குடகு பகுதியை தமிழகம் வேண்டாம் என்று சொல்லியதோ அந்த குடகில்தான் தலிக்காவிரி என்னும் இடத்தில்தான் காவிரி ஆறு உற்பத்தி ஆகிறது. . 


அப்போது தந்தை பெரியார், குடகை தமிழகத்துடன் இணைக்க வேண்டுமென உரிமைக் குரல் கொடுத்தார். விடுதலைப் பத்திரிகையில் எழுதினார். பேரணி நடத்தினார். இருந்தும் அவரின் குரலை அப்போதைய காங்கிரஸ் அரசாங்கம் அலட்சியம் செய்தது. 


அன்றைக்கு குடகு மக்களின் எண்ணம் போல் நாம் அவர்களை அந்தப் பகுதியை தமிழகத்துடன் சேர்த்து இருந்தால்காவிரி ஆற்றுநீர் பிரச்சினை இந்த அளவு முற்றி இருக்காது தமிழகத்தின் உரிமை இன்னும் மிக பலப்பட்டு இருக்கும். அத்தகைய வாய்ப்பை விட்டுக் கொடுத்தவர்கள் யார் ? இந்திய தேசியக் காங்கிரசும் அக்கட்சியின் முதல்வராக அப்போது தமிழகத்தை ஆண்ட பெருந்தலைவர் காமராஜரும்தான் என்பது கசப்பான உண்மை.  எதற்கெடுத்தாலும் திராவிடத்தையும் திமுகழகத்தையும் கலைஞரையும் குறை சொல்லித் திரியும் தில்லுமுல்லுப் பேர்வழிகள் தெரிந்து கொள்ளட்டும் இந்த வரலாற்றை.

-அருள்பிரகாசம் முகநூல் பக்கம், 16.5.19



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக