பக்கங்கள்

வெள்ளி, 8 மே, 2020

அயோத்திதாசரும் பெரியாரும்

"பெரியாருக்கு "அப்பன்" அயோத்தி தாசர் 
பெரியார் படித்த பள்ளியில்  அயோத்திதாசர், Head master.... என்று 

அயோத்திதாசரை உயர்த்துவதற்காக பெரியாரைத் தாழ்த்தும் சில "அறிவீளிகளே" உங்களுக்குத்தான் இப்பதிவு.

ஒரு முன் குறிப்புடன் பதிவைத் தொடங்குதலே சிறப்பாயிருக்கும்.

பெங்களூரில் நடைபெற்ற பெரியாரின் 68வது பிறந்த நாள் விழாவில், பெரியார் இப்படி பேசினார்.....

“என் பகுத்தறிவுப் பிரச்சாரத்திற்கும், சீர்திருத்தக் கருத்துகளுக்கும் 
முன் னோடிகளாகத் திகழ்ந்தவர்கள் பண்டித மணி அயோத்திதாசரும், தங்க வயல் ஜி.  அப்பாதுரையார் அவர்களும் ஆவார்கள்”

இன்றைய போலி தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் தலைவர்கள் போகிற போக்கில் சொல்லுகிற வார்த்தைகளைப்போல் பெரியாரின் வார்த்தைகளைப் பார்க்கக் கூடாது.

நீதிக் கட்சித் தலைவர்களான சி.நடேசமுதலியார், தியாகராயச் செட்டியார், டி.எம். நாயர் போன்ற தலைவர்களின் வரிசையில்தான் அயோத்திதாசரையும் வைத்திருக்கிறார், என்பது அவரது வார்த்தைகளில் நன்கு புரிகிறது.

தலித் மக்களின் விடுதலையைத் தொடங்கி வைத்தவர், 

"திராவிடர் கழகம்” என்ற அமைப்பை முதன் முதலில் தோற்றுவித்தவர்,

தாழ்த்தப்பட்ட இனத்தின் விடிவெள்ளி, 
தனித்தமிழ் இயக்கத்தைத் தொடங்கி வைத்தவர்; இந்தியாவில் பேரரசை நிறுவிய அசோக மன்னனுக்குப் பிறகு, தமிழகத்தில் பவுத்த மறுமலர்ச்சியைத் தோற்றுவித்தவர்.....இப்படி இவரின் பெருமைகளை சொல்லிக்கொண்டே போகலாம்.

மேற்குறிப்பிட்டவையெல்லாம் பெரியார் அரசியலில் தீவிரம் காட்டுவதற்கு முன்னதாகவே அயோத்திதாசர் இயங்கிய தளங்கள்.

அதனால்தான் அவரை முன்னோடி என்று பெருமையோடு கொண்டாடி இருக்கிறார் பெரியார். 

தந்தை பெரியாரால் போற்றப்பட்ட காத்தவராயன் என்ற அயோத்திதாசரை
நானும் போற்றுகிறேன். வணங்குகிறேன்.

முன் குறிப்பு முடித்தது...

இனி என் குறிப்பு.....

ஆங்கிலர் ஆட்சியில் 1843 ஆம் ஆண்டில் "அடிமை ஒழிப்புச் சட்டம்" 
1861 ஆம் ஆண்டில் "இந்தியன் பீனல்கோடு சட்டம்" ஆகியவற்றின் மூலம் "சண்டாளர்கள்" என அழைக்கப்பட்ட தீண்டப்படாதத் தாழ்த்தப்பட்ட மக்களுக்குச் சட்ட பூர்வ விடுதலை கிடைத்தது என்றாலும்.... சமுதாய நடைமுறையில் விடுதலை இல்லை;சமூக ரீதியில் அவர்கள் தொடர்ந்து அடிமைகளாகவே நடத்தப்பட்டனர். 

இந்து sorry "ஹிந்து" மேல்ஜாதியக் கொடுமைகளுக்கு அவர்கள் ஆட்பட்டு அவதிக்குள்ளாகி வந்தனர்.

இந்த கொடுமை தமிழகத்தில் மிகவும் தீவிரமாக இருந்தது. மக்களிடையே சாதிவேறுபாடு மிகவும் வேரூன்றி யிருந்தது.மக்கள் ஒருவரை ஒருவர் சாதிப்பெயரைச் சொல்லியே அழைத்துக் கொண்டனர்

"சாதிதான் தமிழ் நாட்டு மக்களின் அடையாளமாக இருந்தது" 

ஆதலால் தீண்டப்படாத மக்களை "பறையர்" என்றே மேட்டுக்குடியினர் அழைத்து இழிவு செய்தனர்.எனவே சாதிகளற்ற சமுதாயத்தை உருவாக்க அவர் காலத்தில் "என்ன" செய்ய முடியுமோ, அதை தீவிரமாக செய்தவர் அயோத்திதாசர்.

"தான் சார்ந்த இனம்" இப்படி தாழ்த்தப்பட்டு கிடக்கிறதே என்று பொங்கியெழுந்து போராடியவர் அயோத்திதாசர்.

ஆனால் பெரியார் அப்படி அல்ல....

தனது இனத்துக்காகவோ, தனது மொழிக்காகவோ, தனது பாலினத்துக்காகவோ, தனது மாநிலத்துக்காகவோ, என்று 

"தனிப்பட்டு போராடியவரல்ல".

சமூகத்தில் நிலவும் பல்வேறு வடிவிலான பாலினப் பாகுபாடுகள், சமுதாய அடக்குமுறைகளின்  ஆணிவேரைக் கண்டறிந்து, அதனை அடியோடு அழித்தொழிக்க, பல அதிரடிக் கருத்துகளை எடுத்துரைத்து, அவை நிறைவேறும் வரை 
"நின்று போராடியவர்" பெரியார்.

ஜாதி ஒழிப்பு, 
பெண்விடுதலை, 
சமூக நீதி, 
சாதிய எதிர்ப்பு, 
மூடநம்பிக்கை எதிர்ப்பு, 
இறைமறுப்பு, 
பெண்கள் முன்னேற்றம், 
பெண் கல்வி, 
பொதுவுடைமை, 
பகுத்தறிவு, 
சுயமரியாதை, 
தமிழ்நாட்டு உரிமை, 
அகில இந்திய அளவில் பார்ப்பனர் அல்லாதார் உரிமை, 
இந்திய அரசியல், 
தமிழ்நாட்டு அரசியல், 
போன்ற சமுதாயத்தின் அனைத்துத் தளங்களிலும் கடுமையாக  "சமரசமின்றிப் போராடியவர்" பெரியார். 

"சமுதாய முன்னேற்றம்" என்ற "சங்கிலியில்" பல்வேறு காலகட்டத்தில் பல்வேறு தலைவர்கள் தோன்றி தம்மை ஒரு கண்ணியாக இணைத்துக் கொண்டு போராடி வந்துள்ளனர்.

அந்தச் சங்கிலியின் ஒரு "கண்ணி" அயோத்திதாசர் என்றால் அந்த சங்கிலியின் பல "கண்ணிகளை" தான் ஒருவனே தனித்து நின்று 

"இணைத்தவர் தான் பெரியார்".

பிறப்பினைக் காரணம் காட்டி  
"சக மனிதனை" எது வரை இச்சமுதாயம் இகழ்கிறதோ , 

சரிநிகர் சமான சமுதாயம் என்று மலர்கிறதோ, 

கடவுளின் பெயரால் ஆதிக்க சக்தி எதுவரை நம்மை அடிமைப்படுத்தி வைக்கிறதோ,

ஜாதியற்ற சமுதாயம் என்று மலர்கிறதோ....

அதுவரை "ஒருவர் இருப்பார்" ....
அதன் பின்னும் இருப்பார்.....

அவர்தான் பெரியார்.....

என்ற பெருமித பூரிப்போடு கூறும்.....

பெரியாரின் பேரன் நான்.
-  பெரியாரின் பேரன் நான் முகநூல் பக்கம், 8.5.20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக