பக்கங்கள்

வியாழன், 2 ஜூலை, 2020

"ஆசிரியருக்குப் பாடம் நடத்துகிறாரா கணக்கப்பிள்ள" மின்சாரம்




‘தமிழ், தமிழர், தமிழ்நாடு தொடர்ந்து புறக்கணிக்கப் படுகிற நிலைதான் உள்ளது’ என்கிறாரே வீரமணி’ என்று யாரோ ஒருவர் கேட்டதாகக் கூறும் ஒரு கேள்விக்கு ‘துக்ளக்‘ ஏட்டில் (10.6.2020) திருவாளர் குருமூர்த்தி அய்யர் பதில் கூற முயற்சி செய்துள்ளார்.
கி. வீரமணி கூறுவது உண்மையானால், ஈ.வெ.ரா. மறைந்து 45 ஆண்டுகளுக்குப் பிறகுதான் அதுவும் இன்றுதான் பெரியார் மண் ஆகியிருக்கிறது தமிழைப் புறக்கணித்தால் தான் தமிழர்கள் மானம், பகுத்தறிவு ஆகியவை உள்ளவர்களாக ஆக முடியும் என்று தொடர்ந்து அடித்துக் கூறி வந்திருக்கிறார் ஈ.வெ.ரா.. தமிழ், தமிழறிஞர்களைப் பற்றிய ஈ.வெ.ரா.வின் அந்த உயர்ந்த கருத்துக்களை வீரமணி படிக்கவில்லை என்பது நிச்சயம்’ - என்று எழுதுகிறார் திருவாளர் குருமூர்த்தி அய்யர்வாள். ஆசிரியருக்குப் பாடம் நடத்துகிறார் கோயங்கா வீட்டுக் கணக்கப்பிள்ளை.
ஆமாம் பெரியாரைப் பற்றி குருமூர்த்திதான் அதிகம் படித்தவர் - பெரியார் பேச்சுக்களையும் எழுத்து களையும் அப்படியே கரைத்துக் குடித்தவர், பாவம் வீரமணிக்குப் பெரியாரைப் பற்றி என்ன தெரியும் - நம்புங்கள்!
எவ்வளவு தின’வெட்டு’ இருந்தால் இந்தத் திரிநூல் களுக்கு இப்படியெல்லாம் எழுதத் ÔதுணிவுÕ வரும்?
திராவிடர் கழகத் தலைவர் ஒன்றைச் சொல்லி யுள்ளார் என்று குறிப்பிட்டால், அதை எங்கே சொன் னார், எப்பொழுது சொன்னார் என்று கூறும் குறைந்த பட்ச அறிவு நாணயம் இருக்க வேண்டாமா?
அதே போல, பெரியார் சொன்னார் என்று ஒன்றை சொன்னால் எப்பொழுது சொன்னார்? எங்கே சொன் னார்? என்று கூறும் அடிப்படை யோக்கியத்தன்மை இருக்க வேண்டாமா?
இந்தப் பார்ப்பனர்தான் இப்படியெல்லாம் எழுது வதை - சொல்லுவதைப் பார்க்கும் பொழுது, சாத்தூர் தோழர் இலட்சுமணப் பெருமாள் கூறும் எடுத்துக் காட்டுதான் நினைவிற்கு வந்து தொலைகிறது.
கும்பகோணத்தில் பார்ப்பான் குட்டையில் விழுந் தான் என்ற கதையாக அல்லவோ இருக்கிறது. இதோ சாத்தூர் தோழர் இலட்சுமணப் பெருமாள்:
“ஒரு நாள் உபய வேதாந்த தாத்தையங்கார் ஸ்வாமிகள் விருதுநகர் மாவட்டம் நின்ற நாராயணப் பெருமாள் கோவிலுக்கு வந்து குளப்படிக்கட்டில் வழுக்கி விழுந்தது குறித்து தகவல் தெரிவிக்க, தன் பணியாளிடம் பின்வருமாறு சொல்லியனுப்பினார் ஒரு நிலக்கிழார்.
“திருக்குடந்தை திருலோக தாத்தாச்சாரி, திருத்தங்கல் திருநின்ற நாராயணப் பெருமாள் திருமுகம் சேவிக்கத் திருக்கோவிலுக்குவந்து திருக்கோவில் வளாகத்தில் இருக்கக்கூடிய திருப்படிக்கட்டுகளில் இறங்கி திருத் துழாய் பிடுங்கிறச்சே, திருக்குளத்துப் பாசிகள் வழுக்கி திருக்குளத்தில் விழுந்து திருக்காலில் ஹீன மடைந்தார்னு போய்ச் சொல்லிடு” என்றார்.
கும்பகோணத்து நிலக்கிழாருக்கும் இப்படி கூறும் குருமூர்த்திகளுக்கும் என்ன தொடர்போ!
தமிழைப் பற்றி தந்தை பெரியார் என்ன சொன்னார் எந்தப் பொருளில் சொன்னார் என்பது தமிழர்களுக்கு நன்றாகவே தெரியும். அதைப் பார்ப்பனர்கள் சொல்லத் தேவையில்லை.
தமிழை நீஷப்பாஷை என்றும், நீஷப் பாஷையை பூஜை வேளையில் ‘பெரியவாள்’ (காஞ்சி சங்கராச் சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி) பேச மாட்டாள் என்ற நிலையில் உள்ளவர்கள் தந்தை பெரியார் தமிழைப் பற்றிச் சொன்னதுபற்றிப் பேசிட அருகதை யற்றவர்களே (ஆட்சி மொழிக் காவலர் கீ. இராமலிங் கனார் பேட்டி - ‘உண்மை’ 1,15-12-1980)
‘தீக்குறளைச் சென்றோதோம்‘ என்ற ஆண்டாளின் பாடலுக்குத் தீய திருக்குறளை ஓத மாட்டோம் என்று சொன்ன ஓர் ஆசாமியை லோகக் குரு என்று கூறிக் கூத்தாடும் குருமூர்த்தி கூட்டம் எந்த முகத்தைக் கொண்டு தந்தை பெரியாரை விமர்சிக்கக் கிளம்பி யிருக்கிறது?
ஆண்டாள் கூறிய ‘குறளை’ என்ற சொல்லுக்கு கோள் சொல்லுதல் என்னும் பொருள்கூடத் தெரி யாதவாள் எல்லாம் தமிழுக்குத் தொண்டு செய்தவாளா!
அவருக்கா தெரியாது? அண்டத்தையும் கரைத்துக் குடித்தவர் என்று சொல்லுவார்களேயானால், அவர் ஒரு Ôவிஷமி’ என்பதை ஒப்புக் கொள்கிறார் என்று பொருள்.
திரு என்ற அழகிய தமிழ்ச்சொல்லைப் பயன்படுத்து வதற்கு ‘தமிழ்த் தாத்தா’ என்று கூறப்படும் உ.வே. சாமிநாதய்யர், இரா. இராகவ அய்யங்கார்கள் உமிழ்ந்த வெறுப்புணர்ச்சி ஒன்று போதாதா? (முனைவர் சாரதா நம்பி ஆரூரான் எழுதிய “தனித் தமிழ் இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும்ÕÕ) .
கரூர் அருகே திருமலை முத்தீஸ்வரர் கோயில் குட முழுக்கு தமிழில் நடந்ததால் (9.9.2002) அதனைக் கண்டித்தவர்தானே காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி (இந்தியா டுடே 2.10.2002).
திருக்குறள் பகவத் கீதையின் மொழிபெயர்ப்பு என்று சொன்னவரும் சாட்சாத் இந்த ஜெயேந்திரர்தான் (‘தினத்தந்தி’ 15.4.2004)
கேள்வி: எல்லா உள்ளாட்சி அலுவலகங்களிலும் இனி ‘தமிழ் வாழ்க! என்ற நியான் விளக்குகள் வைக்கப் படும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளாரே! இதன் பயன் என்ன?
பதில்: இதனால்தான் தமிழ் வளரும் என்றால், அதைவிட தமிழுக்குக் கேவலம் தேவையில்லை. இது தமிழ் வாழ்வதற்கல்ல. நியான் விளக்குக் காண்டிராக்ட் எடுப்பவர் வாழ; அது வழி செய்யும் அது போதுமே! (‘துக்ளக்‘ 19.5.2010 பக்கம் 25)
தமிழ்மீது ‘துக்ளக்‘கின் வயிற்றெரிச்சல் இதுதான்.
இந்த யோக்கியதை உள்ள பார்ப்பனர்கள் தந்தை பெரியார் தமிழைப் பழித்து விட்டார்; கேவலமாகக் கூறி விட்டார் என்று பரப்புரை செய்வது - தந்தை பெரியார் தமிழ்நாட்டில் பார்ப்பன ஆதிக்க எதிர்ப்புணர்ச்சி எரிமலையைத் தூங்காமல் விழிக்கச் செய்து விட்டுச் சென்று விட்டாரே என்ற ஆத்திரத்தில் அலை மோதலும் - மொத்துதலும்தான்
தமிழ்மீது தந்தை பெரியாருக்கு வெறுப்பா - அல்லது புராணச் சகதியிலிருந்து அதனை மீட்டெடுக்க வேண்டும் என்ற அக்கறையா?
தந்தை பெரியார் உருவாக்கிய குடிஅரசு, புரட்சி, பகுத்தறிவு, விடுதலை, உண்மை போன்றவற்றின் பெயர்களைப் பார்த்தாலே தெரியுமே தந்தை பெரியார் தமிழ்மீது அக்கறை கொண்டவர் என்பதற்கு
தமிழ்பற்றி தந்தை பெரியார் கருத்தென்ன?
“முதலாவதாக தமிழ் முன்னேற்றமடைந்து உலக பாஷை வரிசையில் அதுவும் ஒரு பாஷையாக இருக்க வேண்டுமானால் தமிழையும், மதத்தையும் பிரித்து விட வேண்டும். தமிழுக்கும் கடவுளுக்கும் உள்ள சம்பந்தத்தையும் கொஞ்சமாவது தள்ளி வைக்க வேண்டும்.” (குடிஅரசு 26.1.1936).
“தமிழ்மொழி, ஆங்கில மொழி இரண்டைப் பற்றியும் என்னுடைய கருத்தை பல முறை சொல் லியிருக்கிறேன். ஆங்கிலம் வளர்ந்த மொழி, விஞ்ஞான மொழி என்பதும், தமிழ் வளர்ச்சி அடையாத பழங்கால மொழி என்பதும் என்னுடைய மதிப்பீடாகும். இதை நான் சொன்னதற்கான முக்கிய நோக்கம் தமிழ் மொழி- ஆங்கில மொழி அளவுக்கு விஞ்ஞான மொழியாகவும், பகுத்தறிவு மொழியாகவும் ஆகவில்லை என்பதுதானே தவிர, தமிழ்மீது எனக்கு வெறுப்பில்லை” (விடுதலை 1.12.1970).
தமிழ்மீதான தந்தை பெரியாரின் பார்வை இதுதான்! தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் கொண்டு வந்தவர் அவரே! அதைத்தான் இப்பொழுது ‘துக்ளக்‘ உள்ளிட்ட பார்ப்பன ஏடுகளும் கடைப்பிடித்தே தீர வேண்டிய கட்டாயம் - அரசே சட்டரீதியாக ஏற்றுக் கொண்டுள்ள நிலை.
தமிழில் பெயர் சூட்டுதல் என்ற புத்துணர்ச்சியை ஏற்படுத்தியவர் அவர்தானே! ஒரே ஒரு பரிதிமாற் கலைஞரைத் தவிர - தமிழில் பெயர் சூட்டிக் கொண்டுள்ள ஒரே ஒரு பார்ப்பனரைக் காட்ட முடியுமா?
தமிழர் வீட்டு நிகழ்ச்சிகளைத் தமிழிலே நடத்தும் நிலையை நிறுவியவர் தந்தை பெரியார்தானே!
இந்த நிலையில் தமிழ், தமிழர், தமிழ்நாடு புறக்கணிக்கப்படுகிற நிலைதான் உள்ளது என்று திராவிடர் கழகத் தலைவர் வீரமணி கூறியுள்ளதாகவும், தமிழைப் பற்றி பெரியார் சொன்னதையெல்லாம் வீரமணி படிக்கவில்லை என்றும் குடுமி குருமூர்த்தி உளறிக் கொட்டியிருக்கிறார்.
தந்தை பெரியாரைப்பற்றி திராவிடர் கழகத் தலைவர் எந்த அளவு படித்திருக்கிறார்- அறிந்து இருக்கிறார் - தந்தை பெரியாரிடம் பாடம் படித்திருக் கிறார் என்பதற்கு பார்ப்பனக் குருமூர்த்திகளின் சான்று பத்திரம் தேவையில்லை. இதை உலகம் அறியும்.
கடைசியாக ஒன்று: தந்தை பெரியார் பற்றி யாரோ அனாமதேயங்கள் எழுதுவதையெல்லாம் போட்டு நிரப்பும் குப்பைத் தொட்டியாக ‘துக்ளக்‘ ‘அவதாரம்‘ எடுத்திருக்கிறது.
அனாமதேயங்களுக்குப் பரிவட்டம் கட்டி தந்தை பெரியாரைப் பற்றித் தூற்றச் செய்யலாம் - அதற்கு மலிவாகவும் தமிழர்களில் ஆட்களும் கிடைப்பார்கள்.
நாங்கள் அப்படி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. காஞ்சி மடத்திலேயே வளர்ந்து முக்கியப் பொறுப்புகளிலும் அமர்ந்து Ôஅவனன்றி ஓரணுவும் அசையாதுÕ என்று சொல்லும் அளவுக்கு அனைத்திலும் அத்துப்படியானவர் சங்கரராமன் (அவர்தான் வரதராஜ பெருமாள் முன்னிலையில் பட்டப் பகலில் கொல்லப் பட்டார். இந்த வழக்கில்தான் ‘லோகக் குரு’ காஞ்சி பெரியவாள் ஜெயேந்திர சரஸ்வதி 61 நாள் வேலூர் சிறையில் கம்பி எண்ணினார்).
அந்த சங்கரராமன் சோம சேகர கனபாடிகள் என்ற பெயரில் வண்டி வண்டியாக ‘ஜெகத்குரு ஜெயேந்திரரின் வண்டவாளங்களை எழுதித் தள்ளினாரே - அவற்றை எல்லாம் மக்கள் மத்தியில் கொட்ட வேண்டுமா? (ஊரே நாறிப் போய் விடும்) எப்படி வசதி? குருமூர்த்திகள் Ôகுஸ்திÕக்கு வருவார்களா? எங்கே பார்ப்போம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக