கேள்வி: லுங்கி (கைலி, சாரம்) கட்டிக் கொண்டு கோவிலுக்குள் நுழையக் கூடாது என்ற கட்டுப்பாடு தேவையா?
பதில்:தேவைதான். கோவில் ஒன்றும் கண் காட்சிக் கூடமில்லை. அது புனிதமான வழிபாட்டுக்குரிய இடம்.
'விஜயபாரதம்', ஆர்.எஸ்.எஸ். வார இதழ் 14.6.2019, பக்கம் 36
விஜயபாரதத்துக்கு' அவர்கள் நம்புகிற கடவுள்கள்பற்றியோ, கோவில்களின் நடைமுறை கள்பற்றியோ கூட ஒன்றும் தெரியாது போலிருக்கிறது.
அந்த ஏட்டுக்கு நாம் பதில் சொல்லுவது பொருத்தமாக இருக்காது. அவர்களின் வகையறாவைச் சேர்ந்த கல்கி'யின் மூலம் பதில் சொன்னால்தான் சரிபட்டு வரும்.
12.9.1982 கல்கி'யில் பின்கண்ட செய்தி வெளி யாகி உள்ளது.
"ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோவிலில் அர்ஜுன மண்டபத்தில் துலுக்க நாச்சியார் சன்னதி ஒன்று இருக்கிறது.
அமாவாசை, மாதப் பிறப்பு, ஜன்ம நட்சத்திரம் ஆகிய தினங்களில் துலுக்க நாச்சியாருக்காக உற்சவமூர்த்தி ஸ்ரீரங்க நாதருக்கு திருமஞ்சனம் செய்து, கைலி கட்டி அலங்கரிக்கிறார்கள்.''
மறுபடியும் சொல்லுகி றோம் - மீண்டும் அடித்துச் சொல்லுகிறோம்!
இதனை வெளியிட்டு இருப்பது சாட்சாத் கல்கி' இதழே! கருப்புச் சட்டை யோடு கல்கி'யையும் இணைத்துக் கதை கட்ட முடியாது அல்லவா!
இப்பொழுது சொல் லுங்கள். இவர்களில் காத்தல் கடவுளான மகாவிஷ்ணுவான ஸ்ரீரங்கம் அரங்கநாதனுக்கு அமா வாசை, மாதப் பிறப்பு, ஜன்ம நட்சத்திரத்தில் கைலி கட்டி அழகு பார்க்கலாமாம்.
அதற்கு அவாளின் ஆக மத்தில் எல்லாம் அனுமதி உண்டு.
ஆனால், அரங்கநாத னின் பக்தர்கள், அந்த அரங்கநாதனைத் தரிசிக்கக் கைலி கட்டிக்கொண்டு போகக்கூடாதாம். இது என்ன இரட்டை அளவுகோல்?
ஸ்ரீரங்கம் கோவிலுக்குள் துலுக்க நாச்சியார் எங்கு வந்தார்? இதில் மதம் மாறியது அரங்கநாதரா? துலுக்க நாச்சியாரா? விஜயபாரத'ங்களுக்கே வெளிச்சம்!
- மயிலாடன்
- 4.7.19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக