பக்கங்கள்

வியாழன், 22 பிப்ரவரி, 2018

மதுரை மீனாட்சி - உன் கதை என்னாச்சி?”

- கருஞ்சட்டை

மதுரையை ஆட்சி செய்பவள் யார் தெரியுமா?



சாட்சாத் மீனாட்சிதான். அப்படித்தான் சொல்லிக் கொண்டு திரிகிறார்கள். புராணம், தல புராணங்களையும் எழுதி வைத்து உள்ளனர்.

இந்தக் கோயிலில் உள்ள தீர்த்தம் இருக் கிறதே - அடேயப்பா - அதன் மகத்துவத்தைச் சொல்லி மாளாது.

பரஞ்சோதி முனிவரால் இயற்றப்பட்ட திருவிளையாடல் புராணம் மாபாதகம் தீர்த்த படலத்தில் ஒரு பாடல்,

அன்னையைப் புணர்ந்து தாதை

குரவனாம் அந்தணாளன்

தன்னையும் கொன்ற பாவம்

தணிந்து வீடளித்த தென்றால்

பின்னை நீவிழி நோய் குட்டம்

பெரு வலி றீளை வெப்பென்று

இன்ன நோய் தீர்க்கும் தீர்த்தம்

என்பதோ இதற்கு மேன்மை.

(மாபாதகம் தீர்த்த படலம், திருவிளை யாடல் புராணம், பரஞ்சோதி முனிவர்).

தந்தையைக் கொன்று தாயைப் புணர்ந் தவனுக்கே மோட்சம் அளித்தது இந்தப் புண்ணிய தீர்த்தம் என்றால், குஷ்டம், வெப்பு நோய்ப் போன்ற தீராத நோய்களைத் தீர்க்கும் என்பதா இந்த தீர்த்தத்துக்குப் பெருமை என்று மகா மகாத்மியமாம் மீனாட்சிக் கோயில் தீர்த்தத்திற்கு.

பக்தி என்றால் பகுத்தறிவைப் பயன்படுத் தாதே - பண்பாட்டுக்கெல்லாம் இங்கு இட மில்லை. ஒழுக்கம், உயர் பண்பு என்ப தெல்லாம் சுத்த பிதற்றல்!

மதுரை மட்டுமல்ல - ஒவ்வொரு ஊரில் உள்ள கோயிலிலும் இந்த வகையில் போட்டிக் கடைகள்தான். எவ்வளவுக் கெவ்வளவு கீழ்த்தரமான, ஒழுக்கக் கேடான பாவங்களைச் செய்யும் மனித னுக்கும் மிகச் சுலபமான பரிகாரம் கொடுத் தால் தான் கடவுளுக்குள்ளேயே உசத்தி - அங்கு தான் மக்கள் வெள்ளம் கரை புரண்டு ஓடும். பாவம் அதிகமாகும் பொழுது கோயில்களுக்கு வரும் தட் சணையும், வருமானமும் அதற்கேற்றாற் போல் நிரம்பி வழிவதால் - எல்லாம் ‘விவரமாகத்’ தான் செய்து வைத்துள்ளனர்.

மதுரையில் ஆட்சி செய்யும் மீனாட்சி அம்மனை வழிபட்டால், சகல அய்ஸ்வரி யங்களும் கிடைக்கும், திருமணத் தடை அகலும், குழந்தை பாக்கியம் கிடைக்கும், மேலும் வேண்டிய வரமெல்லாம் கிடைக் குமாம்!

சிவபெருமான் நடனமாடியதாகச் சொல்லப்படும் அய்ந்து முக்கிய தலங்களில் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருத்தல மும் ஒன்றாம். இது அய்ம்பெரும் சபை களில் வெள்ளி சபை என்று போற்றப்படும் சிறப்புடையதாம். மற்ற எல்லா இடங்களி லும் இடது காலைத் தூக்கி நடனமாடும் நடராசர், இங்கு வலது காலைத் தூக்கி வைத்து நடனமாடுகிறாராம்.

சுவாமி சந்நிதியில் கருவறையில் இறை வன் சுந்தரேசுவரர் சிவலிங்கத் திருமேனி யாக அருட்காட்சி தருகிறாராம். இது கடம்ப மரத்தடியில் தோன்றிய ஒரு சுயம்பு லிங்க மாம். குலசேகர பாண்டியன் காலத்தில் இதனை திருநாவுக்கரசர் தனது திருத் தாண்டக தேவாரப் பாடலில் குறிப்பிடுகிறார்.

சுந்தரேசுவரர், சொக்கநாதர், சோம சுந்தரர் எனும் வேறு பெயர்களிலும் அழைக்கப்படுகிறார்.

சிவலிங்கம் பிற தலங்களாகிய மேரு மலை, வெள்ளிமலை, திருக்கேதாரம், வார ணாசி மற்றும் பல பெருமை பெற்ற தலங் கள் எல்லாவற்றிலும் உள்ள சிவலிங்கங்கள் எல்லாவற்றிற்கும் முன்னே தோன்றியதால் இதற்கு மூலலிங்கம் என்ற பெயரும் உண்டாம்.

இங்குள்ள மீனாட்சி அம்மன் சிலை மரகதக் கல்லால் ஆனது. எனவே மீனாட்சி அம்மனுக்கு மரகதவல்லி என்று இன் னொரு பெயரும் இருக்கிறது. மேலும் அங்கயற்கண்ணி, தடாதகை, கோமள வல்லி, பாண்டியராஜகுமாரி, மாணிக்க வல்லி, சுந்தரவல்லி என்றெல்லாம் அழைக் கப்படுகிறார்.

ஈசனின் 64 திருவிளையாடல்களும் மதுரையிலேயே நடந்ததாக அளப்புகள் உண்டு. சந்நிதி பிரகாரங்களில் 64 திரு விளையாடல் காட்சிகள் சிற்பங்களாக இருக்கின்றன.

இக்கோவிலின் தல மரம்: கடம்பம், புனித நீர்: பொற்றாமரைக்குளம் மற்றும் வைகை. பல நூறு வருடங்களுக்கு முன் இங்குள்ள பொற்றாமரைக் குளத்தில் கிடைக்கப்பெற்ற படிகலிங்கம், இன்றும் மதுரை ஆதீனத்தில் வழிபாட்டில் உள்ளதாம்!

நவக்கிரங்களில் புதனுக்குரியதாகக் கூறப்படுகிறார் சுந்தரேசுவரர், சொக்கநாதர் என்றும் அறியப்படுகிறார். புதனுக்கான பரிகாரங்களை இக்கோவிலில் உள்ள சிவனுக்கு செய்வது வழக்கமாம்.

மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலைச் சுற்றி ஆடி வீதிகளும், அதற்கு வெளியில் சித்திரை, ஆவணி, மாசி என சதுர அமைப் பிலான தமிழ் மாதப் பெயர்களிலான தெருக்கள் உண்டு.

மதுரையிலுள்ள மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் மீனாட்சி அம்மனை வழிபட்ட பின்பே சுந்தரேசுவரரை வழிபடும் வழக்கம் நீண்ட காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இப்பேர்ப்பட்ட பெருமைகளும், கித்தாப் புகளும் பொங்கி நுரைத் தள்ளும் மது ரையை ஆளும் மீனாட்சியம்மன் கோயி லில்தான் தீப்பற்றி எரிந்திருக்கிறது என் பதை மனதில் கொள்ள வேண்டும்.

2.2.2018 இரவு சுமார் 10.30 மணிக்கு மேல் ஆயிரங்கால் மண்டபத்தின் அருகே உள்ள ஒரு கடையில் இருந்து புகை வருவதை பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் துறையினர் பார்த்தனர். உடனே அவர்கள் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். மேற்கு சித்திரை வீதியில் இருந்த தீயணைப்பு வீரர்கள் உடனே அங்கு விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர். தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. உடனே அருகில் உள்ள மற்ற தீயணைப்பு நிலையங்களில் இருந்து 5-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங் களும், மாநகராட்சித் தண்ணீர் லாரிகளும் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

36 கடைகள் சாம்பல்

விபத்து குறித்து அறிந்ததும் மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ், காவல் துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் மற்றும் கோயில் அதிகாரிகள், ஊழியர்கள் விரைந்து வந்தனர். தீயணைப்பு வீரர்க ளுடன், கோயில் ஊழியர்களும் சேர்ந்து சுமார் 3 மணி நேரம் போராடி தீயைக் கட்டுக் குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் 36 கடைகள் எரிந்து சாம்பலாயின.

கற்பூர மகிமை!

தீ விபத்திற்கான காரணம் குறித்து விசா ரணை நடத்திய காவல்துறையினர் அங் கிருந்த கண்காணிப்பு காமிராவை ஆய்வு செய்த போது தீவிபத்து நடந்த இடத்தில் கடை நடத்திவரும் முருகபாண்டி என்பவர் கடையை மூடிவிட்டுச் செல்லும் போது கற்பூரம் ஏற்றி தேங்காய் உடைத்து திருஷ்டி சுற்றிய காட்சிகள் பதிவாகியிருந்தன. (கற்பூர மகிமையோ மகிமை!) பிளாஸ்டிக் பொம்மை கள் விற்பனை செய்யும் கடையை நடத்தும் முருக பாண்டி மற்றும் அவரது கடையில் வேலை பார்த்த அவரது உறவினர் ஒருவரிடமும் காவல் துறை யினர் விசாரணை செய்து வருகின்றனராம்.

இந்தத் தீ விபத்தால் நூற்றுக்கணக்கான கடைகள் எரிந்து சாம்பலாயின. ஆயிரங் கால் மண்டபத்தில் புராதனப் பொருள்கள், பழங்கால சிற்பங்கள், ஓலைச் சுவடிகள் மட்டுமல்ல. கடவுளர் சிலைகள், பெருந் தூண்கள் எல்லாம் வெடித்துச் சிதறியுள்ளன.

தீ விபத்தால் சேதம் அடைந்த வீரவசந்த ராயர் மண்டபம் 7000 சதுர அடி பரப்பைக் கொண்டது. திருமலை நாயக்கன் சகோதரர் முத்துவீரப்ப நாயக்கரால் 17ஆம் நூற்றாண் டில் கட்டப்பட்டது.

மதுரைக் கோயில் தீ விபத்துத் தொடர்ந்து எந்தக் கோயிலிலும் நெய் விளக்கு, அகல் விளக்குகள் ஏற்றப்படக் கூடாது என்று இந்து அறநிலையத் துறை தடை விதித்துள்ளது.

ஒரு வகையில் பார்க்கப்போனால், இது கடவுளைக் கேலி செய்யும் வேலையாகும். கடவுளுக்குச் சக்தியில்லை. அது வெறும் பொம்மை - கல்லாலோ, உலோகங்களாலோ வடிக்கப்பட்டு இருப்பவைதான் - அவை களுக்கெல்லாம் சக்தியாவது - வெங்காய மாவது என்று இந்து அறநிலையத் துறையே கேலி செய்வதாகத்தான் இதனை எடுத்துக் கொள்ள வேண்டும்.

தந்தை பெரியார் சொன்னால், திரா விடர் கழகத்துக்காரர்கள் கடவுள்களைப் பற்றி, கோயில்களைப் பற்றி எடுத்துச் சொன்னால் ‘இவர்களுக்கு இதுதான் வேலை’ என்று உதட்டைப் பிதுக்கிச் சொல்பவர்கள் இப்பொழுது மதுரையை ஆட்சி செய்வதாகக் கூறப்படும் மீனாட்சி யம்மன் கோயில் பற்றி எரிந்திருக்கிறதே - இதற்கு என்ன பதிலை வைத்துள்ளார்கள்?

மீனாட்சிக்குச் சக்தியிருந்தால், தீப்பிடிக் கலாமா? பொருள்கள் சாம்பலாகலாமா? இப்பொழுது அந்த வளாகத்துக்குள் நிரந்தரமாகத் தீயணைப்பு நிலையம் ஒன்றை வைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று சொல்லுவது எதைக் காட்டுகிறது?

மீனாட்சி - கடவுள் சக்தி என்ப தெல்லாம் வெறும் புருடாதான், அவை எல்லாம் வெறும் பொம்மைதான்! வடலூர் இராமலிங்க அடிகளார் சொன்னது போல் இவை எல்லாம் பிள்ளை விளையாட்டே என்பதை இப்பொழுதாவது, காலந்தாழ்ந் தாவது ஒப்புக் கொள்வார்களா பக்த சிரோண்மணிகள்?

சிறீரங்கத்தில் என்ன நடந்தது?

மதுரை மீனாட்சி கோயில் மட்டுமல்ல; 1959இல் சிறீரங்கத்தில் என்ன நடந்தது?

சிறீரங்கம் கோயிலில் 1959ஆம் ஆண்டு தீவிபத்து நடைபெற்ற போது அங்கு மகா லட்சுமி சிலை முற்றிலுமாக சேதமடைந்தது. தீவிபத்திற்குப் பிறகு சேதமடைந்த மகா லட்சுமி சிலை மீண்டும் அங்கே வைக்கப் படவில்லை.

அங்கிருந்த பெருமாள் சிலைக்கு திலக காப்பு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நடைபெறும். தீவிபத்து நடப்பதற்கு முன்பு திலக காப்பு சிலையின் மேல் பலமடங்கு போர்வை போல் பூசியிருந்த காரணத்தால் சிலை முற்றிலும் சிதைந்து போனது. கர்ப்ப கிரகத்தில் அதிக அளவு தீ பிடித்து நீண்ட நேரம் எரிய இதுவும் ஒரு காரணமாகும்.

தீவிபத்திற்குப் பிறகு திலக காப்பு நிறுத்தப்பட்டது,  நீண்ட பாரம்பரியமாக நடத்தப்பட்டு வந்த திலக காப்பு நிறுத்தப் பட்டது குறித்து சிலர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்திருந் தனர். தீவிபத்திற்கு முந்தைய காலகட்டத்தில் எடுத்த படங்களில் மூலவர் சன்னதியில் மகாலட்சுமி சிலை இருப்பது தெளிவாக தெரிகிறது.

தமிழ்நாடு அரசு மூலவர் சிலையை முழுவதுமாக புதுப்பித்து, புதிய சிலையை அமைத்தது.

கருவறைக்கு உள்ளே இருந்த சிலை முற்றிலும் சேதமடைந்தது. தீ அணைக்கப் பட்டப் பிறகு அதைப் பார்வையிட்ட இந்து அறநிலையத்துறை அதிகாரிகளும், தொல்லி யல் துறையினரும் சேதமடைந்த சிலையில் சில வேலைப்பாடுகளைச் செய்து மீண்டும் அதே இடத்தில் வைத்தனர்.

கர்ப்பகிரகத்தின் சுற்றுப்புறச்சுவர் அதில் உள்ள சிலைகள் முற்றிலும் மாற்றப்பட்டன. முக்கியமாக கர்ப்பகிரகத்தில் வைத்திருந்த பெரிய தீபங்கள் ஆகமங்களின் படி ஒன்று சிறியதாகவும், மற்றொன்று பெரியதாகவும் இருந்தன. அவைகளை ஒரே அளவில் புதிதாக செய்து வைத்தனர். மேலும் சிலையின் காலடியில் இருந்த தலைகாணி போன்ற அமைப்பு அகற்றப்பட்டது. அதே போல் மோசமாக பாதிப்படைந்த ஆதி ஷேசன் சிலை, அதில் இருந்த ஆபரணங் கள் அனைத்தும் மாற்றப்பட்டன.

உற்சவ மூர்த்தியை வைத்துள்ள தேக்கு மரத்தினால் ஆன மிகப்பழமையான சிம்மாசனம் முற்றிலும் எரிந்து சாம்பலாகி விட்டது. அதுவும் புதியவையாக செய் யப்பட்டது. கோயில் கர்ப்பக்கிரகம் புதிய வடிவில் அமைக்கப்பட்டதில், சாஸ்திரங் களின் படி மீண்டும் அமைக்க பல்வேறு தடைகள் இருந்ததால் பல இடங்களில் ஆகமம் மற்றும் சாஸ்திரங்களின் படி செய்ய இயலாமல் போனதாம்.

திருநள்ளாறு கதை என்ன?

சனீஸ்வர பகவான் என்று கூறிக் கதை யளக்கும் காரைக்காலை அடுத்த திரு நள்ளாறு கோயில் 2017 மே 24 அன்று பெரும் தீ விபத்துக்கு ஆளாகி முற்றிலும் சாம்பலாகவில்லையா? கோயிலுக்குச் சொந்தமான அலுவலக அறையில் இருந்த குளிர்சாதனப் பெட்டியில் ஏற்பட்ட மின் கசிவுதான் அந்தத் தீ விபத்துக்குக் காரணம் என்று சொல்லப்படவில்லையா?

கோயிலுக்குச் செல்வது - சிலைகளைக் கும்பிடுவதில் கூட ஆன்மீகத்துக்குள் ளேயே பல்வேறு கருத்துகள் உண்டு.

உத்தர கீதை (பாரதத்தில் ஒரு பாக மாகிய வேதாந்த நூல்)

“அக்நிரதேலோத் விஜாதீநாம்

முநிநாம் ஹிருதிதைவதம்

பர்மாஸ்வ பாபுத்தா நாம்

ஸர்வத்ர ஸமதர்சிந”

பொருள்: துவிஜர்களுக்கு அதாவது இரு பிறப்பாளர் எனப்படும் பார்ப்பனர் களுக்குத் தெய்வம் அக்னியில், முனிவர் களுக்குத் தெய்வம் இருதயத்தில், புத்தி குறைந்தவர்களுக்குத் தெய்வம் சிலை யில், சம பார்வை உடையவர்களுக்கு எங்கும் தெய்வம்.

ஸ்கந்தபுராணம்

ஞானயோக காண்டம்

நாடி சத்திராத்தியம்

“தீரத்தே தாதையக்ஞே

காஷ்டே பாஷாணகேபதா

சிவம் பஸ்யதி

மூடாத்மாசி லோதே ஹெபர் திஷ்டித”

மூடாத்மாக்கள் தீர்த்தத்திலும், தானத் திலும், தபசிலும், யக்ஞத்திலும், கட்டை யிலும், கல்லிலும் சிவம் இருப்பதாக நினைக் கிறார்கள். சிவமோ தமக்குள்ளேயே இருக் கிறார்.

சாகதபலசன சுலோகா

அபஸுதேலாப நீஷநாம்

காஷ்டலோஷ்ட்டேஷீ மூடாராம்

யுக்தஸ் யாத்மநி தேலதா

சாதாரண மனிதர்களுக்குத் தெய்வம் நீரில்; சற்றுத் தெளிந்தவர்களுக்குத் தெய் வம் ஆகாசத்தில்; முட்டாள்களுக்குத் தெய் வம் கல்லிலும், கட்டையிலும்; யோகிக ளுக்குத் தெய்வம் அவர்களுக்குள்ளே.

மகா நிர்வாணா

“எவம்குணா நுஸாரேண ரூபாணி

வவிதாநி சக்ல பிதாநி

ஹிதார்த்தாய பக்தாநி

அல்பமே தஸாம்”

இவ்வித குணங்களை யனுசரித்துப் பலவித உருவங்கள் அற்ப புத்தியுடை யவர்களுக்காகக் கற்பிக்கப்பட்டன.

வால்மீகர் சூத்திரஞானம்

“தாளென்ற உலகத்தில் சிறிதுபேர்கள்

சடைப்புலித்தோல் காஷாயம் தாவடம் பூண்டு

ஊளென்ற சிவபூசை தீட்சையென்பார்

திருமாலைக் கண்ணாலே கண்டோ மென்பார்

கானென்ற காட்டுக்குள்ளே அலைவார் கோடி

காரணத்தை யறியாமல் கதறுவாரே

நில்லென்ற பெரியோர்கள் பாஷை யாலே

நீடுலகம் தனக்குள்நாலுவேதம்

வல்லமையாம் சாஸ்திரங்கள் இரு மூன்றாக

வயிறு பிழைக்கப் புராணங்கள் பதினெட் டாகக்

கல்லுகளைக் கரைப்பது போல் வேதாந் தங்கள்

காட்டினர் அவரவர் பாஷையாலே

தொல்லுலகில் நாற் சாதி

அநேகஞ்சாதி தொகுத்தார்கள்

அவரவர்கள் பிழைக்கத்தானே”

கிருதாயுகத்தில் ஸத்தியமும், திரேதா யுகத்தில் ஞானமும், த்வாபர யுகத்தில் வைராக்கியமும், மோக்ஷத்திற்குச் சாதனங் கள். ஆனால் இக்கலியில் பக்தியினாலேயே மோஷம் கிடைக்கிறது (‘காமகோடி’, மே 1, 1994, பக். 34).

சிலை வணக்கம் என்பது புத்தி குறைந்த வர்களுக்குத்தான் என்று ஆன்மீக சாத்திரங் களே கூறுகின்றனவே!

உத்தரகாண்டுக்கும், இமய மலையின் அடிவாரத்துக்கும் செல்லுவது, கேதார்நாத் பத்ரிநாத் என்று யாத்திரை சென்று அங்கு கட்டி வைக்கப்பட்டுள்ள கோயில்களில் உள்ள சிலைகளைக் கும்பிடுவது எல்லாம் அற்பப் புத்தியுடையது என்று கூறப்பட் டுள்ளதே இதற்கு என்ன பதில்?

இந்த சாத்திரங்கள் சமாச்சாரங்கள் எல்லாம் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த நாத்திகர்கள் எழுதி வைத்தது இல்லையே! ஆன்மீக கொழுந்துகள் தானே எழுதி வைத்துள்ளார்கள்.

இதில் வேடிக்கை என்னவென்றால் துவி ஜாதி என்று கூறப்படும் பூணூல் மேனி களான பார்ப்பனர்களுக்குக் கடவுள்கள் அக்னிதானே! அப்படி இருக்கும் போது இவர்கள் கோயில் கோயிலாகச் சுற்றித் திரிகிறார்கள் என்ற கேள்விக்கும் விடை தேவை!

பக்தர்களைப் பகவான் காப்பாற்றுகிறானா?

கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் பலியாவது ஒன்றும் புதிய செய்தியல்ல. அவ்வப்போது நடப்பதுதான்.

அந்த நேரத்தில் கொஞ்சம் சலசலப்பு. அதற்குப்பின் வழக்கத்தால் மாடுகளும் செக்குச் சுற்றும் எனும் தன்மையில் பக்த யாத்திரை கிளம்பி விடுவார்கள்.

============================== 

ஏன் இப்படி சிந்திக்கக் கூடாது?

“மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 116 அர்ச்சகப் பார்ப்பனர்கள் உள்ளனர். இவர்களில் 28 பேர்களுக்குத்தான் ஆகமங்கள், அர்ச்சனை மந்திரங்கள் தெரியும். மற்றவர்களுக்கு தெரியாது” என்று நீதிபதி ஏ.கே.ராஜன் அவர்களின் தலைமையிலான ஆணையம் கூறுகிறது. இவ்வாறு ஆகமம் தெரியாத அர்ச்சகர்கள் தவறாக மந்திரங்களை உச்சரிப்பதால் மீனாட்சி கோபம் கொண்டாள்; ‘அதனால்தான் தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டாள்’ என்று ஒரு பக்தர் சொன்னால், அது தப்பா?”

 - விடுதலை ஞாயிறு மலர், 10.2.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக