பக்கங்கள்

வியாழன், 8 பிப்ரவரி, 2018

பூஜை புனஷ்காரங்களுக்கு கைமேல் பலனா?

கோ பூஜைக்காக பசு மாடுகளை ஏற்றிச் சென்ற லாரியில் தீ விபத்து

விவசாயி உள்பட 14 மாடுகள் எரிந்து சாவு



பெங்களூரு, பிப்.7 துமகூரு சித்தகங்கா மடத்தில் நேற்று முன்தினம் காலை கோ பூஜை நடந்ததாம். இதில் துமகூரு மாவட்டம் முழுவதுமுள்ள பசுமாடுகளைவிவசாயிகள் அழைத்துச் சென்று கொண் டிருந்தனர். அதன்படி கொரட்ட கெரே வட்டம், பூரிக்கே கிரா மத்தைச் சேர்ந்த விவசாயிகள் 10 பேர் தங்கள் வீடுகளில் உள்ள பசு மாடுகளையும் பூஜைக்குக் கொண்டு சென்றனராம். விவசாயிகளும், மாடுகளுடன் சேர்ந்து பயணம் செய்தனராம்.

தீயை அணைக்கும் முயற்சியில்

மாரநாயக்கனபாளையா பகுதியில் லாரி சென்றபோது, அந்தப் பகுதியில் இருந்த மின் கம்பி ஒன்று அறுந்து, லாரிமீது விழுந்தது. இதில் லாரி தீப்பிடித்து எரிந்ததால், பெரும் விபத்து ஏற்பட்டது. 9 விவசாயிகள் கீழே குதித்துத் தப்பியோடினர். ஒரு விவசாயி யுடன் பசு மாடுகளும் தீ விபத்தில் சிக்கிக் கொண்டன. மாடுகளின் கதறல் சத்தம் கேட்டு, ஓடி வந்த அப்பகுதி மக்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ஆனால், முடியவில்லை. இதையடுத்து மாவட்ட நிர் வாகம் மற்றும் தீயணைப்புப் படையினருக்குத் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நெருப்பை அணைத்தனர். ஆனால், 14 பசு மாடுகள் மற்றும் ஒரு விவசாயி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டனர். எரிந்த நிலையில் கிடந்த அவரது உடலை மாவட்டக் காவல் துறையினர் சென்று கைப்பற்றினர். அதிகாரிகள் வந்து சம்பவ இடத்தைப் பார் வையிட்டாலும், பெஸ்காம் அதிகாரிகள் மட்டும் நேரில் செல்லவில்லை என்று கூறப் படுகிறது.

மாவட்ட ஆட்சியர் உத்தர விட்ட பின்னரே, அவர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று மின் இணைப்பைத் துண்டித்து, வாகனத்தை அப்புறப்படுத்த உதவினர்.

இச்சம்பவம் குறித்து மாவட்டஆட்சியர் கே.பி. மோகன்ராஜ் கூறும்போது,

முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த விவசாயி பூரிக்கே கிராமத்தைச் சேர்ந்த கங்கராஜ் (வயது 38) என்று தெரிய வந்தது. இவருடன் சேர்ந்து 14 பசு மாடுகளும் இறந்துள்ளன. மின் கம்பி அறுந்து விழுந்ததே தீ விபத்திற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

உயிரிழந்த மாடுகள் அனைத்தும்சித்தகங்காமடத் தில் நடந்த கோ பூஜைக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. உயி ரிழந்த விவசாயியின் குடும் பத்திற்கு நிவாரணம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பசுமாடுகளுக்குஇழப்பீடு வழங்கப்படும்.பெஸ்காம் அதிகாரிகளின் கவனக்குறை வால் இந்த விபத்து நடந்தி ருப்பதால், இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்றார்.

இதுதான் பூஜை புனஷ்காரங் களுக்குக் கைமேல் பலனா?
- விடுதலை நாளேடு, 7.2.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக