சென்னை, ஆக.1 சிலைகள் திருடு போகும் அபாயம் இருக் கும் கோவில்களின் பட்டியலை தாக்கல் செய்யும்படி, தனி குழு விற்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் நடந்த சிலைகள் கடத்தல் தொடர்பான வழக்கு களை, சி.பி.அய்., விசாரிக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத் தில், வழக்குரைஞர், ஜி.ராஜேந் திரன் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த, நீதிபதி மகாதேவன், சிலைகள் திருட்டு தொடர்பான வழக்குகளை விசா ரிக்க, அய்.பி.எஸ்., அதிகாரி, பொன்.மாணிக்கவேல் தலைமை யில் குழுவை நியமித்தார். குழு வுக்கு தேவையான வசதிகளை அளிக்கவும், சிலைகளை பாது காப்பதற்கான வழிமுறைகளை பின்பற்றவும், அரசுக்கு உத்தர விட்டார். கடந்த முறை, வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல், அரவிந்த் பாண்டியன், அறிக்கை தாக்கல் செய்தார்.
அவ்வறிக்கையில், ‘தமிழகத் தில், 11 ஆயிரத்து, 512 கோவில் களில், சிலைகளை பாதுகாப்பாக வைக்க, அறைகள் உள்ளன. ‘கூடுதலாக, 3.000 அறைகள் கட்ட வேண்டியதுள்ளது. அதற்கு, 2021ஆம் ஆண்டு வரை கால அவகாசம் வேண்டும்‘ என, கூறப்பட்டுள்ளது.
அறிக்கையை வாசித்த பின், நீதிபதி மகாதேவன், ‘இப்போது துவங்கினால் கூட, ஓராண்டுக்குள் அறைகளை கட்டி முடிக்கலாம். இவ்வளவு கால தாமதம் சரி யல்ல’ என்றார். மேலும், புதிதாக அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தார்.இதை யடுத்து, வழக்கு, நேற்று விசா ரணைக்கு வந்தது. அறநிலையத் துறை சார்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல், அரவிந்த் பாண்டியன், சிறப்பு பிளீடர், மகாராஜா ஆஜராகி, அறிக்கை தாக்கல் செய்தனர்.
அதில் கூறியிருப்பதாவது: ஆகம, சிற்ப சாஸ்திரப்படி, வலு வான அறைகளை கட்டுவதற்கு, துவக்கப் பணிகளை மேற் கொள்ள, ஒவ்வொரு உதவி ஆணையர் நிர்வாகத்தில் உள்ள கோவில்களுக்கும், குழுக்களை அமைத்து, உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. குழுவில், சம்பந்தப்பட்ட உதவி ஆணையர், உதவிப் பொறியாளர், சிற்பி ஆகியோர் இடம் பெறுவர். இந்த குழுக்கள், இதுவரை, 272 கோவில்களை ஆய்வு செய்துள் ளன. வலுவான அறைகள் கட்டுவதற்கு, 2018 ஆகஸ்டில் இருந்து டிசம்பருக்குள் கோவில் களை ஆய்வு செய்து, 2019ஆம் ஆண்டுக்குள் பணிகள் முடிக் கப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சிலைகள் திருடு போகும் அபாயம் இருக்கும் கோவில் களின் பட்டியலையும், பாது காப்பு அறைகள் எப்படி அமைய வேண்டும் என்ற விபரங் களையும், தாக்கல் செய்யும்படி, சிலை கடத்தல் தடுப்பு பிரிவிற்கு, நீதிபதி மகாதேவன் உத்தர விட்டார். மேலும், சிலை திருட் டில் ஈடுபடுத்தப்பட்ட அதிகாரி களுக்கு எதிராக, எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி, அறநிலையத் துறை தரப்புக்கும், நீதிபதி கேள்வி எழுப்பினார். பாதுகாப்பு அறைகள் அமைக்க, வங்கியில் உள்ள அறநிலையத் துறைக்கான பணத்தை பயன்படுத்திக் கொள் ளலாம் எனவும், நீதிபதி தெரிவித்தார். விசாரணையை, இரண்டு வாரங்களுக்கு, நீதிபதி தள்ளிவைத்தார்.
- விடுதலை நாளேடு, 1.8.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக