அமர்நாத், ஜூலை 9 அமர்நாத் யாத்திரை நடந்துவரும் நிலையில் அங்கு மேக வெடிப்பால் ஏற்பட்டுள்ள வெள்ளத் தில் சிக்கி 20 பேர் உயிரிழந்துள்ளனர். காணாமல் பலரை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தீவிரமடைந்துள்ள நிலை யில், அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்று காரண மாக கடந்த 2 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த, அமர் நாத் பனிலிங்கத்தை 'தரிசிக்கும்' அமர்நாத் புனித யாத்திரை கடந்த 30 ஆம் தேதி தொடங்கியது. 43 நாட்கள் நடைபெறும் இந்த யாத்திரையில் இதுவரையில் ஒரு லட்சம் பக்தர்கள் 'தரிசனம்' செய்துள்ளனர்.
இந்நிலையில், அமர்நாத் பனிக்குகை பகுதியில் நேற்று மாலை திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டு, பலத்த கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டு 3 பெண்கள் உள்பட 20 பக்தர்கள் பலியாகினர். அங்கு பக்தர்களுக்காக அமைக்கப்பட்டு இருந்த 25 கூடாரங்கள், 3 சமூக உணவுக் கூடங்கள் போன் றவை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. அப்பகுதியில் தங்கியிருந்த பக்தர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு உள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் போலீஸ், இந்தோ-திபெத் எல்லை படை, ராணுவத்தினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கடவுளை நம்பிச் சென்றோர் கைவிடப்பட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக