பக்கங்கள்

ஞாயிறு, 3 ஜூலை, 2016

‘‘பேதம் வளர்க்கும் வேதமே இந்து மதம்!’’ திரு. இராம.கோபாலருக்குத் திறந்த மடல்


ஆத்திகத்தின் அநாகரிக முகம்

- கலி.பூங்குன்றன்
துணைத் தலைவர், திராவிடர் கழகம்


ஹிந்து முன்னணியின் நிறுவனத் தலைவர் உயர்திரு. இராம.கோபாலன் அவர்களுக்கு, மிக்க வணக்கம்.
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களுக்கு ‘துக்ளக்’ இதழில் (20.1.2016) தாங்கள் எழுதிய மடலைக் கண்டு ஒரு வகையில் மகிழ்ச்சி அடைகிறோம்.
அதன் மூலம் தங்களையும், தங்களைச் சார்ந்த அமைப்புகளையும் பற்றிய தகவல்களை நாட்டு மக்களுக்கு எடுத்துரைக்க இன்னொரு சந்தர்ப்பம் கிடைத்ததே - அதற்காக மகிழ்ச்சி அடைகிறோம்.
மாட்டுக்கறிப் பிரச்சினை வந்தபோது தாங்கள் திரு வாய் மலர்ந்தீர்களே - அதிலிருந்து தொடங்கினால் நாட்டு மக்களுக்குத் தங்கள் முகவரியின் அடையாளம் என்ன என்று விளங்குமே - அதனால்.
patrikai.com இதழுக்கு (13.10.2015) தாங்கள் அளித்த பேட்டிதான் அது. ‘மாட்டுக்கறி தின்னக் கூடாது; மனித மலத்தை வேண்டுமானால் உண்ணட்டும்’ என்று உங்கள் வாயிலிருந்து வந்ததே அதையே உங்களின் உன்னதமான அருள்வாக்காக மக்களிடம் எடுத்து வைக்கவும் விரும்புகிறோம்.
மகாவிஷ்ணு அவதாரங்களில் ஒன்றுதான் வராக அவதாரம் - அதாவது பன்றி அவதாரம் - அதற்குப் பிரீதமான உணவுப் பண்டமாக அது இருப்பதால் அப்படிச் சொன்னேன் என்று கூட தங்கள் கூற்றுக்கு ‘பாஷ்யம்’ செய்யக் கூடும்.
சரி, ‘துக்ளக்’கில் நீங்கள் எழுதிய கடிதத்திற்கு வருவோம்.
(1) திராவிடர் கழகம், நாளுக்குநாள் தேய்ந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். தங்களுக்குச் சந்தோஷம்தானே - பிறகு எதற்காக இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துப் பதைபதைக்கிறீர்கள்?
உங்களுக்கும் தெரியும், திராவிடர் கழகம் என்பது, வெறும் எண்ணிக்கையைப் பொறுத்ததல்ல. அதன் கொள்கை - குறிப்பாகப் பார்ப்பனர் அல்லாதார் என்ற இனவுணர்வு, தன்மான உணர்வு, பகுத்தறிவு உணர்வு, சமூக நீதி உணர்வு, மொழி உணர்வு என்பவற்றின் வியாபகத்தைப் பொறுத்ததாகும்.
குறிப்பாக தமிழ்நாடு சட்டப் பேரவையை எடுத்துக் கொள்ளுங்கள். மொத்தம் உள்ள 234 இடங்களில், உங்கள் இனத்துக்குக் குறைந்தபட்சம் (மூன்று சதவீதம் என்று எடுத்துக் கொண்டால்) ஆறு இடங்களாவது கிடைத்திருக்க வேண்டும். ஆனால் தமிழ்நாட்டு மக்கள் கொடுத்திருப்பதோ வெறும் இரண்டே இடங்கள்தான். இந்தியாவிலேயே இது தமிழ்நாட்டில் மட்டும்தான் நடந்திருக்கிறது.
வித்தியாசமில்லாமல் எல்லாக் கட்சிகளுமே பார்ப் பனர்கள் என்றாலேயே, அந்நியப்படுத்திப் பார்க்கும் ஒரு நிலை ஏற்பட்டு இருக்கிறதா இல்லையா? (அது எங்கள் துவேஷம் அல்ல, உங்கள் இனம் கடைப் பிடிக்கும் துவேஷமே காரணம்).
இந்த உணர்வு எங்கெங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் திராவிடர் கழகம் தத்துவ உணர்வாகவே பீறிட்டு நிற்கிறது. காமராசரையே கதர்ச் சட்டைக்குள் கறுப்புச் சட்டை என்று உங்கள் இன இதழான ‘கல்கி’ கார்ட்டூன் போட வில்லையா?
தமிழ்நாட்டில் காவிகள் கால் ஊன்ற முடியாமலி ருக்கும் நிலை ஏன்? கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் (2011) அனேகமாக எல்லா இடங்களிலும் பிஜேபிக்கு டெபாசிட் காலியான பிறகாவது என்ன காரணம் என்று எண்ணிப் பார்த்தீர்களா? அதற்குக் காரணமாக இருக்கும் உணர்வு என்பது திராவிடர் கழகமே.
1971ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற்றது உங்களுக்கு நினைவிருக்கலாம் - அப்பொழுது திராவிடர் கழகம் சார்பில் சேலத்தில் நடைபெற்ற மாநாட்டையொட்டி நடத்தப்பட்ட பேரணியில், தந்தை பெரியார் பவனி வந்தபோது உங் களின் மூதாதையரான ஜன சங்கத்தினர்,
பெரியாருக்கு கறுப்புக் கொடி காட்டுவதாகக் கூறி, பெரியார் மீது செருப்பை வீசி எறிய, அது திராவிடர் கழகத் தோழனின் கைகளில் சிக்கி ‘இராமர் படத்துக்குச் ‘சாத்துப்படி’ நடந்தது தங்களுக்குத் தெரிந்ததே.’ (அது திட்டமிட்டு நடந்ததும் அல்ல!)
அதனை வைத்து இராமனை செருப்பாலடித்த திராவிடர் கழகம் ஆதரிக்கிற திமுகவுக்கா உங்கள் ஓட்டு என்று மலைப் பிரசங்கம் செய்தீர்கள் கோயில் கதவு அளவு பெரிதாக சுவரொட் டிகளையும் ஒட்டினீர்களே. ‘துக்ளக்’ சிறப்பிதழே வெளியிட்டதே, விளைவு என்ன?
ராமனுக்குச் சாத்துப்படி நடப்பதற்கு முன்பு நடைபெற்ற 1967ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்குக் கிடைத்த இடங்கள் 138, இராமனுக்குப் பாதுகா பட்டாபிஷேகம் நடந்தபின் கிடைத்த இடங்கள் 184. திராவிடர் கழகம் பலகீனமாகியுள்ளதா அல்லது பலமாக உள்ளதா என்ப தற்கு இதுதான் அடையாளமும், அளவுகோலும்,
(2) மக்களிடம் பக்தி, தெய்வ நம்பிக்கை பெருகி வரு கிறது என்று எங்களைப் பார்த்து ஏகடியம் செய்கிறீர்கள்.
எவ்வளவு மருத்துவமனைகளைக் கட்டினால் என்ன? மருத்துவர்களை உருவாக்கினால் என்ன? நோய்கள் பெருகிக் கொண்டுதானே இருக்கின்றன என்று கேட்பவரை யாரும் புத்திசாலி என்று சொல்ல மாட்டார்கள்.
நோய்வாய்ப்படுவோர் எண்ணிக்கை பெருகுவதால் மருத்துவமனையும் மருத்துவர்களும் இனிமேல் தேவையா என்று சொல்லும் ‘அதி’ புத்திசாலி போல எழுதுகிறீர்கள்.
கோயிலுக்குக் கூட்டம் கூடுகிறது. பக்தி அப்படியே பொங்கி வழிகிறது என்று பூணூலை உருவி விட் டுக் கொண்டு உங்கள் முதுகில் நீங்களே தட்டிக் கொள் கிறீர்கள்.
அந்தப் பக்தி பற்றி, கோயிலில் வரும் கூட்டம் குறித்து, நீங்கள் எந்த ‘துக்ளக்’ இதழில் இப்பொழுது கடிதம் எழுதியுள்ளீர்களோ, அதே துக்ளக் பொங்கிப் பிரவாகிக்கும் பக்தியைப் பற்றி எடுத்துச் சொன்னால்,
‘இது என்னடா, பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் போய்விட்டது! நம் கையில் உள்ள ஆயுதத்தைப் பிடுங்கி,
நம்மையே தாக்குகிறார்களே’ என்று நீங்கள் வருத்தப்பட்டால் நாங்கள் என்ன செய்யக் கூடும்? (பக்திமான் லட்சணம் பற்றி ‘துக்ளக்’ இதழ் எடுத்துக் காட்டியதையும், ஆனந்த விகடன் இதழுக்கு ‘திருமுருக’ கிருபானந்தவாரியார் கொடுத்த பேட்டியையும் தனி பெட்டிச் செய்தியில் காண்க).
இது ஒரு புறம் இருக்கட்டும். நெருக்கடி நிலை பிரகடன காலத்தில் நீங்கள் தலைமறைவாக ஒளிந்து திரிந்தபோது (வீராதி வீரர் அல்லவா நீங்கள்) உங்க ளுக்குப் பல வகைகளில் உதவி செய்தாரே. (நீங்கள் எழுதிய ‘நெருக்கடி நிலைமை எதிர்த்துப் போராட்டம்’, பக்கம் 222) கொலைவழக்கில் சிறைவாசம் செய்து வந்த ‘தவச்சீலரும்’
தண்டத்தைவிட்டு இரவோடு இரவாக மடத்திலிருந்து தலைமறைவானவரும் உங்களவாளுக்கு ஜெகத் குருவுமான சாட்சாத் ஜெயேந்திர சரஸ்வதி கூட பக்தி பற்றி ஆர்ட் பேப்பரில் அச்சடித்துக் கொடுத்துள்ளார் - அதையும் கொஞ்சம் கண்ணாடியைத் துடைத்துவிட்டுப் போட்டுப் படியுங்களேன்.
“பத்துப் பதினைந்து வருடங்களைக் காட்டிலும் இப்பொழுது பக்தி, மக்களிடம் நிறையத் தென்படுகின்றது, ஆனாலும் ஜனங்களுக்குக் கஷ்டங்களும், வியாதி களும் நிறைய இருக்கின்றன. இவைகள் நிறைய வர வரப் பக்தியும் மேன்மேலும் வளருகிறது. இவ்விதம் பக்தி நம்மிடையே வளர்ந்தும் கூட துக்கங்களும், வியாதிகளும் அதிகமாக வளருவதற்குக் காரணங்கள் என்ன? ஓரளவு நமக்குக் கடவுள் பக்தி இருந்த போதும், பேராசையும், ஒழுக்கமின்மையும், சுயநலமும் அதிகமாக நம் கெட்ட வாழ்க்கையைப் பிடித்துக் கொண்டு விட்டன.”
காஞ்சியிலே நடைபெற்ற கோயில் கும்பாபிஷேகத் தில்தான் ஜெயேந்திர சரசுவதி இவ்வாறு ‘திருவாய்’ மலர்ந்தருளினார் (‘தினமணி’, 7.9.1976).
இதற்கு மேலும் பக்தியின் பரிவட்டத்தை பற்றிச் சிலாகிக்கவும் வேண்டுமா?
நாத்திகம் தோற்றுவிட்டது என்று சிலாகித்து எழுதியுள்ளீர்களே! 1971ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் (திராவிடர் கழகம் நடத்திய சேலம் மாநாட்டையொட்டி) திமுக அமோக வெற்றியை நிலை நாட்டிய நேரத்தில் உடம்பெல்லாம் மூளையுள்ள பெரிய அறிவாளி என்று அக்ரகாரத்தார் ஏற்றிப் போற்றும் திரு.சி.ராஜகோபாலாச்சாரியார் (சுருக்கமாக ராஜாஜி) என்ன எழுதினார் தெரியுமா?
“இந்த நாடு ஆஸ்திகர்கள் வாழத் தகுதி இழந்து விட்டது. இந்த ராஜ்யத்தை விட்டே வெளியேறிவிட வேண்டும் என்று சில மகாபுருஷர்கள் உட்பட பலர் எண்ணத் தொடங்கி விட்டார்கள்” (‘கல்கி’, 4.4.1971) என்று கையொப்பமிட்டு அறிக்கையாகவே வெளியிட்டாரே!
இப்பொழுது சொல்லுங்கள், வென்றது நாத்திகமா? ஆத்திகமா?
ஒரே நேரத்தில் ‘அதிக டோஸ்’ மருந்தும், மாத்தி ரையும் அளித்தால் அவற்றைச் செரிமானம் செய்வதில் தங்களுக்குச் சங்கடங்கள் வந்துவிடக் கூடாதல்லவா?
இன்னும் இருக்கிறது நாளையும் தருவோம்!

-விடுதலை,13.1.16


திரு.இராம.கோபாலருக்குத் திறந்த மடல் (2)

கலி.பூங்குன்றன்,
துணைத் தலைவர், திராவிடர் கழகம்

திராவிடர் கழகத் தலைவருக்கு தாங்கள் எழுதிய மடலில் (‘துக்ளக்’, 20.1.2016) சில அறிவுரைகளை இலவசமாகவே தந்துள்ளீர்கள், மிக்க நன்றி!
3. தோல்வியுற்று விட்ட நாத்திகப் பிரச்சாரத்தைத் தொடர்ந்து மேற்கொள்வதற்குப் பதிலாக, கல்வி நிறுவனங் களையும், இதர உருப்படியான சமூகப் பணிகளையும் மேற்கொண்டால் நலமாக இருக்கும் என்று எழுதியுள்ளீர்கள்.
நீங்கள் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் கல்விப் பணிகளைப் பெரியார் அறக்கட்டளைகள் சிறப்பாகவே செய்து வருகின்றன. பல்கலைக் கழகம் வரை அது வளர்ந்து விரிந்திருக்கின்றது.
லோகக் குரு என்று ஒரு பக்கத்தில் சொல்லிக் கொண்டு, பார்ப்பனர் அல்லாதாரின் நிதிகளையும் வாங்கிக் கொண்டு, பார்ப்பனர்களுக்காக மட்டுமே நடத்தும் சங்கர மட அறக் கட்டளை போன்றதல்ல பெரியார் அறக்கட்டளை.
வேத ரக்ஷண நிதி டிரஸ்ட்
வேத மாட நிதி டிரஸ்ட்
கலவை பிருந்தாவன டிரஸ்ட்
ஷஷ்டியப்த பூர்த்தி டிரஸ்ட்
கன்னிகாதான டிரஸ்ட்
என்று பல பெயர்களில் சங்கர மடம் டிரஸ்டுகளை நடத் துகின்றதே. இவை அனைத்தும் பார்ப்பன மாணவர்களுக்கு வேதம் சொல்லிக் கொடுக்கவும் பார்ப்பனீயத்தைப் பரப் பவும்தானே.
கன்னிகாதானம் டிரஸ்டுபற்றி எவ்வளவு சாதுரியமாகக் கூறுகிறார்.
‘‘மற்ற ஜாதிகள் ‘‘பிராம்மணர்’’களைப் போல இத்தனை கிரிசை கெட்டுப் போகவில்லை. அந்த ஜாதிகளில் இத்தனை வரதக்ஷனைக் கொடுமையோ, பெண்கள் இத்தனை பெரு வாரியாகக் காலேஜ் படிப்பு, உத்யோகம் என்று போய் ஸ்யேச் சையாகத் திரியும்படி ‘‘தண்ணித் தெளித்து’’ விட்டிருக்கிற நிலைமையோ இல்லை. ஆதலால், ஏழைப் ‘‘பிராம்மண’’ப் பெண்களை உத்தேசித்தே இந்த டிரஸ்ட் ஏற்படுத்தப் பட்டிருக்கிறது.’’
(‘தெய்வத்தின் குரல் இரண்டாம் பாகம்)
எவ்வளவுத் தளுக்குப் பார்த்தீர்களா?
ஏழைப் பெண்கள் பிராம்மண சமூகத்தில் மட்டும்தான் இருக்கிறார்களா? தாழ்த்தப்பட்டோரில் இல்லையா? பிற்படுத்தப்பட்டோரில் இல்லையா? பார்ப்பனர் அல்லாத முன்னேறிய ஜாதிகளில் இல்லையா?
லோகக் குருவின் ஞான கண்களுக்கு ஏழை பிராம்மணப் பெண்கள் மட்டும்தான் தெரிகிறதோ?
மருத்துவமனையில் கைவிடப்பட்ட குழந்தைகளை நாகம்மையார் குழந்தைகள் இல்லத்துக்குக் கொண்டு வந்து வளர்த்து, கல்வி கொடுத்துத் திருமணமும் செய்து வைக்கும் தொண்டறத்தையல்லவா பெரியார் அறக்கட்டளை செய்து வருகிறது. அந்தக் குழந்தைகளின் தலைப்பெழுத்து (மிஸீவீtவீணீறீ) என்ன தெரியுமா? ஈ.வெ.ரா.ம. (ணிக்ஷிஸிவி) ஈ.வெ.ரா. மணியம்மையைக் குறிக்கக்கூடியது.
4. நாத்திகப் பிரச்சாரத்தைக் கைவிடவேண்டுமாமே! ஏன் அவ்வளவு பதற்றம்? அந்த நாத்திகப் பிரச்சாரம்தானே பார்ப்பன ஆதிபத்தியத்தின் ஆணிவேரை அசைத்தது - அறுத்தது!
இந்த நாடு ஆஸ்திகர்கள் வாழத் தகுதி இழந்துவிட்டது என்று ராஜாஜியே அலறும் நிலையை ஏற்படுத்தியது. அதற்காகத்தானே  ‘நயவஞ்சகமாக’ நாத்திகப் பிரச்சாரத்தைக் கைவிடக் கோருகிறீர்கள் என்பது எங்களுக்குத் தெரியாதா?
இன்னொன்றையும் உங்களைக் கேட்கிறோம். இந்து மதத்தில் நாத்திகத்துக்கு இடம் உண்டா - இல்லையா? சார்வாகம் என்பது என்ன? தசரதனின் அமைச்சரவையில் ஜாபாலி என்ற நாத்திகன்  அமைச்சராக இருந்ததாக எழுதி வைத்துள்ளீர்களே!
‘‘தென்னாட்டு ஜாபாலி’’ என்று உங்கள் ‘கல்கி’ இதழில் தந்தை பெரியார் அவர்களின் படத்தை அட்டையில் அலங் கரிக்கச் செய்து அங்கீகரித்ததே - அது தெரியுமா உங்களுக்கு?
இந்து மதத்தில் நாத்திகம் என்பது கடவுள் மறுப்பு அல்ல - வேத மறுப்புதான் என்ற உண்மையையும் தாங்கள் அறிவீர்களா?
உங்களுக்குத் தெரியாவிட்டால் உங்களின் ஜெகத்குரு மறைந்த சந்திரசேகரேந்திர சரஸ்வதி அவர்கள் எழுதிய ‘‘தெய்வத்தின் குரல்’’ (இரண்டாம் தொகுதி, பக்கம் 407-408) புத்தகத்தைக் கொஞ்சம் புரட்டிப் பார்க்கலாமே!
‘‘நாஸ்திகம் என்றால் ஸ்வாமியில்லை என்று சொல்கிற நிரீச்வரவாதம்  என்றுதானே இப்போது நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். இது தப்பு, ஸ்வாமியில்லை என்று சொல்லிக் கொண்டே கூட ஆஸ்திகர்களாக இருக்க முடியும். அப்படிப்பட்ட பல பேர் இருந்திருக்கிறார்கள். இது என்ன வேடிக்கையாக இருக்கிறது? அப்படியானால் ஆஸ்திகம் என்றால் வேதத்தில் நம்பிக்கை இருப்பது என்றுதான் அர்த்தம். வைதீக வாழ்க்கையை  ஆட்சேபிப்பதுதான் நாஸ்திகம்’’ என்று எழுதி இருக்கிறாரே உங்கள் ஸ்ரீலஸ்ரீ ஜெகத்குரு!
இதன் பொருள் புரியவில்லையா? வேத மறுப்புதான் இந்து மதத்தில் நாஸ்திகமே தவிர, கடவுள் மறுப்பல்ல!
உலகில் வேறு எந்த மதத்திலும் இல்லாத இந்த விசித்திர மான குதர்க்கம் ஏன் தெரியுமா? வேதம்தானே பார்ப்பனர்களின் உயிர் நாடி - அதுதானே நான்கு வருணங்களின் ஊற்றுக்கண்! அவ்வமைப்பில் ஆதிக்க அதிகாரச் சவுக்கு அவர்களிடத் தில்தானே! அதைக் காப்பதுதான் அவாளின் ஆஸ்திகம் - அதைத் தகர்ப்பதுதான் நமது நாஸ்திகம். கடவுளுக்கு மேலே பிராமணன் என்று ஜெயேந்திர சரஸ்வதி கூறவில்லையா?
இதைப் புரிந்துதான் எழுதினீர்களோ, இல்லையோ - உண்மை இதுதான்.
இதனைத் தெளிவாக ஆணிவேர் வரை ஊடுருவித் தெரிந்துகொண்டுதான் தந்தை பெரியார் ஆணித்தரமாக - மிக அழகாகவே சொன்னார்கள்.
‘‘நான் அரசியலிலே பல மாறுதலில் ஈடுபட்டிருக்கலாம் என்றாலும், பார்ப்பனீய வெறுப்புள்ளவன் நான் - அதுதான் என்னைப் பகுத்தறிவுவாதியாக (நாத்திகனாக) ஆக்கியது’’ என்றாரே தந்தை பெரியார். (‘விடுதலை’, 5.3.1969).
நாத்திகப் பிரச்சாரத்தைக் கைவிடவேண்டும் என்று நீங்கள் கூறுவது ஏன் என்பது எங்களுக்குத் தெரியாதா? எந்தளவுக்கு நாத்திகம் உங்கள் ஆதிக்கத்தைச் சுட்டு இருக்கிறது என்பதுதான் நாத்திகத்தைக் கைவிடுங்கள் என்கிற தங்களின் வேண்டுகோள்!
5. கல்வி, வேலை வாய்ப்புகளில் பொருளாதார அளவுகோல் வேண்டும், உயர் ஜாதியினரில் ஏழைகள் இருக்கிறார்களே என்று ‘கண்ணீர் வடிக்கிறீர்களே’ உங்களை நேரிடையாகவே கேட்கிறோம். இட ஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல - சமூகத்தில் உங்களின் பார்ப்பனீயத்தால் உரிமைகள் மறுக்கப்பட்டு ஒடுக்கப்பட்ட மக்களைச் சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் தூக்கி விடும் சிறப்பு ஏற்பாடு.
பார்ப்பனர்களில் ஏழைகள் இருக்கலாம்; ஆனால், கல்லாதவர் கிடையாதே! உலகிலேயே பெரும்பான்மையான மக்களுக்குக் கல்வியைக் கொடுக்காதே! என்று சொன்ன ஒரே ஒரு மதம் உங்களின் இந்துமதம் தானே!
ஏழைகளுக்கு உதவவேண்டும் என்பது பொருளாதாரத் திட்டம், குறைந்த வட்டிக்குக் கடன் கொடுப்பது போன்ற உதவிகளைச் செய்யலாம், அதை விட்டுவிட்டு குறுக்குச்சால் ஓட்டலாமா?
பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடு இருந்தும் இன்னும் 12 சதவிகிதத்தைத் தாண்டவில்லையே! தாழ்த்தப்பட்டவர்களின் நிலையும் இதுதானே!
சென்னை அய்.அய்.டி.யை எடுத்துக் கொள்வோமா?
பேராசிரியர்களில் பார்ப்பனர்கள் 98.59 சதவிகிதம்; தாழ்த் தப்பட்டோர் 1.41 சதவிகிதம்; பிற்படுத்தப்பட்டோர் பூஜ்யம்.
இணைப் பேராசிரியர்களில் பார்ப்பனர்கள் 96.7 சதவிகிதம்; தாழ்த்தப்பட்டோர் 3.3 சதவிகிதம்; பிற்படுத்தப்பட்டோர் பூஜ்யமே!
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் மகேந்திர பிரசாத் சிங் என்பவர் பெற்ற தகவல்தான் இது.
இதற்கு உங்களின் அறிவு நாணயமான பதில் என்ன?
பொருளாதார அளவுகோல்பற்றி பார்ப்பனர்கள் பேசு கிறீர்களே - அரசமைப்புச் சட்ட முதல் திருத்தம் தந்தை பெரியார் அவர்களின் இடையறாத கடும் போராட்டத்தால் ஏற்பட்டபோது, பொருளாதார அளவுகோலும் பேசப்பட்டது உண்மைதான். வாக்கெடுப்பு நடத்தியதில் முடிவு என்ன தெரியுமா?
பொருளாதார அளவுகோலுக்கு ஆதரவாக அய்ந்தே அய்ந்து வாக்குகளும், எதிர்ப்பாக 243 வாக்குகளும் கிடைத்தன என்பதை நினைவில் வையுங்கள்.
நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்ஜாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு செய்யப்பட்டதே - அதனை நீதிமன்றம் நிராகரித்த தகவல் தங்களுக்குத் தெரியுமா?
6. அர்ச்சகர், அர்ச்சக மொழி பிரச்சினைபற்றியும் தங்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள்.
கடவுளே இல்லை என்று சொல்லுகிற உங்களுக்கு உரிமை இல்லை என்று குறிப்பிட்டுள்ளீர்களே - ஒருகணம் சிந்தித்துப் பார்த்திருக்க வேண்டாமா?
திராவிடர் கழகத்துக்காரர்களாகிய நாங்கள் அர்ச்சகர்களாக ஆவதற்காகவா போராடுகிறோம்? அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் என்பது மனித உரிமைப் பிரச்சினை!
சரி, உங்களையே திருப்பிக் கேட்கிறோம். கடவுள் உண்டு, உண்டு என்று டமாரம் அடிக்கிறீர்களே, நீங்கள் அந்தக் கோரிக்கையை வைக்க வேண்டியதுதானே - போராட வேண்டியதுதானே?
ஏன் செய்யவில்லை?
எங்களை விட்டுத் தள்ளுங்கள். நீதிபதி மகாராஜனும், நீதிபதி கிருஷ்ணசாமி ரெட்டியாரும், நீதிபதி ஏ.கே.ராஜனும், அரசு அமைத்த குழுக்களில் அங்கம் வகித்த சிவாச்சாரியார்களும், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் உரிமை ஆகமப்படியும், சட்டப்படியும் உண்டு என்று அறிக்கை கொடுத்துள்ளார்களே அவர்களையெல்லாம் கடவுள் மறுப்பாளர் பட்டியலில் சேர்த்திட உத்தேசமா?
இந்துக்களே  ஒன்று சேருங்கள் என்கிறீர்களே - அர்ச்சகர்ப் பிரச்சினையில் மட்டும் ஜாதி பேசி ஒதுக்கித் தள்ளுகிறீர்களே - யாரை ஏமாற்றிட?
ஆகமங்களை முறையாகப் படித்துத் தேர்ச்சி பெற்ற தாழ்த்தப்பட்ட தோழர் சாமி சிலையைத் தொட்டால் சாமி தீட்டுப்பட்டு விடும் என்று சொல்கிறீர்களே - இதுதான் உங்கள் இந்து மதத்தின் யோக்கியதையா? தாழ்த்தப்பட்டவன் கைபட்டாலே சாமி தீட்டாகிவிடும்; செத்துப் போய்விடும் என்றால், அந்தச் சக்தியற்ற சாமியை ஏன் வீணாகக் கட்டிக் கொண்டு அழுகிறீர்கள்?
இதில்கூட உங்கள் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்த வேண்டியுள்ளது.
‘‘சில நிபந்தனைகளோடு அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்கிற முடிவை நாங்கள் வரவேற்கிறோம். இதற்கான பயிற்சித் திட்டங்கள்பற்றி மடாதிபதிகள், ஆதீனங்கள் தீர்மானிக்கவேண்டும். அர்ச்சகர்களைத் தகுதி அடிப்படையில் தேர்ந்தெடுத்து பணியமர்த்தும் பணியை ஆன்மிக அமைப்புகளே செய்யவேண்டும். (‘தமிழ்முரசு’, 19.5.2006) என்று சொன்னீர்களே - இதற்காக நீங்களோ, உங்கள் அமைப்போ சிறு துரும்பையாவது கிள்ளிப் போட்டதுண்டா?
நீங்கள் சொல்லுகிறபடி பார்த்தாலும் மூன்று நீதிபதிகள் தலைமையில் அமைக்கப்பட்ட குழுக்களில் எல்லாம் - ஆதீனகர்த்தர்கள், சிவாச்சாரியார்கள் இடம்பெற்றிருந்தனரே!
குறிப்பாக நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் அமைக்கப் பட்ட குழு என்பது பயிற்சிக்கான பாடத் திட்டம் உள்பட வரையறுக்கத்தானே; அதில் இடம்பெற்றவர்களின் பட்டி யலைப் பார்த்தாலே பளிச்சென்று புரியுமே!
தவத்திரு தெய்வ சிகாமணி பொன்னம்பல தேசிக அடிகளார், குன்றக்குடி, திருக்கயிலாய பரம்பரை மெளிணி கண்ட சந்தானம் கயிலை குருமணி; சீர்வளர் சீர் சாந்தலிங்க ராமசாமி அடிகளார், பேரூர், சிறீரங்க நாராயண ஜீயர், சிறீரங்கம், சிவநெறிச்செம்மல் முனைவர் பிச்சை சிவாச் சாரியார், பிள்ளையார்பட்டி, சிவாகம சிரோமணி சந்திரசேகர பட்டர், திருப்பரங்குன்றம் ஆகியோர் அங்கம் வகித்தனரே!
இந்த ஆலோசனைக் குழுதான் பாடத் திட்டத்தை வகுத்த குழு - இதனை நீங்கள் அறிவீர்களா? நீங்கள் சொன்னவர்கள் எல்லாம் இடம் பெற்ற குழு அமைத்த பாடத் திட்டப்படி பயிற்சி பெற்று தேர்ந்தவர்களை அர்ச்சகர்களாக்க என்ன தடை?
நீதிமன்றம் தடை விதித்ததாக நீங்கள் சொல்லி ஆனந் தப்படுவது - உங்களின் இரட்டை முகத்தைக் காட்ட வில்லையா?
7. மற்ற மதங்களைப்பற்றி நாங்கள் விமர்சிப்பதில்லை என்று குற்றப் பத்திரிகைப் படித்துள்ளீர்கள். கடவுள் இல்லை - இல்லவே இல்லை என்று நாங்கள் பிரச்சாரம் செய்வது எல்லா மதங்களையும் சேர்த்துத்தானே!
இங்கர்சால் கிறித்துவ மதத்தைப்பற்றிதானே பேசினார் - இந்து மதத்தைப்பற்றி ஏன் பேசவில்லை? என்று அந்நாட் டுக்காரர்கள் கேள்வி கேட்கவில்லை. பெரும்பாலான மக்களைப் பாதிக்கச் செய்யும் பெரும்பான்மையான ஒரு மதத்தைக் குறித்துக் கூடுதல் விமர்சனம் என்பது பகுத்தறிவு உள்ள எவரும் ஒத்துக் கொள்வார்கள். உங்களுக்கு நினைவில்லை என்று ஒப்புக்கொண்டுள்ளீர்கள். குறிப்பிட்ட வயதைத் தாண்டிய சிலருக்கு வரும் மறதி (Amnesia) தொடர்பானதாக இருக்கலாம். (குணம்பெற வாழ்த்துகள்!).
8. இறுதியாக இந்து மதத்தின் பிரதாபங்களை முழங்கி யுள்ளீர்கள். வரலாற்றுப் பின்னணி உண்டாம். அப்படியா? எந்த ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டது, தோற்றுவித்தவர் யார்? கிறித்தவருக்குப் பைபிள் போல, முசுலிம்களுக்குக் குரானைப் போல இந்துக்களுக்கு ஒரு நூலைச் சொல்லுங்கள் பார்க்கலாம்.
உங்கள் மதத்துக்கு இந்து என்று பெயர் சூட்டியவன் கிறித்தவனான வெள்ளைக்காரன்தானே! உங்கள் சங்கராச் சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியார் ‘தெய்வத்தின் குரல்’ முதல் பாகம் 267 ஆம் பக்கத்தைக் கொஞ்சம் புரட்டுங்கள் - ‘வெள்ளைக்காரன் ஹிந்துக்கள் என்று பொதுப் பெயர் வைத்தானோ - நாம் பிழைத்தோம்’ என்று சொல்லியிருக் கிறாரே! இந்தத் தன்மையில் கித்தாப்புப் பேசலாமா? வெள்ளைக்காரக் கிருத்துவன் வைத்த பெயரை மாற்றிக் கொள்வோம் என்று மார் தட்டுங்கள் பார்க்கலாம்.
பல தவசிரேஷ்டர்களும், ஞானிகளும் பல நன்னெறி களைப் போதித்தனர் என்று புகன்றுள்ளீர்.
உங்கள் ஞானிகள், முனிவர்கள் எப்படியெல்லாம் பிறந் துள்ளனர் என்று உங்கள் புராண ஆதாரங்கள்படியே அவிழ்த்துவிட்டால் அவ்வளவுதான். அசிங்கத்திற்குப் பொட்டு வைத்த கதைதான்; என்ன செய்வது ஆரம்பித்து விட்டீர்கள் - எடுத்துச் சொல்லாவிட்டால் உங்கள் மனம் நோகும்தானே!
கலைக்கோட்டு ரிஷி  - மானுக்கும்,
ஜம்புகன் - நரிக்கும்,
அகஸ்தியர் - குடத்துக்கும்,
மாண்டல்யர் - தவளைக்கும்,
காங்கேயர் - கழுதைக்கும்,
சவுனகர் - நாய்க்கும்,
கணாதர் - கோட்டானுக்கும்,
ஜாம்புவந்தர் - கரடிக்கும்,
அஸ்வத்தாமன் - குதிரைக்கும்
பிறந்தனர் என்பதுதான் உங்களின் உத்தமமான இந்து மதத்தின் உச்சக்கட்ட மகாத்மியமோ!
உங்கள் இந்து மதத்தில் வடகலைக்காரர் தென்கலைக் காரரை ஏற்றுக் கொள்வாரா?
காஞ்சிபுரம் யானைக்கு வடகலை நாமம் போடுவதா? தென்கலை நாமம் போடுவதா? என்ற வழக்கு வெள்ளைக்காரன் ஆட்சிக்காலத்தில் லண்டன் பிரிவு கவுன்சில்வரை சென்று நாற்றமெடுக்கவில்லையா?
கடலூர் - திருவந்திபுரத்தில் தேவநாதசாமி கோவில் உள்ளது.
இக்கோவிலின் வடக்குப் பிரகாரத்தையொட்டி மணவாள மாமுனி கோவிலும் உண்டு. ஆண்டுதோறும் அய்ப்பசி மாதம் மூலநட்சத்திரத்தில் மணவாள மாமுனிகள் ஊர்வலம் வரும்பொழுது தேவநாத சாமி கோவில் சன்னதிக் கதவை மூடி விடுவார்கள். மணவாள மாமுனியைப் பார்க்கக் கூடாதாம் - பார்த்தால் தீட்டுப்பட்டுவிடுமாம். ஒவ் வொரு ஆண்டும் ரகளைதான்! மாவட்ட ஆட்சித் தலைவர், இந்து அறநிலையத் துறை தலையிட்டும் சண்டை தீர்ந்த பாடில்லையே!
இந்துக் கடவுள்களுக்குள்ளேயே தீண்டாமை - வெட்கப்படவேண்டாமா?
திருப்பதி ஏழுமலையானுக்கு மூன்றரை கிலோ தங்கத்தில் பூணூல் அணிவித்தாரே காஞ்சி மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி!
கடவுளையே பூணூல் ஜாதி வட்டத்துக்குள் திணிக்கின்ற நீங்கள் அர்த்தமுள்ள இந்து மதம்பற்றிப் பேசலாமா?
கீதையைப் படித்துப் பாருங்கள் என்று எழுதியுள்ளீர்கள். நன்கு படித்துப் பார்த்துதான் அக்குவேறு ஆணிவேறாக அலசிப் பார்த்துதான் எங்கள் தலைவர் ‘‘கீதையின் மறுபக்கம்’’ நூலை எழுதினார். மானமிகு சுயமரியாதைக் காரரான கலைஞர் அவர்கள் தங்களுக்கு அன்பளிப்பாக அந்த நூலைக் கொடுத்தாரே படித்துப் பார்த்தீர்களா? நீங்கள் மட்டுமல்ல - யாராவது அந்நூலின் ஒரே ஒரு வரிக்காவது மறுப்பு எழுத முடிந்ததுண்டா?
கீதை அத்தியாயம் 9; சுலோகம் 32 என்ன கூறுகிறது?
பெண்களும், வைஸ்யர்களும், சூத்திரர்களும் பாவ யோனியிலிருந்து பிறந்தவர்கள் என்று ‘பகவான்’ கிருஷ்ணன் கீதையிலே திருவாய் மலர்ந்துள்ளாரே - தாயை மதிக்கிற ஒவ்வொரு மனிதனும் இதனைக் கொளுத்த முன் வரவேண்டாமா? உங்கள் வசதி எப்படி? கீதையை முட்டாளின் உளறல் என்று அண்ணல் அம்பேத்கர் ஏன் சொன்னார் என்பது புரிகிறதா?
தங்களுக்கு ஞாபக மறதி இருக்கலாம்; ஒன்றை நினைவூட்டுகிறோம்.
‘‘நம்முடைய கடந்த கால செயல்களின்மூலம் இப்பொழுது நடைபெறும் மத மாற்றங்களுக்கு வழிவகுத்து விட்டோம். மதத்திற்குள்ளேயே ஜாதி பாகுபாடுகளை ஏற்படுத்தி, நம்மை விட்டுச் செல்லும் அளவுக்குத் தூண்டிவிட்டோம்’’ (‘தினமலர்’, 2.2.1982, பக்கம் 6).
இதைச் சொன்னது யார் தெரியுமா? சாட்சாத் நீங்கள்தான்!
உங்களாலேயே இந்து மதத்தைக் காப்பாற்ற முடியவில்லை - இதில் வீண் ஜம்பம் தேவையில்லை அல்லவா?
ஒரு முக்கிய நிகழ்ச்சி - அதுவும் உங்களைப்பற்றியது.
புலவர் மா.நன்னன் அவர்களும், தாங்களும் ‘‘இந்தி வேண்டுமா? வேண்டாமா?’’ எனும் தலைப்பில் விவாதம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது - இடம் சென்னை மயிலாப்பூர் கோகலே சாஸ்திரி மண்டபம், நாள்: 27.2.1987.
புலவர் நன்னன் முறைப்படி விவாதங்களை எடுத்து வைத்தார்கள். அதற்குத் தக்க வகையில் பதில் சொல்ல வக்கில்லாத நிலையில், அடாவடித்தனமாகப் பேசினீர்கள். கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. நான் மேடையில் ஏறி அமைதிப்படுத்தினேன். தொடர்ந்து தங்களுக்கே உரிய அதே பாணியில் பேசினீர்கள் - மீண்டும் பிரச்சினை எழுந்தது. அதுதான் சாக்கு என்று பின்புறம் வழியாக நடையைக் கட்டினீர்களே - அந்த வகையில் உங்கள் வீரம் மகத் தானதுதான்!
கடைசியாக ஒன்று, நாத்திகனுக்கு வைத்தியம் பார்க்காதே என்று சொன்னவர் உங்கள் தலைவர் சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி (‘தெய்வத்தின் குரல்’, 3 ஆம் பாகம், பக்கம் 75-76).
எனக்கு மனிதப் பற்றைத் தவிர வேறு பற்று கிடையாது என்று சொன்னவர்; அதற்காகப் பாடுபட்டவர் எங்கள் தலைவர் தந்தை பெரியார் அவர்கள்.
யார் நாட்டுக்குத் தேவை?
எந்தத் தத்துவம் மக்களை உயர்த்தும்?
பண்பாட்டுக்குரியவர் யார் என்பதை மக்களின் பகுத்றிவுக்கே விட்டு விடுவோம்!
ஓர் அருமையான சந்தர்ப்பத்தை அளித்த தங்களுக்கும், ‘துக்ளக்’குக்கும் நன்றி! நன்றி!!

9. கண்ணதாசனின் அர்த்த முள்ள இந்து மதத்தைப் படிக்கச் சொல்லி சிபாரிசு செய்துள்ளீர்கள். உங்களுக்கும் ஒரு கட்டுரையை சிபாரிசு செய்ய விரும்புகிறோம். அதுவும் கவிஞர் கண்ணதாசன் எழுதியதுதான் தென்றல் இதழில்.
அந்தக் கட்டுரையின் தலைப்பு என்ன தெரியுமா? ‘‘நாற்றம் பிடித்த இந்து மதம்’’.
எழுதுவதற்கே கொஞ்சம் கூச்சமாகத்தானிருக்கிறது என்றாலும், தாங்களே அவரைச் சிபாரிசு செய்துவிட்டீர்களே - எடுத்துக்காட்டாமல் இருப்பது மரியாதை குறைவு அல்லவா!
‘‘நாற்றம் பிடித்த இந்து மதத்தில் உற்பத்தியான கிருமிகளே கடவுள்கள்’’ இதற்கு மேல் என்ன வேண்டும்?
‘‘இன்று பக்திப் பிரச்சாரம் செய்யும் அரசியல் விதவை யாம் ஆச்சாரியாருக்கு (ராஜாஜிக்கு) உண்மையிலேயே பக்தி கிடையாது. அவரது சீடராம் சுப்பிரமணியத்தின் குடும்பத்தாரோ மற்றையத் தமிழர்களோ திருப்பதி சாமிக்கு மயிர் கொடுப்பதுபோல் (வள்ளுவர் கையாண்ட சொல்தான் இது) ஆச்சாரியார் குடும்பத்தினர் கொடுப்பதில்லை. தமிழன் மயிரில்தான் கடவுள்களுக்கு ஏகப்பட்ட பிரியம்..... (இதற்குமேல் எழுத முடியவில்லை - பொறுத்தருளவும்).
திரு.இராம.கோபாலன் அவர்களே, கண்ணதாசனை நீங்கள் எடுத்துக் கொடுத்ததால், நாங்கள் தொடுத்துச் சொல்ல நேரிட்டது. இன்னும் சங்கராச்சாரியார்பற்றி எல்லாம் கவிதையே பாடியுள்ளார். அதில் சில வரிகள் மட்டும் - தாங்கள் சீண்டியதால்....
சங்கராச்சாரியார்தான்
தலைவராம் உலக மாந்தர்
பொங்கியாச்சாரி காலில்
போய்விழல் தரும வாழ்வாம்!
இங்குளர் இளித்த வாயர்
என்பதால் துறவியான
சங்கராச்சாரியாரை(த்)
தாங்குவோர் உளரே இன்னும்!’’
என்று துயரப்படுகிறார்  தாங்கள் போற்றிய கவிஞர் கண்ணதாசன்.
அடுத்து விவேகானந்தரைப் படியுங்கள் என்று கூறி யுள்ளீர்கள். இவ்வளவுப் பெரிய வர் எழுதும் போது, அதனை மதிக்கவேண் டுமே - படித்ததில் பிடித்தவை இரண்டைத் தொட்டுக் காட்டுகிறோம்.
‘‘மதச் சண்டைகளும், ஜாதி வேற்றுமைக் கலகங்களும் பல்கு வதற்கு ஒரு பெருங் கருவியாய் இந்துத்துவம் இருப்பதும், சமஸ் கிருத மொழியேயாகும். சமஸ் கிருதம் தொலைந்து போகுமானால், இப்போராட்டங்களும் தொலைந்து போகும்’’ என்று கூறியிருக்கிறாரே - திரு.இராம.கோபாலன் அவர்களே என்ன செய்ய உத்தேசம்?
‘‘வங்காளத்தில் ஒரு பழைய மூடநம்பிக்கை உள்ளது. நல்ல பாம்பு ஒருவனைக் கடித்து, பின்னர் அந்தப் பாம்பே திரும்ப விஷத்தை எடுத்துவிட்டால், அவன் பிழைத்துக் கொள்வான் என்பதே - இந்த நம்பிக்கை. இதே போன்று பார்ப்பான் இந்து மதத்திற்குள் தான் செலுத்திய விஷத்தைத்தானே திரும்ப எடுக்கவேண்டும்.’’
(இராமகிருஷ்ண தபோவனம், 1983 இல் வெளியிட்ட ‘The Man Making Message of Vivekananda for the use College Students’’
எனும் நூலிலிருந்து)


-விடுதலை,14.1.16

ஞாயிறு, 12 ஜூன், 2016

பார்ப்பனர் பற்றி அம்பேத்கர்


பகுத்தறிவு தந்தை பெரியாரவர்கள் 1924-ஆம் ஆண்டில் பங்கேற்று நடத்திய வைக்கம் போராட்டம் அறிஞர் அம்பேத் கரின் உள்ளத்தில் ஓர் அரும் தாக்கத்தினை  விளைவித்தது !
திருவாங்கூர் நாட்டின் வைக்கத்தில் தீண்டத்தகாதோர் நுழையலாகாது எனத் தடுக்கப்பட்ட  ஒரு குறிப்பிட்ட  பாதையை பயன்படுத்துவதற்கு அவர்களுக்கு உரிமையுண்டென்று நிலை நாட்ட,  இராமசாமி நாயக்கர்  அமைதியான எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொண்டார்  ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்கான  போராட்டத் தில் அந்த ஆண்டின் மிகச் சிறப்பு வாய்ந்த  நிகழ்ச்சி அதுவே.
மிகவும் கவலையோடு இக்கிளர்ச்சியைக்  கவனித்துக் கொண்டிருந்த அம்பேத்கர் அந்த அறப்போரையொட்டி எழுதிய ஒரு தலையங்கத்தில் வைக்கம் கிளர்ச்சிபற்றி உள்ளம் நெகிழும் வண்ணம் குறிப்பிட்டார் என்னும் செய்தியை அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்று நூல் வெளிப்படுத்துகிறது.
புரட்சி மனப்பான்மையுடையவன் போப் ஆகவே மாட்டான். இக்கருத்து இந்திய பார்ப்பனர்கட்கும் பொருந்தும் போப் ஆகிறவன் புரட்சி செய்ய விரும்ப மாட்டான் என்றால் பார்ப்பானாகப் பிறந்தவனும் புரட்சி செய்ய விரும்ப மாட்டான் என்பது உறுதி. பார்ப்பானாகப் பிறந்தவன் சமூகப் புரட்சிக் காரனாக இருப்பான் என்று எதிர்பார்ப்பது  நல்லகண்ணுடைய குழந்தைகளை யெல்லாம் கொன்றுவிட வேண்டுமென  ஆங்கில நாடாளுமன்றம்  சட்டம் இயற்றும் என்று எதிர் பார்ப்பதற்கு ஒப்பேயாகும் !
- சாதியை  ஒழிக்க வழி எனும் நூலிலிருந்து.
இந்திய அரசியல் சட்ட அமைச்சராய் அம்பேத்கார் கடமையாற்றிக் கொண்டிருந்த காலம் அது. தம்மைச் சந்தித்த வின்சென்ட்ஷீன் என்ற அமெரிக்க எழுத்தாளரிடம் பார்ப் பனீயத்தால் கற்பிக்கப்பட்ட சாதி முறையின் தீமைகள். இந்திய வரலாறு நெடுகிலும் பார்ப்பனர் பண்ணிய கொடுமைகள் ஆகியவற்றை மணிக்கணக்கில் விரித்துரைத்த அம்பேத்கார் நிறுத்தவில்லை.
அத்தோடு ஷீன் அவர்களே தாங்கள் எங்களின் இந்தப் பார்ப்பன அரசாங்கத்தை விரும்புகிறீர்கள் என்றால், வேண்டுமாயின் இவ்வரசை மூட்டைகட்டித் தூக்கிச் சென்றுவிடுங்களேன். எங்களுக்கு இவ்வரசு தேவையில்லை எனக் கிண்டல் செய்தார்.
தாம் பங்காற்றிக் கொண்டிருந்தது இந்திய அரசியல்தான். எனினும் அதையொரு பார்ப்பன அரசு என்று பச்சையாக அதுவும் அயல்நாட்டு எழுத்தாளரிடம் அடையாளம் காட்டி னாரெனில் அம்பத்காரின் ஆரிய வெறுப்புத்தான் எத்தகையது!
-Nehru: The years of Power by Vincent Sheean
ஒரு பார்ப்பனர் விடுதலையடைந்த இந்தியாவின் முதல் தலைமையமைச்சர் ஆன நிகழ்ச்சியைக் கொண்டாடுவ தெற்கென 15.8.1947 அன்று காசிப் பார்ப்பனர்களால் இயற்றப் பட்ட யக்ஞத்தில் நேரு அமர்ந்து, பார்ப்பனர்களால் வழங்கப் பட்ட ராஜதண்டம் தரித்து, கங்கை நீரைப் பருகவில்லையா? அது போன்று இந்தியக் குடியரசுத் தலைவர் வாரணாசி சென்று பார்ப்பனர்களைத் தொழுது, அவர்தம் கால்கழுவி அத்தண் ணீரைக் குடிக்கவில்லையா?
- Thoughts on Linguistis States by Ambedkar
-விடுதலை,13.5.16

திங்கள், 30 மே, 2016

மதம் ஒழிந்த மனிதனே, சமுதாயத்திற்கு பயன்படுவான்



(1931 - புதுவை முரசிலிருந்து)
ஏசுவானவர் பாவிகளை ரட்சிக்கும் பொருட்டு தனது உயிரைத் தியாகம் செய்தார் என்று கிறித்துவப் பாதிரிமார்கள் உபன்யாசம் செய்கிறார்கள். “ஏழைகளைக் காப்பாற்றும் பொருட்டு தனது ரத்தத்தைச் சிந்தினார்” என்று பிரசங்கம் செய்கிறார்கள். நமது ஜனங்களும் அதை நம்புகிறார்கள். எப்படியோ 60 லட்சம் கிறிஸ்துவர்களும் இந்தியாவில் சேர்ந்து விட்டார்கள். அதைப்பற்றி நமக்கு எள்ளளவும் கவலை கிடையாது.
ஏனெனில் இந்த 60 லட்சம் பேர்களும் இந்துமதத்தில் இருந்து சாதித்ததைவிட அதிக மாகவோ, குறைவாகவோ கிறிஸ்துமதத்திலும் சாதித்து விடப் போவதில்லையென்பதே நமது அபிப்பிராயம்.
வேண்டுமானால் இந்து மதத்தில் இருந்ததைவிட சற்று மதவெறி அதிகம் பிடிக்கும் பதில் சொல்ல முடியாவிட்டால் எதற்கெடுத்தாலும் சைத்தான் என்று சொல்லி விடலாம் இதைத் தவிர வேறு பகுத்தறிவோ அனுபவ முதிர்ச்சியோ கிறிஸ்துமதத்தில்  அதிகமாய்க் கிடைத்துவிடும் என்று நாம் சிறிதுகூட சந்தேகிக்கவில்லை.
ஆகவே கிறிஸ்து மதத்திற்கு இருக்கும் பணக் கொழுப்பும் அரசாங்க ஆதரவும் இருக்கும் வரையில் அது அவ்வளவு பயமில்லாமல் இருக்கலாம்!. இருந்து விட்டு போகட்டும் ஒன்றும் மூழ்கிப் போகாது ஆனால் நாம் கேட்பதெல்லாம் ஒரு விஷயந்தான். கிறிஸ்துவர்கள் சொல்லுகிறபடி நடக்கிறார்களா?
உனது ஒரு கன்னத்தில் அறைகிறவனுக்கு மற்றொரு கன்னத்தையும் காட்டு என்று வேதநூல் .. உனது மேலங்கியை எடுத்துக்  கொண்டவனுக்கு உனது கோட்டையும் கொடுக்கத் தயங் காதே என்று கூறுகிறது ஆனால் என்ன நடக்கிறது? எவ னாவது பாதிரிமார்கள் புரட்டை எடுத்துச் சொன்னால் அவன்மீது மான நஷ்ட வழக்கு தொடரலாமா அவனது ஆயுதத்தைப் பிடுங்கலாமா அவனைக் கஷ்டப்படுத்தலாமா என்று யோசனை போகிறதே தவிர யோக்கியமாய், நாணயமாய், மனுஷத் தன்மையோடு சுயஅறிவோடு பதில் சொல்லும் தைரியம் இருக்கிறதா?
மிஸ். மேயோ இந்து மதத்தைப் பற்றி இடித்துக் கூறியபோது இந்துமதப் பித்தர்கள் எப்படி தலைகால் தெரியாமல் காய்ச்சின எண்ணையில் போட்ட எள்ளுப் பொட்டணம் மாதிரி துள்ளினார்களோ அதைப்போலவே தான் நமது கிறிஸ்துவ சகோதரர்களும் குதிக்கிறார்கள். சக்கரைகளுக்கும், ஜோசப்பு களுக்கும், செல்வங்களுக்கும், அற்புத ஆரோக்கியசாமி களுக்கும் ஆவேசம் வந்து விட்டது. ஒரு மதத்திலும் சேராத நம்மைப் போன்றவர்களுக்கே, எங்கே 2ஆவது ஏசு  கிறிஸ்து திடீரென்று வந்து எல்லோரையும் அழித்து விடு வாரோ என்று பயமாயிருக்கிறது! பாவம்!
ஆஹா என்ன வேடிக்கை பல நூறு வருஷங்களா பரம் பரையாய் கிறிஸ்துவர்களாக இருந்த தேசங்களும் மக்களும் கிறிஸ்து மதத்தை புறக்கணித்து விட்டு சும்மாயிருக்கும்போது நேற்று செட்டியாராயிருந்தவர்களும் 2 நாளைக்கு முந்தி உடையார்களாய் இருந்தவர்களும் இன்றும் கூட அந்த அநாகரீகப் பட்டங்களை தங்கள் புனித மார்க்கத்தைச் சேர்ந்த பெயர்களோடு கட்டித் தொங்கவிட்டுக் கொண்டிருக்கி றவர்களும் ஏதோ உலகத்திற்கே அபாயம் வந்துவிட்டது போல் சீறிவிழுவதும் தலைவிரி கோலமாய் ஆடுவதும் ஒரு வெட்ககரமான காரியமாகவே இருக்கிறது.
கிறிஸ்துவத் தலைவர்களே! பாதிரிமார்களே! ஏன் இத்தனை ஆத்திரம்? உங்கள் மதத்தில் சிறிது கூட அப்பு அழுக்கு இல்லையென்றால் எந்த காலத்திற்கும் எல்லா மக்களுக்கும் உபயோகப்படக்கூடியது என்றால் எல்லா உண்மைகளும் உடையது என்றால் புனிதமான மார்க்க மென்றால், கடவுள் அருள் பெற்றவர்களாலேயே ஸ்தாபிக்கப் பட்டது என்றால் இந்த சுயமரியாதை இயக்கமோ இந்த பகுத்தறிவு இயக்கமோ, இந்த ரஷியாவோ இன்னும் எவ்வளவு பேர் வந்தாலும் அதை ஒரு அங்குலமாவது நகர்த்த முடியுமா?
அப்படியிருக்க உங்களுக்கென்ன ஆவேசம்? அன்று மோஸசைப் போல் ஒரு ஆள் கடவுளுக்குத் தூதுபோகக் கிடைக்கமாட்டானா? அன்றி கிறிஸ்துவக் கடவுள் கொஞ்சம் கண் திறந்து பார்த்தால் (இப்போது கண்ணை மூடிக் கொண்டிருக்கிறார் என்று சொல்லவில்லை) போதாதா? இந்த  அறிவு இயக்கத்தார் எல்லாம் அழிந்துவிட மாட்டார் களா? அப்படியிருக்க நமது நாடார்,
முதலியார், வாண்டையார், உடையார் கிறிஸ்துவர்களுக்கு மாத்திரம் ஏன் இத்தனை ஆத்திரம் வரவேண்டுமென்பது நமக்கு விளங்கவில்லை கிறிஸ்து மதமே உண்மையான கொள்கைகளையுடைய மதமென்றால் தானாகவே நிலை பெற்று விடுமல்லவா?
ஓ! ஒரு வேளை இப்படியிருக்கலாம்! கடவுளின் பத்துக் கட்டளைகளுள், நான் ஒரு பொறுமையான கடவுள், மற்றொரு கடவுளை மனிதர் வணங்குவதைப் பொறுக்க மாட்டேன். ஒருவன் இவ்வாறு செய்தால் அவனுடைய மூன்றாவது நான்காவது தலைமுறைவரையில் துன்பப் படுத்துவேன் என்று கிறிஸ்துக் கடவுள் சொல்லியிருக்கிறாரல்லவா? அத னால் தான் கிறிஸ்துப் பாதிரிகளும் தலைவர்களும் பதறுகிறார்கள்.
மதம் ஒழிந்த மனிதனே, மனித சமுதாயத்திற்குப் பயன்படுவான்.
-விடுதலை,4.3.16

புதன், 25 மே, 2016

கடவுள் அழாது என் செய்யும்?

தென்னிந்தியாவிலுள்ள சில கோவில்களிலும், வட இந்தியாவிலுள்ள சிலகோவில்களிலுமுள்ள சுவாமிகளின் (விக்ரகங்களின்) கண்ணிலிருந்து கண்ணீர் வடிவதாக சில மாதங்கட்கு முன்னர் பத்திரிகையில் பார்த்தேன். சில பகுத் தறிவுவாதிகள் இவைகளெல்லாம் சுத்தப்புரட்டு என்றனர். என்னமோ எனக்கு மட்டும் ஏன் இவ்வாறு இருக்கக்கூடாது என்ற அய்யமுண்டானது கடைசியில் ஓர் முடிவுக்கு வந்தேன்.
இத்தெய்வங்கள் விஷயம் கண்டிப்பாய் உண்மை யாகத்தானிருக்கும். ஏன் கிரேதாயுகம், திரேதாயுகம் துவாபர யுகங்கள் தெய்வம் மனிதரையாண்டு வந்தது. இந்தக் கலியுகத்தில் மனிதன் தெய்வத்தை அடக்கியாளத் துணிந்து விட்டான். பழைய யுகங்களில் இத்தெய்வங்கள் யதேச்சையாய் காடுகளிலும், நாடுகளிலும் உலாவிக்கொண்டு சுதந்திரமாய்க் குடித்து வெறித்து ஆடு, மாடு மனிதர்களைக் கொன்றுதின்று பல மனைவிகளை மணந்து கொண்டதும் போதாதென்று அகலிகை, பிருந்தை, சரஸ்வதி, தாருகாவனத்து முனிவர்களின் பத்தினிகள் முதலிய பெண்களையும் பல பக்தர்களின் மனைவியையும் பலவித தந்திரோ பாயங்களாலும் பலாத் காரத்தாலும் புணர்ந்து இன்பம் துய்த்துக்கொண்டிருந்த தோடமையாது.
ஆயிரக்கணக்கான தேவதாசிகளையும் தானும் தன்னை நம்பி வந்த பக்தர்களும் அனுபவித்துக் கொண்டிருந்திருக்க இக்கலிகால மக்கள் கடவுளுக்கென்று ஒருவரும் பொட்டுக் கட்டகூடாது தாசியென்றொரு கூட்டம் இருந்து விபசாரம் செய்தாலே தண்டிக்க வேண்டும் என்றும் சட்டம் செய்து வருவதோடு ஒருவன் ஒரு மனைவிக்கு மேல் கல்யாணம் செய்யக்கூடாது என்று சட்டஞ் செய்யமுயற்சிப்பதும் பிறர் மனைவி சோதரியை பலாத்காரமாகவோ,
வஞ்சனையாகவோ அபகரித்துச்செல்பவர்களுக்கு, 10 வருஷம் தண்டிக்கப்படும் செய்திகளும், கடவுள் செய்த லீலா வினோதத் திரு விளையாடல்களெல்லாம். விபசாரம், அயோக்கியத்தனம் என்று கூறுவதோடு அக்கடவுளைக் கண்டால் கழுத்தை அறுப்பேன் என்றும் அத்திருவிளையாடல் புராணங்களை யெல்லாம் சுட்டெரிக்க வேண்டும் என்று பகுத்தறிவுவாதிகள் பேசுவதையும் எழுதுவதையும் அறிந்தும் கடவுள்கள் அழாது என்னதான் செய்யும்?
சிறீ ரெங்கநாதர்
விவாகரத்து செய்வாரா?
முஸ்லிம் வைதீக அறிஞர்கள் தங்கள் வேதப்படி ஒரு முஸ்லிம் ஒர் கிறிஸ்தவப்பெண்ணை மணந்துகொள்ளலாம் என்கின்றனர். சீர்திருத்தவாதிகளான முஸ்லீம்களோ விக்ரக வணக்கஞ் செய்யாத எந்த மதப்பெண்ணையும் நாங்கள் மணந்து கொள்ளலாம் - ஆனால் ஒரு முஸ்லிம் பெண் பிற மதஸ்தனைக் கல்யாணம் பண்ணுவது கூடாது என்றுதான் குர்ஆன் கூறுகிறது என்று கூறுகிறார்கள்.
எனவேதான் ஜாதி, மத வித்தியாசமின்றி தமிழர்கள் (இந்து முஸ்லிம், கிறிஸ்தவர்கள் எல்லோரும் மணந்து கொள்ளலாம் என்று ஒர்தீர்மானம் மலேயாவிலுள்ள கோலககன்சாரில் கூடிய அகில மலேயா நான்காவது சீர்திருத்த மாநாட்டில் கொண்டு வந்த பொழுது முஸ்லீம்கள் பலமாக எதிர்த்ததின் பலனாக பிரேரேபித்தவரால் அத்தீர்மானம் வாபஸ் பெற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால் தமிழர்களின் ஒரு பகுதியாரின் தெய்வமாகிய சிறீ ரெங்கநாதர் ஒர் துலுக்கப்பெண்ணை மணந்து நீண்ட நாளாக வாழ்த்துவரும் பொழுது அவரது அடிச் சுவட்டைப் பின்பற்றி ஒழுகும் மக்கள் அவ்வாறு செய்யக் கூடாது என்று தடுப்பதும், எதிர்ப்பதும் நியாயமாகுமா?
உண்மையில் அது தங்கள் மதத்திற்கு விரோதமாயிருக்கிறது என்று முஸ்லிம்கள் கருதினால் சிறீ ரெங்கநாதர் செய்கையைத் தண்டித்துப் பெருங்கிளர்ச்சி செய்து சிறீ ரெங்நாதர் விவாகரத்து செய்து கொள்ளும்படி இந்தப் பிரிட்டிஷ் கோர்ட்டிலோ அல்லது தேவலோகக் கோர்ட்டிலோ ஒரு தாவா தொடர்ந்து விவாஹரத்து வெற்றி பெற்று விட்டால் துலுக்க நாச்சியார் விக்ரகத்தை சிறீ ரெங்கம் கோவிலிலிருந்து அப்புறப்படுத்தி விட்டால் துலுக்கப்பெண்ணும் இந்து ஆணும் கலப்பு மணம் செய்து கொள்ளலாம் என்ற விஷயத்தை எவரும் பேசவே பயப்படுவார்கள் எனவே சிறீரெங்கநாதரை விவாஹரத்து செய்யும்படி  கோர முஸ்லிம்கள் முன் வருவார்களா?   


-விடுதலை,1.4.16

ஞாயிறு, 22 மே, 2016

மோட்சம் வேண்டுமா?

 
இளம் பெண்களை விதவைகளாக வைத்திருப்பதைத் தடுக்க பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வரன் ஆகிய மூன்று கடவுளர்களாலுமே முடியாது. தங்கள் தங்கள் மனைவியர் இருக்க, பிறர் மனைவியர் - பெண்களுக்குப் பின்னால்  அலைந்து திரியும் அந்தத் தெய்வங்கள் எந்த முகத்தைக் கொண்டு தடுக்க முடியும்?
இளம்பெண்களை விதவைகளாக வைத்திருப்பதின் தவிர்க்க முடியாத விளைவு கர்ப்பச்சிதைவு - ஏனெனில் மறுமணம் செய்து கொண்டு குழந்தைகளைப் பெற்று வளர்க்கத்தான் இவர்கள் அனுமதிக்கப்படுவதில்லையே! இந்தப் பயத்தினால், பிராமணர் களும், சத்திரியர்களும் சேர்ந்து தங்கள் உயர்வுத் தன்மையைக் காப்பாற்றிக் கொள்வதற்காகப் புதுவழியை கண்டுபிடித்தார்கள்.
அதுதான் கணவனை இழந்த பெண்களை உயிரோடு கொளுத்துவதை அவர்கள் மகாபாவம் என்று கருதவில்லை. பெரிய புண்ணியம் என்று கருதினார்கள்.
வருடந்தோறும் ஆயிரக்கணக்கான யுவதிகளை நெருப்பிலே போட்டுப் பொசுக்குவதைக் கண்டு மனமிளகாத தெய்வங்கள், அவற்றின் உருவங்களைப் போலவே உண்மையிலேயே கற்கள்தானா? அல்லது இல்லவே இல்லையா? பெண்கள் தங்கள் மனப் பூர்வமாகவே சதியாகிவிடுகிறார்கள் என்று இந்தப் பார்ப்பனர்கள் சொல்கிறார்கள் அயோக்கியர்கள்! சூழ்ச்சிக்கார நாரதர்கள்! ஏன் இவ்வளவு பொய்யைச் சொல்ல வேண்டும்? அரசர்களின் அந்தப்புரங்களிலே.
ஒரே ஒரு முறை தவிர அவன் முகத்தையும் பார்த்து அறியாத ஆயிரக்கணக்கான பெண்கள் தங்கள் ஆயுள் முழுவதும் கைதிபோல் வைத்திருக்கும் அந்த நரப்பிசாசுகளிடம் அன்பு செலுத்துகிறார்களா? அவனிடத்திலே காதல் கொண்டு அவன் பிரிவைத் தாங்க முடியாமல் நெருப்பிலே குதிக்கிறார்களா? சூழ்ச்சிக்காரப் புரோகிதர்களே! நீங்கள் நாசமாக போவீர்கள்! இது தற்கொலைத் தர்மமா?
பிரயாகையிலே ஆலமரத்திலிருந்து யமுனையில் குதித்து இறந்தால் சுவர்க்கத்திற்குப் போகலாம் என்று உபதேசம் செய் திருக்கிறீர்களே.
அதைக் கேட்டு வருடந்தோறும் ஆயிரக்கணக்கான பயித்தி யங்கள் ஆற்றிலே விழுந்து சாகின்றனவே: கேதாரநாத்தின் உச்சியிலிருந்து பனிப்படலத் திலே வீழ்ந்து மடிவதும் மோட்சத்திற்கு வழியென்று உபதேசித்து, வருடந்தோறும் நூற்றுக்கணக் கானவர்களைக் கொல்லுகிறீர்களே இதெல்லாம் தர்மமா?
- வால்காவிலிருந்து கங்கை வரை நூலில் பக்கம் 342 - 343.

பிராமணர்களின் உதடுகளில் உலாவுவது என்ன?
நமது நாட்டில் எவனாவது கீழ்ச் சாதியிற் பிறந்தவனாக இருப்பானாகில்  அவனுக்கு மேற்கதி கிடையாது. (ஏன்? இக் கொடுமையென்ன?)
இந்நாட்டில் (அமெரிக்காவில்) ஒவ்வொருவனுக்கும், உயருவதற்கு வழியும், சந்தர்ப்பமும், நம்பிக்கையுமிருக்கின்றன. இன்று ஒருவன் எளியவனாகக் காணப்படுகின்றான். நாளை அவன் செல்வனும், கற்றறி வாளனும், மதிப்புடையோனுமாகக் கூடும். இங்கு ஒவ்வொரு வரும் ஏழைகளுக்கு உதவக் கவலையுடையவர்களாக விருக்கின்றனர்.
நாம் எல்லோரும் ஏழைகள் என்ற பேரிரைச்சல் இந்தியா வெங்கும் முழங்குகின்றதே. ஆனால், ஏழைகளின் நன்மைக்காக எத்தனை தரும மடங்களிருக்கின்றன? இந்தியாவிலுள்ள லட்சக்கணக்கான ஏழைகளின் துன்ப துயரத்திற்காக எத்தனை பேர்  உண்மையாகக் கண்ணீர் வடிக்கின்றனர்? நாமும் மனிதர் களா? அவர்களுடைய முன்னேற்றத்திற்காகவும் ஜீவனத்திற் காகவும் நாம் என்ன செய்கின்றோம்,
நாம் அவர்களைத் தீண்டுவதில்லையே! அவர்களை நாம் நெருங்குவதில்லையே! நாம் மனிதர்களா? அந்த ஆயிரக்கணக்கான பிராமணர்கள், அவர்கள் இந்தியாவில் அதோகதியடைந்திருக்கும் எளிய ஜனங் களுக்காக என்ன செய்கிறார்கள்? தீண்டாதே தீண்டாதே என்ற ஒரே மொழியன்றோ அவர்களுடைய உதடுகளில் சதா உலவு கின்றது?
நமது ஸநாதன மதம் அவர்களுடைய கையிலகப் பட்டுக் கொண்டு எவ்வளவு இழிவுற்றுப் பங்கமடைந்து விட்டது? நமது மதம் இப்பொழுது எந்நிலையிற் கிடக்கின்றது? அது இப்பொழுது தீண்டாதே மதத்தில்தான் புரள்கின்றது;
மற்றெங்குமன்று....
அன்பும் நல்லெண்ணமுமடைய
உங்கள் விவேகாநந்தா
(சுவாமி விவேகாநந்தரின் கடிதங்கள் முதற்பாகம், பக்கம் 112, ராமகிருஷ்ண மடம், சென்னை)
- குன்றவாணன்  குறிப்பு: தோழர் குன்றவாணன் இதன் நகலை ஞானபூமிக்கும் அனுப்பி உள்ளார்.
-விடுதலை,29.1.16

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2016

மூடத்தனத்திற்கு முடிவு கட்டுவார்களா படித்த மூடர்கள்?

யாகத்திற்குக் கிடைத்த கை மேல் பலன் இதுதானா?
உலக அமைதிக்காக பல கோடி ரூபாய்  செலவில் நடத்தப்பட்ட யாகமாம்
திடீர் தீப்பற்றி பார்ப்பனர்கள் தலைதெறிக்க ஒட்டம்!
மூடத்தனத்திற்கு முடிவு கட்டுவார்களா படித்த மூடர்கள்?

மேடக், டிச.28-_ உலக அமைதிக்காக யாகம் நடத்துவதாகக் கூறி பல கோடி ரூபாய் செலவு செய்து தெலங்கானா முதல் அமைச்சர் சந்திர சேகர ராவால் நடத்தப் பட்ட மகா சண்டியாகத் தின் தீப்பற்றி யாக மேடை எரிந்து பந்தலிலும் பரவிட, யாகம் நடத்திய பார்ப் பனர்களும், பக்தர்களும் பதறி அடித்து ஓடிய காட்சி பரிதாபமே! படித்த தவர்கள் எவ்வளவுக் கிறுக் கர்களாக இருக்கிறார்கள் என்பதற்கு இது ஓர் அடையாளமே! இதற்குப் பிறகாவது திருந்துவார்களா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்து நிற்கிறது.
தெலுங்கான முதல்வர் சந்திரசேகரா ராவ் தனித் தெலுங்கான மாநிலம் உருவான பிறகு தனது ஆட்சிக்கு எந்த தீங்கும் ஏற்படாமல் இருக்கவும், (?) மக்களின் நலவாழ்விற்காக வும், மேடக் மாவட்டம் எர்ரவள்ளி என்ற கிராமத் தில் மகாயுதசண்டி யாகம் என்ற சடங்கை பிர மாண்ட அளவில் நடத்தி னார். இந்த யாகத்திற்காக அமைக்கப்பட்ட பந்தல் மாத்திரம் ரூ.3 கோடி செலவில் அமைக்கப்பட் டது. இந்தியா முழுவதிலும் இருந்து பல்வேறு பார்ப் பனர்கள் யாகசாலையில் வேதம் ஓதுவதற்காக வந் திருந்தனர். இவர்களுக்கு மட்டுமே ரூ.2 கோடி கொடுக்கப்பட்டிருந்தது, யாகசாலை அமைந்த இடத்தை செம்மைப்படுத்த மற்றும் பல்வேறு அலங் கார அமைப்புகள் என்று மொத்தம் 7 கோடி செல வில் அய்ந்து நாள் தொடர்ந்து நடைபெற்றது.
இந்த யாகத்தில் கலந்து கொள்ள குடியரசுத் தலைவர் முதல் 8 மாநில ஆளுநர்கள், 13 மாநில முதல்வர்கள் மற்றும் பல்வேறு அரசியல் தலை வர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப் பட்டிருந்தது. 23 ஆம் தேதி துவங்கிய இந்த யாகத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தமிழக ஆளுநர் ரோசைய்யா, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், தெலுங்கானா மற்றும் ஆந்திர ஆளுநர் இ.எஸ்.எல்.நரசிம்மன், மத்திய அமைச்சர்கள் வெங்கய்ய நாயுடு, பண் டாரு தத்தாத்ரேயா, காங்கிரஸ் மூத்த தலைவர் சுப்பராமி ரெட்டி, மகா ராஷ்டிர மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவ், ஆந்திரப் பிரதேச சட்டசபைத் தலைவர் சிவபிரசாத் யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வைக்கோலால் வேயப்பட்ட யாகமேடை
கடைசி நாளான நேற்று யாகத்தில் இருந்து தெறித்த தீப்பொறி ஒன்று வைக்கோலால் வேயப் பட்ட யாகமேடையில் தெரித்து யாகமேடை தீப்பிடித்தது, இந்தத்தீ விரைவில் யாகப் பந்தலி லும் பற்றிக்கொண்டது. இதனை அடுத்து யாகம் செய்துகொண்டு இருந்து பார்ப்பனர்கள், அவர் களுக்குப் பாதுகாப்பாக இருந்த தெலுங்கானா காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் அலறி யடித்துக்கொண்டு ஓடினர்.
இது குறித்து நீயூஸ் 7 என்ற பத்திரிகையாளர் கூறும் போது தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் யாகத்திற்கு வந்ததை அடுத்து யாககுண்டத்தில் இருந்த பார்ப்பனர்கள் தீவிரமாக யாகம் செய் பவர்கள் போல் நடந்து கொண்டனர். மேலும் 3 நாட்களாக தொடர்ந்து எரிந்து கொண்டு இருந்த யாககுண்டத்தில் நேற்று அதிக அளவு நெய்யும், ஆடைகளும் போட்டு கொளுத்தப்பட்டது. மேலும் யாகத்தில் கட்டை களும் போடப்பட்டன, இதனால் ஆங்காங்கே நெருப்புப் பொறிகள் தெறித்தன. ஆரம்பத்தில் யாரும் நெருப்புப் பொறிகள் தெறிப்பதை கண்டு கொள்ளவில்லை. இந்த நிலையில் நண்பகலில் யாகமேடையில் நெருப் புப்பொறி பட்டு தீப்பிடிக்க ஆரம்பித்தது. தீ பிடித்து விட்டது என்று தெரிந்த வுடன் பார்ப்பனர்கள் உடனடியாக துண்டைக் காணோம் வேட்டியைக் காணோம் என்று குதிகால் பிடரியில்  தலைதெறிக்க ஓடினர்.  பாதுகாவலர்கள் தீயை அணைக்க முற்பட் டனர் ஆனால் தீ யாகப் பந்தலின் மேலே பிடித் திருந்ததால் அவர்களால் ஒன்றும் செய்யமுடிய வில்லை, இதனால் அவர் களும் வெளியே ஓடிவந்து விட்டனர், என்று கூறினார்.
உலக அமைதிக்காக என்று மழுப்பிய சந்திரசேகரராவ்
இதனை அடுத்து மேடக் மாவட்ட ஆட்சி யாளர் அலுவலகத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த சந்திர சேகர ராவ் இது உலக அமைதி வேண்டி நடத்தப்பட்ட யாகம் தான், எனது சொந்த நலனுக்காக நடத் தப்பட்ட யாகமல்ல, மேலும் இந்த யாகம் 8 கோடி செலவில் நடை பெற்றதாக கூறுகின்றனர். இந்த யாகத்திற்கு என்று அரசு தரப்பில் பணம் கொடுக்கப்படவில்லை, உலக நன்மைவேண்டிய பல தொழிலதிபர்கள் மற்றும் பொதுமக்களிடம் பெற்ற நன்கொடைதான் என்று கூறினார்.
விவசாயிகளின் தற்கொலை
இந்த யாகத்தில் எந்த ஒரு உயிர்ச்சேதமும் ஏற்பட வில்லை என்றாலும் 7 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது, மேடக் மாவட்டம் கடந்த 2 ஆண்டுகளாக கடுமை யான வறட்சியைச் சந்தித் துள்ளது, யாகம் நடை பெற்ற எர்ரவள்ளி என்ற கிராமத்தில் சில மாதங் களுக்கு முன்பு 2 விவ சாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.  வறட்சி மற்றும் விவசாயி களின் தற்கொலையை கண்டுகொள்ளாமல் கோடிக்கணக்கில் செலவு செய்து ஒரு மாநில முதல் வரே யாகம் நடத்தியதை ஆரம்பத்தில் இருந்தே ஆந்திர மாநிலத்தில் பல்வேறு தரப்பில் இருந்து கடுமையான எதிர்ப்பு தொடர்ந்து இருந்து வந்தது, இந்த நிலையில் யாக மேடையில் தீப்பிடித் ததன் விளைவால் கோடிக் கணக்கான பணம் சாம் பலாகியுள்ளது.
குறிப்பு: இந்த யாகத் தில் 2000 புரோகிதப் பார்ப்பனர்கள் கலந்து கொண்டனர். ரூ.7 கோடி செலவிட்டதாக தெலங் கானா முதல் அமைச்சர் சந்திரசேகரராவ் கூறியுள் ளார். காசைக் கரியாக் காதே என்பார்களே - அது இதுதானோ!


யாகத்துக்காக  கோடிக்கணக்கான பணத்தை வீணடிப்பதா?
காங்கிரஸ் கண்டனம்
நகரி, டிச. 28   சந்திரசேகரராவ் நடத்தும் யாகத் துக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தெலுங்கானா மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் திக்விஜய்சிங் கூறியதாவது:
சந்திரசேகரராவ் நடத்தும் சண்டி யாகத்தால் நாட்டில் எதுவும் நடந்து விடாது. கடந்த ஒரு வாரமாக அவர் பூஜையில் இருப்பதால் அரசு நிர்வாகம் முடங்கி கிடக்கிறது. யாகத்துக்காக ரூ.40 கோடி செலவிடப் படுவதாக தெரிய வந்துள்ளது. இந்த பணம் எப்படி வந்தது? யாகத்துக்கு ரூ.7 கோடிதான் செலவிடுவ தாகவும் இது அரசு பணம் அல்ல. எனது சொந்த பணம் என்றும் நன்கொடை மூலம் பணம் பெற்றதாகவும் சந்திரசேகரராவ் கூறுகிறார்.
இந்தப் பணம் அவருக்கு யார் மூலம் வந்தது என்று மக்களுக்கு விளக்க வேண்டும். யாகத்துக்காக கோடிக் கணக்கில் பணம் வீணடிக்கப்படுகிறது. இது தேவை யற்றது. இவ்வாறு அவர் கூறினார்.
-விடுதலை,28.12.15

கடவுள் காப்பாற்ற மாட்டார்.... நடிகர் நாசர் அதிரடி....

இந்த பேரிடர் நமக்கு கற்றுத் தந்த பாடம் ஆபத்து காலத்தில் எந்த கடவுளும் வரமாட்டார். மனிதன்தான் மனிதனைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். கடவுளும் மதங்களும் பொய்த்தன. மனிதநேயம் நிமிர்ந்து நின்றது.. இந்த பத்து நாட்கள் எனக்கு கிடைத்த மன நிறைவு மெக்காவிற்கு சென்றாலும் எனக்கு கிடைக்காது. நடிகர் நாசர் அவர்களின் ஒவ்வொரு வார்த்தைக்கும் அரங்கில் இளைஞர்கள் கைதட்டி ஆரவாரித்து ஆமோதித்தினர்....... அவருக்கு பின் பேச வந்த இளையராஜா மறுக்கிறேன் பேர்வழி என்று உளறிக் கொட்டிய பொழுது அரங்கத்தில் ஓரிருவர் தவிர அனைவரும் அமைதியாக இருந்தனர்... .இசைஞானி தான் சுருதி தப்பி பேசுகிறோம் என்பதை கடைசி வரை உணரவில்லை....
நாசர் அணிந்திருந்த கறுப்புசட்டை அனைவரை யும் கவர்ந்தது...

இளையராஜாவின் தப்புத்தாளங்கள்
இளையராஜா தனது உரையில் 'உலகை இயக்குவது  கடவுள்....எல்லாம் அவன் செயல்' என்றார். கூட்டத்தில் அமர்ந்திருந்த ஒருவர் ‘அப்படியென்றால் வெள்ளத்தில் மக்களைக் காப்பாற்றியது கடவுள் செயலிற்கு விரோதமானது அல்லவா' என்று கேட்ட பொழுது அருகிலிருந்தோர் ‘கொல்' என்று சிரித்தனர்..... ஆரம்பத்திலிருந்தே தடுமாறிய இளையராஜா மாணவர்களைப் பார்த்து மதியம் பாடல் ஒலிப்பதிவு உள்ளது.. நன்கு பாடத்தெரிந்தவர்கள் என்னுடன் வரலாம் என்றெல்லாம் நிகழ்ச்சிக்கு பொருந்தாமல் பேசியதனைக் கேட்க பரிதாபமாக இருந்தது...
சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில் வெள்ள மீட்புப் பணியில் ஈடுபட்டவர்களுக்கான நன்றி அறிவிப்பு நிகழ்ச்சியில் (17.12.2015)
.-விடுதலை,18.12.15