பக்கங்கள்

வியாழன், 23 பிப்ரவரி, 2017

நிகழ்கால நடப்புகளும் - நமது நிலைப்பாடும்!


கலி.பூங்குன்றன்,
துணைத் தலைவர், திராவிடர் கழகம்

தமிழ்நாட்டின் முதலமைச்சராகவிருந்த செல்வி ஜெ.ஜெயலலிதா மறைவுக்குப் பின் (5.12.2016) தமிழ் நாட்டின் அரசியல் அரங்கிலும், ஆட்சி மன்றத்திலும் பல்வேறு வகைகளிலும் வேக வேகமாகக் காய்கள் நகர்த்தப்படுகின்றன.

குறிப்பாக ஜெயலலிதா என்ற பார்ப்பன அம்மையார் மறைந்த நிலையில், மறுபடியும் முதலமைச்சர் என்ற ஆட்சி அதிகார பீடத்தில் அமர்வதற்கு இன் னொரு பார்ப்பனர் அமைய வாய்ப்பற்றுப் போன நிலையில், பார்ப்பன சக்திகள், பார்ப்பன ஊடகங்கள் அ.இ.அ.தி.மு.க.வில் சிண்டு முடியும் வேலையில் ஈடுபட்டன. ஒரு பார்ப்பனப் பெண்ணுக்கு விளம்பரத் தோள்களைக் கொடுத்துத் தூக்கி நிறுத்துகின்றன. பாரதீய ஜனதா என்ற பார்ப்பனக் கட்சியோ, திராவிட இயக்கங்களுக்குத் தாங்கள்தான் மாற்று என்று கரிசனம் காட்டத் தொடங்கிற்று. அ.இ.அ.தி.மு.க. - பி.ஜே.பி. ஆகிய இரண்டு கட்சிகளின் லட்சியங்களும் ஒன்று என்று மத்திய அமைச்சர் திரு.வெங்கையா நாயுடு கசிந்துருகிக் கருத்தும் தெரிவித்தார்.

இவற்றையெல்லாம் சுட்டிக்காட்டி தாய்க்கழகத்தின் தலைவர் என்ற முறையில் திராவிடர் கழகத் தலைவர் அறிக்கை வாயிலாக (‘விடுதலை’, 8.12.2016) அ.இ.அ.தி.மு.க.வினருக்கு முக்கிய வேண்டுகோள் ஒன்றினை விடுவித்தார்.

‘‘அ.தி.மு.க. சகோதரர்களே, எச்சரிக்கை! சிண்டு முடிந்திடுவோரை, உங்கள்மீது திடீர் அனுதாபம் - அளவற்ற ஆதரவு தருவதுபோல் நாடகம் போடுவோரை விழிப்போடு புரிந்துகொள்ளுங்கள். அக்கட்சியின் கட்டுக்கோப்பை - கட்டுப்பாட்டை மற வாதீர்!’’ என்று திராவிடர் இயக்க உணர்வோடு எச்சரித்தார்.

தமிழ்நாட்டைப் பொருத்தவரை ஆட்சி என்பது தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. இயக்கக் கட்சிகளிடம்தான் கடந்த 1967 முதல் தொடர்ந்து இருந்து வருகிறது. இதில் ஒன்றை பலகீனப்படுத்தி, அந்த இடத்தில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ளவேண்டும் என்று பி.ஜே.பி. கருதித்தான் தன் சித்து வேலையையும் நடத்தியது. பி.ஜே.பி.க்கு அதற்கான சக்தி தமிழ்நாட்டில் இல்லை என்றாலும், அ.இ.அ.தி.மு.க.வுக்குள் ஒரு பிளவை ஏற் படுத்தி, ஒன்றைத் தன் கைக்குள் போட்டுக் கொண்டு மறைமுக ஆட்சியை நடத்தலாம் என்பதுதான் பி.ஜே.பி.யின் திட்டம். இந்த நிலையை கழகத் தலைவர் வெளிப்படுத்தினார்.

அதன்பிறகு 27.12.2016 அன்று மற்றொரு அறிக்கையினையும் கழகத் தலைவர் வெளியிட்டார்.

‘‘தமிழ்நாட்டில் ஏதோ ‘சூன்யம்‘ ஏற்பட்டு விட்ட தாகவும், அதை நிரப்பத் தங்களால்தான் முடியும்; அதற் காகவே புது ‘அவதாரம்‘ எடுத்துள்ளவர்கள் போலும் நித்தம் நித்தம் சிலர் உளறுவதும், அதை ஏதோ பிர கடனம் போல ஆசைக் கனவுகளை பகலிலே கண்டு அறிவித்து மகிழுவதுமாக உள்ளனர்’’ என்று கூறியதுடன்,

தந்தை பெரியார் சொல்லும் ஒரு கருத்தினையும் நினைவூட்டினார். ‘‘இந்நாட்டில் என்றுமே அரசியல் போராட்டங்கள் நடைபெற்றதே இல்லை. அரசியல் பெயரில், போர்வைக்குள் நடைபெற்றவை அத் தனையும் ஆரிய - திராவிட இனப்போராட்டமே!’’ என்று தந்தை பெரியார் அவர்களின் கணிப்பு பொருத்தமாக எடுத்துக்காட்டப்பட்டிருந்தது அவ்வறிக்கையில்.

‘‘(அந்தக் கனவுகளை) அப்பட்டமாக ஆரிய ஏடுகளும், மக்கள் ஆதரவைப் பெற்று இந்தப் பெரியார் மண்ணான தமிழ்நாட்டில் காலூன்ற முடியாத நிலையில் குறுக்கு வழி அரசியலில், லாட்டரியில் பரிசு விழாதா என்று கனவு காணும் ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. கட்சிகளும் தலையிடுகின்றன - பிரச்சினையாக்க முயலுகின்றன’’ என்றும் இரண்டாவது அறிக்கையிலும் முக்கியமாக வலியுறுத்தியுள்ளார்.

தொடக்கம் முதல் இன்றுவரை பி.ஜே.பி. - ஆர்.எஸ்.எஸ். மத்திய அரசுகளின் திரைமறைவு நடவடிக்கையை அடையாளப்படுத்தி, எச்சரிக்கை எச்சரிக்கை என்று வலியுறுத்தி வந்துள்ளார் ஆசிரியர்.

தொடக்கத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் தெரிவித்த கருத்துகளை மேலோட்டமாகப் பார்த்தவர் கள்கூட, பிறகு அதனை வழிமொழிகிற வகையில் கருத்துகளை வெளியிட ஆரம்பித்தனர் என்பதுதான் உண்மை. போகப் போகப் புரியும் என்று அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார் கழகத் தலைவர். அதுதான் இப்பொழுது நடந்தும் வருகிறது!

இந்தப் பிரச்சினையில் தி.மு.க.மீது எந்தவித உரசலோ, விமர்சனமோ வைக்கவில்லை - திரா விடர் கழகத் தலைவர். இன்னும் சொல்லப்போனால், இந்தக் காலகட்டத்தில் தி.மு.க. நடந்துகொண்டுவரும் - மேற்கொள்ளும் அணுகுமுறையை மிகவும் உயர்வாகப் பாராட்டி தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். டிசம்பர் 27 ஆம் தேதி அறிக்கையில் அவர் தெரிவித்த கருத்து கவனிக்கத்தக்கது.

‘‘தமிழ்நாட்டின் எதிர்க்கட்சியான தி.மு.க. மிகுந்த முதிர்ச்சியுடன் - குறுக்கு வழிகளில் எதற்கும் ஆசைப்படாமல் கண்ணியத்துடன் அரசி யல் நடத்துவது - பாராட்டுக்குரியது. எதிர்க்கட்சி என்ற முறையில் உரிய அளவு - தன் கருத்துகளை வெளியிட்டு வருகிறது.

கடமா தொலைச்சிய கானுறை வேங்கை

இடம் வீழ்ந்த துண்ணா திறக்கும்

வானகம் கையுறினும் வேண்டாம் விழுமியோர்

மானம் மழுங்கா வரின் (நாலடியார்)

என்ற பழைய பாட்டு நியதிப்படி -

இடப்பக்கம் வேட்டையில் வீழ்ந்தால் புலி அதனை உண்ணாதாம்; வலப்பக்கம் வீழ்ந்தால்தான் உண்ணும் என்பது எப்படியோ - வேட்டையில் கூட ஒரு நியதி உண்டு.

குறுக்கு வழியில் எந்த முயற்சியும் தேவை என்று எண்ணாத திண்மைதான் உண்மையான ஜனநாயகவாதிகள் என்பதை உலகுக்கு அவர் களை அடையாளம் காட்டும்.

ஆக்கபூர்வ எதிர்க்கட்சி பணியை அந்த இயக் கம் - தனது கடமை வழுவாது - அதன் பண்பட்ட எதிர்க்கட்சித் தலைவராக உள்ள தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் இயங்குகிறது.’’ (‘விடுதலை’, 27.12.2016)

உண்மை நிலை இவ்வாறு இருக்க - தி.மு.க.வுக்கு இதில் என்ன பிரச்சினை? என்ன சங்கடம்?

பெரியார் மண்ணில் திராவிட இயக்கம் தவிர்த்த மூன்றாவது சக்தியாக காவிகள் காலூன்றக் கூடாது என்பதில் தி.மு.க.வுக்கு மாற்றுக் கருத்து இருக்க முடியாதே - இருக்கவும் கூடாதே!

இன்னும் சொல்லப்போனால் தி.மு.க.வே கூட இந்தக் கருத்தை வெளிப்படையாக தெரிவித்திருந்தால், அதன் திராவிட இயக்க உணர்வுக்காக  பொதுத் தளத்தில் அது சிறப்பாகவே உயர்ந்திருக்கும்.

இந்தப் பிரச்சினையில் மத்திய அரசு, ஆளுநர் எப்படியெல்லாம் நடந்து வருகின்றனர் - அதைப்பற்றிய கருத்துகளைக் கூற தி.மு.க. ஏன் தயங்கவேண்டும்?

அப்படியொரு கருத்தை முன்வைக்க முன்வரா விட்டாலும், தாய்க்கழகமான திராவிடர் கழகத் தலைவர் அந்தக் கருத்தை வலியுறுத்தியது கண்டு மகிழ்ந்திருக்க வேண்டும்.

ஆனால், நடந்தது என்ன? திராவிடர் கழகத்தைச் சங்கடப்படுத்தவேண்டும் என்று நினைத்துக் கொண்டு கழகத்தால் விலக்கப்பட்ட சிலரை அழைத்துக் கூட்டம் நடத்தியதை நினைக்கும்பொழுது இப்பொழுதுகூட ‘‘சிரிப்புதான்’’ வருகிறது!

இது என்ன சிறு குழந்தை விளையாட்டு!

எவ்வளவோ நிலைக்கு உயர வேண்டியவர்கள் இப்படி ஒரு சிந்தனைக்கும், செயலுக்கும் ஆளாகி விட்டார்களே என்ற வருத்தம் - அவர்மீது கொண்ட அக்கறையின் காரணமாகவே திராவிடர் கழகத் தலைவருக்கு ஏற்பட்டது என்பதுதான் உண்மை.

கடந்த 18 ஆம் தேதி சட்டப்பேரவையில் நடை பெற்ற அமளி - துமளிகள் குறித்து திராவிடர் கழகத் தலைவர் சட்டம் அறிந்தவர் என்ற முறையில் தம் கருத்தினைத் தெரிவித்தார்.

சட்டப்பேரவைக்குள் சபாநாயகரின் முடிவுதான் இறுதியானது என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே! எந்த முறையில் வாக்கெடுப்பு என்பது எல்லாம் அவரின் அதிகார எல்லைக்கு உட்பட்டது என்பது பலமுறை சட்டப்பேரவை உறுப்பினர்களாக இருந்தவர்களுக்கு, அமைச்சர்களாக இருந்தவர்களுக்குத் தெரியாததா?

குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிப்பதில்லை - தேர்தல்மூலம்தான் அதனை ஈடேற்ற விருப்பம் என்பதில் தி.மு.க.வுக்கு தெளிவு இருக்கும்பொழுது தேவையில்லாமல் தி.முக.. இதில் அதீதமாக ஏன் நடந்துகொள்ளவேண்டும்? அதனால் தி.மு.க.வுக்கு என்ன லாபம்? லாபமில்லாததோடு மட்டுமல்லாமல், வீணான கெட்ட பெயரை சம்பாதித்துக் கொண்டது தானே மிச்சம்.

வேடிக்கைப் பார்த்துக் கொண்டல்லவா - சம்பந்தப் பட்டவர்கள் (பாதிக்கப்பட்டவர்கள்) இருந்தனர்!

பொதுவானவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அதிருப்தியை அலட்சியப்படுத்திவிட முடியாதே! நாமாகத் தேடிக்கொண்ட வீண் பழி இது!

வடநாட்டு தொலைக்காட்சிகளும், ஊடகங்களும் தி.மு.க.வைப்பற்றித் தூற்றித் தூற்றி செய்திகளையும், கருத்துகளையும் வெளியிடும் நிலைக்கு நாம் ஏன் ஆளாகவேண்டும்?

இதற்குமுன் சட்டமன்றத்தில் பலமுறை அமளிகள் நடந்ததுண்டு. குறிப்பாக 1988 இல் இந்த முறை அதற்கு நேர்மாறானது என்ற அடிப்படையில் தான் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் வழிகாட்டும் தலைமைப் பண்பைப்பற்றியும் சுட்டிக்காட்டியுள்ளார் (‘விடுதலை’, 18.2.2017).

1988 ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் ஜானகி அணிக்கும், ஜெயலலிதா அணிக்கும் பலப்பரீட்சை நடந்தபோது கலைஞர் தலைமையிலான தி.மு.க. உறுப்பினர்கள் எப்படி நடந்துகொண்டார்கள்? அந்தப் பொருளில்தான் திராவிடர் கழகத் தலைவர் தம் அறிக்கையில் இப்பொழுது சுட்டிக்காட்டியிருந்தார்.

இப்பொழுது தமிழ்நாடு சட்டப்பேரவை நடவடிக்கைகள் குறித்து கழகத் தலைவர் எப்படி அறிக்கை வெளியிட்டுள்ளாரோ - அதே முறையில்தான் அன்றைக்கும் அறிக்கை வெளியிட்டு இருந்தார். சபாநாயகருக்குரிய உரிமை குறித்தும் தெளிவுபடுத்தி இருந்தார் (‘விடுதலை’, 8.1.1988).

செய்தியாளர்கள் தி.மு.க. செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களிடம் கேட்ட கேள்விக்கு, அவர் அளித்த பதில் பாராட்டத்தகுந்ததுதானா?

செய்தியாளர்: நீங்கள் வருத்தம் தெரிவித்திருந்தாலும், திராவிட கட்சிகளுக்கு தாய் கட்சியாக உள்ள தி.க.வின் தலைவர் கி.வீரமணி அவர்கள் தலைவர் கலைஞர் வழி நடத்தாததே சட்டசபையில் இதுபோன்ற நிகழ்வுகளுக்குக் காரணம் என்று தெரிவித்து இருக்கிறாரே?

மு.க.ஸ்டாலின்: திராவிடர் கழகத்தின் தலைவர் அய்யா வீரமணி அவர்கள் ஒரு மூத்த தலைவர். அவரை தலைவர் கலைஞர் மட்டுமல்ல, தலைவரைப் பின்பற்றி நடக்கும் நாங்களும் மிகவும் மதிக்கிறோம். ஆகவே, நாங்கள் மிகவும் மதிக்கும் ஒருவர் வைத்துள்ள குற்றச்சாட்டுபற்றி நான் விமர்சித்து அவருக்குரிய மதிப்பை குறைக்க விரும்பவில்லை (‘முரசொலி’, 21.2.2017, பக்கம் 4).

திராவிடர் கழகத் தலைவர் வைத்த குற்றச்சாட்டு சரியானதல்ல என்ற சொல்லி, அதற்கான காரணத்தையும் விளக்குவதுதான் சரியான விமர்சன முறை. அப்படி செய்திருந்தால், அதன்மூலம் திராவிடர் கழகத் தலைவரின் மதிப்பு எப்படி குறைந்து போகும்?

நாங்கள் மதிக்கும் தலைவர் அய்யா வீரமணி அவர்கள் -  நாங்கள் மதிக்கும் ஒரு மூத்த தலைவர் - நான் விமர்சித்து அவருக்குரிய மதிப்பை குறைக்க விரும்பவில்லை என்றால் என்ன பொருள்?

பதில் கருத்தைச் சொல்லியிருந்தால் கண்டிப்பாக திராவிடர் கழகத் தலைவரின் மதிப்புக் குறையப் போவதில்லை. மாறாக மதிப்புக் குறையும் என்றால், மதிப்பில்லா முறையில் வார்த்தைகளை கருத்துகளைக் கையாள நேரிடும் என்பதுதானே அதன் பொருள்.

மாறுபட்ட கருத்தைச் சொன்னால், அதனை ஏற்கும் பக்குவம் உள்ளவர்தான் - தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் சொன்னதுபோன்ற மூத்த தலைவர் அய்யா வீரமணி.

ஆனால், அவர் சொன்ன பதிலில்தான் சுற்றி வளைத்து, திராவிடர் கழகத் தலைவரை அவமதிக்கும் பொருள் பொதிந்திருக்கிறது என்பது வருத்தமான ஒன்றாகும்.

திராவிடர் கழகம் ஒரு சமுதாய புரட்சி இயக்கம் - தி.மு.க. தேர்தலில் போட்டியிடும் அரசியல் அமைப்பு. இந்த நிலையில், ஒரு சில நேரங்களில் கருத்து மாறுபாடு ஏற்படுவது தவிர்க்கப்பட முடியாததுதான்!

இதற்கு முன்பும் பல நேரங்களில் நிகழ்ந்ததுண்டு. விமர்சனங்கள் கடுமையாகக்கூட இருந்திருக்கின்றன. அதேநேரத்தில், மதிப்பைக் குறைக்கும் பேச்சுக்கே, வார்த்தைக்கே இடமில்லை.

அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோதுகூட தொழிற்கல்லூரிகளுக்கு மனு போடும் தகுதி மார்க்கை 50 சதவிகிதத்திலிருந்து 55 சதவிகிதமாக உயர்த்தியபோது, அதனைக் கண்டித்து ‘விடுதலை’யில் தலையங்கம் தீட்டினார் ஆசிரியர் கி.வீரமணி.

அதனை ஏற்றுக்கொண்டு, ஏற்கெனவே விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டு இருந்தும், அவற்றையெல்லாம் அழித்து விட்டு, புது விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டன என்பது எதைக் காட்டுகிறது?

தவறு என்று சுட்டிக்காட்டுவது தாய்க்கழகத்தின் கடமையல்லவா! அண்ணாவை ஏற்போர் இதனையும் ஏற்க வேண்டாமா?

‘‘வீரமணி எங்கு இருந்தாலும் பெரியார் கொள்கையை விட்டுக் கொடுக்கமாட்டார்.’’ (‘குமுதம்‘ இதழ் பேட்டி, 3.12.1998).

‘‘பா.ஜ.க.வை ஆதரித்தால்கூட வீரமணி எங்களை மன்னித்து விடுவார். ஏனெனில், ஏற்கெனவே அவர் அ.தி.மு.க.வை மன்னித்திருக்கிறார்.’’ (‘முரசொலி’, 14.4.1998, முதற்பக்கம்).

இப்படிப் பேட்டி கொடுத்தவர் முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்கள்தான்.

தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள்மீது பற்றும், அவர்தம் எதிர்காலத்தைப்பற்றிய நல் விருப்பமும் கொண்டவர் திராவிடர் கழகத் தலைவர் என்பது தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மிக நன்றாகவே தெரியும்.

தி.மு.க. தலைமைப் பொறுப்புக்கு மு.க.ஸ்டாலினை நான் முன்மொழிவேன் என்று தி.மு.க. தலைவர் அவர்களின் அறிவிப்பினை ஏற்று, ‘‘கலைஞர் அறிவிப்பு - காலச் சிலாசாசனம்!’’ என்று அறிக்கை கொடுத்து உச்சி மோந்தவர் திராவிடர் கழகத் தலைவர் (‘விடுதலை’, 8.1.2013).

இப்படி தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டியதற்காக - அவரின் சகோதரரால்  ‘‘அரசியல் விபச்சாரம் செய்கிறார் வீரமணி’’ என்ற அசிங்கமான கூடா விமர்சனத்துக்கு ஆளானவர்தான் அய்யா வீரமணி. அதற்கு எதிர்வினையாக எந்த ஒரு சொல்லையும் சொல்லவில்லை தமிழர் தலைவர் - அது அவருடைய பெருந்தன்மை.

அதெல்லாம் தெரிந்திருந்துமா ஆசிரியர் அவர்களின்மீது ஆத்திரமும், அவமதிக்கும் மறைமுக சொல்லாடல்களும்?

முகநூலிலும், வாட்ஸ் அப்-களிலும் அசிங்க அசிங்கமாக மலத்தைத் தோய்த்து பதிவு செய்பவர்கள் யார்? யார்? அவர்கள் ‘‘உறவு முறையில்’’  - யார் யாருக்குச் சொந்தம் - எத்தகையவர்கள் என்பதெல்லாம் எங்களுக்குத் தெரியாதா?

தி.மு.க. என்று சொல்லிக் கொண்டு தந்தை பெரியார் ஆசிரியர் வீரமணி, பகுத்தறிவுக் கொள்கைகளைப்பற்றி எல்லாம் நாராசமான நடையில் எழுதப்படுவதெல்லாம் தி.மு.க. தலைமைக்குத் தெரியாதா?

இழிவுகளையும், வசவுகளையும் சந்தித்து சந்தித்து, அவற்றை எருவாக்கி வளர்ந்ததுதான் திராவிடர் இயக்கம்!  தந்தை பெரியாருக்கும், அவர்தம் தொண்டர்களுக்கும் அவை எல்லாம் சந்தனமாலைகளே! தோழர்கள் கோபத்தோடு தலைவரிடம் இவற்றைக் கூறும்போதுகூட, ‘‘பந்தை அடியுங்கள் - காலை அடிக்கவேண்டாம்‘’ என்ற அறவுரை அறிவுரையைத்தான் கூறுகிறார் தமிழர் தலைவர்.

இப்பொழுதுகூட எங்கள் நிலை என்ன தெரியுமா? அ.தி.மு.க.வா - பி.ஜே.பி.யா? என்று கேட்டால், அ.தி.மு.க.தான்; தி.மு.க.வா - அ.தி.மு.க.வா? என்று கேட்டால், எங்கள் ஆதரவும், அரவணைப்பும் தி.மு.க.வுக்குத்தான்!  திராவிடர் கழகம் - கிளைக் கழகமல்ல: தாய்க்கழகம்!

தமிழ்நாட்டு உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் வலிமை வாய்ந்த தி.மு.க. தவறான அணுகுமுறைத் தடத்தில் கால் வைத்து தேவையில்லாத கெட்ட பெயரை விலைக்கு வாங்குகிறதே - இதுவரை சம்பாதித்து வைத்துள்ள மக்களின் நல்லபிப்பிராயத்தை இழக்கிறதே என்ற வலியின் அடிப்படையில்தான் தாய்க்கழகம் ‘தவிப்பு’ உணர்வோடு ‘கடிந்து’ கொள்கிறது. இதனைப் புரிந்துகொள்ளும் பக்குவம் வேண்டாமா?

இன்னொன்றும் முக்கியம் - திராவிர் கழகம் தனித்தன்மையான சமூகப் புரட்சி இயக்கம்! தனது கருத்தைத் தனித்தன்மையோடு கூறும் தகைமை கொண்டது.

‘குடிஅரசு’ முதல் இதழ் தலையங்கத்தில் (2.5.1925) தந்தை பெரியார் குறிப்பிட்டார்களே,

‘‘நகுதற் பொருட்டன்று நட்டல், மிகுதிக்கண் மேற் சென்றிடித்தற் பொருட்டு’’ என்ற கருத்துதான் எங்களின் என்றென்றுமான நிலைப்பாடு! ஆறுவது சினம்!

-விடுதலை,22.2.17

திங்கள், 20 பிப்ரவரி, 2017

தர்கா குண்டுவெடிப்பு எதிரொலி:  100 தீவிரவாதிகள் சுட்டு கொலை

இஸ்லாமாபாத், பிப். 18- தெற்கு பாகிஸ்தானின் ஒரு பகுதியான சிந்து மாகாணத்தில் உள்ள செவான் நகரில் லால் ஷபாஸ் குவாலண்டர் தர்கா உள்ளது. இதில் மதகுரு சுபி சமாதி உள்ளது.

கடந்த புதன்கிழமை மாலை இங்கு ஏராளமானவர்கள் மரியாதை செலுத்துவதற்காக கூடியிருந்தனர். அப்போது திடீரென ஒருவர், தனது உடலில் கட்டியிருந்த குண்டுகளு டன் தர்காவிற்குள் பாய்ந்தார். இதனால் வெடிகுண்டுகளுடன் அவர் வெடித்து சிதறினார். இதில் தர்காவில் இருந்தவர்கள் 30 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் வெளியானது. 50-க்கும் அதிகமானவர்கள் படுகாயம் அடைந்தனர். இச்சம்ப வத்துக்கு அய்.எஸ். தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்ற நிலையில், காயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவந்த சிலர் அடுத்தடுத்து உயிரிழந்ததால் இந்த கொடூர தாக்குதலின் பலி எண்ணிக்கை 76 ஆக உயர்ந்து உள்ளது.

பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் உத்தரவையடுத்து, இந்த தாக்குதலுக்கு காரணமான தீவிரவாதிகளை வேட்டையாட நாடு முழுவதும் பாதுகாப்பு படையினர் தேடுதலில் ஈடு பட்டனர். இதன் பலனாக கடந்த 24 மணி நேரத்தில் 100-க்கும் அதிகமான தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
-விடுதலை,18.2.17

சனி, 18 பிப்ரவரி, 2017

*ஆர் எஸ் எஸ் என்றால் என்ன ?*

*ஆர் எஸ் எஸ் என்றால் என்ன ?*
*அவர்கள் யார்?*
*அவர்களின் பணி என்ன?*
*RSS-க்கும், BJP -க்கும் என்ன தொடர்பு?*

1.ஆர் எஸ் எஸ் என்பது –
*ராஸ்டிரிய சேவை சங்கம்* –
இது ஆரிய, பார்ப்பன இந்து மத வெறி
என்ற ஒன்றால் அமைக்கப்பட்ட, பார்ப்பனர்களால் *கோல்வால்க்கரால் 1912 ஆரம்பிக்கப்பட்ட ஸ்தாபனம்*,

2.இது உலகெங்கும் உள்ள பார்ப்பன மதவெறியர்கள் நன்கொடை அளித்து நடத்தி வரும் *ஒரு பயங்கரவாத அமைப்பு.*

3,இதுதான்
*கோட்சே மூலம் காந்தியை சுட்டுக்கொன்றது* 
இன்று இந்தியாவில்
இருக்கும் மத கலவரங்களுக்கும் , சாதி
மோதல்களுக்கும் இதுதான் காரணம் ..

4. இந்தியாவில் பயங்கரவாத செயல்கள் இன்று அரங்கேற காரணமும் இந்த அமைப்புதான் ..

5. இதன் நோக்கம் தொடர்ந்து *பார்ப்பனர்கள் அதிகாரத்தில் இருப்பதும்* மற்றவர்கள்
அடிமையாக ,
*தீண்டத் தகாதவர்களாக இருக்கவேண்டும்*இதுவே இந்த அமைப்பின் குறிக்கோள் .

6. இது உலகின் மிகப் பெரிய பாசிச
அமைப்புகளில் பயங்கரமானது.

7.இந்த அமைப்பில் ராணுவத் தளபதி முதல், நீதிபதி வரை உறுப்பினர்கள் இருப்பார்கள்.
பெரும்பாலும் “பார்ப்பனர்கள் பல
அதிகாரத்தில் இருப்பார்கள்.

8.இந்த அமைப்பில் அடியாளாக “ஆதிக்க சாதி
இளைஞர்கள் இருப்பார்கள்- ஒடுக்கப்பட்ட –
தலித் மக்களுக்கு எதிராகவும் ,
சிறுபான்மை மக்களுக்கு எதிராகவும் ,
கொலைகள் -குற்றங்கள் நடத்த
பயன்படுத்தபடுவர்.

9.இவர்கள் மக்களிடம் அதிகமான மூட
நம்பிக்கைக் கருத்துக்களை பரப்புவர் .
புராணத்தில் சொல்லப்பட்ட “கதாபாத்திரங்களை , உண்மையான
கடவுள்கள் என மக்களிடம் பிரச்சாரம்
செய்து , மக்களை மூட நம்பிக்கையில்
புதைப்பார்கள் ,-

*ராமன் என்பவன் ஒரு*
*கதையின் கதாபாத்திரம்* -அதை
உண்மைக் கடவுள் என்று மக்களிடம் பரப்பி அந்த கடவுளின் கோவில் , *பாபர் மசூதி உள்ள இடத்தில் முன்பு இருந்தது என்று பொய்ச்சொல்லி* , முட்டாள் இந்துக்களை ,
இஸ்லாமிய மக்களுக்கு எதிராக திருப்பி ,
*பாபர் மசூதியை குண்டு வைத்து இடித்து* , இந்த நாட்டில் “பயங்கரவாதத்தை
‘விதைத்தனர்.

11. விநாயகர் ஊர்வலம் என்று , முன்பு
வடநாட்டில் மட்டுமே இருந்த ஒன்றை ,
*இங்கே தமிழ் நாட்டிலும் கொண்டு*
*வந்து விநாயகர் சிலைவைத்து மத நல்லிணக்கத்தைச் சிதைத்தனர்* –
அந்நேரங்களில் சட்ட ஒழுங்கு
அழிக்கப்படுகிறது ..

12, இவர்கள் அரை டவுசர் போட்டு, கையில் தடியுடன், பொது
சாலையில் *இஸ்லாமியருக்கு எதிராக முழக்கம் போட்டு ஊர்வலம் போவார்கள்.*
இவர்களுக்கு , முழு டவுசர் போட்ட
“காவல் துறை ” முழு பாதுகாப்பு
கொடுக்கும்.

13. இவர்களது அமைப்புக்கு , ஒய்வு
பெற்ற காவல்துறை அதிகாரிகள் ,
ஒய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் ,
ஆயுதப் பயிற்சி, துப்பாக்கி சுடுதல் ,
குண்டு வைத்தல் ஆகிய பயிற்சிகளைக்
கொடுப்பார்கள்.

14. ராணுவ கிடங்கிலிருந்து மிக
எளிதாக இவர்களுக்கு ஆயுதங்கள்
கிடைக்கும்.

15. பெரும்பாலான அரசுகள் ( மத்திய –
மாநில அரசுகள் ) இவர்களின் அமைப்பு
மீது “பெரிய குற்றவியல் அல்லது
நீதிமன்ற நடவடிக்கைகளை எடுக்காது
என்பது யதார்த்தமான உண்மை.

16. இந்த அமைப்புகளின் தலைவர்கள்
மாற்று மதத்தினரை இழிவு படுத்தும்
உரைகளை பொது இடங்களில் வாசிப்பர் அரசு இதைக் கண்டு கொள்ளாது .

17. சமஸ்கிருதம் -இந்தி இவை
இரண்டையும் எல்லோரும் படிக்க
வேண்டும் என வற்புறுத்துவார்கள்.
பசு மாட்டை தெய்வம் என்று சொல்லி
“மாட்டு கறி உண்பதை தடை
செய்வார்கள்.

18. அதிகமான “அம்மண-சாமியார்கள் –
பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்
திரிவார்கள் .. அவர்களை இவர்கள் “
ரிஷிகள் அமைப்பு என ” ரவுடிகளாக
பயன்படுத்திக் கொள்வார்கள்.

19. இவர்களின் *மூடநம்பிக்கை கருத்துக்களை எதிர்க்கும்*-
*அறிவுஜீவிகள் ,* *எழுத்தாளர்கள் ,*
*கம்யூனிஸ்ட்கள் ,* *பகுத்தறிவாளர்கள் ,*
*பெரியாரிஸ்ட்கள்,*
*அம்பேத்கரிஸ்ட்கள்* *ஆகியோர்களைத் தாக்கி கலவரம் செய்வார்கள்*
பல நேரங்களில்
கொலையும் செய்வார்கள்
இப்படி பல
அறிஞர்களைக் கொலை செய்திருக்கின்றனர்.

20. இவர்கள் பல துணை அமைப்புகளை வைத்துள்ளனர் –அவை
*”விஷ்வ ஹிந்து பரிசத்,*
*பஜ்ரங் தல் ,*
*ஹிந்து முன்னணி,*
*ஹிந்துஸ்தான் விராத் ,*
*நிர்மான் சபா ,*
*ஹிந்து சபா ,*
*அகில பாரத்*
*வித்யார்த்தி*
*பவன் என்ற மாணவர் அமைப்பு,*
*சேவாதல் மாநில சுயாட்சிகொண்ட* *“சிவா சேனா,*
*ரன்பீர் சேனா* *(பிகாரில் நிலபிரபுக்கள் படை)*

தமிழகத்தில் அரசியல் கட்சியாக *இந்து மகா சபை, *இந்து மக்கள் கட்சி.*

-மத்தியில் அரசியல் கட்சியாக - *BJP*
*பாரதிய ஜனதா பார்ட்டி.*

21. பெயருக்கு தேச பற்று என்று
கூச்சலிடுவார்கள் – இந்திய தேசிய
மூவண்ணக் கொடியை இவர்களது
அமைப்பு எப்போதும் ஏற்றுக்
கொள்ளாது, மரியாதையையும் செய்யாது.

22. இவர்களின் தலைமை பீடம் “(RSS )
நாக்பூரில் உள்ளது.
சென்ற ஆண்டுவரை
தேசியக் கொடி ஏற்றப் படவே இல்லை.

23. இவர்களின் அமைப்பு ” சமூக நீதிக்கு
- இடஒதுகீட்டுக்கு எதிரானது .

24. இவர்களது அமைப்பு ” சமத்துவத்தை
“எதிர்க்கும் ஒரு பாசிச அமைப்பு

25- உரிமை — ஜனநாயகம் அதற்கான
போராட்டம் -இவற்றை அடிப்படையிலே மறுக்கும் கொள்கை கொண்டது –
அந்த தருணத்தில் -ரத்தகளரி கொண்டு
போராட்டங்களை ஒடுக்கவேண்டும் என்ற கொள்கையைக் கொண்டது -ஆங்காங்கே
உள்ள அரசு இயந்திரங்கள் மூலம் அதை
செய்து கொண்டிருக்கிறது .

26. இந்தியாவில் இதுவரை 10,000 -க்கும்
மேற்பட்ட கலவரங்களைத் தூண்டி,
லட்சக்கனக்கான மக்களைக் காவு வாங்கி உள்ளது.

26. உயர் சாதி – கீழ் சாதி – தீண்டாமை
என்பவை – மனுதர்ம -வர்ணாசிரம
கொள்கையை உயிர் மூச்சாகக்
கொண்டவை.

27. இன்றைய சூழலில் தமிழ் நாட்டில்
எல்லா சாதி அமைப்புகளிலும் “
இவர்கள்தான் “தலைமை பொறுப்பை
கைப்பற்றி கொண்டுள்ளனர் ( கோகுல்ராஜ்
கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட
*“யுவராஜ் கூட* *RSS* *அமைப்பின் முக்கிய பிரமுகர்* என்பது
குறிபிடத்தக்கது).

28. இந்தியாவில் உள்ள *அச்சு மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள்,*
*RSS*
*ஆதரவாளர்கலால்தான் நடத்தப்படுகிறது.*
காரணம் அனைத்து துறைகளிலும் இவர்கள் ஊடுருவி விட்டனர்.

எகா:- *தந்தி டிவி செய்தியாளர் ரங்கராஜ்பாண்டே*

29. இவர்களின் அமைப்பு , இந்திய அரசின்
முக்கிய முடிவுகளை
தீர்மானிக்கிறது . *பாஜக கட்சியின் தற்போது நரேந்திர மோடி,* *அமீத்ஷா ,* *ராஜ்நாத் சிங், 1947* *ஆண்டிற்கு முன்பின் சர்தார் வல்லபாய் படேல்,* *சர்வர்க்கார்,* *வாஜ்பாய், எல்.கே.அத்வானி,* *சுப்பிரமணியசாமி போன்ற எல்லோரும்*
*RSS அடிப்படை கோர் உறுப்பினர்கள்.*

தமிழகத்தில் *நிர்மலா சீத்தாராமன்,* *வானதி சீனிவாசன்,* *எச்.ராஜா,* *இல.கணேசன்,* *பொன்.ராதாகிருஷ்ணன்,* *தமிழிசை போன்றோர்கள் RSS -ல் பயிற்றுவிக்கப் பட்டவர்கள் தான்.*

30 .இவர்களின் ஆலோசனையின்படியே
“இந்திய உளவுத்துறைகளான ” ரா “
மற்றும் ஐபி செயல்படுகின்றன ..
ஈழப்பிரச்சனையில் , ரா வின்
ஆலோசனையில்தான் இந்தியாவும் .
இந்திய வெளியுறவுத்துறையும்
செயல்பட்டன -அந்த ராவை இயக்குவது
ஆர் எஸ் எஸ் அமைப்பு தான்……….>

31.பெண்களுக்கு எந்த உரிமையும்
கிடையாது -பெண்கள் படிக்கக்கூடாது - வேலைக்கு போகக்கூடாது –
பெண்ணின் வேலை -பிள்ளை பெற்று
வீட்டில் இருந்து பரமரிக்கவேண்டியதுதான் என்பது ஆர் எஸ் எஸ் தர்மம் –

32.வெள்ளையர்களுக்கு எதிராக போராட திராணி இல்லாமல்,
*இந்த தேசத்தின் சுதந்திர தியாகிகளை காட்டிக்கொடுத்தவர்கள் இந்த RSS.*

*இந்திய சுதந்திரப் போராட்டத்தில் இவர்கள் யாரும் பங்கேற்கவில்லை*

33.கோவில்களில் “பார்ப்பனர்கள் மட்டுமே
பூஜை செய்ய வேண்டும் பார்ப்பனர்
அல்லாதோர் கருவறைக்கு சென்றால் தீட்டு என்ற கொள்கையை  அமல்
படுத்தியதும் இந்தஆர் எஸ் எஸ். தான்.

34.இந்தியாவில் இது போன்ற எந்த அமைப்பையும் மத்திய அரசு தடைசெய்தது இல்லை, ஆனால் *RSSயை மூன்றுமுறை தடைசெய்தார்கள்
*1) காந்தியார் கொலை,*
*2) பாபர் மசூதியை இடித்த போதும் தடைவிதித்தனர்.*

*இந்த தேசத்துரோகிகள் RSS & BJP பற்றி இன்னும் நிறைய இருக்கிறது..*

*உலகத் தமிழர்களே எச்சரிக்கை!*
*இந்திய தேசியவாதிகளே எச்சரிக்கை!!*

*மண்ணின் மைந்தர்களே நாம் அனைவரும் "தமிழர்கள்"* என்னும் ஒருமைப்பாட்டிற்குள் நின்று
*இவர்களைக் கட்டாயம் விரட்டியடிக்க வேண்டும்.*
💪💪💪✊✊✊👊👊👊

பகிரியிலிருந்து..
(வாட்ஸ்சப்)
Via Rama Chandran

ஞாயிறு, 12 பிப்ரவரி, 2017

தந்தை பெரியாரின் கருத்துரைகள்


எனக்குச் சுயநலமில்லை என்று கருதாதீர்கள்; நான் மகா பேராசைக் காரன். என்னுடைய ஆசையும் சுயநலமும் எல்லையற்றன. திராவிட சமுதாய நலனையே என் சொந்த சுயநலமாக எண்ணி இருக்கிறேன். அச்சமுதாயத்திற்கு வேண்டிய செல்வமும் பதவியும் என்பனவற்றில் அளவற்ற ஆசை கொண்டிருக்கிறேன். அந்த சுயநலத்திற்கே நான் உழைக்கிறேன்.
***
"நம் இழிவு நீக்கம், நம்முன்னேற்றத் தடை நீக்கம், ஆரியம் சுமத்திய மூடநம்பிக்கையில் இருந்துவிடுபடுதல், பகுத்தறிவாளர்களாக - மானமுள்ள சமுதாயமாக ஆவது ஆகிய இப்படிப் பட்ட நமது வேலை, நெருப்போடு பழகுவதுபோல் பாமரமக்களிடம் பழகுவதாகும். அவர்கள் நம்பிக்கையைப் பெறவேண்டும். அவர்களைத் திருத்தியே ஆகவேண்டும் இதற்கு நல்ல பிரச்சாரம் வேண்டும். நிலைகுலைந்து சின்னா பின்னப்பட்டு கிடக்கும் மக்களை ஒன்று சேர்த்து யாவர் பலத்தையும் ஒன்றாய்த் திரட்டி ஒரு மூச்சு பார்த்தாக வேண்டியவர்களாக இருக்கிறோம். இனி நாம் சூத்திரர்களாக வாழமாட்டோம் என்பதே நமது இலட்சியச் சொல்; நமது மூச்சு."
***
"பாடுபடாமலே தின்று பருத்துக் கொண்டிருக்கும் ஒரு கூட்டத்தாருக்குப் பெயர் மேல் ஜாதியினர் - பார்ப்பனர். உழைத்து உழைத்து உருக்குலைந்து உண்ண உணவின்றி ஊர் ஊராய்ச் சென்று உயிர் இழக்கும் மக்கள் கீழ் ஜாதியினர் - சூத்திரர்கள் - பஞ்சமர்கள் நாலாவது ஜாதி, அய்ந்தாவது ஜாதி; எவ்வளவு விபரீதமான செய்கை! இதை ஒழிக்க வேண்டாமா?"
***
"சாதியின் அமைப்புகளைக் காப்பாற் றவே சாதி, மதம், சாஸ்திரம், புராணம், கடவுள், சாமி, கோவில், குளம், திருவிழா, உற்சவம், பண்டிகை, மோட்சம், நரகம் என்று வைத்து இருக்கிறார்களே தவிர, மக்களின் குறைகளை நீக்கி அவர் களுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக அல்ல."
***
"சர்க்கார் (ஆட்சி) என்பது ஒரே ஒரு ஜாதிக்கான தர்மச் சத்திரமா?"
***
"சாதி வித்தியாசம் என்பது கற்பிக் கப்பட்டதே ஒழிய வேறில்லை. வலுத் தவன் இளைத்தவனை அடக்கி வைப் பது என்பதற்கு ருஜூ (சாட்சி) ஜாதி வித்தியாசமே ஆகும். இது இன்னும் நிலைத்திருப்பது என்றால் இந்த நாடு மிருகப்பிராயத்திலிருந்து மனிதப்பிராயத் திற்கு இன்னமும் வரவில்லை என்பதைத்தான் காட்டுகிறது."
***
"தமிழனுடைய முட்டாள்தனமும் இழிதன்மையும் எது தெரியுமா? பார்ப் பான் இராம இராஜ்யம் பெறுவதற்கு ஆக அவனுக்கு அடிமையாகவும் கூலியாகவும் அமர்ந்து உதவியதேயாகும்."
***
"மனிதனை மனிதன் உட்காரவைத்து ரிக்க்ஷா இழுப்பது பரிதாபமாய் இருக்கிறது என்று கூறும் பிரதிநிதி இருக்கும் சட்டசபையில் கக்கூசு (மலக் கழிவு) எடுப்பது இழிவு, மானக்கேடு, சுகாதாரக் கேடு, பரிதாபம் என்று கூறும் பிரதிநிதிகள் ஏன் இல்லை?"
***
"கக்கூஸ் (மலக்கழிவு) எடுக்கும் தொழில் ஒரு நாட்டில் இருப்பது மனித சமுதாயத்தின் மானத்துக்குக் கேடு - இந்த முறையே கூடாது - நாடு முழுவதும் தானாகவே கழுவிக்கொண்டு போகும்படியான நவீன விஞ்ஞான முறை இருக்க வேண்டும்."
***
"பார்ப்பனர்களை மேல் ஜாதி மேலானவர்கள் என்ற கருத்துக் கொடுக்கும்படியானதும், நாமே நம்மைக் கீழ்மைப்படுத்திக் கொள்வது மான, கருத்துக் கொண்ட 'சாமி' என்றும் 'பிராமணர்' என்றும் கண்டிப்பாக நாம் அழைக்கக் கூடாது. நம் வீட்டு சமுதாய - நன்மை - தீமைகளில் நம்மைவிட உயர்ந்த ஜாதியார்
என்று சொல்லிக் கொள்பவர்களைச் சேர்த்துக் கொள் ளக்கூடாது."
***
"சுயராஜ்ஜியம் (விடுதலை) வந்த 6-மாத காலத்தில் காந்தியார் உயிரை பார்ப்பனீயம் என்னும் 'பஹிரி' பருந்து அடித்துக் கொண்டு போய்விட்டதே."
***
"எப்படிப்பட்ட தனி உருவங்களை யும், சிலைகளையும் கடவுளாகக் கொள் ளக் கூடாது. சிலைகள் கடவுள்களான தனால் தான் பார்ப்பான் உயர்ஜாதி ஆகவும் கடவுள்கள் பேரால் மக்களைச் சுரண்டி வாழவும் வகை ஏற்பட்டு விட்டது."
***
"எந்த எந்தக் கோவில்களில் பார்ப்பனர் அர்ச்சகர்களாய் இருந்து கொண்டும், பார்ப்பனர்கள் தான் பூசை செய்ய வேண்டும் என்கிற நிபந்தனை இருந்து கொண்டும் இருக்கின்றனவோ, அக்கோவில்களுக்குத் திராவிட மக்கள் செல்லக்கூடாது. சென்றாலும் அப்பார்ப் பனர்கள் மூலம் பூசை ஆராதனை செய்து கொள்ளக் கூடாது."
***
மேல் லோகம் கீழ்லோகம் மோட் சம் நரகம் பிதிர்லோகம் தேவலோகம் என்பதான புரட்டுகளுக்கு இடங் கொடுத்து அந்தக் கருத்துக்களுக்கு அடிமையாகக் கூடாது.
***
கடவுள் வேண்டுதல் என்னும் பேரால் காசு பணம் கடவுள் உண்டிக் குக் கொடுப்பது என்பது வெறும் முட்டாள் தனமாகும். வேண்டுதலுக்கு ஆக கடவுளுக்கு முடி (மயிர்) காணிக்கை கொடுப்பது என்பது வடி கட்டின முட்டாள்தனமேயாகும். இவற்றால் நமக்கு முட்டாள்தனமும் செலவும் தான் மிஞ்சும்; பார்ப் பானுக்குக் கொல்லைச் செடியின் குலை யிலிருந்து காய், பழம் உதிர்வதுபோல், பண மழை பெய்வது போல் லாபமாகும்.
***
பிரார்த்தனைகளைவிட பக்தி, கடவுள் பக்தி மிகவும் மோசமான கருத்து என்றேதான் கூற வேண்டும். அதுவும் ஒரு வியாபாரமாகத்தானே இருக்கிறது?
***
பாஞ்சாலி கதையைப் படித்து நீ பஞ்சையாகி விட்டாய். விதியை நம்பி மதியை இழந்து விட்டாய்! குழவிக் கல்லை (கடவுளை) நம்பி கோழையாகி விட்டாய்! சோதிடத்தை நம்பி சோடையாய் விட்டாய்!
***
கலை என்பதெல்லாம் மக்கள் வாழ்க்கையாகும். அறிவுப் பெருக்கத்துக் கும் பயன்பெறக் கூடியதாய் இருக்க வேண்டுமே தவிர, வெகு சிலருக்கு மாத் திரம் புரியும் படியான, ஆனந்தப்படும் படியான வெறும் அற்புதத்தையும் அதி சயத்தையும், பண்டிதத் தன்மையையும் மாத்திரமே காட்டுவதற்கு ஆக என்று இருக்கக் கூடாது
***
ஆரிய மதத்துக்கும், கலைக்கும், மொழிக்கும் அடிமைப்பட்டதாலேயே திராவிடம் - திராவிட மக்கள் இவ்விழி நிலைமைக்கு வர நேர்ந்தது.
***
ஆரியக் கலை, புராணம் பற்றிய சினிமா - நாடகம், பாட்டு, கதை - காலட் சேபம் ஆகியவைகளை திராவிட மக்கள் அடியோடு வெறுக்க வேண்டும்
***
நம் சொந்த நடவடிக்கையில், நம் குழந்தை குட்டி மனைவி வாழ்க்கையில் கூடுமான அளவு ஆரியத்தை ஒதுக்கி, திராவிடத்தைப் புகுத்த வேண்டும்
***
எதிரிகள் நமக்கு எவ்வளவு ஆத்திர மூட்டினாலும் தொல்லை கொடுத் தாலும் பலாத்காரத்தைப் பயன்படுத் தினாலும் நாம் நிதானமிழந்து விடக் கூடாது
***
நாம் மக்களில் - பிறவியில் உயர்வு - தாழ்வுகளைத்தான் வெறுக்கிறோமே தவிர யாரையும் சமத்துவமாகக் கொள் வதில் தயங்குவதில்லை. ஆகையால் சமத்துவமான காரியங்களுக்கு யாரை யும் வெறுக்கவோ, பகிஷ்கரிக்கவோ கூடாது. நமது வெற்றி கண்ணுக்குத் தெரிகிறது. அது கானல் நீரல்ல. கருத் தும் கவலையும் இருந்தால் கண்டிப்பாக அடைந்தே தீருவோம் என்ற உறுதி எனக்கு உண்டு தொகுத்தோன்: கபிலன் ('விடுதலை', 15.01.1955)
-விடுதலை ஞா.ம.,14.6.14

ஆராய்ச்சி விளக்கம்! (ஈ.வெ.ரா.)

ஏழை என்பவன் யார்? : தனது சரீரத்தால் வேலை செய்து அதன் கூலியினால் மாத்திரமே ஜீவனம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்திலுள்ளவன். இக்கூட்டத்தார் களுக்குத்தான் பார்ப்பன மதப்படி சூத்திரர்கள் என்கின்ற பெயர்.

முதலாளிகள் என்பவர்கள் யார்? : சரீரத்தினால் வேலை செய்யும் ஆள்களை வைத்து வேலைகளை வாங்கி, வேலை செய்தவர்களுக்கு ஒரு அளவுக்குள்பட்ட ஜீவனத்துக்கு மாத்திரம் போதுமான கூலி கொடுத்துவிட்டு அவ்வேலையின் மற்ற எல்லாப் பயன்களையும் எல்லையின்றி அனுபவிப்பவர்கள்.
குடியானவர்கள் என்பவர்கள் யார்? : பூமியைத் தானே உழுது தானே பயிர் செய்து தன் குடும்பம் முழுவதும் அதில் ஈடுபட்டு அதன் பயனை அனுபவிப்பவர்கள்.
மிராசுதாரர்கள் என்பவர்கள் யார்? : தாங்களே நேரில் விவசாயத் தொழிலில் ஈடுபடாமல் ஆள்களை வைத்து பயிர் செய்கிறவர்களும், மற்றவர்களுக்கு குத்தகைக்கோ, வாரத்துக்கோ விட்டு லாபத்தை மாத்திரம் அடைபவர்களான (பூமியை  உடைய)வர்கள்.
- குடிஅரசு - கட்டுரை - 10.01.1948
-விடுதலை ஞா.ம.,23.8.14

அறிஞர் ஆபிடுயூபே கூறிய ‘‘Double Tongue’’ ஆரியம்!


பல்டியடிக்கும் பாசிஸ்டுகள் (கட்டுரையின் ஒரு பகுதி)
மின்சாரம்
அறிஞர் ஆபிடுயூபே கூறிய ‘‘Double Tongue’’ என்ற அர்ச்சனைக்கு அறிஞர் அண்ணா அவர்கள் ‘‘பேச நா இரண்டுடையாய்ப் போற்றி!’’ என்று அவருக்கே உரித்தான அழகு தமிழில் படம் பிடித்துக் காட்டினார் - ‘ஆரிய மாயை’ என்னும் அசைக்க முடியாத ஆதாரச் சரக்குகளைக் கொண்ட அந்த அரிய நூலில்.
அந்த நூல் தடையும் செய்யப்பட்டது - அந்த நூலுக்காக அறிஞர் அண்ணா அவர்களுக்கு 700 ரூபாய் அபராதம் அல்லது 6 மாத சிறைத் தண்டனையும் அளிக்கப்பட்டது என்பது மேலும் தெரிந்துகொள்ள வேண்டிய கூடுதல் வரலாற்றுக் குறிப்பாகும்.
1943 ஆம் ஆண்டிலேயே வெளிவந்த அந்த நூல் ஏழு ஆண்டுகளுக்குப் பின் 1950 ஆம் ஆண்டில் தடை செய்யப்பட்டது. (153-ஏ பிரிவு சட்டப்படி) அதே காலகட்டத்தில் தந்தை பெரியார் அவர்களின் ‘பொன்மொழி’ நூலுக்கும் தடை - தந்தை பெரியார் அவர்களுக்கும் அதே தண்டனை என்ப தெல்லாம் நம் இளைஞர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய - திராவிடர் இயக்கத் தீரத்தைக் குறித்த ‘தித்திக்கும்’ அத்தியாயங்கள்!
அறிஞர் ஆபிடுயூபே அப்படி என்னென்னதான் கூறினார்? தெரிந்து கொள்ள ஆர்வம்தானே இருக்கச் செய்யும்.
இதோ:
1807 ஆம்  ஆண்டில் ஆபிடுயூபே ஆரியம்பற்றி இவ்வாறு அடுக்கி யதைத்தான் அண்ணா அவர்கள் 1943 ஆம் ஆண்டில் எடுத்துக்காட்டினார்.
ஏதோ இனம் தெரியாத வெறுப்புணர்வால் அல்ல - இனவெறுப்பின் எதிரொலியும் அல்ல - பகையுணர்ச்சியும் கிடையாது. பார்ப்பனர்கள், பார்ப்பனர் அல்லாதாரை எப்படியெல்லாம் இழித்துப் பழித்து எழுதி வைத்துள்ளனர்- நடத்துகின்றனர் என்பதால் ஏற்பட்ட தன் மான உணர்ச்சியின் உந்துதல்தான் திரா விடர் இயக்கம் பார்ப்பனர்களைப் படம் பிடித்ததும் - பிடித்துக் காட்டுவதுமாகும்.
-விடுதலை ஞா.ம.,28.1.17

கடவுள் இல்லை- லாலாலஜபதி


ஒரு காலத்தில் கடவுளை நான் நம்பிய துண்டு. கடவுளை நோக்கிப் பிரார்த்திப் பதால் அவர் நமது வேண்டுகோளைக் கேட்டு நமக்கு நன்மை செய்கிறாரென நம்பினேன். நன்மையான தர்ம கைங் கர்யஞ் செய்கிறவர்களுக்குக் கடவுள் நன்மையையே செய்கிறார் என்றும், துஷ்டர்களை அடியோடு அழித்து நிக்கிர கஞ் செய்கிறாரென்றும் எண்ணினேன். இந்த நம்பிக்கையில் நான் மகா உறுதி கொண்டிருந்தேன். ஆனால் படிப்படியாக என் நம்பிக்கை குறைந்து கொண்டு வந்து இப்பொழுது. அந்த நம்பிக்கையே எனக்கில்லாமல்  போய் விட்டது. இந்த மாய வஞ்சகம் நிறைந்த ஒரு உலகத்தை ஆண்டு நடத்திக் காப்பாற்றி வரும் ஒரு கடவுளை நான் எப்படி நம்ப முடியும்? அக்கடவுள் மகா அன்புடையவர் மகா கருணாநிதி. சத்தியவந்தர், சர்வ வல்லமை யுள்ளவர். எங்கும் பரம் பொருளாக நிறைந்திருப்பவர் என்பனவற்றை நான் எப்படி நம்பக் கூடும்? மகா தயாநிதி சத்தியமே ஒரு உருவான மெய்க் கடவுள் இருந்தால் இந்த உலகத்தைச் சிருஷ்டித் திருக்க முடியுமா? இந்த உலகம் அநீதி நிறைந்தது. சமத்துவத்திற்குப் பரம விரோதியாய் இருக்கிறது. சகல கொடுமை களுக்கும் உறைவிடம்; மிருகத்தனமானது.
வஞ்சகம், சூது, ஏமாற்றம் முதலியவை உருவெடுத்த மனிதர்கள் நிறைந்தது. இந்த நாசமான உலகத்தைச் சத்தியவந்தரான கடவுள் உண்டு பண்ணியிருக்க முடியுமா? பல ஆயிரக்கணக்கான கொடியர் இவ்வு லகில் ஜீவிக்கிறார்கள் இன்னும் பலர் முட்டாள்கள். அவர்களுக்கு மூளை என் பதே கிடையாது. அன்பு சத்தியம் நிறைந்த இருதயத்தை இழந்த துஷ்டர்கள் பல ஆயிரம் ஏழைகளை இம்சிக்கும் ராக்ஷதர் களும், சத்தியவந்தரைத் தொல்லைப் படுத்தி, அடக்கி, நசுக்கி, மண்ணுக்கு இரையாக்கும் மிருகத்தனம் படைத்தவர் களும் இன்னும் பல ஆயிரம் கொள்ளை யடிக்கும். திருடர்கள் பலர் சுய நலமே உருக் கொண்ட தீயர்கள் எத்தனையோ லக்ஷம். இந்தச் சுயநலப் பேய்களே மகா சொகுசாக, உல்லாச வாழ்க்கை நடத்தி வருகிறார்கள். ஏழைகளை வஞ்சித்து இம்சித்துத் துன்புறுத்துகிறார்கள். ஏழை களின் கதியோ அதோ கதி தான். அவர்கள் மானமிழந்து அடிமைகளாகி, தரித்திரத்திற் குள்ளாகி, உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றிப் பசியால் வாடி மடிகின் றனர். முடிவில் மண்ணோடு மண்ணாய்ப் போகிறார்கள். உலகில் இந்தக் கொடு மைகள் ஏன்? சத்தியமும், உண்மையும் உருக்கொண்ட ஒரு தெய்வம் இந்தக் கொடிய உலகத்தை  உண்டு பண்ணி யிருக்க முடியுமா?
வேதங்கள் பொய்: சத்தியம் என்பது என்ன? சத்தியம் எங்கிருக்கிறது? வேதங் களிலாவது உண்மை இருக்கிறதா அல்லது நம்பிக்கையாவது உண்டா? வேதங்களில் சத்தியத்தைக் கண்டுபிடித்து விட்டதாகச் சிலர் பறைசாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அதெல்லாம் வெறும் பொய்க்கூற்று. அவர்கள் ஏதோ மாயையில் மூழ்கி  அவ்வாறு அல்லற்படுகிறார்கள் வெறும் மதவெறி கொண்டவர்களே உண்மையி ருப்பதாக உளறிக் கொண்டிருப்பதுண்டு. புத்த பகவானோ, கிறிஸ்துவோ, மகமது நபியோ உண்மையைக் கண்டுபிடித் திருக்கிறார்களா? அவர்கள் கண்டுபிடித்த சத்தியம் எங்கே? அந்தச் சத்தியம் மறைந் துவிட்டதா? அல்லது அதைப் போதிக்கப் புறப்பட்டவர்கள் திரித்து, சத்தியத்தையே மறைத்துவிட்டார்களா? இவர்கள் மனி தர்களைப் பாகுபாடு படுத்திப் பிரித்து வைத்தது ஏன்? சத்தியமென்றால் ஒற்று மையின்றிப் பல பாகுபாடுகள் உண்டு பண்ணிச் சுயநலத்துடன் வாழ்வதென்று அர்த்தமா?
லாலாஜி வாழ்க்கை: இவ்விதம் கூறும் நான் ஏன் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு இந்திய சுதந்திரத்திற்காகப் பாடுபட்டு வந்தேனெனக் கேட்கலாம். உண்மையைக் கூறுமிடத்து நான் சுயநல நோக்கங் கொண்டே பொது சேவையில் ஈடுபட்டேனென்று கூறுவேன். அதாவது நான் உள்ளவரை ஏதேனும் ஒரு காரியம் செய்து கொண்டிருக்க வேண்டும். இது மனித சுபாவம்; ஒரு குணம் அது சதா என்னைக் கிளர்ச்சி செய்யத் தூண்டிக் கொண்டிருக்கிறது.
- லாலாலஜபதி
-விடுதலை ஞா.ம.,22,2,14