பக்கங்கள்

ஞாயிறு, 27 ஜனவரி, 2019

கன்னிகாதானம்போல் புத்திர தானம் உண்டா?

தஸ்லிமா நஸ்ரீன் எழுப்பியுள்ள பகுத்தறிவுக் கேள்வி




எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் அவரு டைய எழுத்தின் காரணமாக இசுலாமிய அடிப்படைவாதிகளால் தண்டனைவிதிக் கப்பட்டவர். வங்கதேசத்திலிருந்து வெளி யேறி, அடைக்கலமாக இந்தியாவில் வசித்து வருபவர்.

அவர் எந்த மத அடிப்படைவாதத்தை யும் ஏற்காமல், சுதந்திரமாக தன்னுடைய கருத்தை வெளியிட்டுவருபவர். அவரு டைய டிவிட்டர் பக்கத்தில் இந்துமதத்தி லுள்ள பெண்ணடிமைத்தனத்தைச் சுட்டிக் காட்டி கேள்வி எழுப்பியுள்ளார்.

அதன் விவரம் வருமாறு:

தந்தை தன் மகளை மணமகனுக்கு பரிசுப்பொருளை அளிப்பதைப்போல் அளிப்பது கன்னிகாதானம் என்று உள்ளது. பரிசாக அளிக்கப்படுகின்ற ஒரு பொருளாக ஒரு பெண்ணை எப்படி கருத முடியும்? கன்னியாதானம் போல், புத்திரதானம் என்று எந்த சடங்கும் இருக்கிறதா? இல்லையே.

மனித சமூகத்தில் பெண்கள் சமமாக நடத்தப்படவேண்டும். திருமணம் என்பது வயதுக்கு வந்த மனிதர்களில் இருவரை, அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் இணைப்பது என்று பொருள் ஆகும்.

-  விடுதலை ஞாயிறு மலர், 5.1.19

மதநம்பிக்கை என்று சும்மா இருந்திருந்தால் இந்த மாற்றங்கள் வந்திருக்குமா?



பெண்களை உடன்கட்டை ஏற்றி கொளு த்திக் கொல்லுவது இந்துமத நம்பிக்கை என விட்டிருந்தால், உடன்கட்டை தடுப்புச்சட்டம் வந்திருக்குமா?

குழந்தைத் திருமணம் இந்து மத நம்பிக்கை என விட்டிருந்தால், பால்ய விவாக தடுப்புச் சட்டம் வந்திருக்குமா?

வர்ணாசிரம சாதி ஏற்றத்தாழ்வுகள் இந்து மத நம்பிக்கை என விட்டிருந்தால், அனைவரும் சட்டத்தின் முன் சமம் என்னும் உரிமை கிடைத்திருக்குமா?

கணவன் இறந்தால், மனைவிக்கு மொட்டை அடித்து, முக்காடு போட்டு, மூலையில் உட்காரவைப்பது இந்து மத நம்பிக்கை என விட்டிருந்தால், இந்த சமூக தீமை ஒழிந்திருக்குமா?

மொட்டைப் பார்ப்பனத்தி என்ற நிலை தான் மாறியிருக்குமா?

பெண்களுக்குப் பொட்டுகட்டி கோவில் தேவதாசியாக்குவது இந்து மத நம்பிக்கை என விட்டிருந்தால், தேவதாசி தடை சட்டம் வந்திருக்குமா?

பார்ப்பனர் அல்லாதோர் படிக்கக்கூடாது என்பது இந்து மத நம்பிக்கை என விட்டிருந்தால், நாட்டின் பெரும்பான்மை யான மக்கள் படித்திருக்க முடியுமா?

சில பிரிவு பெண்கள் மேலாடை உடுத் தக்கூடாது என்பது இந்து மத நம்பிக்கை என விட்டிருந்தால், அனைத்துப் பெண்களுக்கும் மேலாடை அணிய உரிமையுண்டு என்ற சட்டம் வந்திருக்குமா?

அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெ தற்கு என்பது இந்து மத நம்பிக்கை என விட்டிருந்தால், பெண் கல்வி சாத்தியப் பட்டிருக்குமா?

திருமணம் முடிந்த பெண், முதல் நாள் பார்ப்பன நம்பூதிரியுடன்தான் முதலிரவைக் கழிக்க வேண்டும் என்பது இந்து மத நம்பிக்கை என விட்டிருந்தால், இந்த இழி பழக்கம் மறைந்திருக்குமா?

ஒரே மத அமைப்பு என்று சொல்லிக் கொண்டு, ஒரு பிரிவின் மீது தீண்டாமை கடைபிடிப்பது இந்து மத நம்பிக்கை என விட்டிருந்தால், தீண்டாமைத் தடை சட்டம் வந்திருக்குமா?

ஒரே மத அமைப்பு என்று சொல்லிக் கொண்டு,  எங்கள் கோவிலினுள் நுழை யாதே என்று  மக்களின்  ஒரு பிரிவினரைத் தடுப்பது  இந்து மத நம்பிக்கை என விட் டிருந்தால், அனைத்து ஜாதிக்கும் ஆலய நுழைவுசாத்தியப்பட்டிருக்குமா?

பார்ப்பனர்கள் கடல்தாண்டி போகக் கூடாது என்பது இந்து மத நம்பிக்கை என விட்டிருந்தால்,இன்றைய நிலையில் லட்ச கணக்கான  பார்ப்பனர்கள் வெளிநாடு களில் வசிக்க, வேலைசெய்ய முடியுமா?

உலகம் தட்டையானது என்பது இந்து மத நம்பிக்கை என விட்டிருந்தால், உலகம் உருண்டையானது என்பது நிரூபிக்கப் பட்டிருக்குமா?

பூமியைத்தான் சூரியன் சந்திரன் போன்றவை சுற்றிவருகின்றன என்பது இந்து மத நம்பிக்கை என விட்டிருந்தால், அறிவியல் வளர்ந்திருக்குமா?

ராகு - கேது என்ற பாம்புகள் சூரியனை யும் சந்திரனையும் விழுங்குவதால்தான் கிரகணங்கள் உருவாகின்றன என்பது இந்து மத நம்பிக்கை என விட்டிருந்தால், வான்வெளி அறிவு வளர்ந்திருக்குமா?

பிரார்த்தனைசெய்தால் குணமாகும் என்பது இந்து மத நம்பிக்கை என விட் டிருந்தால், மருத்துவ அறிவியல் வளர்ந் திருக்குமா?

தமிழ் நீசபாஷை, தமிழில் கடவுளை வழிபடக்கூடாது என்பது இந்து மத நம்பிக்கை என விட்டிருந்தால், தமிழ் அர்ச் சனை என்னும் சட்டம் வந்திருக்குமா?

அன்று அகல் விளக்கில் முகம் காட்டிய அய்யப்பன் இன்று மின்சார விளக்கில் ஜொலிக்கிறான், இப்போது எங்கு போனது 'ஆகம விதி'?

48 நாள் விரதமிருந்த உங்களது கன்னிச் சாமிகள், இன்று 'காலையில் மாலை போட்டு சிறப்பு தரிசனத்தில் அன்றே மலையேறி, அன்று மாலையே சாராயக்கடைக்கு மலையேறும் போது எங்கே போனது 'உங்க ஆகம விதி?

கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை என்ற கோஷத்துடன் பெரு வழியில் 48 மைல்கள் நடந்த கால்கள் இன்று 4 கி.மீ. களாக சுருங்கிய போது எங்கே போனது உங்கள் 'ஆகம விதி' ?

இருமுடி கட்டிய பின் 'சென்று வருகிறேன் ' என்று கூட சொல்லக் கூடாது , என்ற உங்களது ஆகம விதி எவ்வாறு செல் போன்களை அனுமதிக்கிறது ?



இதையெல்லாம் ஏற்றுக் கொள்ளும் "ஆகம விதி" மதநம்பிக்கை பெண்களை மட்டும் அனுமதிக்காது என்றால் மதவாதி கள் இன்றும் பெண்களை தங்களின் அடி மைகளாக வைத்திருக்க முயன்றுகொண்டு இருக்கின்றனர் என்றுதானே பொருள். அதற்குச் சில பெண்களும் பெண் அரசியல் தலைவர்களும் அரசியல் லாபத்திற்காகத் துணை போகின்றனர் என்பதும் கவலைக் குரியதே, இருப்பினும் அவர்களின் போலி மதச்சாயமும் வெளித்துவிட்டது, பெண்கள் விழிப்படைந்துவிட்டார்கள்.

மதப்பயம் காட்டி அடக்கிவைக்க இது பழைய காலம் இல்லையப்பா, நாங்கள் தாடிக்காரர் பேத்தி, அடக்கி வைத்த காலம் போச்சு என்று பெண்கள் பாடும் காலம் வந்தாச்சு.

- க.அன்புமதி - அருள்மதி

-  விடுதலை ஞாயிறு மலர், 5.1.19

வியாழன், 24 ஜனவரி, 2019

இந்து மதத்தின் புதிர்கள்

பேராசிரியர் மு.நாகநாதன்




பேரறிஞர் அம்பேத்கர் "Riddles in Hinduism" என்ற நூலில் இந்து மதத்தில் காணப்படும் முரண்பாடுகளைச் சுட்டி, இந்து மதம் எவ்வாறு சமத்துவச் சமுதாயத்தை அமைப்பதற்கும், ஜனநாயக நெறிகளை நடைமுறைப் படுத்துவதற்கும் பெரும் தடையாக உள்ளது என்பதற்குத் தரவுகளுடன் விளக்கம் அளித்துள்ளார்.

புதிர் 22இல் (Riddle-22) -இவரின் கருத்துகள், கடந்த 4 1/2 ஆண்டு மதவாத பாஜக ஆட்சியில் நடந்த மானுட கொடுமைகளால் நூற்றுக்கு நூறு, மெய்ப்பொருளானது.

அண்ணல் அம்பேத்கர்:

"நல்ல அரசு என்றால் நல்ல சட்டங்களும், நல்ல நிர்வாகமும் தேவை. இது தான் நல்ல அரசின் சாரம் ஆகும். இதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. இதன் அடிப்படையில் பார்க்கும்போது கீழ் நிலையில் இருக்கும் மக்களும் பெரும்பான்மையான மக்களும் பயன் பெறாத வகையில் ஆளும் அதிகாரத் தைத் தங்களின் வகுப்பு நலனுக்காக வைத்திருக்கும் போது நல்ல அரசாகத் தற்போது இருக்கமுடியாது" என்று குறிப்பிட்டுள்ளார்.

(Good Government means good laws and good administration. This is the essence of good Government. Nothing else can be.
Now there cannot be good Government
in this sense, if those who are invested with ruling power seek the advantage of their own class instead of the advantage of the whole people or those who are downtrodden--)
(Riddles in Hinduism- Dr.Babasahep Ambedkar--
Writings And Speeches vol 4-page 282) fraternity.


பிரெஞ்சுப் புரட்சியின் போது வலியுறுத்தப்பட்ட சகோதரத்துவம் தான் ஜனநாயகத்தின் வேர்.

சமத்துவம் என்ற சொல் அதன் முழுமையான உட்பட்ட பொருளை எடுத்துக்காட்டவில்லை. அதனால்தான் சரியாக மைத்திரி -( சமத்துவத்தின் முழு பொருளில்)- என்று புத்தர் குறிப்பிட்டுள் ளார்.இன்றும் இலங்கையில் மைத்திரி பாலா என்ற பெயரை சூட்டுகின்றனர்.

(What French Revolutionisits called fraternity.The word fraternity is not an adequate expression. The proper term is what the Buddha called, Maitree. Page 283)

இலங்கையிலும் இந்தியாவைப் போன்றே மைத்திரி ஏட்டளவில் தான் உள்ளது. நாட்டளவில் இல்லை.

அம்பேத்கர் மேலும் விளக்குகிறார்.

இந்தியாவில் ஏன் ஜனநாயகம் வளரவில்லை. இதற்கான பதில் எளியது.

இந்து மதம் சகோதரத்துவத்தைக் கற்பிக்கவில்லை.

அதற்குப் பதிலாக சமூகத்தை ஜாதி வர்ணங்கள் அடிப்படையில் பிளவைக் கற்பிக்கிறது.

வகுப்பு உணர்வைத் தனியாக நிலைப் பெறச் செய்கிறது.

இத்தகைய அமைப்பில் ஜனநாயகத்திற்கு இடம் இல்லை.

இந்து சமூக அமைப்பு விபத்தின் காரணமாக ஜனநாயகத்தை இழக்கவில்லை.

ஜனநாயகம் இருக்கக் கூடாது என்பதற்காகவே வடிவமைக்கப்பட்டது.

(Why did democracy not grow in India?
The answer is simple .
The Hindu religion does not teach fraternity.
Instead it teaches division of society into classes or varnas and the maintenance of separate class consciousness.
In such a system where is the room for democracy.
The Hindu social system is undemocratic
not by accident. It is designed to be undemocratic.
(page- 285)


இன்று மோடி அரசில் நீதிமன்றத்தில், தேர்தல் ஆணையத்தில், மய்ய வங்கியில், மத்திய புலனாய்வு துறையில் செய்யப்படும் குறுக்கீடுகள், இட ஒதுக்கீடு கொள்கையில் உயர் வகுப்பினருக்கு அவசரமாக அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம், இந்தி, சமஸ்கிருதம் மொழிகளைத் திணிப்பதில் காண்பிக்கும் அவசரம் எல்லாம் யாருக்காக?

ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்கள் மீது நாட்டுத் துரோக வழக்கைப் பதிவு செய்தது எதற்காக?

சமத்துவம் ஜனநாயகம் என்பது எல்லாம் உயர் வகுப்பு, உயர் வர்க்க நலன்களுக்காக என்பதைத் தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் உணர்ந்து களம் அமைத்தனர். போராடினர்.

இந்திய அரசமைப்புச் சட்டம் புனிதமானது.

அதன் அடிப்படைக் கட்டமைப்பை (Basic Structure) பாதுகாக்கவேண்டும் என்று கூக்குரல் இடுகின்றனர்.

இவர்கள் யார்?

இந்து சனாதனம் தான் இந்திய சமூகத்தின் கட்டமைப்பு என்பவர்கள்.

இந்து சனாதனம் தான் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கட்டமைப்பாகவும் செயல்படுகிறது.

ஜனநாயகம் ஒரு சிலரின் கையில் தான் உள்ளது என்பதை 24 இந்து மதப் புதிர்களில் அறிவோடு சான்றுகளோடு அறிஞர் அம்பேத்கர் மெய்ப்பித்துள்ளார்.

இதனால் தான் பெரியார் 1957 ஆம் ஆண்டிலேயே சனாதனத்தைக் காக்கும் இந்திய அரசமைப்புச் சட்டத்தைத் தனது 80ஆம் அகவையில் தீயிட்டார். சிறை தண்டனையும் பெற்றார்.

அறிஞர் அம்பேத்கரும், தந்தை பெரியாரும் செய்த புரட்சியைப் படித்து ஆய்ந்து, தெளிந்து இளைஞர்கள் களமாட வேண்டும்.

- விடுதலை நாளேடு, 24.1.19

சனி, 5 ஜனவரி, 2019

கட்சிகள் என்றால் என்ன?

கேள்வி: கட்சிகள் என்றால் என்ன?


விடை: நல்ல லட்சியங்களைச் சொல்லி; ஜனங்களை ஏமாற்றி; தங்கள் வசம் செய்து; சுயநல லாபம் அடைவது. உதாரணமாக காங்கிர கட்சி, தேசியக் கட்சி முதலிய பல கட்சிகள்.

கேள்வி: அப்படியானால் சுயமரியாதைக் கட்சி இதில் சேராதோ?

விடை: சேராது!

கேள்வி: ஏன்?

விடை: அது யாரையும் ஓட்டுக் கேட்பதில்லை; பணம் கேட்பதில்லை; உத்தியோகம் கேட்பதில்லை; பதவி கேட்பதில்லை; பட்டம் கேட்பதில்லை. அது மாத்திரமல்லாமல் அதில் சேர்ந்தவர்கள் எல்லாம் தங்கள் சொந்த நேரத்தையும், பணத்தையும், செல்வாக் கையும் இக்கட்சிக்குச் செலவழித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

- விடுதலை நாளேடு, 5.1.19

யார் சமதர்மவாதி

பொன்மொழிகள்


ஒருவன் பூணூல் போட்டுக்கொண்டு, நெற்றிக் குறி இட்டுக் கொண்டு, அவன் தாயார் மொட்டை அடித்து முக்காடு போட்டுக் கொண்டு, அவன் மனைவி கோவணம் போட்டு சேலை கட்டிக் கொண்டு இருக்க உங்களிடம் வந்து நான் பொதுஉடைமைவாதி, அதுவும் இடதுசாரிக் கம்யூனிஸ்ட் என்று சொன்னால், அதை நீங்கள் நம்பினால் நீங்கள் எவ்வளவு தூரம் முட்டாள்கள் ஆவீர்களோ அதேபோல்தான் நெற்றிக் குறியுடன் இராமாயணம், பாரதம், தேவாரம், பிரபந்தங்களைப் படித்துக்கொண்டு பாராயணம் செய்துகொண்டு பூசை புனஸ்காரங் களுடன் திரிகின்றவனைச் சமதர்மவாதி என்று நம்புவதாலும் ஆவீர்கள்.

- தந்தை பெரியார் பொன்மொழி

- விடுதலை நாளேடு, 5.1.19

வெள்ளி, 28 டிசம்பர், 2018

ஆசீவகம்

*ஆசீவகம்*

(Aseevagam / Ājīvika)

*தமிழரின் அழிக்கப்பட்ட நெறி*

இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும்

*ஆசீவகம்*
பற்றி அறிந்திருந்தவர்கள் தமிழகத்தில் ஒரு சிலரே.

அவர்களும் சைன சமயத்தின் ஒரு பிரிவாகவே ஆசீவகத்தைக் கருதினர்.

ஆசீவகம் பற்றி வடநாட்டு அறிஞர்கள் ஒரு சிலரும் வெளிநாட்டு அறிஞர்கள் ஒரு சிலரும் ஆராயத் தொடங்கினர். ஆயினும் அவர்களால் பெரிய அளவு வெற்றி பெற முடியவில்லை.

இந்நிலையில் 1950களின் தொடக்கத்தில்

ஆசீவகம் பற்றிய முழுமையான ஆய்வை மேற்கொண்டவர் ஆஸ்த்திரேலியரான *ஏ.எல். பாசம்*
(Arthur Llewellyn Basham) ஆவார்.

ஆசீவகம் பற்றி ஆய்ந்த பலரும் ஆசீவகத்தின் சுவடுகளை

பாலி, பாகத மொழிகளில் உள்ள பௌத்த, சைன நூல்களிலேயே தேடினர்.

அவை யாவும் ஆசீவகத்தை எதிர்த்தவர்களின் கருத்துக்களாகும்.

தருக்கவியலில் இதனை
‘அயலார் கூற்று’ என்பர்.

நன்னூலார்
‘பிறர் மதம் கூறல்’ என்பார்.

மற்றவர்களின் ஆய்விலிருந்து விலகி, தமிழ் இலக்கியங்களான

மணிமேகலை, நீலகேசி,
சிவஞான சித்தியார் ஆகிய நூல்களில் இருந்தும்

ஆசீவகம் பற்றிய செய்திகளைத் திரட்டித் தம் ஆய்வினை மேற்கொண்டவர் ஏ.எல்.பாசம் ஒருவரே ஆவார்.

பேரா.முனைவர் டி.வி.மகாலிங்கம்,

இரா. விஜயலட்சுமி,

முனைவர் க.நெடுஞ்செழியன்,

ஆதி.சங்கரன்

ஆகிய தற்கால அறிஞர்கள் ஆசிவகத்தைப் பற்றிய ஆராய்ச்சியில் பெரும் பங்கு வகிக்கின்றனர்.

*முனைவர் க.நெடுஞ்செழியன்*

‘ஆசீவகம் - அழிந்து போன ஒரு இந்தியச் சமயம் (Ajivikism: a vanished Indian religion)’ எனத் தம் ஆய்வு நூலுக்குப் பெயரிட்ட ஏ.எல். பாசம்,

ஆசீவகத்தின் வேர்கள் தமிழகத்திலேயே நிலை கொண்டுள்ளன என்ற உண்மையையும் வெளிப்படுத்தினார்.

மௌரியர் காலமான கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்குப் பின்னர்

ஆசீவகம் வடநாட்டில் செல்வாக்கை இழந்து விட்டது எனக் கூறிய ஆய்வாளர்கள்,

தமிழ் இலக்கியங்களிலோ கி.பி. 14ஆம் நூற்றாண்டு வரையிலும்

ஆசீவகம் பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளதைச் சுட்டிக் காட்டினர்.

அதற்கான கல்வெட்டு, இலக்கியச் சான்றுகளை நிறையவே எடுத்துக் காட்டினார் ஏ.எல்.பாசம்.

கி.பி. 14ஆம் நூற்றாண்டு வரை தமிழ் இலக்கியங்கள் ஆசீவகம் பற்றிக் குறிப்பிட்டாலும் ஆசீவகத்தின் தோற்றம் வடநாட்டுக்கு உரியதாகவே பாசம் உள்ளிட்ட அனைத்து அறிஞர்களும் நம்பினர்.

ஆசீவகம் பற்றிய செய்திகளை தமிழ் இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளது என்று ஆய்வாளர்கள் கூறிய பின்னரும் கூட ஆசீவகம் பற்றிய ஆய்வுகள் தமிழில் தொடங்கப் பெறவில்லை.

*ஆசீவகம் என்றால் என்ன?*

ஆசீவகம் என்ற சொல்லின் வேரினை கணக்கியல் வழி நின்று விளக்குவோம்.

எட்டுக்குள் எத்தனை இரண்டுகள் உள்ளன என ஒருவர் அறிய விரும்புகிறார்.

வகுத்தல் முறையில் நான்கு எனக் கண்டு கொள்கிறார்.

எட்டு, இரண்டு என்பன அவரிடம் உள்ளவை.
இவை, முறையே முதலி, வகுத்தியாம். அவற்றைக் கொண்டு அவர் பெற்ற விடை நான்கு. இதற்குப் பெயர் ஈவு.

ஆக, எந்த ஒரு அறிந்த செய்தியிலிருந்தும் அறியாமல் உள்ள விடையை அறியலாம். அதற்கு ஈவு என்று பெயர்.

ஈவு என்பது வகுத்தும் பகுத்தும் பெறப்படும் விடையாம்.

கணக்கியலில் மட்டுமின்றி இயங்கியலில் உள்ள அனைத்துத் திணை, துறை, பல்தொழில், மூவிடம், ஐம்பாலிலும் நமக்குத் தெளிய வேண்டியவற்றைப் பகுத்தும் வகுத்தும்
நாம் காணும் விடை
ஈவு ஆகும்.

பண்டைக் கால மாந்தன் சாதி, சமயப் பாகுபாடுகள் இன்னதென்று அவனுக்குள் நஞ்சூட்டப் படுமுன்னர்

வெள்ளந்தியாக வாழ்ந்த காலத்திலும்,

அவனது உடலியல், மருத்துவம், உழவு, தொழில், வானியல் போன்றவற்றில்

பல்வேறு ஈவுகள் அவனுக்குத் தேவைப்பட்டன.

அவனுக்கும் அன்று ஈவு கொடுப்பதற்கு
ஒரு இடம் இருந்தது.

அதுவே ஆசீவகத் துறவிகளின் கற்படுக்கை.

அங்குச் சென்று தனக்குத் தேவையான ஈவுகளைப் பெற்றதால் அத் துறவிகளின் கற்படுக்கை ஈவகம்

(ஈவு+அகம்)
எனப் பெயர் பெற்றது.

(உணவு தருமிடம் உணவகம் எனவும், மழிக்குமிடம் மழிப்பகம் எனவும் வழங்குதல் போன்று.)

இதற்காக கைம்மாறு எதுவும் கருதாமல் எவ்வகைப் பிழையுமின்றிச் செம்மையாக

ஈவு தந்ததால்

ஆசு+ஈவகம் எனச் சிறப்பிக்கப் பட்டது.

கைம்மாறு கருதாத செம்மையான

கவி ‘ஆசுகவி’ எனச் சிறப்பிக்கப் பட்டது போல்,

இக்கற்படுக்கைகள்

ஆசீவகக் கற்படுக்கைகள் எனவும்,

இங்கிருந்த துறவிகள் ஆசீவகத் துறவிகள் எனவும் பெயரிடப் பெற்றுச் சிறப்புற்றனர்.

ஆசீவகம் = ஆசு+ஈவு+அகம்
ஆசு - பிழையற்ற செம்மையான தோல்வியேற்படுத்தாத கேட்ட போதே தங்கு தடையின்றி மடையுடைந்த வெள்ளமென,
ஈவு – தீர்வு
அகம் - தருமிடம் என்பதே ஆசீவகமாகும்.
ஆசீவகம் என்ற பெயர் அத்துறவிகளின் வாழிடத்திற்கான பெயரேயாம். அத்தீர்வுகளைத் தருபவர்கள் ஆசீவக சித்தர்கள் ஆவர்.

*ஆசீவக நெறியின் வேறு பெயர்கள் யாவை?*

1.அமணம்

அம்மண்ணம்(அம்+அண்ணம்)>அம்மணம்>அமணம்>ஸமணம்(ஸ்+அமணம், சமணம்)>ஸ்ரமணம்>ஸ்ரமணா(Sramana)

அமணம்>ஸமணம்(ஸ்+அமணம், சமணம்) என்றத் திரிபுக்கு

அம்மண்ணம் = அம்+அண்ணம் = அம்+ம்+அண்ணம்(தன்னொற்று மிகல்)

அம் - ஊழ்கப் பயிற்சியில் உயிர்வளி மேலேறும் போது மேல்நோக்கி மேலண்ணத்தைக் கடக்கும் போது அம்மெனும் ஒலியை எழுப்பும் என்பது ஊழ்கக் கருத்து.

அண்ணம் - ஊழ்கியின் மேலண்ணம்

அம்மெனும் ஒலியைக் கொண்ட ஊழ்கப் பயிற்சி.

ஆசீவக நெறி – பின்னாளில் வடஇந்தியாவில் ஆஜீவிகா என்று மருவியது.

ஆசீவகம்>ஆஜீவகம்>ஆஜீவகா>ஆஜீவிகா(Ajivika)

தமிழ் ஆய்வுலகில் அமணர் ஜைனர் பற்றிய பொருள் குழப்பம் நெடுங்காலமாகத் தொடர்ந்து வருகிறது. சமணர் என்ற சொல் அமணர் என்ற தமிழ் வடிவத்தின் திரிபாகும். இச்சொல் வைதீக எதிர்ப்பாளர் என்ற பொருளில் ஆளப்பட்டாலும் தமிழ் இலக்கியங்களில் இச்சொல் ஆசீவகர்களை மட்டுமே குறித்துள்ளது. ஆசீவகர்களை அமணர்கள் என்றும் சைனர்களை அருகர்கள் என்றும் பெரிய புராணம்(பன்னிரெண்டாம் நூற்றாண்டு) இவ்விருவரையும் வேறுபடுத்திக் காட்டுகின்றது. அத்துடன் ஆசீவகர்களை அமணர்கள் என்றும் சைனர்களைச் சாதி அமணர் என்றும் பிரித்து அடையாளப் படுத்தும். இப்படிப் பெரிய புராணம் ஆசீவகர்களையும் சைனர்களையும் வேறுபடுத்திக் காட்டுவதை முதன்முதலாக ஆராய்ந்து உரைத்தவர் பேரா.முனைவர் டி.வி.மகாலிங்கம் ஆவார். தமிழ்நாட்டிலுள்ள சங்க காலக் கற்படுக்கைகள் யாவும் ஆசீவகர்களுக்கு உரியன என்பதைச் சான்றுகளோடு நிறுவியவர் அவரே ஆவார். ஏறத்தாழ 60ஆண்டுகளுக்கு முன்பே இவ்வுண்மையை அவர் வெளிப்படுத்தியிருந்த போதிலும் தமிழ் ஆய்வுலகம் அவரை இருட்டடிப்புச் செய்து வந்துள்ளது.

இதன்மூலம்,

அமணம் – ஆசீவக நெறியைக் குறித்தது
அருகம் – ஜைன நெறியைக் குறித்தது

என்பது நமக்குப் புலப்படும்.

பிற்கால சொல்லான சமணம் எனும் கொடுந்தமிழ்ச் சொல் தமிழகத்தின் வடக்கில் ஸ்ரமணா(Sramana) எனத் திரிந்தது(கோட்பாடுகளும் சேர்த்துதான் திரிந்தன). இந்த ஸ்ரமணத்திலிருந்து தான் பின்னாளில், ஜைனம் மற்றும் புத்தம் பிரிந்தன. ஜைனமும் புத்தமும் பிரிந்த பிறகு, ஒரு காலக்கட்டத்தில் சமணம் என்ற சொல் ஆசீவகம், ஜைனம், புத்தம் ஆகிய மூன்றையும் சேர்த்துக் குறிக்கப் பயன்பட்டது. தற்காலத்தில் தான் ஆய்வாளர்கள் ஆசீவகம் ஜைனத்தின் ஒரு பிரிவாகவும், ஜைனம் என்பதற்கு சமணம் என்றும் தவறாக மொழிபெயர்ப்பு செய்கிறார்கள்.

*ஆசீவகச் சித்தர்களின் வேறு பெயர்கள்*

ஆசீவகத் துறவிகள் வழிவழியாக (தலைமுறைகளாக) மக்களுக்கு நன்னெறிகளைப் போதித்து அவர்களை வழி நடத்தினர். போதனைகள் எனும் நன்னெறிகளை யீந்த இடமாகையால் பிற்காலத்தில் இக் கற்படுக்கைகளை அபகரித்தவர்களும் ‘போதி சத்துவர்’ முதலிய பெயர் பெற்றனர்.போதித்தலில் சத்துவ குணமுடையவர்; அதாவது கற்பித்தலில் சிறந்தவர் அறிவு மென்மை கொண்டவர் எனும் பொருளிலேயே திசைச் சொற்களால் வழங்கப் பெற்றனர். ஆசீவகத்தினரின் கற்படுக்கைகளை அணி செய்த ஒரு பிரிவினர் மாதங்கர் என்பவராவார்.

மாதங்கர் எனும் பெயர் மாதங்கி எனும் ஆசீவகப் பெண்பாலுக்கு இணையாக
ஆண்பாற் பெயராகும்.

கச்சியப்ப மாதங்கர் (காச்யப மதங்கர்) என்பாரும் இவ்வழி வந்தோரே. தீர்வுகளும் தொல்லை தீர்த்தலும் செய்த காரணம் பற்றித் தீர்த்தவிடங்கர் எனும் பெயராலும் அதைச் சார்ந்த திரிபுச் சொற்களாலும் (தீர்த்தங்கரர்) வழங்கப் பெற்றனர்.

1.அமணர்

2.ஆசீவகர் (அ) ஆசீவகச் சித்தர் (அ) சித்தர்

3.ஐயன், ஐயனார், நல்வெள்ளையார் - கழிவெண் பிறப்பு அல்லது நல்வெள்ளை நிறத்தை அடைந்தவர்கள்

4.அண்ணர் (அ) அண்ணல்
3

References:
1.    History and Doctrines of the Ajivikas:3 A Vanished Indian Religion,1951
by A.L. Basham

2.    தமிழகத்தில் ஆசிவகர்கள்
by முனைவர் ர. விஜயலக்ஷ்மி

<<<<<<>>>>>>>>>>><<

ஆதிக்கம்

ஒரு பெரிய நாடு இன்னொரு சிறிய நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்தினால் நான் சிறிய நாட்டின் பக்கம் நிற்பேன்.

அந்த சிறிய நாட்டில் ஒரு பெரிய மதம் இருந்து மற்ற சிறுபாண்மை மதத்தை ஒடுக்கினால் நான் சிறுபாண்மை மதத்தின் பக்கமே நிற்பேன்.

அந்த சிறுபான்மை மதத்தில் சாதி இருந்து,இன்னொரு சாதியின் மீது தாக்குதல் நடத்தினால் நான்  தாக்குதலுக்குள்ளான அந்த சாதியின் பக்கமே நிற்பேன்.

அந்த தாக்கப்பட்ட சாதியிலிருக்கும் ஒரு முதலாளி இன்னொரு தொழிலாளியை வஞ்சிப்பானேயானால் நான் தொழிலாளியின் பக்கமே நிற்பேன்.

அந்த  தொழிலாளி வீட்டிற்கு போய் அவன் மனைவியிடம் ஆதிக்கம் செலுத்தினால் அந்த பெண்ணிற்க்காக நான் நிற்பேன்.மொத்தத்தில் ஆதிக்கம்தான் என் எதிரி.

-அறிவுலக ஆசான் தந்தைபெரியார்
- கட் செவியில் வந்தது