ஜாதி உணர்ச்சி பற்றி குற்றம் சாட்டும் பெரும்பாலோர் ஜாதிகளின் பிரதிநிதிகளாகவே இருந்தவர்கள்!
ஒரு காலத்தில் அவர்கள் தங்கள் பகுதிகளில் அரசியல் ஆதிக்கத்தை ஏக போகமாக அனுபவித்து வந்தவர்கள்.
இன்று வயது வந்தோர்க்கு வாக்குரிமை என்பதன் அடிப்படையில் உள்ள மக்கள் ஆட்சியில் இதுவரை சமுதாயத்தில் செல்வாக்கும் அரசியல் ஆதிக்கமும் இழந்திருந்த மக்கள் தங்களுக்குச் சவால் விடும் அளவுக்கு உயர்ந்து விட்டனரே என்பதால்தான் ஜாதி உணர்ச்சி ஓங்கி விட்டது என்று குற்றஞ்சாட்டுகின்றனர்.
ஜனநாயக வழிமுறைகளினால் கீழ் ஜாதிக்காரர்கள் அரசியல் ஆதிக்கம் வகிக்கும் அளவுக்கு முன்னேறி வருவது இந்திய ஜனநாயகத்தில் மிகவும் வரவேற்கத்தக்கதொரு அம்சமாகும்.
- ஜம்மு - காஷ்மீர் பல்கலைக்கழக துணைவேந்தர் கே.எம்.பணிக்கர், கருநாடகப் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் 1962ஆம் ஆண்டு உரையாற்றியது.
சிந்தனைத் துளிகள்!
- ‘மனத்திருப்தி என்பது இயற்கை யாகவே நம்மிடம் உள்ள் செல்வம்; ஆடம்பரம் நாமே தேடிக் கொள்ளும் வறுமை.’
- ‘மனிதன் - ஆம்; அவனால் ஒரு புழு, பூச்சியைக் கூட படைக்க முடியாது. ஆனால், எண்ணற்ற கடவுள்களை அவன் இன்னும் படைத்துக் கொண்டே இருக்கிறான்’
- மண்டெய்ன் - ‘எதிர்ப்பின் மூலமே உண்மையான மனிதன் உருவாகிறான். காற்றை எதிர்த்து மேலே செல்லும் காற்றாடி போல அவன் எதிர்ப்பைத் தாக்கித் தாக்கி முன் னேறுகிறான்.’
- ஹென்றிஜேம்ஸ்
-விடுதலை,27.11.15
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக