நூல்: கொஞ்சம் டார்வின் கொஞ்சம் டாக்கின்ஸ்!
ஆசிரியர்: மனநல மருத்துவர் ஷாலினி
வெளியீடு: கருஞ்சட்டைப் பதிப்பகம், சென்னை - 87.
கிடைக்குமிடம்: 122/130 என்.டி.ஆர் தெரு,
ரங்கராஜபுரம், கோடம்பாக்கம்,
சென்னை - 24.
தொலைபேசி: 044 - 42047162
விலை: 80. பக்கங்கள்: 132
திருமணம்:
மனிதர்கள் காட்டுவாசிகளாய் இருந்த காலம் தொட்டே, இவர்கள் வாழ்நாள் முழுக்க ஒரே இணை எனும் மோனோகேமி முறையைத்தான் பின்பற்றி வந்திருக்கிறார்கள்.
இந்த மோனோகேமி என்பது மிகவும் அரிதான ஒரு மீம். காட்டில் வாழும் ஓநாய், மிகக் கடினமான பிரதேசத்தில் வாழும் கழுகு, பென்குவின் மாதிரியான வெகு சில உயிரினங்களே இப்படி ஒருவனுக்கு ஒருத்தி என்கிற மீமை கடைப்பிடிக்கின்றன.
காரணம் இந்த விலங்குகளுக்குத்தான் பிள்ளை வளர்ப்பு மிகவும் சிரமமான காரியம். ஒற்றைப் பெற்றோர் முறை இவற்றுக்கு அனுகூலமாய் இருக்காது என்பதால், இரு பெற்றோரும் சேர்ந்தே பணி புரியும் அவசியம் இருப்பதால், ஒருவனுக்க ஒருத்தி எனும் யுத்தி இந்த வகை விலங்குகளுக்குப் பொருத்தமான மீமாகிறது.
இந்தத் திருமணம் என்கிற மீமில் பல வகைகள் நடைமுறையில் இருக்கின்றன.
* பருவம் அடைவதற்கு முன்பே நிகழும் திருமணம், பருவம் அடைந்த பிறகு நிகழும் திருமணம்.
* இருவரும் விரும்பிச் செய்துகொள்வது _ விரும்பாமல் செய்து கொள்வது.
* சொந்த உறவிற்குள் செய்து கொள்வது _ வேற்று ஆட்களோடு செய்துகொள்வது.
* ஒரே ஜாதிக்குள் செய்வது _ வேற்று ஜாதிக்குள் செய்வது.
* பெண்ணைவிட ஆணுக்கு அதிக வயது இருக்கும்படியாகச் செய்வது _ குறைவாக இருக்கும்படியாகச் செய்வது.
* ஊரைக் கூட்டிச் செய்வது, ரகசியமாய்ச் செய்வது.
* சுயமரியாதையோடு செய்வது, அது இல்லாமல் செய்வது.
* வரதட்சணை வாங்கிச் செய்வது _ வாங்காமல் செய்வது.
* எதிர்பாலினர்கள் செய்துகொள்வது, ஒரே பாலினக்காரர்கள் செய்துகொள்வது.
என்று எத்தனையோ விதங்கள் இதில் இருக்கின்றன.
காலம், சூழல், தேவையைப் பொறுத்துத்தான் மனிதர்கள் இதில் எந்த வகை பொருந்தும் என்று தீர்மானிக்கிறார்கள்.
புகழுக்குரிய நூலகங்கள்
ஆசிரியாவிலேயெ மிகப் பழமையான நூலகம், தஞ்சை சரசுவதி மகால் நூலகம். இந்திய மொழிகள் அனைத்திலும் உள்ள ஓலைச்சுவடிகள் இங்குள்ளன.
உலக அளவில் தமிழ் நூல்கள் அதிகம் உள்ள நூலகம், கன்னிமரா நூலகம். சென்னை, எழும்பூரில் அமைந்துள்ளது.
இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொது நூலகம், திருவனந்தபுரம் நடுவண் நூலகம்.
கொல்கத்தாவில் 1836ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு, 1953ஆம் ஆண்டில் பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட தேசிய நூலகமே, இந்தியாவின் மிகப்பெரிய நூலகம். இது, ஆவணக் காப்பகமாகவும் நிகழ்கிறது.
இதில் இந்தியர்களுக்கு மட்டுமே தனித்துவமானது என்பதால் வரதட்சணை முறை எனும் மீமை எடுத்துக் கொள்வோம்.
இந்த மீம் எப்போது தோன்றியது? அப்போது அதன் பயன்பாடு என்ன?
பெரும்பாலான கலாச்சாரங்களில் மணமகன்தான் மணப் பெண்ணுக்குப் பரிசம் போட்டு, தான் திருமண வாழ்விற்குத் தேவையான பொருளை ஈட்டத் தெரிந்த சாமர்த்தியசாலி என்பதை நிரூபிப்பான். இப்படிப் பெண்ணுக்கு வெகுமதி கொடுக்கத் திராணி இருக்கும் வரனுக்கு மகளை மணம் முடித்துத் தருவது ஒரு வகை துணைத் தேர்வு மீம். பரிசம் போட வசதி இல்லாதவன், எப்படிப் பெண்ணையும் அவளுக்குப் பிறக்கவிருக்கும் குழந்தைகளையும் கட்டிக் காப்பாற்றுவான்? அதனால் பரிசத் தொகையை வைத்து ஆணின் வீரியத்தைக் கண்டறிவது ஒரு வகைத் தேர்வு முறை.
இந்த பரிசம் போடுதல் மீமைத்தான் ஆஃப்ரிகா, ஆசியா, அமெரிக்கா மாதிரியான நாடுகளில் பெரும்பாலானோர் கடைப்பிடிக்கிறார்கள். இஸ்லாமியர் இதனை மஹர் என்கிறார்கள். இதற்கு நேர் எதிராக, பெண் வீட்டார் ஆணுக்கு வரதட்சணை கொடுத்து, பெண்ணையும் கன்னிகாதானம் செய்து தரும் முறையும் உண்டு. குறிப்பாக ஆணுக்கு என்று வருமானம் இல்லாத வாழ்க்கை முறையைச் சேர்ந்தவர்கள் இந்த மீமைப் பின்பற்றுவர்.
உதாரணத்திற்குப் பிராமணர்கள், பண்டைய பிராமண சம்பிரதாயத்தின்படி, பிரமச்சரியம் கடைப்பிடிக்கும் ஆண், தனக்கென்று எந்தச் சொத்தையும் வைத்திருக்கக் கூடாது. அன்றாடம் பிச்சை எடுத்துத்தான் உண்ண வேண்டும். பிரம்மச்சரியத்தின்போது இப்படி, பவதி பிக்ஷாந்தேஹீ என்று பிக்குவாக பற்றில்லாமல் இருந்து எல்லாப் பாடங்களையும் கற்றுணர்ந்த பிறகு, இந்தப் பையன் திருமணம் செய்துகொண்டு சம்சாரி ஆகலாம்.
மற்ற இன ஆண்கள் எல்லாம் தத்தம் குலத் தொழிலைப் பயின்று வருமானம் ஈட்டுவர். அதனால் திருமண வயதை அடையும்போது தன் மனைவிக்குத் தானே பரிசம் போடுமளவு சம்பாத்தியம் அவனிடம் இருக்கும். ஆனால், பிராமண ஆண் தன் இளமையை எல்லாம் பிக்குவாகவே செலவிட்டதினால் அவனிடம் பொருட்செல்வம் இருக்க வாய்ப்பில்லை. ஆனால், அவனிடம் இத்தனை ஆண்டுகளாய்ப் பயின்ற கல்வி அறிவு இருக்கும் என்பதால், பெண் வீட்டார் அந்த வரனுக்குத் தட்சணை கொடுத்து, பெண்ணையும் கொடுத்து வாழ்வை ஏற்படுத்தித் தருவதாய் அமைந்த இந்த வரதட்சணை அந்தக் காலத்தில் பயனளித்த ஒரு மீம்.
இப்படித் திருமணமாகும் வயதில் பரிசம் போடப் பணமில்லாத ஆணை மற்ற இனத்துப் பெண்கள் பெரிதாய்ப் பொருட்படுத்தவோ, துணையாய் ஏற்கவோ மாட்டார்கள். பிராமணச் சமூகப் பெண்களுக்கு வாய்ப்புக் கிடைத்தால், விவசாயம் அல்லது கைத் தொழில் செய்து, தன் சொந்தச் சம்பாத்தியத்தில் மனைவிக்குப் பரிசம் போட்டு அழைத்துச் செல்லும் வருமானம் இருக்கும் ஆணைத்தான் அவர்களும் விரும்புவார்கள்.
இப்படி எல்லா பிராமணப் பெண்டிரும் பிற இன ஆணையே தேர்வு செய்துகொண்டே போனால், கடைசியில் பிராமண ஆண்களின் கதி? பிராமணப் பெண்களும் தேர்வு செய்யாமல், மற்ற இனப் பெண்களும் கண்டுகொள்ளாமலேயே இருந்துவிட்டால், பிராமண ஆண்களின் மரபணுக்கள் எப்படிப் பரவும்? அவர்கள் இனம் எப்படித் தழைக்கும்?
விழிப்புணர்வு
தமிழ்நாட்டில் உறவினர்களுக்குள் திருமணம் முடிப்பது சற்று சகஜமாகவே உள்ளது. முறைப்பெண் அல்லது பையன், மாமா, மருமகள் என்று பல திருமணங்கள் இப்படி நடக்கின்றன.
இம்மாதிரியான திருமணங்கள் வாயிலாக பிறக்கும் குழந்தைகள் குறைபாடுள்ளவையாக பிறக்கும் சாத்தியக் கூறுகள் அதிகம் என்று பல ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன.
உறவுகள் நெருங்க நெருங்க ஒரே மாதிரியான மரபணுக்கள் சேரும் வாய்ப்பு அதிகரிக்கிறது. இதனால் ஒரு குடும்பத்தில் மரபணுக்களில் பிரச்சினை இருந்தாலோ, குறைபாடுள்ள உறவினர்கள் இருந்தாலோ, அந்தக் குடும்பங்களில் இம்மாதிரியான திருமணங்களால், ஒரே மாதிரியான மரபணுக்களின் சேர்க்கையால், மீண்டும் குறைபாடுள்ள குழந்தை பிறக்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது.
குடும்பங்களில் உறவினர்கள் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது மேல் என்ற நிபுணர்கள் கூறுகிறார்கள்.
இதனைத் தடுக்கும் யுக்தியாகத்தான் பிராமணர்களுக்கு நிலபுலமோ, வசதி வாய்ப்போ, தொழில் கல்வியோ இல்லையென்றாலும், பிக்ஷை பெற்று வாழ்வது அவர்களது இளமையின் பிழைக்கும் விதமாக இருந்தாலும், பிராமணர்தான் உசத்தி. காரணம் அவர்கள்தான் பிரம்மாவின் தலையிலிருந்து தோன்றியவர்கள் என்று தமககென்று பெரிய முக்கியத்துவம் இருப்பது மாதிரியான ஒரு கதையைச் சொன்னார்கள்.
அத்தோடு நில்லாமல், என்னதான் பணக்காரன், தொழில் தெரிந்தவனாக இருந்தாலும், வேற்று இன ஆணோடு ஒரு பிராமணப் பெண் கூடிக் குழந்தை பெற்றால், அக்குழந்தை சமூகத்தில் மிகவும் கீழ்நிலையான சண்டாளன் என்கிற பட்டம் பெறும் என்றும் அறிவித்தார்கள்.
ஆனால், ஏழ்மையில் வாழும் பிராமணனின் மீது ஆசைப்பட்டு வேற்று இனத்துப் பெண்கள் அவனை மணந்துகொண்டு பிள்ளை பெற்றால், அப்பிள்ளைகள்தான் உலகின் தலை சிறந்தவர்கள் ஆவார்கள் என்றும் அறிவித்தார்கள்.
தம்முடைய ஏழ்மை நிலையைக் கருதி, மனைவி தன்னை விட்டுப் போய்விடக் கூடாது, என்று அஞ்சியதால், பிராமணப் பெண்களுக்கு மட்டும் விவாகரத்து உரிமை தடை செய்யப்பட்டிருந்தது. அதே காலத்தில் வாழ்ந்த மற்ற இனத்துப் பெண்களுக்கு மறுவிவாகம் சாத்தியமாகவே இருந்தது.
அதுபோலவே, பிராமண விதவைகளுக்கு மறுமண உரிமை மறுக்கப்பட்டது. ஆனல், சமகாலத்தில் வாழ்ந்த மற்ற குடிப் பெண்களுக்கு விதவைத் திருமணம் செய்துகொள்ளும் உரிமை இருந்தது. இப்படி விதவைகளை மணக்கும் சமூகத்தைச் சேர்ந்தவன், ஒரு பிராமண விதவையைப் பார்த்து ஆசைப்பட்டு வாழ்க்கை கொடுக்க முன்வந்துவிட்டால், மற்ற ஆண்களை அடக்க முடியாது என்றே பிராமணர்கள் தங்கள் வீட்டுப் பெண்டிரை மிகவும் கொடூரமான அடக்குமுறைக்கு உள்ளாக்கினார்கள்.
பிராமண விதவைகள் மட்டும்தான் கணவனை இழந்தால் மொட்டை அடித்துக் கொண்டு, காவி உடை அணிந்து, முக்காடு போட்டு, உணர்ச்சியே ஏற்படாமலிருக்க, வெறும் பத்தியச் சாப்பாட்டைச் சாப்பிட வேண்டும் என்கிற மாதிரிப் பலவிதமாய் நிர்பந்திக்கப் பட்டார்கள்.
இப்படித் தன் இளமைக்கால ஏழ்மையினால் மரபணு ஆட்டத்தில் தோற்றுப்போய் விடக்கூடாது என்று பிராமணர்கள் ஏற்படுத்தியவை இந்த அத்தனை கிளை மீம்களும்.
பூமியைச் சந்திரன் சுற்றிவந்தாலும், சந்திரனின் ஒரு பகுதியை மட்டுமே நம்மால் காணமுடியும், இதுவரை அனுப்பிய விண்கலங்கள் அனைத்தும் அந்தப் பகுதியிலேயே தரையிறங்கியுள்ளன. தற்போது, சீனா அனுப்பியுள்ள சாங்கே - 4 விண்கலம், இதுவரை காணாத நிலவின் பகுதியில் தரையிறங்கியுள்ளது. அந்தப் பகுதிக்கு ஸ்டாடியோ டியான்கோ எனப் பெயரிட்டுள்ளாது சீனா.
அவர்களது இயலாமையிலிருந்து மீள ஏற்படுத்திய இத்தனை மீம்களையும் உள்ளது உள்ளபடி புரிநதுகொண்டிருந்தால், மற்றவர்கள் இதைப் பெரிதுபடுத்தி இருந்திருக்க மாட்டார்கள்.
ஆனால், ஆண்களுக்குள் எப்போதுமே தான்தான் எல்லோரையும்விட உயர்ந்தவன் என்று காட்டிக்கொள்ளும் போட்டி, ஆதிக்க மனப்பான்மை இருந்தே வருகிறது. பிராமணர்கள் தம் பிழைப்பு விகிதத்தை அதிகரிக்கச் சொன்ன இந்த பிரம்மனின் தலையிலிருந்து நாங்கள் வந்தோம், என்ன சம்பாதித்தாலும், கைத்தொழில் தெரிந்திருந்தாலும், நிலங்கள் பல உடைய டிவை வரைந்து பூஜை செய்தல், பாதத்தின் அச்சை எடுத்து வைத்து பத்ம பாத பூஜை செய்து வழிபடுவது என்று பாதங்களுக்கு மிகப் பெரிய மகிமை இருந்தது.
தலையைவிட, கால் அதிக மரியாதை பெற்றிருந்த காலம் அது.
ஆனால், காலப் போக்கில் இந்த ஸ்ரமண மதங்கள் மருவி, வைணவம், சைவம், சாக்தம் என்ற மாறிவிட, பாதங்களின் பண்டையச் சிறப்பை எல்லோரும் மறந்து போயிருந்தார்கள். ஆனால், ஆசியாவின் பல கோடிகளில் மலைக்கு மேலே, பாறைகளின் மீதென்று ஆங்காங்கே ஒரு ஜோடி பாதங்களின் சிற்பங்கள் இருக்கின்றன. இவற்றை இராமர் பாதம் என்றே பலரும் நம்புகிறார்கள். ஆனால், இவை உண்மையில், புத்தரின் நினைவாய்ச் செதுக்கப்பட்ட பாதங்கள். புத்தபிரான் நடைப்பயணமாகவே பல தேசங்களுக்குச் சென்று பிரச்சாரம் செய்ததன் எச்சங்கள்.
கூர்ந்து கவனித்தால், இப்போதும்கூட, தலை என்பது பலியின் குறியீடுதான். அம்மனின் காலடியில் இருக்கும் மஹிஷனின் எருமைத் தலை என்பது பலி, அல்லது வதத்தின் குறியீடு.
ஆனால் இன்றும், சரவண பெலஹோலாவானாலும் சரி, திருப்பதி ஆனாலும் சரி, பார்த்தசாரதி ஆனாலும் சரி, பாத பூஜையும், பாத காணிக்கையும் அதே விமரிசையுடன்தான் நடக்கின்றன. இன்றும், எல்லோரும் பெரியவரின் காலில் விழுந்துதான் ஆசிர்வாதம் வாங்குவார்களே தவிர, தலையில் விழுந்து யாரும் ஆசி வாங்குவதில்லை.
ஆக பாதம் என்பது குறைந்த சமூக அந்தஸ்தின் குறியீடு அல்ல. அது உச்சகட்ட மரியாதை, அர்ப்பணிப்பின் குறியீடு. இப்போது யாராவது பக்தர் இறந்துவிட்டால், இறைவனின் திருவடியில் போய்ச் சேர்ந்துவிட்டார் என்றுதான் சொல்கிறார், இறைவனின் தலைக்குப் போய்ச் சேர்ந்துவிட்டார் என்ற சொல்வதில்லை.
ஆனால், ஆணவம் தலைக்கேறிவிட்டது, போதை தலைக்கேறிவிட்டது என்று அவதூறாகச் சொல்லும்போது தலையைப் பற்றிப் பேசுகிறோம்.
இப்படியாகத் திருவடி, என்பது அடிகளாகி, பின்பு அடிகளார் என்றாகி, நாம் சர்வ சாதரணமாகச் சொல்லும் காந்தி அடிகள், ராமலிங்க அடிகள், குன்றக்குடி அடிகள் என்று பலரையும் நாம் மரியாதை நிமித்தமாய் அழைப்பது, அவர்களது காலடியை வைத்துத்தானே.
இப்படியான நுண்ணோக்கிய அறிவோடு ஊடுருவிப் பார்க்காமல், மேலோட்டமாய்ப் பார்த்தால்: தலை சிறப்பு, கால் குறைவு என்று பெருவாரியான ஆண்கள் நினைத்ததால், அவன் என்ன பெரிய தலையா, அவனைவிட நான்தான் உயர்ந்தவன் என்று நிறுவுகிறேன் பார் என்று பிராமணர்களோடு பரிச்சயமிருந்த மற்ற இன ஆண்கள் எல்லோரும் உயர்ந்த சமூக அந்தஸ்திற்கான போட்டியாய் அதைப் பாவித்து, கொஞ்சமும் பொருந்தாத பிராமண மீம்களோடு தாமும் கடைப்பிடிக்க ஆரம்பித்தார்கள். அதனால் இவர்களும் தம்மினப் பெண்களைப் பிராமணர்களைப் போலவே கட்டுப்படுத்தினார்கள். விவாகரத்து, மறுமணம், விதவை மறுமணம், மாதிரியான உரிமைகளைத் தடுத்தார்கள். சொத்துரிமை, கல்வி கற்கும் உரிமை, வருமான உரிமை என்பன எல்லாம் தடைக்க உள்ளாயின.
இப்படிப் பெண்களை அடக்கி வைப்பதுதான் உயர் ஜாதித்தனம் என்றே இவர்கள் எண்ணிக் கொண்டார்கள். மேட்டுக்குடி இந்தியர்கள் இப்படிப் பெண்களை அடக்கி வைத்திருந்த அதே காலத்தில்தான், இங்கிலாந்து, ஸ்பெயின் மாதிரியான நாடுகள் முழுக்க முழுக்கப் பெண் ராணிகளால் ஆளப்பட்டு வந்தன.
ராணி விக்டோரியாவும், ராணி இசபெல்லாவும் அவர்களுடைய கப்பல் படைகளை ஏவி, ஆண்கள் மட்டுமே ஆட்சி செய்த இந்தியா மாதிரியான நாடுகளை எல்லாம் அபகரித்தார்கள்!
இதில் வேடிக்கை என்னவென்றால், இண்டிகா என்கிற நாட்டைக் கைப்பற்ற வேண்டும் என்று அலெக்சாண்டர் ஆவலாய்ப் பயணித்து வந்தபோது, தமிழ்நாட்டில் பெண் ராணிகள்தான் ஆட்சி புரிந்தார்கள். கிரேக்கத் தூதுவர் மெகஸ்தனிஸின் இண்டிகா எனும் பயணக் கட்டுரை நூலில் இது பதிவு செய்யப்பட்ட தகவல். டச்சு, போர்ச்சுகீசியர் வந்து கைப்பற்றப் போராடிய போது, மேற்குக் கரை முழுக்கப் பெண்கள் ஆண்ட சாம்ராஜ்ஜியங்களே ஆட்சியில் இருந்தன.
ஆக, பெண்டிரை அடக்கி ஆளும் பிராமண மீம், மற்றது பெண் அரசிகள் ஆட்சி செய்யும் பண்டையத் தமிழர், அல்லது அய்ரோப்பிய மீம். இந்த இரண்டில் எது வென்றது என்று பார்த்தால், பெண்கள் சுதந்திரமாய் ஆட்சி செய்யும், தமிழர், அய்ரோப்பியரின் மீமே வென்றது.
இந்தியா பிரிட்டனின் விக்டோரியா மகாராணியின் ஆட்சிக்கு உட்பட்டது. அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் மருத்துவம், அனைவருக்கும் வேலைவாய்ப்பு என்று புதிய சமூக மாற்றங்கள் உருவாயின. இந்த மய்ய நீரோட்டத்தில் பிராமண ஆண்களும் அய்க்கியமானார்கள்.
அதனால் வேத பாடசாலைக்குப் போய், பிரம்மச்சர்யம் கடைப்பிடித்து, பிக்ஷை வாங்கி வாழும் வாழ்க்கை முறையைக் கைவிட்டு, ஆங்கிலேயர் நடத்திய பள்ளிக்கூடங்களில் பட்டம் படித்து, வேலைக்குச் போய்த் தாமே சம்பாதிக்க ஆரம்பித்தார்கள்.
இப்படி, தானே சம்பாதிக்கும் வரன், பெண்ணுக்குப் பரிசம் போட்டுத்தானே திருமணம் செய்து மனைவியாக்கி அழைத்துச் செல்ல வேண்டும்? அதுதான் இல்லை. பழைய மீமான, வரதட்சணை எனும் முறையையே அவர்கள் இன்னமும் கடைப்பிடிக்க, அவர்களைப் பார்த்த மற்ற நானும் மேட்டுக்குடிதான் என்று காட்டிக்கொள்ள நினைக்கும் மற்ற ஆண்களும் வரதட்சணை கேட்பதைத் தொடர்ந்தார்கள்.
இப்படியாக வரதட்சனைக் கொடுமை என்பது சகல இந்தியப் பெண்களுக்கும் எதிரான ஒரு பேரவலமாக மாறியது. பல பெண்கள் அவமதிக்கப் பட்டார்கள். சில வீடுகளில் கொல்லப்பட்டார்கள். பெண்ணைப் பெற்ற தந்தையர் மகளின் திருமணச் செலவை எண்ணி அஞ்ச ஆரம்பித்தார்கள். பெண் பிள்ளையைப் பெற்ற தாய் அவமானத்திற்கு உள்ளானாள். பெண் குழந்தை என்றால், கருவிலேயே கொன்றுவிட்டால்தான் நல்லது, செலவும் மிச்சம் என்கிற கொடூரமான மீமுக்கு இந்தியர்கள் மாறினார்கள்.
ஆனால், பெண்கள் எண்ணிக்கையில் குறைந்து போனால், அடுத்த தலைமுறையில் எப்படி இனப்பெருக்கம் நிகழும்? துணை சேரப் பெண்களே இல்லை என்றால், ஆண்கள் கலவியல் விரக்தியில், மதம் கொண்ட மிருகம் போல ஆக்ரோசமாகி, சமூகத் தீங்கு ஏற்படுத்திவிட்டால், ஒட்டுமொத்தச் சமூகமே ஆபத்திற்கு உள்ளாகும்!
அதனால்தான் வரதட்சணையை சமூக அநீதியாகக் கருதி, அதனைச் சட்ட விரோதம் என்று அறிவிக்கும் புதிய மீமுக்கு இந்தியர்கள் மாறினார்கள். வரதட்சணை கேட்பவன் வக்கற்றவன், மாமனாரின் காசில் வாழ விரும்பும், கையாலாகதவன் என்றும் புதிய மீம்கள் பரவ ஆரம்பித்தன.
அத்தோடு சிசுவின் பாலினத்தை முன்கூட்டியே கண்டுபிடிப்பது சட்டப்படி குற்றம் என்று அறிவிக்கப்பட்டதால், பெண் குழந்தைகளுக்கு குறைந்தபட்சப் பாதுகாப்புக் கிடைத்தது. அதனால் ஆண், பெண் விகிதம் காப்பாற்றப்பட்டு எதிர்கால இந்திய ஜனத்தொகையும் பாதுகாக்கப்பட்டது.
இப்படியாக, சமூகத் தேவையைப் பொறுத்து, மீம்கள் மாறிக்கொண்டே போகின்றன.
- உண்மை இதழ், 1- 15.7.19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக