திருவாரூர்: தேரில் இருந்து தவறி விழுந்து தலைமை குருக்கள் பலி
மனிதநேய கண்ணோட்டத்தில் இரங்கல்
திருவாரூர், ஆக.5 ஆடிப்பூர விழாவை யொட்டி திருவாரூர் தியாகராஜர் கோவிலில் கமலாம்பாள் தேரோட் டம் நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
பெரிய சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், ஆசியாவிலேயே மிகப் பெரிய தேரினை கொண்ட கோவி லாகவும் விளங்கும் திருவாரூர் தியாகராஜர் கோவிலில் வருடாந்திர ஆடிப்பூர விழா கடந்த 25ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
மாலை 6 மணி அளவில் தேர் வடம் பிடிக்கப்பட்டது. இதில் பக் தர்கள் பங்கேற்று தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.
ஆரூரா தியாகேசா'' என்ற பக்தி முழக்கத்துடன் பக்தர்கள் தேரினை வடம்பிடித்தனர்.
தேர் நிலைக்கு வந்தவுடன் தீபா ராதனை செய்வதற்காக கோவில் தலைமைக் குருக்கள் முரளி (வயது56) தேர் மீது ஏறினார். அப்போது நிலை தடுமாறி தலைக்குப்புற கிழே விழுந் தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடன டியாக அருகில் இருந்தவர்கள் குருக் கள் முரளியை மீட்டு திருவாரூரில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத் தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சைக்கு முரளி கொண்டு செல் லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இது தொடர்பாக கோவில் கண் காணிப்பாளர் நந்தகுமார், திருவாரூர் நகர காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். காவல்துறையினர் வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பலியான குருக்கள் பரம்பரை பரம்பரையாக குருக்கள் குடும்பத்தின் அடிப்படையில் இக்கோவிலில் தலைமை குருக்களாக இளம் வயதிலிருந்து பணி புரிந்துவந்தார். இவரது தந்தை சீதாராம குருக்கள் மறைவுக்குப் பிறகு கோவில் தலைமை குருக்களாக இருந்து வந்தார். இவரது மகன் அரவிந்த், இவரது சகோதரர்கள் ரவி மற்றும் கணேஷ் ஆகியோரும் குருக்களாக உள்ளனர்.
சில மாதங்களுக்கு முன்பு நடை பெற்ற தெப்பத் திருவிழாவின் போது தலைமைக் குருக்கள் முரளியின் மகன் அரவிந்த் தெப்பத்தில் இருந்து நிலை தடுமாறி கமலாலய குளத்தில் விழுந் தார். உடனடியாக தீயணைப்பு மீட்பு படையினர் அரவிந்தனை காப் பாற்றினர்.
கோயில் குருக்களையே காப்பாற்ற முடியாத திருவாரூர் தியாகராசன் வேறு யாரைக் காப்பாற்றப் போகிறானோ?
பக்தர்களே, சிந்திப்பீர்!
- விடுதலை நாளேடு, 5.8.19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக