பக்கங்கள்

புதன், 1 மே, 2019

திருச்சியருகே துறையூரில் மூடத்தனத்திற்கு 7 உயிர்கள் பலியான கொடுமை!

திருச்சி துறையூர் அருகில் உள்ள ஒரு கோவில் திருவிழாவில் 'சாமி' சிலையிடம் வைக்கப்பட்ட காசுகளை வாங்கினால், ஏராளம் பணம் சேரும் என்ற பக்தி மூடநம்பிக்கை காரணமாகத் திரண்ட பக்தர்களில் - இடிபாடுகள் காரணமாக ஏழு பேர் மூச்சுத் திணறி உயிரிழந்த கொடுமை எப்படிப்பட்ட மூடநம்பிக்கை வாங்கிய உயிர்ப் பலி என்பது புரியவில்லையா?
திராவிடர் கழகத்தின் பகுத்தறிவுப் பிரச்சாரம்
இறந்தவர்களுக்கு அனுதாபம் தெரிவிக்கும் அதே நேரத்தில், திராவிடர் கழகத்தின் பகுத்தறிவுப் பிரச்சாரத்தின் அருமையை - தேவையை மக்கள் உணரவேண்டும். கழகத்தின் பிரச்சாரத்துக்குத் தடை யாக காவல்துறையும், காவிகளும் கைகோர்த்து நிற்பது இதுபோன்ற நிகழ்வுகளுக்குத் துணை போவதாகும் என்பதை இப்பொழுதாவது உணரவேண்டும். இம்மக்கள் திருந்தியிருந்தால், வாழவேண்டிய மனிதர்கள் இப்படிப்பட்ட மரணத்தைச் சந்திக்கும் அவலம் நிகழ்ந்திருக்குமா?
பக்தி வந்தால் புத்தி போகும்'' என்று தந்தை பெரியார் கூறியது - எவ்வளவுப் பெரிய நூற்றுக்கு நூறு உண்மை பார்த்தீர்களா?
பகுத்தறிவுப் பிரச்சாரத்திற்குத் தாராள அனுமதி வழங்கி...
அரசு  அரசியல் சட்டமாகவே செய்துள்ள - அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் எங்கள் பணியை காவல்துறைமூலம் தடுப்பதால், இத்தகைய விபத்தும், வேதனையும் ஏற்படும் நிலை. இனியாவது அரசும், காவல்துறையும் பகுத்தறிவுப் பிரச்சாரத்திற்குத் தாராள அனுமதி வழங்கி, அவர்கள் பணியை இலகுவாக்கிக் கொள்ள முன்வரவேண்டும்.

கி.வீரமணி,
தலைவர் திராவிடர் கழகம்
சென்னை
22.4.2019

இலங்கையில் குண்டுவெடிப்பு - 290 பேர் உயிரிழப்பு; 500 பேர் காயம்!

காரணம் எதுவாயினும் கண்டனத்திற்குரியதே!
இலங்கையில் குண்டுவெடிப்பில் பரிதாபகர மான முறையில் மனித உயிர்கள் பலியானது கண்டனத்திற்குரியதே. காரணம் எதுவாயினும் இது ஏற்கத்தக்கதல்ல என்று திராவிடர்  கழகத் தலைவர்  தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
நேற்று (21.4.2019 - கிறித்துவர்களது ஈஸ்டர் விழா நாளான அன்று) இலங்கையில் சர்ச்சுகளிலும், இரண்டு ஓட்டல்களிலும் குண்டுவெடித்து, 290 பேர் உயிரிழந்துள்ளனர்; 500 பேர்களுக்குமேல் காயம் என்ற உள்ளத்தை உலுக்கும் அதிர்ச்சி செய்தி மீளாத் துயரத்தை அகிலத்திற்குத் தந்துகொண்டுள்ளது.
இதற்கான குற்றப் பின்னணிகள் குறித்து மிக முக்கியமாக விசாரணை செய்யப்பட்டு, உண்மைகள் வெளியாக்கப்பட வேண்டும்.
பின்னணி என்ன? மிரட்டலா - மதவெறியா?
ஈழத் தமிழர்கள் மிகமிக மெல்ல மறுவாழ்வு நோக்கிச் செல்லும் இந்தக் காலகட்டத்தில், இப்படி ஒரு கொடூர நிகழ்வு, திட்டமிட்டு நடத்தப் பெறு வது, சிறுபான்மைச் சமுகத்தினரை மிரட்டவா? மதவெறியா? அச்சுறுத்தலா? அல்லது சிங்கள அரசியல் போட்டியின் விளைவா? என்று பல கோணங்களில் ஆய்வு செய்யப்பட வேண்டிய ஒன்று! இறந்தவர்களில் பெரும்பாலும் சிறுபான்மையினரும், தமிழர்களுமேயாவர் என்பதும் கவனத்துக்குரியதே!
எப்படியிருப்பினும், நாகரிக மனித சமுகம் இதனை ஏற்கவே ஏற்காது.
மதவாதம் அங்கே வேறு வடிவத்தில் அதன் கோரப் பற்களுக்கு இரை தேடியது உலகறிந்த உண்மை!
இதனைப்பற்றிய முழு உண்மைகளும், காரணமும் கண்டறியப்படவேண்டும்.
உயிரிழந்தோருக்கு எமது ஆழ்ந்த இரங்கல்; குடும்பத்தினருக்கு ஆறுதல்!
உயிர்கள் என்பவை பகுத்தறிவாளர்களுக்கு யாதும் உயிரே, 'யாவரும் மனிதர்களே' என்பதுதான். மிகுந்த ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கி.வீரமணி,
தலைவர் திராவிடர் கழகம்
சென்னை
22.4.2019

வெள்ளி, 12 ஏப்ரல், 2019

ஆர் எஸ் எஸ் என்றால் என்ன ?

*அவர்கள் யார்?*
*அவர்களின் பணி என்ன?*
*RSS-க்கும், BJP -க்கும் என்ன தொடர்பு?*

*முழவதும் படிக்கவும், பின்னர் Share செய்யவும்*

1.ஆர் எஸ் எஸ் என்பது –
*ராஸ்டிரிய சேவை சங்கம்* –
இது ஆரிய, பார்ப்பன இந்து மத வெறி
என்ற ஒன்றால் அமைக்கப்பட்ட, பார்ப்பனர்களால் *கோல்வால்க்கரால் 1912 ஆரம்பிக்கப்பட்ட ஸ்தாபனம்*,

2.இது உலகெங்கும் உள்ள பார்ப்பன மதவெறியர்கள் நன்கொடை அளித்து நடத்தி வரும் *ஒரு பயங்கரவாத அமைப்பு.*

3,இதுதான்
*கோட்சே மூலம் காந்தியை சுட்டுக்கொன்றது* 
இன்று இந்தியாவில்
இருக்கும் மத கலவரங்களுக்கும் , சாதி
மோதல்களுக்கும் இதுதான் காரணம் ..

4. இந்தியாவில் பயங்கரவாத செயல்கள் இன்று அரங்கேற காரணமும் இந்த அமைப்புதான் ..

5. இதன் நோக்கம் தொடர்ந்து *பார்ப்பனர்கள் அதிகாரத்தில் இருப்பதும்* மற்றவர்கள்
அடிமையாக ,
*தீண்டத் தகாதவர்களாக இருக்கவேண்டும்*இதுவே இந்த அமைப்பின் குறிக்கோள் .

6. இது உலகின் மிகப் பெரிய பாசிச
அமைப்புகளில் பயங்கரமானது.

7.இந்த அமைப்பில் ராணுவத் தளபதி முதல், நீதிபதி வரை உறுப்பினர்கள் இருப்பார்கள்.
பெரும்பாலும் “பார்ப்பனர்கள் பல
அதிகாரத்தில் இருப்பார்கள்.

8.இந்த அமைப்பில் அடியாளாக “ஆதிக்க சாதி
இளைஞர்கள் இருப்பார்கள்- ஒடுக்கப்பட்ட –
தலித் மக்களுக்கு எதிராகவும் ,
சிறுபான்மை மக்களுக்கு எதிராகவும் ,
கொலைகள் -குற்றங்கள் நடத்த
பயன்படுத்தபடுவர்.

9.இவர்கள் மக்களிடம் அதிகமான மூட
நம்பிக்கைக் கருத்துக்களை பரப்புவர் .
புராணத்தில் சொல்லப்பட்ட “கதாபாத்திரங்களை , உண்மையான
கடவுள்கள் என மக்களிடம் பிரச்சாரம்
செய்து , மக்களை மூட நம்பிக்கையில்
புதைப்பார்கள் ,-

*ராமன் என்பவன் ஒரு*
*கதையின் கதாபாத்திரம்* -அதை
உண்மைக் கடவுள் என்று மக்களிடம் பரப்பி அந்த கடவுளின் கோவில் , *பாபர் மசூதி உள்ள இடத்தில் முன்பு இருந்தது என்று பொய்ச்சொல்லி* , முட்டாள் இந்துக்களை ,
இஸ்லாமிய மக்களுக்கு எதிராக திருப்பி ,
*பாபர் மசூதியை குண்டு வைத்து இடித்து* , இந்த நாட்டில் “பயங்கரவாதத்தை
‘விதைத்தனர்.

11. விநாயகர் ஊர்வலம் என்று , முன்பு
வடநாட்டில் மட்டுமே இருந்த ஒன்றை ,
*இங்கே தமிழ் நாட்டிலும் கொண்டு*
*வந்து விநாயகர் சிலைவைத்து மத நல்லிணக்கத்தைச் சிதைத்தனர்* –
அந்நேரங்களில் சட்ட ஒழுங்கு
அழிக்கப்படுகிறது ..

12, இவர்கள் அரை டவுசர் போட்டு, கையில் தடியுடன், பொது
சாலையில் *இஸ்லாமியருக்கு எதிராக முழக்கம் போட்டு ஊர்வலம் போவார்கள்.*
இவர்களுக்கு , முழு டவுசர் போட்ட
“காவல் துறை ” முழு பாதுகாப்பு
கொடுக்கும்.

13. இவர்களது அமைப்புக்கு , ஒய்வு
பெற்ற காவல்துறை அதிகாரிகள் ,
ஒய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் ,
ஆயுதப் பயிற்சி, துப்பாக்கி சுடுதல் ,
குண்டு வைத்தல் ஆகிய பயிற்சிகளைக்
கொடுப்பார்கள்.

14. ராணுவ கிடங்கிலிருந்து மிக
எளிதாக இவர்களுக்கு ஆயுதங்கள்
கிடைக்கும்.

15. பெரும்பாலான அரசுகள் ( மத்திய –
மாநில அரசுகள் ) இவர்களின் அமைப்பு
மீது “பெரிய குற்றவியல் அல்லது
நீதிமன்ற நடவடிக்கைகளை எடுக்காது
என்பது யதார்த்தமான உண்மை.

16. இந்த அமைப்புகளின் தலைவர்கள்
மாற்று மதத்தினரை இழிவு படுத்தும்
உரைகளை பொது இடங்களில் வாசிப்பர் அரசு இதைக் கண்டு கொள்ளாது .

17. சமஸ்கிருதம் -இந்தி இவை
இரண்டையும் எல்லோரும் படிக்க
வேண்டும் என வற்புறுத்துவார்கள்.
பசு மாட்டை தெய்வம் என்று சொல்லி
“மாட்டு கறி உண்பதை தடை
செய்வார்கள்.

18. அதிகமான “அம்மண-சாமியார்கள் –
பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்
திரிவார்கள் .. அவர்களை இவர்கள் “
ரிஷிகள் அமைப்பு என ” ரவுடிகளாக
பயன்படுத்திக் கொள்வார்கள்.

19. இவர்களின் *மூடநம்பிக்கை கருத்துக்களை எதிர்க்கும்*-
*அறிவுஜீவிகள் ,* *எழுத்தாளர்கள் ,*
*கம்யூனிஸ்ட்கள் ,* *பகுத்தறிவாளர்கள் ,*
*பெரியாரிஸ்ட்கள்,*
*அம்பேத்கரிஸ்ட்கள்* *ஆகியோர்களைத் தாக்கி கலவரம் செய்வார்கள்*
பல நேரங்களில்
கொலையும் செய்வார்கள்
இப்படி பல
அறிஞர்களைக் கொலை செய்திருக்கின்றனர்.

20. இவர்கள் பல துணை அமைப்புகளை வைத்துள்ளனர் –அவை
*”விஷ்வ ஹிந்து பரிசத்,*
*பஜ்ரங் தல் ,*
*ஹிந்து முன்னணி,*
*ஹிந்துஸ்தான் விராத் ,*
*நிர்மான் சபா ,*
*ஹிந்து சபா ,*
*அகில பாரத்*
*வித்யார்த்தி*
*பவன் என்ற மாணவர் அமைப்பு,*
*சேவாதல் மாநில சுயாட்சிகொண்ட* *“சிவா சேனா,*
*ரன்பீர் சேனா* *(பிகாரில் நிலபிரபுக்கள் படை)*

தமிழகத்தில் அரசியல் கட்சியாக *இந்து மகா சபை, *இந்து மக்கள் கட்சி.*

-மத்தியில் அரசியல் கட்சியாக - *BJP*
*பாரதிய ஜனதா பார்ட்டி.*

21. பெயருக்கு தேச பற்று என்று
கூச்சலிடுவார்கள் – இந்திய தேசிய
மூவண்ணக் கொடியை இவர்களது
அமைப்பு எப்போதும் ஏற்றுக்
கொள்ளாது, மரியாதையையும் செய்யாது.

22. இவர்களின் தலைமை பீடம் “(RSS )
நாக்பூரில் உள்ளது.
சென்ற ஆண்டுவரை
தேசியக் கொடி ஏற்றப் படவே இல்லை.

23. இவர்களின் அமைப்பு ” சமூக நீதிக்கு
- இடஒதுகீட்டுக்கு எதிரானது .

24. இவர்களது அமைப்பு ” சமத்துவத்தை
“எதிர்க்கும் ஒரு பாசிச அமைப்பு

25- உரிமை — ஜனநாயகம் அதற்கான
போராட்டம் -இவற்றை அடிப்படையிலே மறுக்கும் கொள்கை கொண்டது –
அந்த தருணத்தில் -ரத்தகளரி கொண்டு
போராட்டங்களை ஒடுக்கவேண்டும் என்ற கொள்கையைக் கொண்டது -ஆங்காங்கே
உள்ள அரசு இயந்திரங்கள் மூலம் அதை
செய்து கொண்டிருக்கிறது .

26. இந்தியாவில் இதுவரை 10,000 -க்கும்
மேற்பட்ட கலவரங்களைத் தூண்டி,
லட்சக்கனக்கான மக்களைக் காவு வாங்கி உள்ளது.

26. உயர் சாதி – கீழ் சாதி – தீண்டாமை
என்பவை – மனுதர்ம -வர்ணாசிரம
கொள்கையை உயிர் மூச்சாகக்
கொண்டவை.

27. இன்றைய சூழலில் தமிழ் நாட்டில்
எல்லா சாதி அமைப்புகளிலும் “
இவர்கள்தான் “தலைமை பொறுப்பை
கைப்பற்றி கொண்டுள்ளனர் ( கோகுல்ராஜ்
கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட
*“யுவராஜ் கூட* *RSS* *அமைப்பின் முக்கிய பிரமுகர்* என்பது
குறிபிடத்தக்கது).

28. இந்தியாவில் உள்ள *அச்சு மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள்,*
*RSS*
*ஆதரவாளர்கலால்தான் நடத்தப்படுகிறது.*
காரணம் அனைத்து துறைகளிலும் இவர்கள் ஊடுருவி விட்டனர்.

எகா:- *தந்தி டிவி செய்தியாளர் ரங்கராஜ்பாண்டே*

29. இவர்களின் அமைப்பு , இந்திய அரசின்
முக்கிய முடிவுகளை
தீர்மானிக்கிறது . *பாஜக கட்சியின் தற்போது நரேந்திர மோடி,* *அமீத்ஷா ,* *ராஜ்நாத் சிங், 1947* *ஆண்டிற்கு முன்பின் சர்தார் வல்லபாய் படேல்,* *சர்வர்க்கார்,* *வாஜ்பாய், எல்.கே.அத்வானி,* *சுப்பிரமணியசாமி போன்ற எல்லோரும்*
*RSS அடிப்படை கோர் உறுப்பினர்கள்.*

தமிழகத்தில் *நிர்மலா சீத்தாராமன்,* *வானதி சீனிவாசன்,* *எச்.ராஜா,* *இல.கணேசன்,* *பொன்.ராதாகிருஷ்ணன்,* *தமிழிசை போன்றோர்கள் RSS -ல் பயிற்றுவிக்கப் பட்டவர்கள் தான்.*

30 .இவர்களின் ஆலோசனையின்படியே
“இந்திய உளவுத்துறைகளான ” ரா “
மற்றும் ஐபி செயல்படுகின்றன ..
ஈழப்பிரச்சனையில் , ரா வின்
ஆலோசனையில்தான் இந்தியாவும் .
இந்திய வெளியுறவுத்துறையும்
செயல்பட்டன -அந்த ராவை இயக்குவது
ஆர் எஸ் எஸ் அமைப்பு தான்……….>

31.பெண்களுக்கு எந்த உரிமையும்
கிடையாது -பெண்கள் படிக்கக்கூடாது - வேலைக்கு போகக்கூடாது –
பெண்ணின் வேலை -பிள்ளை பெற்று
வீட்டில் இருந்து பரமரிக்கவேண்டியதுதான் என்பது ஆர் எஸ் எஸ் தர்மம் –

32.வெள்ளையர்களுக்கு எதிராக போராட திராணி இல்லாமல்,
*இந்த தேசத்தின் சுதந்திர தியாகிகளை காட்டிக்கொடுத்தவர்கள் இந்த RSS.*

*இந்திய சுதந்திரப் போராட்டத்தில் இவர்கள் யாரும் பங்கேற்கவில்லை*

33.கோவில்களில் “பார்ப்பனர்கள் மட்டுமே
பூஜை செய்ய வேண்டும் பார்ப்பனர்
அல்லாதோர் கருவறைக்கு சென்றால் தீட்டு என்ற கொள்கையை  அமல்
படுத்தியதும் இந்தஆர் எஸ் எஸ். தான்.

34.இந்தியாவில் இது போன்ற எந்த அமைப்பையும் மத்திய அரசு தடைசெய்தது இல்லை, ஆனால் *RSSயை மூன்றுமுறை தடைசெய்தார்கள்
*1) காந்தியார் கொலை,*
*2) பாபர் மசூதியை இடித்த போதும் தடைவிதித்தனர்.*

*இந்த தேசத்துரோகிகள் RSS & BJP பற்றி இன்னும் நிறைய இருக்கிறது..*

*உலகத் தமிழர்களே எச்சரிக்கை!*
*இந்திய தேசியவாதிகளே எச்சரிக்கை!!*

*மண்ணின் மைந்தர்களே நாம் அனைவரும் "தமிழர்கள்"* என்னும் ஒருமைப்பாட்டிற்குள் நின்று
*இவர்களைக் கட்டாயம் விரட்டியடிக்க வேண்டும்.*
💪💪💪✊✊✊👊👊👊

பகிரியிலிருந்து..
(வாட்ஸ்சப்)

#GoBackModi

வெள்ளி, 5 ஏப்ரல், 2019

கோட்சேயும் - குருமூர்த்தியும்!

கேள்வி: மகாத்மா காந்தியின் இந்தியா வேண்டுமா அல்லது கோட்சேயின் இந்தியா வேண்டுமா? என்று மக்களைப் பார்த்து கேட்கிறாரே ராஹூல் காந்தி?


பதில்: கோட்சேவின் இந்தியா வேண்டுமா?' என்று கூறியது ஹிந்து மகாசபை. அது இருந்த இடம் தெரியவில்லை என்பது ராஹூல் காந்திக்குத் தெரியவில்லை. எனவே, கோட்சே இந்தியா வேண்டும்' என்று கேட்பதற்கு யாரும் இல்லை என்பதும் அவருக்குத் தெரியவில்லை.


- துக்ளக்', 3.4.2019,

பக்கம் 26

சங் பரிவார்கள் பச் சோந்தி போல உருமாறிக் கொள்ளக் கூடியவைதான் - எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டை கள்தான்.

பல பெயர்களை வைத்து நான் அது அல்ல - அது நானல்ல! என்று கூறும் சூழ்ச்சிக்காரர்கள் இப்படித்தான் பல நாக்குகளில் பேசுவார்கள்.

கோட்சே ஆர்.எஸ்.எஸ். காரன்தான் என்பதற்கு வெகு தூரம் செல்லவேண்டாம் - கோட்சேயின் சகோதரனும், காந்தியார் கொலையில் ஆயுள் தண்டனை பெற்றவனுமான கோபால் கோட்சே ஒப்புக் கொண்ட உண்மை. துக்ளக்' குக்குத் தொப்புள் கொடி உற வான தினமலரி'லிருந்தே எடுத்துக்காட்டலாமே!

நாதுராம் கோட்சேயின் தம்பி கோபால் கோட்சே சமீ பத்தில் ஹைதராபாத்தில் பேட் டியளித்தபோது, ஆர்.எஸ்.எஸ். தொண்டன் எப்படி இருக்க வேண்டும் என்ற கேள்விக்குப் பதிலளிக்கையில் ஆர்.எஸ்.எஸ். தொண்டன் என்றால் தன் வாழ்நாள் முழுவதும் அதில் முழு மூச்சாக இருக்கவேண்டும். இதற்கு எனது அண்ணன் நாதுராம் கோட்சேவை  உதார ணமாகக் கூறலாம் என்று கூறியுள்ளார் (தினமலர்', 11.2.1988, திருச்சி பதிப்பு).

'தினமலர்' கூறிவிட்டதால் திரிநூல் குருமூர்த்தி அய்யர்வாள் சப்தநாடியும் அடங்கி ஒப்புக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

குஜராத்தில் 182 மீட்டர் உயரத்தில் ரூ.2989 கோடி செலவில் வல்லபாய் பட்டேல் சிலையை நிறுவியுள்ளாரே பிரதமர் மோடி. - அந்த வல்ல பாய் படேல் ஜனசங்கத் தலை வரான டாக்டர் முகர்ஜிக்கு எழுதிய கடிதத்தில் ஆர்.எஸ்.எஸ். ஹிந்து மகாசபை இவ்விரு அமைப்புகளின் நடவடிக்கைகள் காரணமாகத்தான் காந்தியார் கொலை என்ற துயரமான நிகழ்ச்சி நடந்தது என்று எழுதி யுள்ளாரே!

'துக்ளக்'கின் பதில் என்ன?

கோட்சே ஆர்.எஸ்.எஸ். காரர் என்று இந்தியா டுடே' ஏட்டின் முதன்மை ஆசிரியர் குழுவைச் சேர்ந்த அருண்பூரி, பிரபு சாவ்லா, மோகினி புல்வா ஆகியோர்மீது வழக்குத் தொடுக் கப்பட்டது.

இதுகுறித்து டில்லி உயர்நீதி மன்ற நீதிபதி மகேஷ்குரோவர் கூறிய தீர்ப்பு முக்கியமானது. கோட்சே ஆர்.எஸ்.எஸ்.காரர் என்று எழுதியது குற்றமல்ல என்று தீர்ப்பில் கூறியுள்ளாரே!

‘‘Reference to Godse has RSS member can't be termed defamatory'' (The Hindu, 25.5.2007, Page 15).

இதற்கு மேலும் ஆதாரம் வேண்டுமா குருமூர்த்தி குருக் களுக்கு?

- மயிலாடன்

- விடுதலை  நாளேடு, 2.4.2019

வியாழன், 4 ஏப்ரல், 2019

இப்படியும் கூட...



கடைக்காரர் இல்லாமலே லாபகரமாக ஒரு கடை கேரளாவில் இயங்கிவருகிறது. படுத்த படுக்கையாக இருக்கும் மக்கள் உருவாக்கும் பொருட்களை விற்பனைக்கு வைத்திருக்கும் கடையில், இதுவரை திருட்டு நடந்ததில்லை.

கன்னூரின் ஆழிக்கோடை ஒட்டிய கிராமம் வங்குலத்துவாயல். இங்கு கடந்த ஜனவரி 1ஆம் தேதியில் இருந்து இந்தக் கடை இயங்கிவருகிறது. ஜனசக்தி அறக்கட்டளை என்னும் என்ஜிஓ இந்தக் கடையை நிர் வகித்து வருகிறது.

இதுகுறித்துப் பேசுகிறார் அந்த அமைப் பைச் சேர்ந்த சுகுணன். ''முதலில் அந்த இடத் தில் கிராமத்து மக்களுக்குக் கல்வி கற்பித்துக் கொண்டிருந்தோம். அதற்குப் பிறகு தன்னார் வலர்கள் மூலம் வயதானவர்களுக்கும் நோய் வாய்ப்பட்டவர்களுக்கும் மருந்து வாங்கிக் கொடுக்கும் இடமாகப் பயன்படுத்தினோம். ஒவ்வொருவருக்கும் மருந்து வாங்க சுமார் 1000 ரூபாய் தேவைப்பட்டது. அவர்களில் சிலர் வித்தியாசமான, அழகிய வடிவங்களில் சோப், பவுடர்களை உருவாக்கத் தெரிந்தவர்களாக இருந்தனர். ஆனால் அவற்றை விற் பனை செய்யத் தோதான இடம் இல்லை.

உடனே ஒரு யோசனை உருவானது. எங்களின் இடத்தில் இந்தக் கடையைத் தொடங்கினோம். இந்தக் கிராமத்தில் உள்ள அனைவரையும் எங்களுக்குத் தெரியும். அவர்களைப் பரிபூரணமாக நம்பினோம். கடைக்காரர் ஒருவரை நியமிப்பது குறித்து யோசிக்கவே இல்லை. சதானந்தன் என்னும் காய்கறி வியாபாரி தினந்தோறும் தனது கடையைத் திறக்கும்போது திறந்து, மாலையில் மூடிவிடுவார்.

இப்போது சக்கர நாற்காலியில் இருப் போர் மற்றும் நடக்க முடியாத 5 பேர் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்கிறோம். கல்ஃபில் பணியாற்றி முதுகு ஒடிந்து நாடு திரும்பிய கலீல், பிறந் ததில் இருந்தே நடக்க முடியாமல் இருக் கும் சுபைதா, சக்கர நாற்காலியிலேயே வாழ்க்கையை நகர்த்தும் சுகுமாரன், கால்பந்து விளையாட்டில் காயம் பட்ட வினோத் மற்றும் ஸ்ரேயா இல்லத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஆகியோர் பொருட்களை உருவாக்குகின்றனர்.

சோப்புகள், சலவை பொடிகள், சட்டை, மெழுகுவர்த்திகள், தேங்காய் ஓடு ஸ்பூன் கள் மற்றும் பேனாக்கள் ஆகியவற்றை விற்பனை செய்கிறோம்.

ஆரம்பத்தில் ஒரு நாளுக்கு 1000 ரூபாய்க்கு விற்பனை ஆனது. இப்போது சராசரியாக ரூ.750-க்கு வியாபாரம் நடக்கிறது. 10 நாட்களுக்கு ஒருமுறை பணத்தை எடுத்துவருவோம். இதுவரை பணம் திருடு போனதில்லை. கணக்கு இடித்ததில்லை. சொல்லப்போனால் 5 ரூபாயோ, 10 ரூபாயோ அதிகமாகத்தான் கிடைத்திருக்கிறது'' என்று நெகிழ்ச்சியுடன் சொல்கிறார் சுகுணன்.

-  விடுதலை ஞாயிறு மலர், 23.3.19

புதன், 3 ஏப்ரல், 2019

அம்பேத்கரின் கேள்வி!



1918-வாக்கில் திலகர் பேசுகிறார்:

இப்போது எல்லோரும் சட்டசபைக்குப் போக வேண்டு மென்று முயற்சி செய்கிறார்கள். எதற்காக செருப்புத்தைக் கிறவனும், எண்ணெய்ச் செக்கு ஆட்டுபவனும், வெற்றிலை பாக்குக் கடை வைத்திருப்பவனும் (The Cobblers, the oil mongers and petty-traders) சட்டசபைக்குப் போக வேண்டு மென்று முயற்சி செய்கிறார்கள்? யார், யார் எதெதற்குப் போகவேண்டுமென்று ஒரு வரைமுறை கிடையாதா?'' என்று பேசியிருக்கிறார்.

இதை மிகவும் கடுமையாகக் கண்டித்து, காங்கிரஸ் காரர்கள் எப்படிப்பட்டவர்கள்; அவர்களுக்கும் மனிதாபி, மானத்திற்கும், தாழ்த்தப்பட்டவர்களுடைய உரிமைக்கும் என்ன சம்பந்தம்?'' என்று தான் பாபாசாகேப் அம்பேத்கார் அவர்கள் தமது புத்தகத்திலே கேள்விக்கணை தொடுத்திருக்கின்றார்.

“WHAT GHANDHI AND CONGRESS HAVE DONE TO UNTOUCHABLES?”

- விடுதலை ஞாயிறு மலர், 23. 3 .2019

லாலா லஜபதி கூறுகிறார்



"எந்த ஜன சமுகத்தில் நாளதுவரை யாராவது ஒருவரு டைய கடவுள் பக்தியைத் தெரிவிப்பதற்கு நெற்றியில் நாமம் முதலிய குறிகள் நீண்டோ வட்ட வடிவமாகவோ இருக்க வேண்டியது அவசியம் என்று கருதப்படுகிறதோ அந்த ஜன சமுகத்தில் அரசியல் சுதந்திரத்தை பரவச் செய்வது ஒருக்காலும் முடியாத காரியம். மத சம்பந்தமாகவோ, ராஜிய சம்பந்தமாகவோ, சமுக சம்பந்தமாகவோ மற்றும் வேறு சம்பந்தமானாலும் சுதந்திர பிரச்சாரம் செய்ய முற்பட்டால் அதில் முதலாவதாக மனித சுதந்திரம் கொஞ்சமாவது வெளிப்பட வேண்டும்.

எந்த மதத்தில் பகுத்தறிவோடு யோசனை செய்யும் மனோபாவத்திற்கு இடம் சற்றேனும் இல்லையோ அதில் ராஜிய சுதந்திர நோக்கத்தைப் புகுத்தல் அசாத்தியம். இல்லாவிட்டாலும் நிச்சயமாக சுலபத்தில் சாத்தியமாகக்கூடிய காரிய மல்ல என்றே கூறுவேன்.

- லாலா லஜபதிராய் (திராவிட நாடு, 17.10.1948

- விடுதலை ஞாயிறு மலர், 23. 3 .2019