திருச்சி துறையூர் அருகில் உள்ள ஒரு கோவில் திருவிழாவில் 'சாமி' சிலையிடம் வைக்கப்பட்ட காசுகளை வாங்கினால், ஏராளம் பணம் சேரும் என்ற பக்தி மூடநம்பிக்கை காரணமாகத் திரண்ட பக்தர்களில் - இடிபாடுகள் காரணமாக ஏழு பேர் மூச்சுத் திணறி உயிரிழந்த கொடுமை எப்படிப்பட்ட மூடநம்பிக்கை வாங்கிய உயிர்ப் பலி என்பது புரியவில்லையா?
திராவிடர் கழகத்தின் பகுத்தறிவுப் பிரச்சாரம்
இறந்தவர்களுக்கு அனுதாபம் தெரிவிக்கும் அதே நேரத்தில், திராவிடர் கழகத்தின் பகுத்தறிவுப் பிரச்சாரத்தின் அருமையை - தேவையை மக்கள் உணரவேண்டும். கழகத்தின் பிரச்சாரத்துக்குத் தடை யாக காவல்துறையும், காவிகளும் கைகோர்த்து நிற்பது இதுபோன்ற நிகழ்வுகளுக்குத் துணை போவதாகும் என்பதை இப்பொழுதாவது உணரவேண்டும். இம்மக்கள் திருந்தியிருந்தால், வாழவேண்டிய மனிதர்கள் இப்படிப்பட்ட மரணத்தைச் சந்திக்கும் அவலம் நிகழ்ந்திருக்குமா?
பக்தி வந்தால் புத்தி போகும்'' என்று தந்தை பெரியார் கூறியது - எவ்வளவுப் பெரிய நூற்றுக்கு நூறு உண்மை பார்த்தீர்களா?
பகுத்தறிவுப் பிரச்சாரத்திற்குத் தாராள அனுமதி வழங்கி...
அரசு அரசியல் சட்டமாகவே செய்துள்ள - அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் எங்கள் பணியை காவல்துறைமூலம் தடுப்பதால், இத்தகைய விபத்தும், வேதனையும் ஏற்படும் நிலை. இனியாவது அரசும், காவல்துறையும் பகுத்தறிவுப் பிரச்சாரத்திற்குத் தாராள அனுமதி வழங்கி, அவர்கள் பணியை இலகுவாக்கிக் கொள்ள முன்வரவேண்டும்.
கி.வீரமணி,
தலைவர் திராவிடர் கழகம்
சென்னை
22.4.2019
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக