பக்கங்கள்

செவ்வாய், 28 பிப்ரவரி, 2023

பழங்குடியினர் காட்டுவாசிகளா? இழிவு படுத்தும் பா.ஜ.க.!

 

பாணன்

பழங்குடியின சமூகங்களை ஆதிவாசிகளுக்குப் பதிலாக ‘வனவாசி’ என்று  மோடி மற்றும் பா.ஜ.க குறிப்பிடுவதாக ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ள நிலையில், அந்த வார்த்தைகளுக்கு வித்தியாசம் என்ன, அவற்றின் பயன்பாட்டின் வரலாறு என்ன? என்பதைக் காண்போம்!

குஜராத் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 21.11.2022 அன்று பழங்குடியின சமூகத்திற்காக பா.ஜ.க. மற்றும் அதன் சித்தாந்தமான ஆர்.எஸ்.எஸ். பயன்படுத்தும் ‘வனவாசி’ என்ற சொல்லை, காங்கிரசால் பயன்படுத்தப்படும் ‘ஆதிவாசி’ என்ற சொல்லுடன் வேறுபடுத்தி கேள்வி எழுப்பினார்.

“பா.ஜ.க.,வினர் உங்களை ஆதிவாசி என்று அழைப்பதில்லை. அவர்கள் உங்களை எப்படி அழைக்கிறார்கள்? வனவாசி (காட்டுவாசி)  என்கின்றனர். நீங்கள் இந்தியாவின் முதல் உரிமையாளர்கள் என்று அவர்கள் சொல்லவில்லை. நீங்கள் காட்டில் வாழ்கிறீர்கள் என்று அவர்கள் சொல்கிறார்கள், அதாவது நீங்கள் நகரங்களில் வாழ வேண்டும், உங்கள் குழந்தைகள் பொறியாளர்களாக, மருத்துவர்களாக வேண்டும், விமானத்தில் பறக்க வேண்டும், ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்று அவர்கள் விரும்ப மாட்டார்கள்,” என்று பழங்குடியினர் அதிகம் வசிக்கும் மஹுவா தொகுதியில் நடந்த பேரணியில் ராகுல் காந்தி கூறினார்

பழங்குடியினரை விவரிக்க இந்திய அரசமைப்புச் சட்டம் பட்டியல் பழங்குடியினர் அல்லது “அனுசுசித் ஜன்ஜாதி” என்ற சொல்லைப் பயன்படுத்துகிறது. பல பழங்குடியினர் தங்களை ‘மூல்நிவாசி/ஆதிவாசி’ என்று குறிப்பிடுகின்றனர், அதாவது ‘முதல் குடிமக்கள்’. இது பொது சொற்பொழிவுகளில், ஆவணங்கள், பாடப் புத்தகங்கள் மற்றும் ஊடகங்களில் பயன்படுத்தப்படுகிறது.

காட்டுவாசிகள் என்று பொருள்படும் ‘வனவாசி’ என்பது சங் பரிவாரால் பயன்படுத்தப்படும் வார்த்தையாகும். இந்த சங் பரிவார் அமைப்புகள் பழங்குடியினர் பகுதிகளில் “கிறிஸ்தவ மிஷனரிகளின் பிடியில் இருந்து அவர்களைப் பாதுகாக்க” பரவலாக செயல்படுகிறது. ஓரங்கட்டப்பட்ட பழங்குடி சமூகம் வர்ணாஸ்ரம கட்டமைப்பிற்கு வெளியே உள்ளவர்களாக கருதப்படுவதால், அவர்களை காட்டுவாசிகள் என்றே கூறிவந்தனர்

பழங்குடி சமூகங்களின் மாறிவரும் கலாச்சாரம் மற்றும் ஹிந்து மதத்திலிருந்து அவர்கள் விலகியிருப்பதால் அவர்களையும் உள்ளே இழுக்க ஆர்.எஸ்.எஸ். அமைப்பை உருவாக்கியவர்களுள் முக்கியமானவரான ராமகாந்த் கேசவ் தேஷ்பாண்டே, எம்.எஸ். கோல்வால்கருடன் கலந்தாலோசித்து, டிசம்பர் 26, 1952 அன்று சத்தீஸ்கரின் ஜாஷ்பூரில் அகில பாரதிய வனவாசி கல்யாண் ஆசிரமத்தை (ABVKA) நிறுவினார்.

பழங்குடியினரின் ‘ஹிந்துமயமாக்கலில்’ சங் பரிவார் முதன்மை கவனம் செலுத்தியது, தேசிய ஒருமைப்பாட்டிற்கு இது அவசியம் என்று கூறியும், அவர்களின் அடையாளத்தையும் கலாச்சாரத்தையும் பாதுகாப்பதில் கவனம் செலுத்தப்படுவதாக்கூறி ஏமாற்றியது.  ஆர்.எஸ்.எஸ். செயல்பாடுகள் எப்போதும் பா.ஜ.க.,வுக்கு தேர்தல் வெற்றிகளைப் பெற உதவியது.

ஆரியர்கள் மத்திய ஆசியாவில் இருந்து வந்து ஏற்கெனவே மக்கள் வாழ்ந்து வந்த இந்திய துணைக்கண்டத்திற்கு குடிபெயர்ந்தனர் என்ற ஆரியப் படையெடுப்பு கோட்பாட்டை, ஆர்.எஸ்.எஸ்.எப்போதும் ஏற்றுக்கொள்ளாது. 

பல ஆண்டுகளாக பழங்குடியினர் மத்தியில் பணியாற்றிய சங் பரிவார் தலைவரும், பட்டியல் பழங்குடியினருக்கான தேசிய ஆணையத்தின் தலைவருமான ஹர்ஷ் சவுகான், வனவாசி என்ற சொல் 1952 இல் ஆர்.எஸ்.எஸ் அமைப்பால் நிறுவப்பட்டது என்கிறார்

காட்டுவாசி என்பது பெருமைக்குரிய வார்த்தையாம்

“காடுகளில் வசிப்பவர்கள் பாரம்பரியமாக வனவாசிகள் என்று அழைக்கப்படுகிறார்கள். ராமாயணத்தில் கூட, காடுகளில் வாழும் சமூகங்களை அடையாளம் காண இந்தக் குறிப்பு உள்ளது. வனவாசி என்ற பதம் காட்டுவாசிகளைப் பற்றிய சரியான கருத்தை வெளிப்படுத்துகிறது. மேலும் இது பெருமைக்குரிய வார்த்தையாகும்” என்று ஹர்ஷ் சவுஹான்  கூறினார்.

“ஆதிவாசிகள் என்ற சொல் 1930களில் ஆங்கிலேயர்களால் கொண்டு வரப்பட்டது. ஆதிவாசி என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதில் எந்தத் தீங்கும் இல்லை. ஆனால் இந்தியாவின் சூழலில் அது தவறு. அமெரிக்காவில் பழங்குடியினர் என்ற சொல் பழங்குடியினருக்கு அவர்களின் அடையாளத்தைப் பெற பயன்படுத்தப்படுகிறது, ஏனெனில் அவர்கள் ஓரங்கட்டப்பட்டனர். ஆனால், வனவாசி எளிமையான வார்த்தை - அவர்கள் வனவாசிகள் என்பதை உணர்த்துகிறது” என்று ஹர்ஷ் சவுகான் விளக்கினார்.

அரசமைப்புச் சட்ட நிர்ணய சபை விவாதங்களின் போது, ​​ஹாக்கி வீரர் ஜெய்பால் சிங் முண்டா, “ஆதிவாசி” என்ற வார்த்தையைப் பயன்படுத்த வலியுறுத்தினார், மேலும் ‘பழங்குடியினர்’ என்ற வார்த்தை ஹிந்தியில் மொழிபெயர்க்கப்பட்டபோது “பஞ்சாதி” ஆனது ஏன் என்று கேள்வி எழுப்பினார். ஜெய்பால் சிங் முண்டா பின்னர் அரசமைப்புச் சட்ட நிர்ணய சபையில் பழங்குடியின பிரதிநிதியாக ஆனார்.

“பல கமிட்டிகள் செய்த எந்த மொழிபெயர்ப்பிலும் ‘ஆதிவாசி’ என்ற வார்த்தை பயன்படுத்தப்படவில்லை. இது எப்படி நடந்தது? ஏன் என்று கேட்கிறேன், அது செய்யப்படவில்லை. ‘ஆதிவாசி’ என்ற சொல் ஏன் பயன்படுத்தப்படவில்லை, ‘பஞ்சாதி’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டது ஏன்? நமது பழங்குடியினரில் பெரும்பாலானோர் காடுகளில் வாழ்வதில்லை. பட்டியல் பழங்குடியினரின் மொழி பெயர்ப்பு வார்த்தை ‘ஆதிவாசி’யாக இருக்க வேண்டும் என்று உங்கள் மொழிபெயர்ப்புக் குழுவுக்கு நீங்கள் அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆதிவாசி என்ற சொல்லுக்கு அருள் உண்டு. பஞ்சாதி என்ற இந்த பழைய தவறான அடைமொழி ஏன் பயன்படுத்தப்படுகிறது என்று எனக்குப் புரியவில்லை, ஏனெனில் சமீப காலம் வரை அது ஒரு நாகரிகமற்ற காட்டுமிராண்டித்தனத்தைக் குறிக்கிறது, ”என்று ஜெய்பால் சிங் முண்டா கூறினார்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மிகவும் கவனமாக மீனவர்களையும் வனவாசி என்ற பட்டியலில் சேர்க்க ரகசிய திட்டம் தீட்டி வருகிறது. அதாவது 4 வருண அமைப்பிற்கு வெளியே இருப்பவர்கள் அனைவருமே மனிதர்களோடு வாழத்தகுதி அற்றவர்கள் என்ற பார்வையை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு கொண்டுள்ளது., 

காரணம் பார்ப்பனர், சத்திரியர், வைசியர் இவர்களுக்கு தொண்டூழியம் செய்ய சூத்திரர், ஆனால் தற்போது பார்ப்பனர் மற்றும் சூத்திரர்கள்(பார்ப்பனர் அல்லாதோர்) மட்டுமே என்று அவர்களே கூறுகின்றனர். இதற்கான கலியுகத்தில் நீதி கேட்டுப்போகும், பிராமணன் போஜனத்திற்கு உத்தியோகம் பார்ப்பான், சூத்திரன் தனது தருமத்திற்கான காரியத்தைச்செய்யமாட்டான் என்று உபநிடதம் கூறுவதாக பஜனைக்கோஷ்டி பார்ப்பனர்கள் தொடர்ந்து கூறிவருகின்றனர். 

 இப்போது சூத்திரர்கள் அல்லாத பழங்குடியினரை சேர்த்தால் வர்ணாஸ்ரம முறையில் குழப்பம் ஏற்படும் ஆகையால் அவர்களை மக்கள் வாழாத பகுதி(காடு)களில் வசிப்பவர்கள் காட்டுவாசிகள்(வனவாசி) என்று அழைக்கின்றனார். 

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பிரிவு

ஒடிசா, மத்தியப்பிரதேசம் போன்ற மாநிலங்களிலும், மேற்கு வங்கத்தின் கிழக்கு மற்றும் மலைப்பகுதி மாவட்டங்கள், கிழக்கு மகாராட்டிரா போன்ற பகுதிகளில் வாழும் பழங்குடியினர் கிறிஸ்தவர்களாக மாறமல் இருக்கவும் அவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படாமல் இருக்கவும் `வன்வாசி கல்யாண்’ என்ற அமைப்பை உருவாக்கி அதற்காக பெரும் நிதியை ஒதுக்கி பழங்குடியின கிராமம் கிராமாக சென்று கிளைகளை திறந்துள்ளது. 

ஒருபுறம் இவர்களை வன்வாசி என்று அழைத்துக்கொண்டு மறுபுறம் வனங்களை பெரும் கார்ப்பரேட் நிறுவனத்திற்கு விற்று வருகிறது. குஜராத்தில் மூன்று ஆண்டுகள் பெண் முதலமைச்சராக இருந்த ஆனந்திபென் படேல் சிங்கங்கள் வாழும் கிர்காடுகளின் 250 ஏக்கர் நிலத்தை தனது மகளின் நிறுவனத்திற்கு சொற்ப விலைக்கு விற்க தனிப்பட்ட முறையில் உத்தரவிட்டார். அவரது மகளோ சுரங்க முதலாளிகளுக்கு பல கோடி ரூபாய்களுக்கு நிலத்தை விற்றுவிட்டார். இந்த பிரச்சினை பெரிதாகி அவர் பதவி விலக நேரிட்டது. அந்த நிலங்கள் விற்கும் போது அந்த நிலங்களில் வழ்ந்த பழங்குடியினரின் நிலங்களும் சுரங்க முதலாளிகளின் வசமாகின. 

இன்றுவரை அந்தப்பழங்குடியினர் வாழ்வாதாரமின்றி மூதாதையார்கள் வாழ்ந்த நிலத்தில் அடிமைகளைப்போல் சுரங்க முதலாளிகளின் தயவில் வாழ்ந்து வரும் பெரும் அவலம் நீடிக்கிறது. 

பாஜக ஆர்.எஸ்.எஸ். அமைப்பைப் பொறுத்தவரை இன்றும் பழங்குடியினர் காட்டுவாசிகள் அதனால் தான் அவர்களை மோடி முதல் மோகன் பாகவத் வரை வன்வாசி(காட்டுவாசி) என்று அழைத்துவருகின்றனர்.

வியாழன், 16 பிப்ரவரி, 2023

சுப்ரீம் கம்யூனிட்டியும், ஆகார ஸுத்தமும்”! சற்சூத்திரர்களுக்குப் ‘பாடம்’ நடத்திய பார்ப்பனர்கள்

திங்கள், 12 டிசம்பர், 2022

பா.ஜ.க. விற்கு 101 கேள்விகள் - சு.வெங்கடேசன் எம்.பி.

வெள்ளி, 9 டிசம்பர், 2022

தமிழர் தலைவர் தலைமையில் 'கிரகண மூடநம்பிக்கை ஒழிப்பு' செயல்முறை விளக்கம் :

 

கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் ஏராளமானோர் பங்கேற்பு!


சென்னை,அக்.26- கிரகண மூடநம்பிக்கை ஒழிப்பு செயல்முறை விளக்க நிகழ்ச்சி  நேற்று (25.10.2022) மாலை 5.00 மணிக்கு சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகம் மற்றும் பகுத் தறிவாளர் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது. பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் இரா.தமிழ்செல்வன் அனைவரையும் வரவேற்றார். 

கிரகணத்தின்போது சாப்பிடக் கூடாது - கர்ப்பிணிப் பெண்கள் வெளியில் வரக் கூடாது என்கிற மூடநம்பிக்கையை முறியடிக்கும் வண்ணம் நடைபெற்ற இந்நிகழ்வில் சிற்றுண்டி ஏற்பாடு செய்யப்பட்டு அனைவருக்கும் வழங் கப்பட்டது. குழந்தைகள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் உள்பட ஏராளமானவர்கள் குடும்பம் குடும்பமாக திரண்டு இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இந்நிகழ்வில் பங்கேற்று, கிரகண மூடநம்பிக்கைகளை முறிய டிக்கின்ற இதுபோன்ற நிகழ்ச்சிகள்மூலம் பகுத் தறிவு, அறிவியல்  மனப்பான்மை பரப்பப்பட வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார்.

கழகத் துணைத் தலைவர் உரை

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் உரையில்,

2022ஆம் ஆண்டிலும் கிரகண மூடநம்பிக் கையை முறியடித்திட இதுபோன்ற செயல் விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது. பத்திரி கைகள், தொலைக்காட்சிகள் கிரகண நேரத்தில் சாப்பிடக்கூடாது என்கிற மூடநம்பிக்கையை பரப்பி வருகின்றன. 

சூரியன் நட்சத்திரம், சந்திரன் துணை கிரகம், பூமி முதன்மை கிரகம் என்று உள்ள நிலையில், அவர்கள் கூறுகின்ற கிரகங்கள் பட்டியலிலேயே   பூமி இல்லை. பத்திரிகைகள் அறிவியல் உண்மையை எடுத்துரைக்காமல், உண்மைக்கு மாறான பொய்களை கட்டுக்கதைகளை கூறிவருகின்றன. கிரகண மூடநம்பிக்கையை முறியடித்திட 'விடுதலை' தவிர எந்த ஏடும் செய்திகள் வெளியிடவில்லை. 

தந்தைபெரியார் சொன்ன 3 பேய்கள், 5 நோய்களில் பத்திரிகையும் உள்ளது. தந்தை பெரியார் சொன்னது இன்றும் அப்படியே உள்ளது. ராகு கேது என்கிற பாம்புகள் சந்திரனை விழுங்குகின்றன என்கிற மூடநம்பிக்கைகள் பரப்பப்பட்டு உள்ளன. அறிவாளிகள் நாட்டில் குறைவாகத்தான் இருப்பார்கள். அவர்கள்தான் இங்கே வந்துள்ளார்கள். கிரகண நேரத்தில் உணவை உண்டு மூடநம்பிக்கையை முறியடிப்போம் என்றார்.

கடந்த 2019 ஆம் ஆண்டில் இதேபோன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற கிரகண மூடநம்பிக்கை முறியடிக்கும் நிகழ்வில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் முன்னிலையில், இறையன்-திருமகள் பெயர்த்தியும், இசையின்பன், பசும்பொன் மகளும், பகலவனின் வாழ்விணையருமான சீர்த்தி நிறைமாத கர்ப் பிணியாக கிரகண மூடநம்பிக்கையை முறிய டிக்கும் செயல்முறை நிகழ்வில் துணிவுடன் பங்கேற்றார். அவரும் நேற்று நடைபெற்ற கிரகண மூடநம்பிக்கை முறியடிக்கும் செயல் முறை நிகழ்வில் கலந்துகொண்டதோடு, தன் மகன் மகிழனுடன் தானும் நலமுடன் இருப்பதை எடுத்துக்கூறினார்.

எருக்கஞ்சேரி பகுதியைச் சேர்ந்த சுயமரியாதைச் சுடரொளி கோ.சொக்கலிங்கம் குடும்பத்தைச் சேர்ந்த எழிலரசி ஒன்பது மாத கர்ப்பிணியாக இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதில் மகிழ்ச்சி தெரிவித்ததுடன், குழந்தை பிறந்த பின்னரும் அதே மகிழ்ச்சியுடன் இருப்போம் என்றார். 

தோழர் சத்தியா பக்தி மிகுந்த குடும்பத்தில் இருந்து பகுத்தறிவுள்ள வாழ்விணையருடன் இணைந்ததால், தானும் துணிவுடன் இந்நிகழ்வில் பங்கேற்றுள்ளதாகவும், கிரகணம் குறித்து எவ்வித அச்சமும் தனக்கு இல்லை என்றும் கூறினார். கர்ப்பிணிகள் இருவரும் தங்கள் குடும்பத்தினருடன் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.


விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு, கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்ய செயலாளர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன், கவிஞர் கண்மதியன், த.கு.திவாகரன், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் மேனாள் முதல்வர் ச.இராஜசேகரன், பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, துணைப்பொதுச் செயலாளர் பொறியாளர் ச.இன்பக் கனி, அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், சென்னை மண்டல செயலாளர் தே..செ.கோபால், சி.வெற்றிசெல்வி, நூர்ஜகான், பூவை செல்வி, பசும்பொன் செந்தில்குமாரி, தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, வடசென்னை மாவட்டத் தலைவர் எண்ணூர் வெ.மு.மோகன், சோழிங்கநல்லூர் மாவட்டத் தலைவர் ஆர்.டி. வீரபத்திரன், செயலாளர் விடுதலை நகர் ஜெய ராமன், கள்ளக்குறிச்சி மாவட்டத் தலைவர் ம.சுப்பராயன், விழுப்புரம் மாவட்ட அமைப்பாளர் சே.வ.கோபன்னா, இளைஞரணி சோ.சுரேஷ், மாணவர் கழகம் பார்த்திபன், பகுத்தறிவாளர் கழக மாநில பொதுச்செயலாளர் ஆ.வெங்கடேசன், கோவி.கோபால், மாணிக்கம் உள்ளிட்ட பொறுப்பாளர்கள், பெரியார் நூலக வாசகர் வட்ட பொறுபபாளர்கள், புதுமை இலக்கிய தென்றல் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

மாநில மாணவர் கழக செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் இணைப்புரை வழங்கினார்.

சூரியகிரகணம் உண்மையும், கட்டுக்கதைகளும்

சூரியகிரகணம் குறித்த மூடநம்பிக்கைளை முறியடிக்கும் நிகழ்ச்சி எனும் தலைப்பில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக அன்னை மணியம்மையார் அரங்கில், ”சூரியகிரகணம் உண்மையும், கட்டுக் கதைகளும்” என்ற தலைப்பில் தமிழ்நாடு வானியல் அறிவியல் சங்கத்தின் மாநில ஆலோசகர் முனைவர் கு.இரவிக்குமார் படக்காட்சிகளுடன் கடந்த 2000 ஆண்டுகளாக சூரியகிரகணம் பற்றிய உலக அறிவியல், இந்திய துணைக்கண்டத்தில் நிலவிய அறிவியல், வைதீக மதம் அதற்கு ஏற்படுத்திய முட்டுக் கட்டைகள், அதனால் ஏற்பட்ட பின்னடைவு களை மிகவும் சுவையாக, பள்ளி மாணவர் களுக்கும் புரியும்படியாக விளக்கினார். முக்கியமாக பஞ்சாங்கமாக இருந்தாலும் சரி, வைதீகமாக இருந்தாலும் சரி  'What'  என்பதற்கு பதில் சொல்லிவிடுவார்கள். அவர்கள் மட்டு மல்ல 6 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள்கூட சொல்லிவிடுவார்கள். அதாவது, இது என்ன (What)  என்று கேட்டால், இது சூரியன், இது நிலா, இது பூமி என்று சொல்லிவிடுவார்கள். ஆனால்,, 'Why'  என்று கேட்டால், அதற்கு அறிவியலால் மட்டும்தான் சொல்ல முடியும். 

பஞ்சாங்கமோ, மதங்களோ சொல்லாது. சொல்லவும் தெரியாது. காரணம், ஏன் என்று சொல்வதற்கு நீண்ட ஆய்வு தேவை! அதை அறிவியல்தான் நமக்கு தருகிறது. 

ஆகவே நாம் அறிவியலைத்தான் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்ற கருத்தை  முனைவர் கு.இரவிக்குமார் மாணவர்களுக்கு அழுத்தம், திருத்தமாக பதிய வைத்தார். இருதரப்பிலும் நடைபெற்ற உரையாடல் மூலமாக இக்கருத்து மாணவர்களிடையே பதியவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இறுதியாக திராவிடர் கழகத்தின் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ. அருள்மொழி மாணவர்களிடையே தனது மாணவப்பருவத்தில் நடைபெற்ற சூரியகிரகணம் தொடர்பான மூடநம்பிக்கைகளை நகைச் சுவையாக எடுத்துரைத்தும், முனைவர் கு.இரவிக்குமார் வகுப்பு எடுத்த முறையை வாழ்த்தியும் பேசினார்.

முன்னதாக இதே அரங்கில் நடைபெற்ற மாணவர்களுக்கான சூரியகிரகணம் பற்றிய ஓவியப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர் களுக்கும், பங்கேற்ற மாணவர்களுக்கும் திராவிடர் கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் நினைவுப்பரிசு வழங்கி சிறப் பித்தார். இந்நிகழ்வில் பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத்தலைவர் இரா. தமிழ்ச்செல்வன், பொதுசெயலாளர் ஆ.வெங்கடேசன், கோவி.கோபால், திராவிட மாணவர் கழகத்தின் மாநிலச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் மற்றும் மாணவர்களின் பெற்றோரும், கழகத்தோழர்களும் கலந்துகொண்டு சிறப் பித்தனர்.

ஒசூரில் கிரகண மூடநம்பிக்கை முறியடிப்பு

நேற்று (25.10.2022) மாலை 5.30மணிக்கு ஒசூர் உள்வட்டசாலை பெரியார்சர்க்கிள் பகுதியில் சூரியகிரகணம் மூடநம்பிப்கை ஒழிப்பு விழிப்புணர்வு செயல்முறை விளக்கம் பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் பேராசிரியர் கு.வணங்காமுடி தலைமையில் நடைபெற்றது.சூரியகிரகணம் குறித்த மூடநம் பிக்கையை விளக்கியும், இயற்கையாக நடைபெறும் நிகழ்வை மூடநம்பிக்கையை புகுத்தி மக்கள் யாரும் வெளியில் வரக்கூடாது, சாப்பிடக்கூடாது என்ற நிலையில் திராவிடர் கழகம்சார்பில் அதன் பொறுப்பாளர்கள் மற்றும் முற்போக்கு சிந்தனையாளர்கள் கலந்துகொண்டு உணவு அருந்தியும்,திண்பண்டங்கள் சாப் பிட்டும் விழிப்புணர்வு செய்து காட்டினர்.இந் நிகழ்ச்சியில்  மாவட்ட தலைவர் சு.வனவேந்தன், மாவட்ட செயலாளர் மா.சின்னசாமி, பகுத்தறி வாளர் கழக செயலாளர் சிவந்தி அருணாசலம், மாவட்ட மகளிர்பாசறை தலைவர் கோ.கண் மணி, மாநகர தலைவர் மூ.கார்த்திக்,மாவட்ட திராவிட மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் க.கா.சித்தாந்தன் தமிழ்நாட்டு கல்வி இயக்கம் ஒப்புரவாளன், மற்றும் கல்லூரி மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். 

தாராபுரத்தில் கிரகண மூடநம்பிக்கை முறியடிப்பு

25-10-2022 மாலை 5:30மணிக்கு சூரிய கிரகணத்தின் போது சாப்பிடக்கூடாது கர்ப்பிணி பெண்கள் வெளியில் வரக்கூடாது என்ற மூடநம்பிக்கையை முறியடிக்கும் வண்ணம் தாராபுரம் தந்தை பெரியார் சிலை முன்பு மாட்டுக்கறி உணவு உண்ணும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் கோவை மண்டல  இளைஞரணி செயலாளர் ஆ.முனிசுவரன்,  கழகப்  பொதுக்குழு உறுப்பினர்கள் வழக் குரைஞர் நா.சக்திவேல், ஓவியர் நா.மாயவன் மற்றும் திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

லால்குடி மாவட்ட கழகம் சார்பில் கிரகண மூடநம்பிக்கை ஒழிப்பு காணொலிகூட்டம் 

25.10.2022 மாலை 5மணிக்கு கிரகண மூடநம்பிக்கை ஒழிப்பு காணொலிகூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இதில் லால்குடி மாவட்டம் புள்ளம்பாடி ஒன்றிய கழகத் தோழர்கள் பங்கேற்றனர். விடுதலைபுரம் இளைஞரணி தோழர்கள் கூட்டத்தினை ஒருங்கிணைத்து நடத்தி முடித்தனர். 

பொள்ளாச்சியில் கிரகண மூடநம்பிக்கை முறியடிப்பு

நேற்று (25-10-2022) மாலை  சூரிய கிரகணம்  நிகழ்வையொட்டி பொள்ளாச்சி வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் கோவை சாலையின் முன்பு மூடநம்பிக்கையை முறியடிப்போம் என்ற பகுத்தறிவு நிகழ்ச்சி அரண் சட்ட மய்யம் சார்பாக சிறப்பாக நடைபெற்றது. மூடநம்பிக் கையை ஒழிக்கும் பணியில் வேகமாக செயலாற்றுவோம். பகுத்தறிவு பார்வையை உலகிற்கு வேகமாக பரவ செய்வோம் என்ற முழக்கத்துடன் நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது. திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், திமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் பொறுப்பாளர்கள், பொதுமக்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

விருத்தாசலத்தில் கிரகண மூடநம்பிக்கை முறியடிப்பு

சூரிய கிரகணத்தின் போது உண்ணக் கூடாது, வெளியில் வரக்கூடாது என்ற மூட நம்பிக்கைக்கு எதிராக  விருத்தாசலம் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் விருத்தாசலம் பேருந்து நிலையம் அருகில் 25.10.2022 அன்று மாலை பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தலைமையில் சிற்றுண்டி உண்டு களித்து, மூடநம்பிக்கைக்கு எதிராக விழிப்புணர்வு முழக்கம் எழுப்பப்பட்டது.

இதில், மாவட்டத் தலைவர் அ.இளங் கோவன், மாவட்டச் செயலாளர் ப.வெற்றிச் செல்வன், மாநில இளைஞரணிச் செயலாளர் த.சீ.இளந்திரையன், மாவட்ட அமைப்பாளர் வை.இளவரசன், சொற்பொழிவாளர் புலவர் இராவணன், வேப்பூர் வட்டாரத் தலைவர் பி.பழனிச்சாமி, கழுதூர் ம.இளங்கோவன், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் மு. முகமது பசீர், மாவட்ட மாணவர் கழகத் தலைவர் செ.இராமராஜ், பாலச்சந்தர், சவரிமுத்து, இளங்கனி, வசந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.




ஒசூரில் கிரகண மூடநம்பிக்கை முறியடிப்பு

ஓசூர், நவ.1 25.10.2022 அன்று மாலை 5.30 மணிக்கு ஒசூர் உள்வட்டசாலை பெரியார்சர்க்கிள் பகுதியில் சூரியகிரகணம் மூடநம்பிக்கை ஒழிப்பு விழிப் புணர்வு செயல்முறை விளக்கம் பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் பேராசிரியர் கு.வணங்கா முடி தலைமையில் நடைபெற்றது.

சூரியகிரகணம் குறித்த மூடநம்பிக்கையை விளக்கியும் இயற்கையாக நடைபெறும் நிகழ்வை மூடநம்பிக்கையை புகுத்தி மக்கள் யாரும் வெளிவரகூடாது, சாப்பிட கூடாது என்ற நிலையில் திராவிடர் கழகம் சார்பில் அதன் பொறுப் பாளர்கள் மற்றும் முற்போக்கு சிந்தனையாளர்கள் கலந்து கொண்டு உணவு அருந்தியும், திண்பண்டங்கள் சாப்பிட்டும் விழிப்புணர்வு செய்து காட்டினர். இந் நிகழ்ச்சியில் திராவிடர் கழக மாவட்ட தலைவர் சு.வனவேந்தன், மாவட்ட செயலாளர் மா.சின்ன சாமி, பகுத்தறிவாளர் கழக செயலாளர் சிவந்திஅருணாசலம், மாவட்ட மகளிர்பாசறை தலைவர் கோ.கண்மணி, மாநகர தலைவர் மூ.கார்த்திக், மாவட்ட திராவிட மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் க.கா.சித்தாந்தன், தமிழ்நாட்டு கல்வி இயக்கம் ஒப்புரவாளன் மற்றும் கல்லூரி மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.


இனவுணர்வைத் தூண்டும் குருமூர்த்திகள் (வள்ளலார், பெரியார் பாதைகள்)

 

மின்சாரம் 

ஆடிட்டர் குருமூர்த்தி எடிட்டர் ஆகி சோ குடும்பத்திடமிருந்து 'துக்ளக்'கை கைப்பற்றி, தம் பூணூல் கோத்திரத்தை 'நிர்வாணமாகக்' காட்டிக் கொண்டு வருகிறார். தந்தை பெரியார்மீது பழிப்பு, முதலமைச்சர்மீது வெறுப்புக் கனல் வீசுவது, திராவிடத்தை இழித்துரைப்பது என்பது அவருடைய பிழைப்பாகி விட்டது.

திராவிட இயக்கத்தைச் சீண்டிப் பார்க்கிறது சிண்டு.

இவ்வார துக்ளக்கில் (26.10.2022) எழுதப்பட்ட கேள்வி- பதில்களுக்கு சாட்டை அடி இங்கே!

கேள்வி: தியாகம் செய்வது - தானம் செய்வது ஒப்பிடுக?

பதில்: தன்னிடத்தில் இருப்பதைக் கொடுப்பது - தானம், தன்னையே கொடுப்பது - தியாகம். 

நமது பதிலடி: தன்னிடத்தில் இருந்து கொடுப்பது தர்ப்பைப் புல்! தானம் என்பது சுரண்டும் புரோகிதத் தொழில்.

கேள்வி: மதச் சார்பின்மை என்பதற்கு திராவிட மாடலில் என்ன அர்த்தம்?

பதில்: ஹிந்து மதச் சார்பின்மை என்று அர்த்தம்.

நமது பதிலடி: ஹிந்து என்றால் நாங்கள் சூத்திரர்கள் -& வேசி மக்கள் என்று அர்த்தப்படுவதால் 'திராவிட மாடல்' என்பது ஹிந்து மதச் சார்பின்மை என்று பொருள்.

கேள்வி: 'வள்ளலார், பெரியார் பாதைகள் ஒரே இலக்கை நோக்கி இணையும் இரு வழிப் பாதை' என்கிறாரே வீரமணி! சரியா?

பதில்: வள்ளலார் பாதையும், ஈ.வெ.ரா. பாதையும் ஒரே இலக்கை நோக்கியது என்று கி.வீரமணி கூற இரண்டு காரணங்கள்தான் நமக்குத் தெரிகிறது. முதுமைக் காலத்தில் ஆன்மிகவாதிகளாகும் நாஸ்திகர்களைப் போல் 88 வயதில் அவருக்கும் வள்ளலார்மீது ஈடுபாடு வந்திருக்கிறது அல்லது முதுமை நோயால் (Senile)  பாதிக்கப்பட்டு இருக்கிறார் அவர்.

நமது பதிலடி: 

'நால்வருணம் ஆச்சிரமம் ஆச்சாரம் முதலா
நவின்ற கலைச் சரிதமெலாம் பிள்ளை விளையாட்டே
மேல்வருணம் தோல் வருணம் கண்டறிவாரில்லை
நீ விழித்திதுபார் என்றெனக்கு விளம்பிய சற்குருவே' 

என்று இராமலிங்க வள்ளலார் பாடினார். "ஈரோடும், வடலூரும்" என்று 1930களிலேயே நூல் வந்திருப்பது எல்லாம் இந்தப் பூணூல் களுக்குத் தெரியுமா? 'குடிஅரசு' இதழிலும் வள்ளலார் பாடல்கள் வெளி வந்தது புரியுமா?

கல்மனப் பார்ப்பார் தங்களைப் படைத்துக்
காகத்தை யென் செயப் படைத்தாய்?

      -விவேக சிந்தாமணி (பாடல் & 82)

சாஸ்திரம் பார்த்துப் பிறந்தாளாம் - பின்
சாஸ்திரம் பார்த்து சமைந்தாளாம்
சாஸ்திரம் பார்க்கின்ற பார்ப்பாரப் பெண்கள்
தாலியறுப்பதேன் ஞானப் பெண்ணே

 -  ஞான வெட்டியான்

சத்தியம் இன்றித் தனிஞானந் தானின்றி
ஒத்த விடையுடன்விட் டோடும் உணர்வின்றிப்
பத்தியும் இன்றிப் பரன் உண்மை இன்றிப்
பித்தேறும் மூடர் பிராமணர்தாம் அன்றே
        - திருமந்திரம்

இன்னும் எவ்வளவோ வண்டி வண்டியா கிடக்கு!

பார்ப்பனர்கள்பற்றி தந்தை பெரியாரின் கருத்துக்களோடு ஒத்துப் போவதை வெளிப்படுத்தினால் பார்ப்பனக் குருமூர்த்திகளைப் பாடாய்ப்படுத்துதோ!

எத்தனை ஆதிக்கப் பெருமக்கள் வயது மூப்பில் நாத்திகர் ஆனார்கள் என்ற பட்டியல் வேண்டுமா 'துக்ளக்'கே!

சிவசேனா நிறுவனர் பால்தாக்கரே, தன் மனைவியின் மரணத்தைத் தொடர்ந்து வீட்டிலிருந்த ஹிந்துக் கடவுள்களையெல்லாம் வீசி எறிந்தாரே தெரியுமா குருமூர்த்தியே?

கேள்வி: ஈ.வெ.ரா. நடத்தி வந்த விடுதலை பத்திரிகையைத் தங்கத் தட்டில் வைத்த வைரம் என்று கூறலாமா?

பதில்: திருக்குறளைத் தங்கத் தட்டில் வைத்த மலம் என்று கூறிய ஈ.வெ.ரா.வின் சமூக நீதித் தட்டில் வைத்த வைரம் என்று கூறுவது இன்னும் பொருத்தமாக இருக்கும்.

நமது பதிலடி: புளுகாதே குருமூர்த்தியே  & ஆதாரத்தோடு எடுத்துக்காட்டு என்று எத்தனை முறையோ எடுத்துச் சொல்லியும் 'கந்தனுக்குப்புத்தி கவுட்டியில்' என்பது போல உளறுவது அவாளின் தனித்தன்மை. 

தமிழை நீஷப் பாஷை என்று கூறும் 'லோகக் குருக்களின்' சீடர்கள் அல்லவா - அதனால் தமிழ் என்றாலே எப்படியோ கொச்சைப்படுத்த வேண்டும் என்ற அற்பப்புத்தி!

"தமிழ்நாட்டில் பிறந்தும், தமிழ்மொழி பயின்றும் தமிழரெனச் சொல்லிக் கொண்டாலும், தமிழ்மொழி மூலம் பிழைத்து வந்தாலும், தமிழிலே பண்டிதரெனப் பட்டம் பெற்றாலும், சங்க நூல் கற்றாலும் பார்ப்பனர்கள் தமிழிடத்திலே அன்பு கொள்வதில்லை. அதனைத் தம் தாய் மொழியெனக் கருதுவதில்லை -& அவர்களின் எண்ணமெல்லாம் வட மொழியாகிய சமஸ்கிருததத்தின் மீதுதான்."

                - அறிஞர்அண்ணா ('திராவிட நாடு' 2.11.1947)

பார்ப்பனர்களுக்குத் தமிழ் -& பிழைப்புக்கு ஒரு கருவியே! இந்த யோக்கியதை உடையவர்கள் தமிழைப் பற்றியும், திருக்குறள் குறித்தும் அபாண்டமாகப் பழி சுமத்துவது வழி வழியாக வந்த ஆரியப் புத்தியே!

'விடுதலை' சமூகநீதிக்காகக் குரல் கொடுப்பது குறித்து குருமூர்த்திகளின் விலாவை கூர் ஈட்டியாகக் குடைகிறது. அந்த ஆத்திரத்தில் அய்யர் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்வதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

30 சதவீதப் பெண்கள்தான் பெண்மை உடையவர்கள் என்று சொன்னபோதே பெண்கள் மொத்தியிருந்தால் குருமூர்த்தி இப்படியெல்லாம் துள்ள மாட்டார்.

திங்கள், 24 அக்டோபர், 2022

மதமாற்றத்தை எதிர்த்த பாரதி! (88)

 

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (88) மதமாற்றத்தை எதிர்த்த பாரதி!

நவம்பர் 16-30,2021

நேயன்

இந்து மதத்திலிருந்து பிற மதங்களுக்கு மாறுவதை பாரதி வன்மையாகக் கண்டித்தார். மற்ற மதங்களை வெறுத்ததோடு, இந்துக்கள் மதம் மாறுவதையும் கண்டித்த பாரதி மதவெறியின் உச்சத்திற்கே சென்று, இந்து மதத்தை உலகம் முழுவதும் பரப்ப வேண்டும் என்றும் கூறினார்.

“இந்த மாதம் முதல் தேதி, சென்னைத் தலைமைப் பாதிரி எல்லூரில் ஆணும் பெண்ணும், குழந்தைகளுமாக ஏறக்குறைய முந்நூறு பேரைக் கிறிஸ்துவ மதத்தில் சேர்த்துக் கொண்டார் என்று தெரிகிறது. இந்த விஷயம் நமது நாட்டில் பல இடங்களில் அடிக்கடி நடந்து வருகிறது. இது ஹிந்து மதத்தில் அபிமானமுடையவர்களுக்கெல்லாம் மிகுந்த வருத்தத்தை விளைவிக்கத்தக்கது…

ஆம். ஹிந்துக்கள் வருத்தப்படத்தக்க செய்திதான் அது. ஹிந்துக்களுடைய ஜனத்தொகை நாளுக்கு நாள் குறைபட்டு வருகிறது. கவிதையிலுள்ள மலைப்பாம்பு போல வாலில் நெருப்புப் பிடித்தெரியும்போது தூங்கும் வழக்கம் இனி ஹிந்துக்களுக்கு வேண்டாம். விழியுங்கள். ஜனத்தொகை குறையும்போது பார்த்துக் கொண்டே சும்மா இருப்போர் விழித்திருக்கும்போது தூங்குகிறார்-கள். அவர்கள் கண்ணிருந்தும் குருடர்’’ என்றார்.

மற்ற மதங்களை வெறுத்த பாரதி இந்து மதத்தை உலகம் முழுவதும் பரப்ப வேண்டும் என்றார். இந்து மதவெறி கொண்டு கருத்து-களைக் கூறினார்.

“இருபது கோடி ஹிந்துக்களையும் ஒரே குடும்பம் போலச் செய்து விட வேண்டும் என்பது என்னுடைய ஆசை. இந்த ஆசையினாலே ஒருவன் கைக்கொள்ளப் பட்டால் அவன் ராஜாங்கம் முதலிய சகல காரியங்களைக் காட்டிலும் இதனை மேலாகக் கருதுவான் என்பது என்னுடைய நம்பிக்கை.

எல்லா தர்மங்களைக் காட்டிலும், வேதத்தை நிலை நிறுத்தும் தர்மம் சிறந்த-தென்று நான் நினைக்கிறேன். ஹிந்துக்களைத் திரட்டி ஒற்றைக் கருவியாகச் செய்து விட வேண்டும். இதற்குரிய உபாயங்களைச் சரியான காலத்தில் தெரிவிக்கிறேன்.’’

“இந்திரன், அக்கினி, வாயு, வருணன் என்ற மூர்த்திகளே வேதத்தில் முக்கியமானவை. பின்னிட்டு இந்த மூர்த்திகளைத் தாழ்ந்த தேவதைகளாக மதிக்கத் தொடங்கி விட்டார்கள். இந்த அலங்கோலங்களெல்லாம் தீர்ந்து, ஹிந்து மதம் ஒற்றுமை நிலையெய்தி, ஹிந்துக்கள் ஒற்றுமையும் வைதீக ஞானமும் எய்தி, மேம்பாடு பெற்று பூமண்டலத்தின் ஆசார்ய பதவி கொண்டு வாழ வேண்டுமாயின் அதற்கு நாம் கையாள வேண்டிய உபாயங்கள் பின்வருவன” என பாரதி கூறுகிறார்.

“வேதம், உபநிஷத்துகள், புராணங்கள் இவற்றை இக்காலத்தில் வழங்கும் தேச பாஷைகளில் தெளிவாக மொழி பெயர்க்க வேண்டும்.

புராணங்களில் தத்தம் தேவர்களை மேன்மைப்படுத்தும் அம்சங்களையும், மேற்படி பொதுவேதக் கொள்கைகளாகிய தவம், உபாஸனை, யோகம் முதலியவற்றை விளக்கும் அம்சங்களையும் மாத்திரமே ப்ராமணமாகக் கொண்டு, இதர தேவ தூஷணை செய்யும் அம்சங்களையும் பிராமணமில்லாதன என்று கழித்துவிட வேண்டும்.

வேதத்தின் உண்மைக் கருத்தை உணர்ந்-தோரும் ஸமரஸ ஞானிகளுமான பண்டிதர் மூலமாக நாடு முழுவதும் புஸ்தகம், பத்திரிகை, உபந்யாஸங்கள் முதலியவற்றால் பிரமாண்டமான பிரச்சாரத் தொழில் நடத்த வேண்டும். ஹிந்துக்களே, பிளவுண்டு மடியாதீர்கள்! வேதத்தின் பொருளை உணர்ந்து மேம்பட்டு வாழ வழி தேடுங்கள்’’ என்றார்.

மேலும், இந்துமதம் ஜாதியைக் காக்கின்ற மதமாக இருந்தாலும் அந்த மதத்தால் பல கேடுகள் வந்தாலும், அது ஏழ்மைக்கும் வறுமைக்கும் காரணமாய் அமைந்தாலும், அவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் இந்து மதத்தையும் அதன் சாஸ்திரங்களையும் நாம் கட்டாயம் காப்பாற்ற வேண்டும். இல்லையென்றால் நாம் அழிந்தே போவோம் என்கிறார்.

“ஹிந்துக்களுக்குள்ளே இன்னும் ஜாதி வகுப்புகள் மிகுதிப்பட்டாலும் பெரிதில்லை. அதனால் தொல்லைப் படுவோமேயன்றி அழிந்து போய் விட மாட்டோம். ஹிந்துக்-களுக்குள் இன்றும் வறுமை மிகுதிப் பட்டாலும் பெரிதில்லை. அதனால் தர்ம தேவதையின் கண்கள் புண்படும். இருந்தாலும் நமக்குச் சர்வ நாசம் ஏற்படாது. ஹிந்து தர்மத்தைக் கவனியாமல் அசிரத்தையாக இருப்போ-மேயானால் நமது கூட்டம் நிச்சயமாக அழிந்து போகும். அதில் சந்தேகமில்லை’’ என்கிறார் பாரதியார். 1917ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி சுதேசமித்திரன் ஏட்டில் பாரதியார் உலகம் முழுவதும் ஹிந்து தர்மத்தைப் பரப்ப வேண்டும் என எழுதியுள்ளார்.

“வாரீர் நண்பர்களே, ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் ஹிந்து தர்மம் பரவும்படிச் செய்ய வேண்டுமானால் அதற்கு இதுவே மிகவும் ஏற்ற தருணம். ஆஹா, ஸ்வாமி விவேகானந்தரைப் போலப் பத்துப் பேர் இப்போது இருந்தால் இன்னும் ஒரு வருஷத்துக்குள் ஹிந்து தர்மத்தின் வெற்றிக் கொடியை உலகமெங்கும் நாட்டலாம்…. சண்டை காலந்தான் நமக்கு நல்லது (முதல் உலகப்போர் 1914 முதல் 1918 வரை நடைபெற்றது. அந்தச் சமயத்தில் தான் பாரதி இதை எழுதியுள்ளார்).

இவ்விஷயத்தை ஆழ்ந்து யோசனை பண்ணி இங்கிருந்து வெளிநாடுகளுக்கு நூற்றுக்-கணக்கான பிரசங்கிகளை அனுப்பும்படி ராஜாக்களையும், ஜமீன்களையும், செட்டியார்-களையும், மடாதிபதிகளையும் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.’’

சண்டை காலந்தான் நமக்கு நல்ல காலம், மதத்தை வெளிநாடுகளில் நிலைநாட்ட இதுவே ஏற்ற தருணம் என்கிறார் பாரதியார். அவரைப் பின்பற்றித்தான் இராம கோபாலன் போன்றோர் “மூன்றாம் உலகப்போர் மூளுகிறது என்று நினைத்துக் கொள்வோம். அந்த வேளையில் ஆசிய நாடுகள் தங்களைக் காத்துக் கொள்ள ஒன்று பட்டு நிற்க வேண்டி வரும். அப்போது இயல்பாகவே பாரதம் ஆசியக் கூட்டமைப்பின் தலைமை ஏற்கும். அந்த நிலையில் அகண்ட பாரதமோ, அதற்குச் சமமான நிலவரமோ உதயமாவது சாத்தியம்” என எழுதியுள்ளார் போலும்

மேலும், “இப்பொழுது நம்முடைய தேசத்தில் இருக்கும் தாழ்ந்த ஜாதியார்களையெல்லாம் கிறிஸ்துவர்கள் தங்கள் பக்கம் சேர்த்துக் கொண்டு வருகிறார்கள். இதுதான் நம்முடைய குடியைக் கெடுக்கக் கோடாலியாய் இருக்கும்’’ என்கிறார் பாரதியார்.

(தொடரும்…)

பாரதியின் பாதையில் ஆர்.எஸ்.எஸ் (90)

 

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (90)

டிசம்பர் 16-31,2021

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (90)

பாரதியின் பாதையில் ஆர்.எஸ்.எஸ்

நேயன்

பசுவதைத் தடைச் சட்டம் என்று இன்று ஆர்.எஸ்.எஸ் வலியுறுத்தி, வன்முறையில் ஈடுபடுவதை, ஆர்.எஸ்.எஸ் தொடங்கப்-படுவதற்கு முன்னரே கூறியவர் பாரதி.

1917 நவம்பர் 8ஆம் தேதி சுதேசமித்திரன் ஏட்டில் பாரதியார் பசுவதைத் தடுப்பைப் பற்றி எழுதியுள்ளார் கீழ்க்கண்டவாறு:

“பசுவின் சாணத்துக்கு நிகரான அசுத்த நிவாரண மருந்து உலகத்தில் அக்னியைத்தான் சொல்லலாம். வீட்டையும் யாகசாலையையும் கோவிலையும் நாம் பசுவின் சாணத்தால் மெழுகிச் சுத்தப்படுத்துகிறோம். அதனைச் சாம்பல் ஆக்கி அச்சாம்பலை விபூதி என்று ஜீவன் முக்தியாக வழங்குகிறோம். பசுமாடு பத்தினிக்கும் மாதாவுக்கும் ஸமானம். அதன் சாணமே விபூதி. அதன் பால் அமிர்தம், வைத்தியரும் யோகிகளும் பசுவின் பாலை அமிர்தம் என்கிறார்கள். வேதமும் அப்படியே-தான் சொல்கிறது.

பசுவை இந்துக்களாகிய நாங்கள் தெய்வமாக வணங்குவதால், நாங்கள் பெரும் பகுதியாக வாழ்வதும், எங்களுடைய பூர்வீக சொத்துமாகிய இந்தத் தேசத்தில் பஹிரங்கமாகப் பசுவின் கொலையை யாரும் செய்யாமல் இருப்பதே மரியாதையாகும்.

இதைத்தான் ஆப்கானிஸ்தானத்து அமீர் சாஹெப், தமது தேசத்து முஸல்மான்களிடம் சொல்லிவிட்டுப் போனார். ஹிந்துக்களின் கண்ணுக்குப் படாமல் என்ன எழவு வேண்டுமானாலும் செய்து கொண்டு போங்கள் என்று எழுதியுள்ளார் பாரதி.

கிறித்துவப் பள்ளிகளில் இந்துப் பிள்ளை-களைச் சேர்க்கக் கூடாது என்று இன்றைக்கு ஆர்.எஸ்.எஸ். வலியுறுத்துவதை, 18.8.1906ஆம் ஆண்டிலேயே பாரதி ‘இந்தியா ஏட்டில்’ தலையங்கம் எழுதியுள்ளார். அப்பள்ளிகளில் படிப்பவர்களுக்கு இந்துக் கடவுள் பற்றிக் கூற மாட்டார்கள். அதனால் இந்துப் பிள்ளை-களுக்கு இந்துக் கடவுள் பற்றித் தெரியாமல் போகிறது.

அதனால் அவர்களுக்குத் தேசபக்தி வராது. கிறிஸ்துவர்களாக மாறிவிடுவார்கள். எனவே அவர்களை அப்பள்ளிகளில் சேர்க்க வேண்டாமென அறிவுறுத்தியுள்ளார்.

பாரதியார் கிறித்துவர்களைத் தேசபக்தி அற்றவர்கள், இந்த மதத்தைக் கெடுக்க வந்தவர்கள் என்று 1906இல் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவிலும் அய்ரோப்பாவிலும் சில கிறிஸ்துவப் பாதிரிகள் தங்கள் மத விஷயமான பிரசாரத்தை உத்தேசித்து நம்மைக் குறித்துப் பெரிய பெரிய பொய்கள் சொல்லி, இப்படித் தாழ்ந்துபோய் மஹத்தான அநாகரிக நிலையிலிருக்கும் ஜனங்களைக் கிறிஸ்து மதத்திலே சேர்த்து மேன்மைப்படுத்தும் புண்ணியத்தைச் செய்வதாகச் சொல்லு-கிறார்கள். ஹிந்துக்கள் குழந்தைகளை நதியிலே போடுகிறார்கள் என்றும், ஸ்திரிகளை (முக்கியமாக அநாதைகளாய்ப் புருஷரை இழந்து கதியில்லாமல் இருக்கும் கைம்பெண்களை) நாய்களைப் போல் நடத்துகிறார்கள். நம்முடைய ஜாதிப் பிரிவுகளிலே இருக்கும் குற்றங்களை எல்லாம் பூதக் கண்ணாடி வைத்துக் காட்டுகிறார்கள். இந்தக் கிறிஸ்துவப் பாதிரிகளாலே நமக்கு நேர்ந்த அவமானம் அளவில்லை.

இதைப் போன்று 1909இல் இசுலாமியர்கள் தேசபக்தி அற்றவர்கள் என்றும் ‘இந்தியா’ ஏட்டில் கருத்துப் படம் போட்டு எழுதியுள்ளார்.

இன்றைக்கு ஆர்.எஸ்.எஸ்.காரர்கள், “இந்தியாவில் மொழிப் பிரச்சினை தீர ஒரே வழி சமஸ்கிருதம்தான் இந்தியாவின் பொது மொழியாக வேண்டும் என்கின்றனர்.

இதே கருத்தைப் பாரதி, இந்தியாவிற்குப் பொது மொழியாக சமஸ்கிருதம்தான் வரவேண்டும் என்று 1920 இலேயே எழுதியுள்ளார்.

ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் சமஸ்கிருதம் மட்டும்தான் (தேவ பாஷை) தெய்வமொழி என்கின்றனர். பாரதியும் இதே கருத்தைத் தான் கூறியுள்ளார்.

பாரதி, இன்னும் தீவிரமாக ஒரு படி மேலே போய், இந்தியாவிற்குச் சுதந்திரம் ஏன் தேவையென்றால் இந்து தர்மத்தைக் காப்பாற்றவே என்று, 1921இல் ‘லோக குரு பாரதமாதா’ என்ற தலைப்பில் எழுதியுள்ளார்.

“எத்தனையோ நூற்றாண்டுகளாக இந்தியாவின் நெஞ்சில் வேதாந்தக் கொள்கை ஊறிக்கிடக்கிறது. ஆனால் இக்கொள்கையை முற்றும் அனுஷ்டித்தல் அன்னிய ராஜ்ஜியத்தின் கீழே ஸாத்யப் படவில்லை. ஆதலால் நமக்கு ஸ்வராஜ்யம் இன்றியமையாதது. இந்தியா ஸ்வராஜ்யம் பெறுவதே மனித உலகம் அழியாது காக்கும் வழி.’’

பாரதி அகண்ட பாரதக் கொள்கை உடையவர். என்றைக்கும் இந்தியா உடையக் கூடாது என்பதில் மிகவும் உறுதியானவர். பாரதியின் காலத்திலேயே 1917இல் தெலுங்கர்கள் தங்களுக்குத் தனி மாகாணம் தேவை என்ற கொள்கையை முன்வைத்தார்கள். அப்போது பாரதி கீழ்க்கண்ட கருத்துகளை முன்வைக்கிறார்:

“என்னுடைய அபிப்ராயத்தில் மேற்கண்ட கொள்கையெல்லாம் நியாயமென்றே தோன்றுகிறது. ஆனாலும் அந்தச் சமயத்தில் ஆந்திரத்தைத் தனிப்பிரிவாக ருஜுபடுத்துவதைக் காட்டிலும், ஆப்கான் முதல் குமரி வரை உள்ள ஹிந்துக்களெல்லாம் ஒரே கூட்டம். வேதத்தை நம்புவோரெல்லாம் ஸஹோதரர். பாரத பூமியின் மக்களெல்லாம் ஒரே தாய் வயிற்றுக் குழந்தைகள். நமக்குள் மதபேதம், ஜாதி பேதம், குலபேதம், பாஷாபேதம் ஒன்றும் கிடையாது. இந்தக் கொள்கைதான் இந்தக் காலத்துக்கு யுக்தமானது ஹிந்து மதத்தை உண்மையாக நம்புவோரெல்லாம் ஒரே ஆத்மா, ஒரே உயிர், ஒரே உடம்பு, ஒரே ரத்தம், ஒரே குடல், என்று கூறும் பாரதி,

பாப்பா பாட்டில் கூட,

“சேதமில்லாத இந்துஸ்தானம் -_ அதை

தெய்வமென்று கும்பிடடி பாப்பா’’

என்று பாப்பா பாட்டில் கூறியுள்ளார் பாரதி.

இன்றைய ஆர்.எஸ்.எஸ்.காரர்களைப் போலவே பாரதியும் உடன் கட்டை ஏறி இறந்து போனவர்களை உத்தமிகள் என்று கூறுகிறார்.

செத்துப்போன காஞ்சி பெரிய சங்கராச்சாரி தனது தெய்வத்தின் குரலில், உடன்கட்டை ஏறுதலை மிகவும் போற்றி எழுதியுள்ளார். அந்த நெருப்பு சுடாது, சந்தனம்போல் குளிர்ச்சியாய் இருக்கும், புடவைகூட எரியாது என்றும், அவ்வாறு உடன்கட்டை ஏறும் பெண்கள் உத்ததமிகள் என்று எழுதியுள்ளார்.

இதே கருத்தை அன்றைக்கே பாரதி எழுதியுள்ளார், என்பதிலிருந்து அனைத்து சனாதன செயல்பாடுகளுக்கும் பாரதி முன்னோடி என்பது விளங்குகிறது.

இன்றைய ஆர்.எஸ்.எஸ்.காரர்களின் கொள்கைகளை அன்றைக்கு வகுத்துக் கொடுத்தவர் பாரதியார் என்று ஆணித்தரமாக நாம் சொல்லலாம்.

சுருங்கக் கூறின், இந்துக்களின் மக்கள் தொகை குறைந்து கொண்டே வருதல், இசுலாமியரும், கிறித்துவரும் மத மாற்றத்தில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் தேசபக்தி அற்றவர்கள், கிறித்துவர் பள்ளிகளில் இந்து மாணவர்களைச் சேர்க்கக் கூடாது. முகமதியர்களும், கிறித்துவர்களும் இந்துக்களின் விரோதிகள், இந்தியா முழுவதும் ஒரே நாடாக இருக்க வேண்டும். உலகம் முழுவதும் இந்து மதத்தைப் பரப்ப வேண்டும் என்று தனது இந்து மத வெறியை வெளிப்படுத்திய பாரதி மற்ற மதங்களின் மீது வெறுப்பைக் கக்கினார் என்று உறுதியாகிறது.

(தொடரும்…)