பக்கங்கள்

புதன், 7 நவம்பர், 2018

வடக்கே இராவணன் பெயர் வைக்கப்படவில்லையா?

”ஊசி மிளகாய்''




 உத்தரப்பிரதேசத்தில் ஒரு பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். சாமியார் ஒருவர் முதல மைச்சராகி, அம்மாநிலத்தையே சர்வம் காவி மயமாக்கி' ஆட்டம் போட்டுக்கொண்டு ஆட்சி புரிகிறார் - ஆதித்தியநாத் என்ற ஒரு நபர்.

இவர் ஒரு கருத்தை - தவறான கருத்தை உளறிக் கொட்டியுள்ளார்!

யாரும் இராவணன்'' என்று பெயர் சூட்டு வதே இல்லை என்று தோள் தட்டியுள்ளார்.

ஒருமுறை  ஒரு நண்பர் கேட்ட இதே கேள்விக்கு அருமையாக விடையளித்து, எங்கள் எல்லோரையும் வியப்புக் கடலுக்குள் தள்ளினார் தந்தை பெரியார்!

வடநாட்டில் இராவணன்'' என்ற பெயர் வைக்கவில்லை என்று சிலர் கேட்கின்றனர்! வடக்கே மராத்திய பகுதிகள் மற்ற பல பகுதிகளில் தேஷ்முக்' என்று பெயர் சூட்டியுள்ளார்களே தெரியுமா! அது என்ன பெயர்? இராவணன் பெயர்தானே தேஷ்முக்'' என்பது. தசமுகன், தஸ்முக், தேஷ்முக் ஆகியன 10 தலை, முகங்கொண்ட இராவணன்தானே - தச என்றால் பத்து. முகன் என்றால் முகம் - பத்து முகங்கள், பத்து தலைகள் என்ற கதைப்படி அமைந்த பெயர் அது'' என்றார்!

கேட்ட அனைவரும் ஆச்சரியத்தோடு ஆரவாரம் செய்தனர்!

’சிந்தாமன் தேஷ்முக்' - இந்தியாவின் பிரபல நிதியமைச்சராக இருந்தவர்; ரிசர்வ் வங்கி கவர்னர் - பெரிய நிதித்துறை வல்லுநர் (இவர் மராத்திப் பார்ப்பனர்) - துர்காபாய் என்ற ஆந்திர அம்மையாரை பிற்காலத்தில் திருமணம் செய்துகொண்டவர்; அந்த அம்மையார் உருவாக்கியதுதான் சென்னை அடையாறில் உள்ள பிரபல ஆந்திர மகிளா சபா  - பெண்கள் அமைப்பு.

பஞ்சாபராவ் தேஷ்முக் உள்துறை இணை அமைச்சராக இருந்தவர் - நாகபுரி யைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட சமூகப் போராளி!

இப்படி தசமுகத்தவர் பலர் உள்ளனர். தமிழ்நாட்டில் இராவணன்கள் ஏராளம் தந்தை பெரியாரின் அறிவுப் புரட்சியால் உண்டே!

அய்யிரண்டு திசைமுகத்தும் தன் புகழை வைத்தோன்' என்று பாடினாரே புரட்சிக்கவிஞர் -

எட்டுத்திசை + மேல் - கீழ் எல்லாம் சேர்த்து அய்-இரண்டு - பத்து திசை புகழ் பெற்ற இதிகாச தசமுகன் - இராவணன் என்று புரிந்துகொள்வீர்!

- விடுதலை நாளேடு, 7.11.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக