* மின்சாரம்
கேள்வி 1 : விஜயபாரதத்தில் ஈ.வே.ரா.வை "பெரியார்" என்று குறிப்பிடுவதில்லையே ஏன்?
பதில்: அவர் திராவிட இயக்கத்தினருக்குப் பெரியாராக இருக்கலாம். விஜயபாரதத்தைப் பொறுத்தவரையில் அவர் ஈ.வே.ராமசாமி நாயக்கர் தான்.
நமது சாட்டை: அப்படியா! ஜாதியை ஒழிப்ப தற்காகப் பணியாற்றிய தலைவர் & 1927ஆம் ஆண்டிலேயே நாயக்கர் பட்டத்தைத் தூக்கி எறிந்தவர். அப்படிப்பட்ட தலைவரை ஜாதியைச் சேர்த்து வெளியிடுவதுதான் விஜயபாரதத்தின் நிலைப்பாடு என்றால் இது விஜய பாரதத்தின் அறிவு, நாணயமற்ற தன்மையையும், ஜாதி இருந்தால் தான் பார்ப்பன உயர் ஜாதித் தன்மையை நிலை நிறுத்த முடியும் என்ற ஆதிக்கத் திமிரை யும்தான் வெளிப்படுத்துகிறது.
இந்தக் கொள்கையுடைய கட்சி மக்களிடையே சமத்துவத்தை விரும்புமா? இப்படியே தொடர்ந்து இந்தக் கும்பல் எழுதி வரட்டும், பேசியும் வரட்டும். கொஞ்ச, நஞ்சம் இருக்கும் கட்சியும் காலா வதியாகக் கடைக்கால் போடுகிறார்கள் என்று பொருள்.
"விஜயபாரதம்" பெரியார் என்று சொல்லாததால் அவரின் மரியாதை குறைந்து போய் விடாது. மாறாக இப்படி எழுதுபவர்களின் மரியாதைதான் - (அப்படி ஒன்று இருந்தால்) காற்றில் பறந்தே போகும்.
பெண்கள் மாநாடு கூட்டி (1938 நவம்பர் 7) கொடுத்த பட்டம் அது. லோகக் குரு என்று தனக்குத்தானே சூட்டிக் கொள்ளும் பட்டமல்ல.
ஜாதி எல்லாம் நாங்கள் பார்ப்ப தில்லை என்று எந்தக் காவிப் பேர் வழியாவது சொன்னால் அவரின் முகத்தில் இந்த விஜய பாரதத்தைத் தூக்கி எறியுங்கள்.
கேள்வி 2: பிராமணர்கள் தமிழர்களா?
பதில்: தி.க.காரன் அகராதியில் அவர்கள் தமிழர்கள் இல்லை. ஆனால் முஸ்லிம்களையும், கிறிஸ்தவர்களையும் தமிழர்கள் என்று ஏற்றுக் கொள்வார்கள். அதாவது தீபாவளி, பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடுகிற பிராமணர் தமிழன் இல்லை. கிறிஸ்தவர், ரம்ஜான், பக்ரீத் கொண் டாடுபவன் தமிழன்... இது எப்படியிருக்கு...!
நமது சாட்டை: தமிழர்களில் பிராமணன் ஏது? தன்னைப் பிராமணன் என்று சொல்லிக் கொள்பவன் எப்படி தமிழனா வான்? தன்னை பிராமணன் என்று சொல்லிக் கொள்வதன் வழி இந்நாட்டுக்குரிய தமிழர் களை சூத்திரன் &- பஞ்சமன் & பார்ப்பனர்களுக்கு வைப்பாட்டி மகன் என்று சொல்பவன் எப்படி தமிழனாக இருக்க முடியும்?
தமிழன் கட்டிய கோயிலில் தமிழன் அர்ச்ச கனாகக் கூடாது, தமிழ் வழிபாட்டு மொழியாகக் கூடாது என்பவன் எப்படி தமிழன் ஆவான்?
தமிழர்களில் மதமற்றவர்கள் உண்டு. பல மதங்களைச் சார்ந்தவர்கள் உண்டு. பல்வேறு மதங்களில் இருப்பதாலேயே அவர்கள் தமிழர்கள் அல்லர் என்று கூற முடியுமா?
ஆனால் தமிழன் தன்னை இந்து என்று மட்டும் சொல்லக் கூடாது; இந்து என்று ஒப்புக் கொண்டால் "விஜயபாரதம்" நம்பும் அந்த வருணதர்மப்படி, ஜாதித் தர்மப்படி தங்களை சூத்திரன் &- வேசி மகன் என்று ஏற்றுக் கொள்ள நேரிடும் &- தாழ்த்தப் பட்ட மக்கள் தங்களைப் பஞ்சமர்கள் என்று ஒப்புக் கொள்ளும் இழிவுதானே வந்துசேரும்.
கேள்வி: 3 ஈ.வே.ரா. சிலைமீது செருப்பு வீசும் சம்பவங்கள் தொடர்கிறதே?
பதில்: தவறுதான், கண்டிக்கப்பட வேண்டியதே. ஆனால் இப்போது இதற்காக கூச்சல் போடுகிறவர்கள் பிள்ளையார் படத்திற்கும், ராமர் படத்திற்கும் செருப்பு மாலை போட்டபோது வேடிக்கை பார்த்தார்களே... அது நியாயமா?
நமது சாட்டை: ராமனுக்குச் செருப்பு மாலை பற்றிப் பரப்பப்படும் அக்கப்போரின் பின்னணி என்ன?
சேலத்தில் 1971இல் திராவிடர் கழகத்தின் சார்பில் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாடும், அதனை யொட்டி ஊர்வலமும் நடைபெற்றது. ஊர்வலத்தில் ட்ரக்கில் அமர வைத்து அழைத்துச் செல்லப்பட்ட தந்தை பெரியார்மீது செருப்பை வீசியவர்கள் ஜன சங்கத்துக்காரர்கள் அல்லவா? - அதனுடைய எதிர்வினை தான் ராமனுக்கு செருப்பு மாலை.
ஒன்றை மறைத்து இன்னொன்றைப் 'பூதாகரப் படுத்துவது' 'பூதேவர்களான' பார்ப்பனர்களுக்குக் கை வந்த கலையாகும்.
இன்னொன்றும் முக்கியம். தவமிருந்த சம்பூகன் சூத்திரன் என்பதற்காக அவன் தலையை வாளால் வெட்டிக் கொன்றானே; அதனை எப்படி நியாயப் படுத்தும் விஜயபாரதங்கள்? கொலையைவிட செருப்படி ராமனுக்குச் சாதாரணம்தான்.
ஆமாம் -& ஈரோட்டை அடுத்த சதுமுகையில் பிள்ளையார் சிலைக்குச் செருப்பு மாலை போட்டவர்கள் யார்? கருப்புச் சட்டைக்காரர்கள் என்று பழி சுமத்தியவர்கள் யார்? காவல்துறை வகையாகக் கவனித்த நிலையில் அந்தக் காரியத்தைச் செய்தவர்கள் இந்து முன்னணியினர் என்று அம்பலமாகிடவில்லையா?
கேள்வி: 4 கருணாநிதிக்கு 'பாரத ரத்னா' விருது கொடுக்க வேண்டும் என்கிறார்களே?
பதில்: இது ரொம்ப ஓவரா தெரியுமே.
நமது சாட்டை: கலைஞருக்கு பாரத ரத்னா கொடுத்தால் விருதுக்குத்தான் பெருமை. எம்.ஜி.ஆருக்குப் பாரத ரத்னா விருது. ஆனால் அவருக்குத் தலைவராக இருந்த அண்ணாவுக்கு இந்த விருது அளிக்கப்படவில்லை. பாரத ரத்னா பஜனையில் சுண்டல் கொடுப்பது மாதிரியாகி விட்டதே! கிரிக்கெட் விளையாட்டுக்காரர் டெண் டுல்கர் வரை பாரத ரத்னா அளிக்கப்பட்டு அந்த விருதின் "கவுரவம்" 'டக்கவுட்' ஆகி விட்டதே!
பச்சை ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனரும், பனாரசில் இந்துக் கல்லூரி நிறுவனருமான மண்ணுருண்டை மதன் மோகன் மாளவியாவுக்கே பாரத ரத்னா வழங்கியாயிற்று... இந்த ஆர்.எஸ்.எஸ். ஆட்சியில்!
-என்ன அந்த "மண்ணுருண்டை" முத்திரை தெரியுமா? ஓர் இந்துவாக இருக்கக் கூடியவன் கடலைத் தாண்டிப் போகக் கூடாதாம். அதனால் இலண்டனில் நடந்த வட்ட மேஜை மாநாட்டில் கலந்து கொள்ள கடலைத் தாண்டிப் போக வேண்டிய அவசியம் ஏற்பட்டதால் இந்தியாவிலிருந்து ஒரு உருண்டை மண்ணையும் எடுத்துச் சென்றார் (தோஷம் கழிக்கத் தானாம்). பார்ப்பனர்கள் நினைத்தால் சாஸ்திரங்களையும் உண்டாக்கு வார்கள்; அவர்களின் வசதிக்கேற்ப தோஷத்தைக் கழிக்க இதுபோன்ற மலிவான நிவாரணங்களையும் கைவசம் ரெடியாக வைத்திருப்பார்கள். மாளவியா போன்ற மண்ணுருண்டைகளுக்குக் கொடுக்கப் பட்ட பாரத ரத்னா கலைஞருக்குக் கொடுக்கப் படாததே மேல்!
இவர்கள்தான் கலைஞருக்கு - & ஒப்புக்கு இரங்கல் தெரிவிக்கிறார்களாம்!
- விடுதலை நாளேடு, 16.11.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக