தமிழர்கள் கொண்டாடும் "பண்டிகைகளின்'' பெயர்கள் தமிழில் இல்லையே - ஏன்?
ஆரிய வடமொழி இறக்குமதிகள் என்பது இதன்மூலம் விளங்கவில்லையா?
தமிழர்கள் கொண்டாடும் பண்டிகைகளின் பெயர்கள் தமிழில் இல்லாமல் இருப்பதன்மூலம் அவற்றிற்கும், தமிழர்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று தெரியும் நிலையில், அவை சூத்திரத்தன்மையை நிலைநிறுத்தும் காரணத்தால், அவற்றை தமிழர்கள் கொண்டாடுவது கூடாது என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
திராவிட இனத்தினை இழிவுபடுத்தும் ஆரியப் பண்டிகைகளின் பெயரைப் பார்த்தாலே அவை வடக்கே இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை என்பது எளிதில் புரியும்.
பண்டிகைகளின் பெயர்கள் தமிழில் உண்டா?
தீபாவளி
ஸ்கந்தர் சஷ்டி
கோகுலா அஷ்டமி
இராம நவமி
மகிஷாசுர வதம்
அட்சய திருதி
ஆவணி அவிட்டம்
சரசுவதி பூஜை
விஜயதசமி
கிருஷ்ண ஜெயந்தி
அனுமன் ஜெயந்தி
நாரதர் ஜெயந்தி
பிரதோஷம்
நவராத்திரி
சூரசம்ஹாரம்
கார்த்திகை தீபம்
பங்குனி உத்திரம்
ஸ்ரீ வரலட்சுமி விரதம்
ஸ்ரீ மஹா சங்கட ஹர சதுர்த்தி
இவைகள் எல்லாம் தமிழ்ப் பெயர்களா?
தமிழர்களுக்குரியவை என்றால் இப்படியா பெயர்கள் இருக்கும்? சிந்திக்க வேண்டாமா தமிழர்கள்?
விழாக்கள் அல்ல - பண்டிகைகள்!
1. தமிழன் தன்னைத் தாழ்த்திக் கொள்வது இப்படிப்பட்ட பண்டிகைகளைக் கொண்டாடுவதன்மூலமே!'' வடக்கே இருந்து - படையெடுத்த - புராணக் கதைகள் - இதிகாசப் பிதற்றல்களை - கற்பனைகளை நம்பச் செய்து, நமது தமிழ் மக்களின் மூளைக்குச் சாயமேற்றி, காயமேற்றிய வடமொழி - ஆரியப் பண்டிகைகள் ஆகும்.
2. வேதங்களை, பார்ப்பனரல்லாதார் - குறிப்பாக சூத்திரர்களும், பெண்களும் படிக்கக் கூடாது'' என்ற தடை காரணமாக (பெண்கள் ஆரியர்களுடன் பெரி தும் வராதவர்கள் ஆதலால் அவர்களும் 'நமோ சூத்திரர்கள்'என்றே அழைக்கப்படுகின்றனர்) புராண இதிகாசங்களை ஏற்படுத்தி, ஆரியரல்லாத மக்களின்மீது ஒரு பண்பாட்டுப் படையெடுப்பை நிகழ்த்தினர்.
சூத்திர இழிவை ஒழிக்க தந்தை பெரியார் கூறியது என்ன?
3. சூத்திரர்கள்' என்றால் பார்ப்பனரின் நிரந்தர அடிமைகள் - தாசி மக்கள் போன்ற ஏழு பொருள் உண்டு என்று மனுதர்மத்தில் 8 ஆவது அத்தியாயத்தில் 415 ஆம் சுலோகத்தில் கூறப்பட்டுள்ளது.
எவ்வளவு காலத்திற்குத் தமிழர்கள் - திராவி டர்கள் மேலே காட்டிய பண்டிகைகளைக் கொண்டாடு கிறார்களோ அவ்வளவு காலத்திற்கும் அவர்களது பிறவி இழிவு - சூத்திரத்தன்மை - சாஸ்திரப்படி (சட்டப்படி ஒழிந்தாலும்கூட) - நீங்கவே நீங்காது.
இதை ஆழமாகப் புரிந்துதான் சுயமரியாதைச் சூரணத் தைத் தந்த ஞான சூரியன் தந்தை பெரியார் எளிதான அறிவுரை ஒன்றைக் கூறினார்:
தமிழர்களே, உங்கள் சூத்திரப் பட்டம் ஒழிய
* கோவிலுக்குப் போகாதீர்!
* நெற்றிக் குறிகளை இடாதீர்!
* இந்து மதப் பண்டிகைகளைக் கொண்டாடதீர்!
* பார்ப்பானை பிராமணன்' என்று அழையாதீர்
இந்த நான்கு தீர்வுகளும்தான், தமிழனை - திராவி டனை மானமுள்ள மனிதனாக்கும்!
ஒவ்வொன்றையும் ஆராய்ந்து சிந்திக்காது, அதனைக் கடைப்பிடிப்பதால் நம் மக்கள் தங்கள் சூத்திர' இழிவை - சூத்திர' தன்மையை பாதுகாத்துக் கொண்டவர்கள் ஆகிறார்கள், மான உணர்வின்றி!
இந்துப் பண்டிகைகளுக்கு வாழ்த்துத் தெரிவிக்காதது ஏன்?
கோவில், நெற்றிக் குறிகள், இந்து (ஆரிய) பண்டிகை கள், பிராமணன்' என்று அழைத்துத் தம்மை சூத்திரன்' என்று ஒப்புக்கொள்ளும் தன்மையை உறுதி செய்கின்றன.
இதைப் புரிந்துகொள்ளாமலோ அல்லது புரிந்து கொண்டும் புரியாததுபோல காட்டிக் கொண்டோ, திசை திருப்ப - நம் இனத்தவர் பலரைக் குழப்ப, ஏதோ பெரிய கண்டுபிடிப்புப்போல ஒரு கேள்வியை திரும்பத் திரும்ப முன்வைக்கின்றனர் பார்ப்பனர் - ஆர்.எஸ்.எஸ். - இந்து முன்னணி கம்பெனியினர்!
ஏன் திராவிட இயக்கத்தவர்கள் - பகுத்தறிவாளர்கள் இந்து பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்துத் தெரி விப்பதில்லை -
மற்ற மதப் பண்டிகைகளை எதிர்ப்பதில்லையே'' என்கிறார்கள்.
எம்மதமும் சம்மதம் இல்லை
உண்மையான பகுத்தறிவாளர்களுக்கு எம்மதமும் சம்மதம் இல்லை. வடலூரார் கூறியபடி, மதமான பேய் பிடியாதிருக்கவேண்டும்'' என்பதே அவர்தம் கொள்கை - அணுகுமுறை!
ஆனால், மற்ற மதத்தவர்களின் பண்டிகைகள் தமிழர்களை - திராவிடர்களை சூத்திரர்களாக்கு வதில்லையே! பார்ப்பானுக்கு வைப்பாட்டி மக்கள், தாசி புத்திரர்கள்'' என்ற பொருள் கொண்ட சூத்திரப் பட்டத்தை'ச் சுமத்துவதில்லையே!
அதனால்தான் பெரும்பாலான நம்மக்கள் இழிவு படுத்தும் இந்து மதப் பண்டிகைகளைக் கொண்டாடா தீர்கள் என்று திராவிடர் கழகம் -
மானமும் அறிவும் மனிதர்க்கழகு'' என்று உரைக்கும் சுயமரியாதை இயக்கம் தெளிவுபடுத்துகிறது!
புண்பட்ட இடத்திற்கே மருந்து!
புண்பட்ட இடத்திற்கே மருந்து போடவேண்டும்; வியாதி உள்ள இடத்திலேதான் அறுவை சிகிச்சை தேவை!
உடலின் மற்ற இடங்களிலும் ஏன் அறுக்கவில்லை என்பதோ, ஏன் மருந்து தடவவில்லை என்பதோ அபத்த மான அறிவீனக் கேள்வி அல்லவா?
எனவேதான், தந்தை பெரியார் சூத்திரப் பட்டம் ஒழிய,
இந்து பண்டிகைகளைக் கொண்டாடாதீர்'' என்று கூறினார், புரிந்துகொள்ளுங்கள்!
மூடத்தனம் எங்கிருந்தாலும் கண்டிப்பது வேறு;
இழிவு போக்கும் முன்னுரிமை வேறு!
இதைப் புரிந்துகொள்ளுங்கள்!!
கி.வீரமணி,
தலைவர் திராவிடர் கழகம்.
சென்னை
6.11.2018
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக