***தஞ்சை. கே.பக்கிரிசாமி***
ராஜ ராஜ சோழன் கி.பி. 985-இல் மன்னனாக பதவியேற்றான். தந்தை பெயர் சுந்தரச்சோழன். இவருக்கு மூன்று பிள்ளைகள். முதல் மகன் பெயர் ஆதித்தகரிகாலன். இரண்டாமவர் குந்தவை நாச்சியார். மூன்றாவதாக அருள்மொழி வர்மன் என்கிற ராஜராஜ சோழன். பட்டத்து இளவரசரான ஆதித்த கரிகாலன் தன் தந்தையிடம் கோபித்துக் கொண்டு சிறுபடையுடன் சென்று காஞ்சிபுரத்தில்தங்கி இருந்தான். தன் தந்தை யான சுந்தரச்சோழன் உடல்நலக்குறைவு ஏற்பட்ட செய்தி வந்தவுடன் தந்தையைக்காண தஞ்சைக்கு விரைந்து வந்தான். வரும் வழியில் மர்மமான முறையில் சிலரால் கொல்லப்பட்டான்.
பட்டத்து இளவரசர் கொலை செய்யப்பட்டதை கேள்விப்பட்ட சுந்தரச்சோழன் புத்திர சோகத்தால் மரணமடைந்தான். அடுத்து சுந்தர சோழனின் தம்பியும், ராஜ ராஜ சோழனின் சித்தப்பாவுமாகிய உத்தமச் சோழன் மன்னராக பதவியேற்றார். பன்னிரெண்டு ஆண்டுகள் மன்னராக ஆட்சிப்புரிந்தார். அதன் பிறகு அருள் மொழிவர்மன் என்கிற ராஜராஜசோழன் கி.பி. 985-இல் மன்னராக பதவியேற்றான்.
ஆதித்த கரிகாலன் கொலை செய்யப்பட்டு பதினான்கு ஆண்டுகளுக்கு பின்பு கொலைபற்றிய விசாரணை நடத்தினான் ராஜராஜசோழன். கொலை செய்ததாக கூறி நான்கு பேர் மன்னர்முன் நிறுத்தப்பட்டனர். விசாரணையில் அந்த நான்கு பேரும் கொலையாளிகள் என தீர்மானிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது. விசித் திரமான தண்டனை! கொலையாளிகளின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு நாடுகடத்தப்பட்டனர். பட்டத்து இளவரசனை எதிர்கால மன்னனை கொலை செய்ததற்கு வழங்கப்பட்ட தண்டனை இதுதான். காரணம் அவர்கள் அனைவரும் பிராமணர்கள். பிராமணர்களுக்கு கொடுந்தண்டனை வழங்க சட்டத்தில் இடமில்லை. ஏனென்றால் பிராமணியம் உச்சத்தில் இருந்தது. ராஜராஜன் ஆட்சிக்காலத்தில் தங்களை மனுநீதி காப்போர்கள் என்றும், நால்வருண நெறியை நிலைநிறுத்துவதே தங்களின் தருமம் என்றும் குறிப்பிட்டுள்ளனர். நிலத்தின் முதல் உரிமை பிராமணர்களுக்கு வழங்கப்பட்டது.
பிராமணர்களை எதிர்த்து கலகம் செய்தவர்களுக்கு 20,000 காசு தண்டம் விதிக்கப்பட்டது. உடன்கட்டை ஏறும்பழக்கம் இருந்தது. ராஜ ராஜனின் தாய் வானவன் மாதேவி தன் கணவர் இறந் ததும் உடன்கட்டை ஏறினார். பெண்கள்அடிமைகளாக விற்கப்பட்டனர். சமஸ்கிருதம் போதிக்க பெரிய அளவில் கல்லூரிகள் இருந்தன. ஆக மொத்தம் பிராமணியம் உச்சத்தில் இருந்தது. சுமார் 400 ஆண்டுகள் சோழர்கள் ஆட்சி இருந்தது. நாடு முழுவதும் இதே நிலைதான்.
அதன் பிறகு மொகாலய மன்னர்களின் படையெடுப்பு இந்தியாவில் நடை பெற்றது. பாபர் துவங்கி ஹீமாயூன், அக்பர், ஜஹாங்கீர், ஹாஜகான், அவுரங்கசீப் கடைசி மன்னர்பகதூர்ஷா. 1526-இல் பாபர் துவங்கி 1712-இல் பகதூர்ஷா வரை மொகாலய மன்னர்களின் ஆட்சி காலத்தில் பிராமணியம் ஒடுக்கப்பட்டே இருந்தது. நிலத்தின் மீதான அவர்களுடைய முதல் உரிமையை இழந்தார்கள். முஸ்லிம் அல்லாதவர்கள் மீது புதிய வரிகள் விதிக்கப்பட்டன. அவுரங்கசீப் காலத்தில் இது உச் சத்தை தொட்டது. கஜினி முகம்மது முதல் மாலிக்காபூர் வரை படையெடுத்து வந்து இந்து கோவில்களை கொள்ளையடித்து சென்றனர். மாலிக்காபூர்தஞ்சை வரை படையெடுத்து வந்ததாக வரலாறு கூறுகிறது. பின்பு வெள்ளையர்கள் 1947வரை 200 ஆண்டுகள் இந்தியாவை ஆட்சி புரிந்தனர். கிழக்கிந்திய கம்பெனி என்றபெயரில் வியாபாரம் செய்ய வந்தவர்கள் இந்தியாவை அடிமைப்படுத்தி பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தனர். கடைசி மொகலாய மன்னன் பகதூர்ஷாவை கைது செய்து பர்மாவில் சிறை வைத்தனர். 1712-இல் பகதூர்ஷா சிறையிலேயே மரணம் அடைந்தார். பிரிட்டிஷ் ஆட்சியிலும் பிராமணியம் ஒடுக்கப்பட்டே வந்தது.
இந்த நிலையில் சிலர் பிராமணியம் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க முயற்சி செய்தனர். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் 1925 செப்டம்பர் மாதம் விஜயதசமி அன்று எக்ட் கேவாரின் வீட்டில் துவக்கப்பட்டதுதான் ஆர்.எஸ்.எஸ். என்கிற ராஷ் டீரிய ஸ்வயம் சேவக் சங்க் என்பதாகும். இந்த கூட்டத்தில் பி.எஸ்.மூஞ்சே, பரத்சவே, எக்ட்கேவார், கோல்வால்கர், சாவர்க்கர் ஆகியோர் கூடி ஆர்.எஸ்.எஸ்-அய் உருவாக்கினார்கள். இவர்களின் நோக்கம் அகண்ட பாரதத்தை உரு வாக்குவது, இந்துமத அரசை நிறுவுவது, கம்யூனிஸ்ட் வளர்ச்சியை தடுப்பது,இந்துமத வெறியை வளர்த்து இந்துக்களை முஸ்லிம்களுக்கு எதிராக அணி திரட் டுவது, இந்துத்வா கொள்கையை தேசிய கொள்கையாக மாற்றுவது, நாட்டில் கலவரங்களை ஏற்படுத்தி அதன் மூலம் பிராம ணியத்தை உச்சத்தில் கொண்டு போவது. இதுதான் இவர்களின் கொள்கை. தேசபிரி வினையை பயன்படுத்திக் கொண்டார்கள். இருதேசம் என்ற வார்த்தையை முதலில் பயன்படுத் தியது ஆர்எஸ்எஸ்தான். அடுத்து 1948 ஜனவரி 30ஆம்நாள் மாலை 5.12 மணிக்கு பிரார்த்தனை கூட்டத்தில் காந்தி நாதூராம் வினாயக் கோட்சே என்ற இந்துமத வெறியனால் சுட்டுக்கொல்லப்பட்டார். ஆனால் இந்தியப் பிரதமர் நேரு வானொலியில் ஒரு இந்து பைத்தியக்காரன் காந்தியின் வாழ்க்கைக்கு முடிவு கட்டி விட்டான் என்றார். நேருவின் உரை முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்தியது.
1949ஆம் ஆண்டு இரவோடு இரவாக பாபர் மசூதிக்குள் ராமர் சிலையை வைத்துவிட்டு பதற் றத்தை உருவாக்கினார்கள். அத்வானி தலைமையில் ரதயாத்திரை, செங்கல் ஊர்வலம் என்று கடும் முயற்சி செய்து, பாபர் மசூதி இருக்கும் இடத்தில் தான் ராமர் பிறந்தார் எனக்கூறி தேசத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி நானூறு ஆண்டுகால மசூதியை 1992 டிசம்பர் 6ஆம் தேதி திட்டமிட்டு இடித்துதரை மட்டமாக்கினார்கள். ஆனால் அவர்கள் திட்டமிட்டபடி பெரிய அளவில் கலவரத்தை ஏற்படுத்த முடியாமல் போனது. ஆனால் சேதம் ஏற்பட்டது உண்மை.
2002-இல் குஜராத்தில் ஒரு பயங்கரத்தை அரங்கேற்றி னார்கள். 2003மார்ச்சில் குஜராத்தில் நடைபெறவிருந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு மோடி - அமித்ஷா அரங்கேற்றிய கலவரம்தான் குஜராத் கலவரம். கோத்ரா சம்பவத்தை காரணம்காட்டி 2000க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொன்று குவிக்கப்பட்டனர். ஆர்எஸ்எஸ்-சின் முதல் தலைவர் எக்ட்கேவார், அடுத்து கோல்வாக்கர், தேவரஸ், சுதர்சனம், தற்போது மோகன் பகத் என மகாராஷ்டிர சித்பவன் பிராமணர்கள் மட்டுமே ஆர்எஸ்எஸ் தலைவர்களாக வர முடியும். ஒரு தலைவர் இறக்கும் முன்பே அடுத்த தலைவர் யார் என்பதை ரகசிய உயில் மூலம் தெரிவிப்பார்கள். இவர்கள்இந்து வகுப்பு வாதிகள், வர்ணாசிரம தர்மத்தை கடைப்பிடிப்பவர்கள், ஜாதிய முறையின் ஆதரவாளர்கள், பெண்ணுரிமைக்கு எதிரானவர்கள், விஞ்ஞானத்திற்கு புறம்பானவர்கள், பிரிட்டிஷ் அரசை ஆதரித்தவர்கள், காந்தியை கொலை செய்தவர்கள், பாபர் மசூதியை இடித்தவர்கள்.
இவர்கள் பாசிச முறையில் கலவரங்களை உரு வாக்குவதில் கைத்தேர்ந்தவர்கள். மதக்கலவரங்களை திட்டமிட்டு உருவாக்குபவர்கள். 600 பெயர்களில் சங்பரிவாரங்கள் செயல்படுவ தாகச் சொல்லப்படுகிறது. எதெல்லாம் ஆர்எஸ்எஸ்-க்கு எதிரானதோ அதையெல்லாம் தனதாக்கி கொள்வதில் கைதேர்ந்தவர்கள். இந்துத்வா என்ற சொல்லை முதலில் பயன்படுத்தியவர் சாவர்க்கர் ஆவார். மூன்றுமுறை தேசத்தில் ஆர்எஸ்எஸ் தடை செய்யப்பட்டது. காந்தி படுகொலை செய்யப்பட்ட பின்பு உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் படேல் ஆர்எஸ்எஸ்-அய் தடை செய்தார். அந்த வல்லபாய் படேலுக்கு ஆர்எஸ்எஸ்-சின் பாஜக அரசு சுமார் 3000 கோடி ரூபாய் செலவில் உலகிலேயே மிகப்பெரிய சிலையை நிறுவி அவரை சொந்தம் கொண்டாடுகிறது. சங்பரிவார் அமைப்புகள் அதன் அரசியல் இயக்கமான பாஜக உட்பட இணைந்து பிராமணியத்தை நாட்டில் கலவரங்களின் மூலமாகவே உச்சத்திற்கு கொண்டுபோக, இழந்ததை மீட்க தொடர்ந்து முயற்சி செய்கிறார்கள். 1967-இல் இருந்து 2017 வரை இவர்களால் நடத்தப்பட்ட கல வரங்களில் 10,000க்கும் மேற்பட்டவர்கள் இவர்களால் கொல்லப் பட்டுள்ளனர்.
பல ஆயிரம்கோடி ரூபாய் இழப்பு, இயற்கையின் சீற்றத்தில் இருந்து மீள போராடுகிறது அரசு. ஆனால் அதற்கு இடையூறாகவே தற்போது சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விசயத்தில் ஆர்எஸ்எஸ், பாஜக கும்பல் வேண்டும் என்றே பிரச்சினையை கிளப்பி கலவரத்தை நடத்துகிறது. ஆனால் சபரிமலை விசயத்தில் கேரள அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துகிறது. ஹிட்லரின் நாஜிசப்படையும், முசோலியினின் பாசிசப் படையும் ஆர்எஸ்எஸ் போல்தான் செயல் பட்டார்கள் என்பதை மறந்துவிட வேண்டாம் என்று காந்தி கூறினார். மகாத்மா காந்தியினாலே பாசிஸ்ட்கள் என்று வரையறுக்கப் பட்டவர்கள் தான் இந்த ஆர்எஸ்எஸ் காரர்கள்.
நன்றி: 'தீக்கதிர் 5.11.2018
- விடுதலை நாளேடு, 5.11.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக