தமிழ் நாட்டில் கருத்துரிமை மறுக்கப்படு வதாகக் கூக்குரல் எழுந்து கொண்டே இருக்கிறது. எஸ்.வி.சேகரும் எச்.ராஜாவும் தங்களுடைய அராஜகக் கருத்தைப் பதிவு செய்தபோது மிகப் பெரிய அளவில் எதிர்ப்புக் குரல் எழுந்தது. ஆனால் எஸ்.வி.சேகர் எத்தகைய பாதுகாப்பு நிறைந்த இடத்தில் இருந்தார் என்பது ஊரறிந்த ரகசியம்.
எச்.ராஜா எவ்வளவு செல்வாக்கு மிகுந்தவர்! பல இடங்களில் தம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டும் மரியாதை நிமித்தம் ஆளுநரைச் சந்திக்கிறார் என்றால் இது வேறு எவராலும் செய்ய முடியாத காரியம் அல்லவா? தமிழ்நாட்டில் எடப்பாடியார் ஆட்சி நடைபெறுவதாகப் பலரும் தவறாகக் கருதிக் கொண்டிருக் கிறார்கள். ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். இணைப்பு பிரதமர் மோடியின் மூலம் கட்டப் பஞ்சாயத்துச் செய்யப்பட்டது தமிழக நன்மைக்கா? அவ்விரண்டு குதிரைகளின் கடிவாளமும் மோடியிடம் இருக்கிறது! அன்றைய பொறுப்பு ஆளுநர் வித்தியா சாகர் ராவ் எத்துணை மகிழ்ச்சியுடன் எடப்பாடி - பன்னீர் கரங்களை இணைத்தார்! - " எல்லாவற்றையும் மோடி பார்த்துக் கொள்வார் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியபோது எடப்பாடி எவ்வித மறுப்பும் தெரிவிக்கவில்லையே!
இங்கே நடப்பது மனுதர்ம ஆட்சி. மனுதர்மம் என்றால் என்ன? பேராசிரியர் மனோன்மணீயம் சுந்தரனார் “மனுவாதி குலத்திற்கொரு நீதி" எனக் கூறியது புரிகிறதா?
“மனுதர்ம சாஸ்திரம்" என்னும் நூலை என்.சிவராமன் என்பவர் எழுதியுள்ளார். சென்னை-17 தியாகராயநகரிலுள்ள காளீஸ்வரி பதிப்பகம் என்னும் நிறுவனம் வெளியிட்டுள்ளது
மனுதர்ம வழிப்படி இரண்டு பெண் மணிகளும் ஆடவர் ஒருவரும் ஆட்சியை நடத்திக் கொண்டிருப்பதைச் சற்று நுட்பமாகக் கவனித்தால் நாம் எளிதாகப் புரிந்து கொள்ள முடியும்.
இருபத்தியோராம் நூற்றாண்டிலும் மனிதக் கழிவைச் சபிக்கப்பட்ட மனி தர்களே அள்ள வேண்டியுள்ள கொடு மையை விளக்கும் கக்கூஸ் என்ற ஆவணப்படத்தைத் திரையிடத் தடைவிதித்தது ஏன்? இங்கே தான் மனுதர்மம் தன் வேலையைச் செய்கிறது.
"மேலே சொன்ன மூவருக்கும் (அந்தணர், சத்ரியர், வைசியர்) உதவி செய்தல் சூத்திரரின் கடமையாகும்" எவ்வளவு நாகரிகமாக மனுதர்ம நூலில் சொல்கிறார்!"உதவி செய்வது என்பது பணிவிடை செய்தல் என்று தான் பொருள்.
ஒரு காலத்தில் ராஜாஜி முதலமைச்சராக இருந்த வேளை 1 முதல் 5 ஆம் வகுப்பு முடியவுள்ள மாணவர்களுக்குத் தொழிற் கல்வித்திட்டம் என்ற ஒன்றை அறிமுகப் படுத்தினார்.
அத்திட்டத்தின்படி மாணவர்கள் ஏதேனும் ஒருவேளை மட்டும் பள்ளிக்கு வந்தால் போதும். மீதி வேளையில் தந்தையின் தொழிலுக்கு உதவியாக இருந்து அத் தொழிலைக் கற்றுக் கொள்ளவேண்டும். சுருக்கமாகக் கூறினால் அது குலக் கல்வித்திட்டம்.
சலவைத்தொழிலாளி மகன் சலவைத் தொழிலாளியாக, முடிதிருத்துபவர் மகன் முடி திருத்துபவனாக, மனிதக் கழிவை அள்ளுபவர் மகன் மனிதக் கழிவை அள்ளுபவனாக... எத்தகைய மோசடியான திட்டம்!
“கக்கூஸ்” படம் திரையிட்டால் திரை யிடப்படும் இடம் துர்நாற்றம் எடுக்குமா? தொழிலாளியின் அவலத்தைக் கூற ஏன் தடை? சாதிய அடுக்கில் மேல்நிலையில் உள்ளவர்கள் தங்களுக்குக் கீழாகக் காலங்காலமாக இருந்து வருவோருக்கு விழிப்புணர்வு ஏற்பட்டுவிடக்கூடாது என்ற மோசமான கருத்தின் நீட்சிதான் “கக்கூஸ்” படத்துக்குத் தடை. "கக்கூஸ்” படத்தின் இயக்குநரான திவ்யபாரதி மற்றோர் ஆவணப்படத்தைத் தயாரித்தார். ஒக்கி புயலின் போது பாதிக்கப்பட்ட, நாதியற்ற மக்களின் துன்பங்களை “ஒருத்தரும் வரலே” என்ற தலைப்பில் படமாக்கினார். பிரதமர் மோடி எந்த இடத்துக்கும் நேரடியாகச் சென்று துயருற்ற மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறவில்லை . ஓர் அறையில் அமர்ந்து கொண்டு சின்னத்திரையில் புயலின் பாதிப்பைப் பார்த்து விட்டுக் கிளம்பிவிட்டார்.
இந்நிலையில் திவ்யபாரதியின் வீட்டில் காவல்துறை சோதனையிட்டது. அவ ரென்ன விஜய் மல்லையாவா, நீரவ் மோடியா? கொள்ளையர்களை விட்டு விட்டுக் கொள்கை வழி நடக்கவெண்ணும் மக்கள் தொண்டர் வீட்டில் சோதனை! அரசின் தவறான கொள்கைகள் கார்ப்பரேட் நி று வ ன ங் க ளி ன் அதிரடிக் கொள் ளைக்கு உதவி செய்யவும் இடைத்தரகர் களான பெருமுதலாளிகள், அரசியல் வாதிகள், அதிகாரிகள் ஆகியோருக்கு நலன் செய்யவுமே பயன்படுகின்றன என்ற மக்களின் எதிர்ப்புணர்வைத் துண்டறிக் கைகள் மூலம் பரப்புரை செய்த மாணவி வளர்மதி மீது குண்டர்சட்டம்.
வரி ஏய்ப்புச் செய்பவர்கள், போதைப் பொருள் கடத்துபவர்கள், மணல் கொள் ளையர்கள், கள்ளச் சாராயம் காய்ச்சு பவர்கள், லஞ்சம் வாங்குவோர், சிலைகளைத் திருடுவோர், ஊழல் செய்பவர்கள் போன்றோர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தால் பொருளுண்டு.
மாணவி வளர்மதி மேற்கூறிய குற்றங்களில் எதையேனும் செய்தவரா? அரசின் மோசடித் திட்டங்களை எதிர்த்துப் பரப்புரை செய்தால் குண்டர் சட்டமா ? நகைப்புக்கு இடமாகத் தோன்றவில் லையா?
திவ்யபாரதியின் மீதும் வளர்மதியின் மீதும் அரசுக்கு அவ்வளவு அச்சமா!
சேலம் - சென்னைஎட்டுவழிச்சாலைத் திட்டத்தில் தன் மாற்றுக்கருத்தைக் கூறுவோரின் வாயடைக்க அறிவார்ந்த அதிகாரிகளின் ஆலோசனைப்படி செயல்பட வேண்டிய அரசு ஏன் பதறுகிறது? சாலைக்குள் மறையப் போகும் விளை நிலங்களையும் அதனால் சீரழியப் போகும் மக்களின் வாழ்வைப்பற்றியும் திரைப்பட நடிகர் மன்சூர் அலிகான் பரப்புரை செய்தால் அவர் மீது ஏன் வழக்குப் போட வேண்டும்?
ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டம் தொடர்பாக மே 17 இயக்கத் தலைவர் திருமுருகன் காந்தி மீது தேசத் துரோகப் புகாரின் மீது கைது நடவடிக்கை. அரசின் கருத்துப்படி ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் தேச விசுவாசிகள்! எதிர்ப்பாளர்கள் தேசவிரோதிகள்! அனைத்தினும் மேலாகச் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக அவர் மீது பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
விடுமுறை நாளானதால் நீதிபதியின் இல்லத்தில் விசாரணை நடந்தது. கொலை முயற்சி என்ற பிரிவை நீதிபதியே நீக்கும் அளவுக்குக் காவல் துறையின் சட்ட ஞானம் உள்ளது! கருணாஸைக் கைது செய்வதில் தீவிரம் காட்டிய அரசு எஸ்.வி.சேகர், எச்.ராஜா விஷயத்தில் ஏன் மெத்தனமாக இருக்கிறது என்று அனைத்துக் கட்சித் தலைவர்களும் கேட்டனர். ஆனால் இங்கேதான் மனுதர்ம சூட்சுமம் உள்ளது.
மனுதர்மம் கூறுகிறது. “பிறன் மனைவியைக் கூடும் ஒருவனைக் காய்ச்சிய இரும்புப் படுக்கையில் படுக்க வைத்து, உடல் வேகும்வரை துன்பம் செய்ய வேண்டும்... கற்புடைய சத்திரிய, வைசியப் பெண்ணைப் புணரும் அந்தணனுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும்... பிராமணன் தவறு செய்தால் அவனது தலையை முண்டனம் செய்தால் (மொட்டையடித்தால் போதும்”. இப்பொழுது புரிகிறதா பிறர் மீது வழக்கு, கைது நடவடிக்கை, குண்டர் சட்டம் எஸ்.வி.சேகர், எச்.ராஜா சுற்றுலாப்பயணி களாக சுதந்திர மாகத் திரிவது ஏனென்று?
கலைஞர் கருணாநிதி இறப்பின்போது மு.க.ஸ்டாலின் எந்தவிதமான கவுரவமும் பாராமல் எடப்பாடியைச் சந்தித்து மெரினாவில் அடக்கம். செய்ய இடம் கோருகிறார். ஆனால் மனுதர்மம் கூறியுள்ள வருணாசிரம தருமப் பிரச்சினை வந்துவிட்டதே!
வர்ணாசிரம தர்மங்கள் பற்றிப் பிரச்சி னைகள் வரும்போது அந்தணரைக் கொண்டே ஓர் அரசன் அந்தப் பிரச்சி னையைத் தீர்க்கவேண்டும்" என மனுதர்மம் கூறுகிறது..
எடப்பாடி தலைமைச் செயலாளரான கிரிஜாவிடம் யோசனை கேட்கிறார்; அம்மையார் யோசிக்கிறார். ஜெயலலிதா அருகில் ஒரு சூத்திரரா? கூடாது. கலைஞரின் பூத உடலுக்கு மெரினாவில் இடம் தர இயலாதென்று மு.க.ஸ்டாலி னுக்குக் கிரிஜா கடிதம் அனுப்புகிறார்.
எடப்பாடியிடம் தான் ஸ்டாலின் கோரிக்கை வைத்தார். இங்கே கிரிஜாவுக்கு என்ன வேலை? நான் முதலில் குறிப்பிட்ட மும்மூர்த்திகளில் ஒருவரான கிரிஜா தம் வர்ணாசிரம தர்மத்தை நிலைநாட்டக் கிடைத்த வாய்ப்பைப் பயன் படுத்திக் கொண்டார்.
நீதிமன்றம் பூசிய கரி கிரிஜா முகத்திலும் எடப்பாடி முகத்திலும் தானே!
"பிராமணர்களில் வேதம் படித்தவன் சிறந்தவன். இவர்களிலும் விதிவிலக்கு களைத் தீர்மானம் செய்வோர் மேலோர் ஆவர்” என்று மனுதர்மம் கூறுகிறது.
ஏனையோர் வழக்குகளில் சிக்கிக் கைது செய்யப்படும் நிலையில் எஸ்.வி.சேகரும், எச்.ராஜாவும் விதிவிலக்காகச் சவடால் பேசிக்கொண்டு அலைகின்றனர். சுருளி சாரல் விழாவில் பங்கு பெற்ற ஓ.பி.எஸ். மாநிலத்தில் சட்டம், ஒழுங்கைச் சீர் குலைக்கும் வகையில் யார் பேசினாலும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் கைது செய்யப்படுவர் என்று பேசினார். ஆனால் சேகர், ராஜா என்றால் ஏன் பம்மிக் கொள்கிறார்?
வைரமுத்துவுக்குக் கண்டனம் தெரிவித்த ஜீயர் “சோடா பாட்டில் வீசுவேன் என்று சொன்னபோது ஓ.பி.எஸ் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?”
தம் கட்சியிலுள்ளவர்கள் பொறுப்பில் லாமல் பேசுவதைக் கண்டிக்க வேண்டிய பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை, கருணாஸ் விவகாரத்தில் தடம் மாறிப் பேசுகிறார்.
“நடிகர் கருணாஸ் பேசிய பேச்சு வரம்பு மீறிய செயல். அவரைக் கைது செய்ய நானே வலியுறுத்தி இருந்தேன். யாராக இருந்தாலும் வரம்பு மீறிப் பேசிவிட்டு, பேசியது தவறு என்று மன்னிப்புக் கேட்பது மிகவும் தவறானது” என்று தமிழிசை கூறியுள்ளார்.
எஸ்.வி.சேகரையும், எச்.ராஜாவையும் கைது செய்யக் கூறியிருந்தால் அவர் நேர்மையானவர்.
தமிழிசையை சேகரும், எச்.ராஜாவும் சல்லிக் காசுக்குக்கூட மதிப்ப தில்லை . எனினும் அவர் வலுவில் சென்று அவர்களை ஆதரித்து மரியாதை யைக் கெடுத்துக் கொள்கிறார். நிர்மலா சீதா ராமன் அமைதியாகத் தமிழக விவகாரத் தில் காய் நகர்த்துவதைத் தமிழிசை அறியவில்லை. மும்மூர்த்திகளில் 2ஆவது பெண்மணி நிர்மலா சீத்தாராமன் தான். .
பிரம்மாவின் முகத்திலிருந்து பிறந்த தாகச் சொல்லப்படுவோர் எல்லா அரசர்கள் காலத்திலும் ஆங்கிலேயர் காலத்திலும் சுதந்திர இந்தியாவிலும் உயர்பதவியினரே. அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கக் கூடியவர்கள். தந்தை பெரியாரின் போராட்டங்கள் பிற பிரிவு மக்களை மனிதர்களாக்கியுள்ளன. எச்.ராஜாவுக்குப் பெரியார் மீது கோபம் ஏற்படக் காரணங்களுண்டு கூட்டிக் கழித்துப் பார்த்தால் தமிழ்நாட்டில் இப் பொழுது முப்புரி நூல் தேர் வடமாகி வருகிறது.
(நன்றி: ‘ஜனசக்தி’, 14.10.2018)
- விடுதலை ஞாயிறுமலர், 27.10.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக