பக்கங்கள்

திங்கள், 17 டிசம்பர், 2018

கடவுளை நம்புவோர் கடைதேறமாட்டார் சுலிவாடி மாரம்மா கோயிலில் பிரசாதம் சாப்பிட்ட 13 பக்தர்கள்; 300 காகங்கள் பரிதாப பலி



சாம்ராஜ்நகர், டிச.15 சாம்ராஜ்நகர் மாவட்டம் கிச்சுகிச்சு மாரம்மா கோயிலில் பிரசாதம்சாப்பிட்டபக்தர்கள்13பேர்பரி தாபமாக பலியான சம்பவம் கருநாடக மாநிலத்தில்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்கள்குடும் பத்துக்கு முதல்வர்  குமாரசாமி ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கி உத்தரவிட்டுள்ளார். சாம்ராஜ்நகர்  மாவட்டம், கொள்ளே கால் தாலுகா, சுலிவாடி கிராமத்தில் உள்ளது கிச்சுகிச்சு  மாரம்மா கோவில். இந்த கோயிலில் கடந்த சில நாட்களாக கோபுரம் பராமரிப்பு  பணிகள் நடந்தது. இந்நிலையில் நேற்று பணிகள் நிறை வடைந்து கோபுர கலசங்கள்  நிறுவப்பட்டன.

கலசங்கள் வைப்பதில் அதே பகுதியை சேர்ந்த சின்னப்பா,  மகா தேவப்பா ஆகியோரிடையே போட்டி ஏற்பட்டது.  அப்போது இவர்களுக்குள்  வாக்கு வாதம் ஏற்பட்டது. பக்தர்கள் எப்படி வருகிறார்கள், பிரசாதம்  சாப்பிட்டு விட்டுச் செல்கிறார்கள் என்று பார்க்கி றேன் என்று ஒருவருக்கு  ஒருவர் சவால் விட்டுக்கொண்டனர். இதையடுத்து இருவரையும் தவிர்த்து ஊர் மக்கள்  சார்பில் கோபுர கலசம் நிறுவப்பட்டது. இதையடுத்துநேற்றுசிறப்புபூஜை கள் நடத்தப்பட்டது. இதில் கருநாடகா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர்  பக்தர்களுக்குப் பிரசாதமாக தக்காளி சாதம், பஞ்சாமிர்தம் ஆகியன வழங்கப்பட்டது. இதை வாங்கி சாப்பிட்ட சுமார் 80-க் கும் மேற்பட்ட பக்தர்கள் திடீரென மயங்கி விழுந்தனர். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சக பக்தர்கள் உடனே  காவல்துறையினருக்குத் தகவல் கொடுத் தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு ஆம்புலன்சுடன் வந்த காவல்துறையினர் வந்தனர்.

அதற்குள் ஒரு சிறுவன் உள்பட ஏழு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.   மேலும் 65 பேர் மயக்கமடைந்தனர். அவர்கள் அனைவரையும் காவல்துறை யினர் ஆம்புலன்ஸ்  உதவியோடு மீட்டு ஹனூர், கொள்ளேகால், சாம்ராஜ்நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள  அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். மேலும்சம்பவ இடத்திற்கு மாவட்ட ஆட்சியர் பிபி.காவேரி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தர்மேந் திரகுமார் மீனா  உள்ளிட்டோர் வந்து விசாரணை மேற்கொண்டனர். மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட பக்தர்களில் மேலும் 6 பேர் சிகிச்சை  பலனின்றி உயிரிழந்தனர். மேலும் பலர் கவலைக்கிடமான நிலை யில் சிகிச்சை பெற்று  வருவதாக தகவல் கள் வெளியாகியுள்ளன. பிரசாதத்தில் விஷம் கலந்ததால் தான் உயிரிழப்பு  ஏற்பட்டுள்ளதாக பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பிரசாத மாதி ரியை  கொள்ளேகால் தாலுகா சுகாதாரத் துறை அதிகாரி கோபால் ஆய்வு செய்ய ஆய்வகத்திற்கு  அனுப்பி வைத்துள்ளார்.

மேலும் சிகிச்சை பெற்று வருப வர்களில் பலர்  தமிழகத்தைச் சேர்ந்த வர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சம்பவம் தொடர்பாக  மகாதேவப்பா, சின்னப்பா இருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி  வருகின்றனர்.

5 லட்சம் நிவாரணம்


சாம்ராஜ்நகரில் பிரசாதம் சாப்பிட்டு பக்தர்கள் உயிரிழந்த தகவலறிந்து முதல் வர் குமாரசாமி வேதனை அடைந் தார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும் பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டதுடன் அவர்களுக்கு நிவாரண நிதியாக தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று தெரிவித்தார். நேற்றிரவே சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற குமாரசாமி அப்பகுதியை பார்வையிட்டு மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண் காணிப்பாளிடம் சம்பவம் குறித்து கேட் டறிந்தார்.

300 காகங்கள் பலி


கோயிலை  சுற்றித் திரிந்த காகங்கள் ஆங்காங்கு சிதறிக்கிடந்த  பிரசாதத்தை சாப்பிட்டன. இதில் 300 காகங்கள்  பரிதாபமாக உயிரிழந்தன. கொத்துக் கொத்தாக கோயில் பிராகாரத்திலும், அருகே உள்ள இடங்களிலும் காகங்கள் மடிந்து கிடந்தன.

- விடுதலை நாளேடு, 15.12.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக