பக்கங்கள்

திங்கள், 17 டிசம்பர், 2018

பாரதியார்



பாரதியாரின் 136 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா நேற்று (11.12.2018) கொண்டாடப்பட்டுள்ளது. கொண்டாடப்படவேண்டிய கவிஞர்தான். அவரது படைப்புகளில் எண்ணற்ற முரண்பாடுகளும் உண்டு.

ஆரிய நாடு எங்கள் நாடு என்பார். குட்டை முனிவன் அகத்தியன் தமிழுக்கு மேவும் இலக்கணம் செய்த தாகவெல்லாம் கூடப் பாடியுள்ளார்.

லெனினைப் பரம மூடன் என்றும் சாடியதுண்டு.

பேராசைக்காரனடா பார்ப்பான்' என்று பார்ப் பனரையும் சீண்டியுள்ளார். அதன் விளைவு என்ன தெரியுமா?

அவரின் இறுதி ஊர்வ லத்தில் 20-க்கும் குறை வானவர்களே சென்றனர் என்று வேதனைப்பட்டு தொலைக்காட்சியில் கூறினார் கவிப்பேரரசு வைரமுத்து.

இன்னொரு தகவலும் முக்கியமானது.

கடையத்தில் பாரதி வாழ்ந்த இரண்டு வருடங் களில்அவருக்கும்ஒரு ஜாதிப்பிரஷ்டம்'நடந்தி ருக்கிறது. அங்கு அய்யனா ருக்குப் படையல் வைத்து - பூஜை செய்து பந்தி போட்டுப் பரிமாறும் வழக்கம் இருந் திருக்கிறது. அச்சமயம் பார்ப்பனர்களுக்குத்தனிப் பந்தி எனவும், வேளாளர் கள், நாடார்கள் போன்றோ ருக்கு தனிப்பந்தி எனவும் போடப்பட்டுள்ளது. பாரதிபார்ப்பனர்கள்பந்தி யில்அமராதுவேளாளர்கள், நாடார்கள்பந்தியில் அமர்ந்து சாப்பிட்டிருக்கி றார்.அதன்பின்னர்பார்ப் பனர்கள்பாரதியையும், அவரது குடும்பத்தினரையும் ஜாதிப்பிரஷ்டம்''செய்த னர்.பாரதிமூன்றுநாட் கள்உணவின்றிபட்டினி கிடந்துள்ளார்.ஒரு குடியானவன்தின் பண்டங்களைக் கொடுத்தி ருக்கிறான். செல்லம்மாள் தண்ணீர்எடுக்கச்செல்லும் பாவனையில் குடத்துக் குள்உணவை மறைத்துக் கொண்டு வந்து கொடுத்தி ருக்கிறார். எனவேதான், பார்ப்பானை அய்யர் என்ற காலமும் போச்சே!' என்று பாரதியார் பாடினார்.''

- இரா.தீத்தாரப்பன்,

தென்காசி

'இந்து தமிழ் திசை'

(1.11.2018, பக்கம் 8)

பாரதிக்கு விழா எடுப் போர்பாரதியாரைப்பார்ப் பனர்கள் இழிவுபடுத்தியதை யும், சிறுமைப்படுத்தி யதை யும்கூட வெளிப்படுத்தினால் நல்லது! செய்வார்களா?

- மயிலாடன்

- விடுதலை நாளேடு, 12.12.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக