-----------------------------------------------------------------
தோழர்களே..!
நமது நாட்டில்தான் உலகத்தில் எங்கும் இல்லாத வண்னம் ஊரும் சேரியும் தனித்தனிதான்...
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக சமுகத்தில் ஒரு பிரிவினர் ஒடுக்கப் பட்டு, தீண்டாமையில் அழுத்தப் பட்டு, விலங்குகளிலும் கீழாக தாழ்த்தப் பட்டு வருவது நாகரீகச் சமூகம் வெட்க்கித் தலை குனியும் ஒரு அநாகரீகச் செயல்...
அதுவும் தற்போது ஆண்டப்பரம்பரை, சத்திரிய பரம்பரை என்று சொல்லிக் கொண்டு, அரசியலூட்டுவதற்கு பதிலாக வெறியூட்டும் போக்கு அதிகரித்திருக்கிறது....
இதற்கு காரணம் முன்புபோல் பிரச்சார இயக்கங்கள் குறைந்துப் போனதே காரணம் மேலும் புதிய புதிய தத்துவங்கள் முளைக்கும்போதே அதை அப்போதே முன்னுணர்ந்து அம்பலப் படுத்தி மக்களுக்கு தெளிவுப் படுத்தியிருக்க வேண்டும்...
அதே போல்தான் தலித்திய அரசியலும்..! அதன் தொடக்கக் காலத்திலேயே அம்பலப் படுத்தியிருந்தால் இன்று இவ்வளவு கிருக்கல்கள் சமூகத்தில் ஏற்பட்டிருக்காது. என்ன செய்வது அதைச் செய்யக் கடமைப் பட்டவர்கள் இதைவிட வேறு முக்கியப் பணியில் இருந்ததால், இன்று நாம் பதில் சொல்லிக் கொண்டிருக்கின்றோம்...
சரி செய்திக்கு வருவோம்...
தாழ்த்தப்பட்ட மக்களை தாழ்த்தி வைத்தது மட்டுமல்லாமல், தொடர்ந்து தாக்குதலுக்கும் உள்ளாக்கப் படுகிறார்கள் இதற்கு தீர்வுதான் என்ன..?
அதற்கு தலித் என்கின்ற பெயரில் ஒன்று கூடுவதுதான் சரியா என்று பார்த்தோமானால் அது இதைவிட மோசமான நிலைக்குதான் தாழ்த்தப் பட்ட மக்களை அழைத்துச் செல்கிறது..!
அதற்கு முன்...
இங்கு பெரியாரும், பெரியாருக்கு பிறகான பல்வேறு சமூக இயக்கங்களும் SC/BC க்கான ஒங்கினைவே தமிழ்த்தேசியத்தின் திறவுகோல் என்பதை உணர்ந்தே இருந்தார்கள்....
மேலும் ஈழம், முல்லைப் பெரியாறு, காவேரி, கூடங்குளம், ஈழம் என உணர்வுப் பூர்வ வாழ்வாதார தொடர் போராட்டங்கள் மூலம் ஒரு தமிழ்த்தேசிய சிந்தனை துளிர் விட்டது அதில் பல்வேறு முறன்கள் இருந்தாலும் வாழ்வாதாரம் கருதி, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் போராட்டத்தில் கை கோர்த்தனர்... (அதுவே இந்தப் போராட்டங்கள் தோழ்வியுற காரணமாயிருந்தது என்பது வேறு விடயம்)
பெரியாருக்குப் பிறகான, அவர் கொள்கைகளை ஏற்றுக் கொண்ட பல்வேறு இயக்கங்கள், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடையே ஒரு நல்லிணக்கத்தையும், சுமூக சூழலையும் ஏற்படுத்தி வந்தார்கள்,பெரியார் கருத்தியலாக ஒருங்கினைத்தார், அவருக்குப் பிறகான இயக்கங்கள் போராட்டங்கள் வாயிலாக ஒருங்கினைத்தார்கள்...
சமூகத்தில் கடைய்சி இடத்தில் இருக்கும் தாழ்த்தப் பட்ட மக்கள், ஒருக்காலும் பிற்படுத்தப் பட்ட மக்களை கடந்து வளர்ந்துவிட முடியாது...
ஆனால் இருவருக்குமான ஒருங்கிணைவு அதாவது இனமாக ஒருங்கினைவதுதான் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அரசியல் என அவரவர் எண்ணிக்கைக்கு தகுந்தாற்போல் அனுபவிக்க முடியும்...
மேலும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கே உரிமையுள்ள, அணைத்து வாய்ப்புகளையும், வசதிகளையும் வெறும் மூன்று விழுக்காடே உள்ள பார்ப்பனர்கள் அனுபவிப்பதை தடுக்கவும் அவர்களை வீழ்த்தவும் இருவரின் ஒருங்கினைவுதான் தீர்வு என்று பெரியாரும் அவரின் பின் தோன்றள்களும் உணர்ந்தே இருந்தனர்...
அதற்காகத்தான் இருப் பிரிவினரிடையே உள்ள ஜாதிய வெறியை போக்க சுயமரியாதை என்கின்ற மனுநீதிக்கு எதிரான சமூக நீதியை முன் நிறுத்தினார் தந்தைப் பெரியார்...
ஜாதியப் பெருமிதங்களை வீழ்த்தி தமிழா இன உணர்வு கொள் என்கின்ற ஒற்றைப் புள்ளியில் இணைக்க தடையாக இருந்த ஜாதி, மதம், கடவுள், வேத, சாஸ்த்திர, புராண, பார்ப்பான் என அனைத்தையும் எதிர்த்து நின்றார் பெரியார்...
மேலும் அவர்...
பெண் விடுதலை என்பது ஆண் விடுதலைக்கான முன் நிபந்தனை என்று சொன்னதுபோல்தான்...
பள்ளன் பட்டம் போகாமல், பறையன் பட்டம் போகாமல் சூத்திரப் பட்டம் ஒருக்காலும் போகாது என்றார்..! இடைநிலைச் ஜாதி விடுதலையாக வேண்டும் என்றாள், அதற்கு முன்பாக தாழ்த்தப்பட்டோர் விடுதலையாக வேண்டும் என்கிறார்...
பெரியாரிய அரசியலும், கல்வியும், பொருளாதாரமும், அறிவியலும் மனிதர்களை நெறுங்கி வாழ தூண்டுகிறது...
அந்த நெறுக்கம் எப்போதுமே அக்கிரஹாரத்திர்க்கு எரிச்சலைத்தான் தரும்...
அந்த எரிச்சலின் விளைவாகத்தான்..? தாழ்த்ப்பட்டவர்கள் தலித்தாகவும், தலித் என்பவர்கள் வேறு யாரோவாகவும், அவர்களுக்கு என்று தனியே தலித் பண்பாடு, தலித் கலை, தலித் வரலாறு (இனத்தைப் போலவே வரலாற்றையும் கூறு போடும் வேலை) என்று உள்ளது போலவும்...
நிரந்தரமாக மண்ணின் மைந்தர்களை வெகு மக்களின் உணர்விலிருந்து பிரித்து வைக்கவும், ஒரு இடதுசாரி அரசியலில் இருந்து தள்ளி வைக்கவும், தமிழ்த்தேசிய இனத்திலிருந்து பிரித்து இந்திய தேசிய நீரோட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்களை இணைக்கவும்....
பல்வேறு NGOக்கள், அறிவுத்துறையினர், இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள் என பலர் கூலிக்கு அமர்த்தப் பட்டனர், இதற்காக சில இயக்கங்களையே உடைத்து உறுவாக்கினர்...
அவர்கள்தான் இந்த மனுதர்ம பிரித்தாலும் சூழ்ச்சியை புதுப்பித்து பரப்பினர்...
அதை நம்பி பல இயக்கங்கள், கட்சிகள், இளைஞர்கள் என இதைத் தங்கள் கொள்கையாகவே மாற்றிக் கொண்டனர்...
தலித் என்று சொல்லிக் கொண்டு, தேசிய நீரோட்டத்தில் கரைக்க பல தொண்டு நிறுவனங்களும், இந்துத்துவ சக்திகளும் தொண்னூறுகளில் இருந்து தொடர்ந்து செயல் பட்டு வருகிறார்கள்....
அடிமை என்பதை அவனுக்கு உணர்த்து கிளர்ந்தெழுவான் என்கிறார் அறிவர் அம்பேத்கர்... ஆனால் அவன் கிளர்ந்தெழக் கூடாது என்பதற்காக,
ஆண்டப் பரம்பரைக் கற்பிதங்கள் அவர்கள்மீது ஏற்றப் படுகிறது...
இந்தப் பிண்னனியில் இருந்துதான் இயக்குனர் ரஞ்சித்தின் தலித் தொகுதி தொடர்பான பேச்சும் அதற்கு ஊடக வெளிச்சமும்....
தனித் தொகுதிகளில் தலித் மட்டுமே இருப்பது போல், தலித் மட்டுமே அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் எபதுபோல் பேசுவது ஏதோ அரசியல் அறியாமையில் பேசுவதாய் நினைக்க முடியாது, அவர் திட்டமிட்டேதான் பேசுகிறார்.
தலித் அரசியல் எதை நோக்கியது, யாருக்கு சேவகம் செய்வது என்பது போன்ற வினாக்களுக்கு இயக்குனர் ரஞ்சித்தே உயிர் சாட்சியாய் இருக்கிறார்....
தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களிடையே இருக்கும் கொஞ்ச நஞ்ச இனைவையும் மொத்தமாய் உடைதெரிவதே அவரின் முதன்மைப் பணியாக உள்ளது என்பதை அவர் பேச்சினூடாகவே உணரலாம்....
ஆனால் பெரியாரிய அரசியல் என்பது...!.?
இந்தியாவிலேயே முதன்முதலில் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரை ஆணைமலையில் பிரசிடென்டாக்கியது பெரியாரிய அரசியல்தான்...
ஒரு நாடார்கூட இல்லாத குடியாத்தத்தில் காமராஜரை வெற்றிபெற வைத்தது பெரியாரிய அரசியல்தான்....
அய்ம்பதாண்டுகளுக்கு முன்பே அரசின் காலனி கட்டும் திட்டத்தை எதிர்த்து அதை ஊருக்கு மத்தியில் கட்டு என்று கோறிக்கை வைத்தது பெரியாரிய அரசியல்தான்.
இன்றய உடணடித் தேவை, ஒன்று படுதலுக்கான அரசியல் அதற்கு சரியான வேலைத் திட்டம்தான்...
இதுதான் இனக்கத்தையும், ஒரு தேசிய இனத்தையும் கட்டி எழுப்பும்
அதை விடுத்து ஒரு இனத்தில் கணிசமான மக்களை மேலும் மேலும் குறுக்கு நெடுக்காய் பிளந்து சிதைப்பது, அவர்களை தனிமைப் படுத்துவது, அதற்கு துணை போவது போன்ற காரியங்கள் அநாகரீகமானவை...
ரஜினியும், கமலும் தாம் கவ்ன்சிலராகக்கூட ஆக மாட்டோம் என்று தெரிந்தே வந்து மக்களை குழப்புகிறார்கள்...
அதுபோல் தோழர் ரஞ்சித்தும்..!விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தவும் தோழர் திருமாவளவனுக்கு எதிராகவும் காய் நகர்த்துகிறார்...
ஒன்றை மட்டும் உறுதியாக சொல்கிறோம்..!!
ரஞ்சித் வேடிக்கைக் காட்டும் மின்மினிதான் நாங்கள் பெரிய பெரிய தீப் பந்தங்களைப் பார்த்துவிட்டுதான் வந்திருக்கிறோம்...
- திருச்சி பெரியார் சரவணன் முகநூல் பதிவு , 9.12.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக