கோயில் வாசலிலேயே பூசாரி உள்பட மூவர் கொல்லப்பட்ட அவலம்- நரபலியா?
திருமலை, ஜூலை 19 ஆந்திராவில் கோயில் வாசலில் பூசாரி உள்பட 3 பேர் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டனர். மேலும் சிவலிங் கத்துக்கு ரத்தத்தால் அபிசேகம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆந்திராவின் கதிரி அடுத்த கோரிகோட்டா கிராமத்தில் பழைமை வாய்ந்த சிவன் கோயில் உள்ளது. இங்கு அர்ச்சகராக ஓய்வு பெற்ற ஆசிரியரான சிவராம் ரெட்டி(70) பூஜைகளை செய்து வந்தார். இவருக்கு அவரது அக்கா கம லம்மா(75) உதவியாக இருந்து வந்தார். சிவராம் ரெட்டி சிவன் கோயிலை புதுப்பிக்க முடிவு செய்து கடந்த சில மாதங்களாக கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்தார்.
இதில் மூலவர் சன்னதி அமைந்துள்ள பகுதியில் சுவர்கள் எழுப்பப்பட்டு கான்கிரீட் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதில் அதே பகுதியை சேர்ந்த கூலித் தொழி லாளர்கள் சிலரும் சிவராம் ரெட்டிக்கு உதவி செய்து வந்தனர். மேலும் பெங்களூரில் வசித்து வந்த சிவராம்ரெட்டியின் உறவின ரான சத்திய லட்சுமியும்(68) இப் பணியில் ஈடுபடுவதற்காக கடந்த சில நாள்களாக கோரிகோட்டா விலேயே தங்கி வந்தார். இந் நிலையில் நேற்று முன்தினம் காலை கோயில் வழியாக சென்ற பொது மக்கள் அர்ச் சகர் சிவராம் ரெட்டி, அவ ரது அக்கா கமலம்மா, உறவினர் சத்தியலட்சுமி ஆகிய 3 பேரும் கழுத்தறுத்து படுகொலை செய்யப் பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சிய டைந்தனர்.
மேலும் கோயில் முழு வதிலும் சிவலிங்கத்திற்கும் ரத்தத் தால் அபிசேகம் செய்து, புற்று மீதும் ரத்தத்தை தெளித்தது தெரியவந்தது. தகவல் அறிந்த அனந்தபுரம் காவல்துறை கண்காணிப்பாளர் சத்தியயேசு பாபு மற்றும் காவல்துறையினர் நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். மேலும் மோப்ப நாயைக் கொண்டு சோதனை நடத்தினர்.
புதையலா?
இதில் கடந்த சில ஆண் டுகளாக சிவன் கோயிலில் புதையல் இருப்ப தாக ஒரு தகவல் பரவி இருந்தது. பெங்களூரில் வசித்து வரும் சத்திய லட்சுமி மூலம் சிவன் கோயிலில் புதையல் இருப்பதாக வந்த தகவலை தெரிந்துகொண்ட பெங்களூரை சேர்ந்த சிலர் இங்கு வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. சிவராம் ரெட்டி, கமலம்மா, சத்தியலட்சுமி ஆகிய 3 பேரையும் முன்விரோதம் காரணமாக யாராவது கொலை செய்தார்களா? என்பதும் தெரிய வில்லை.
நரபலியா?
3 பேரையும் கொலை செய்து ரத்தத்தை சிவலிங்கத்துக்கு அபி ஷேகம் செய்ததால் புதையல் எடுக்க நரபலிக்காக கொலை செய்யப்பட்டி ருக்கலாம் என காவல்துறையினருக்கு சந்தேகம் வலுத்துள்ளது. இதுகுறித்து அனந்தபுரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களி டையே பெரும் பீதியையும் அதிர்ச் சியையும் ஏற்படுத்தியது. கொலை யாளிகளை பிடிக்க காவல்துறையின் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
- விடுதலை நாளேடு, 19. 7 .19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக