பக்கங்கள்

திங்கள், 15 ஜூலை, 2019

இசுலாமியப் பெண்கள் மீதான பாலியல் வன்முறை - சவர்க்கரின் ஆதரவு



முத்து.செல்வன், பெங்களூரு


வினாயக் தாமோதர் சவர்க்கர் தன் இறுதிக் காலத்தில் எழுதிய Six Glorious Epochs of Hindu History  (இந்திய வரலாற்றில் சிறப்புவாய்ந்த  ஆறு காலகட்டங்கள்) என்னும் நூலில்,, இசுலா மியப் பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தவேண்டியதன் தேவையை நியா யப்படுத்தியுள்ளார். அத்தகைய வாய்ப்பு கள் கிடைத்தபோது அவற்றைத் தவறவிட் டமை கழிவிரக்கமோ, சால்போ, அறம் சார்ந்ததோ அல்ல; மாறாகக் கோழைத்தனம் என்று கூறுகிறார். (அத்.7)

இந்த நூலில், இந்த அத்தியாயத்தில் அளவு கடந்து  இசுலாமியர்கள் மீது வெறுப் புணர்வைத் தூண்டுகிறார்.

· இந்துப் பெருமை குலைவதற்குக் காரணமாக இருந்த இசுலாமியப் பேய்கள் (தீய சக்திகள்) தண்டிக்கப்பட வேண்டிய வர்கள் என்பதும்..

· இந்து தேசத்தை உருவாக்கும் முயற்சியில், அரசியல் காரணங்களுக்காக இந்து மதத்தை இந்துத்துவத்திலிருந்து பிரிக்க வேண்டுமென்பதும்

· ”இந்துப் பெண்கள் பெற்ற துன் பங்களுக்கு இசுலாமியப் பெண்கள் அதே முறையில் பழிவாங்கப்பட வேண்டும்” என்பதும்

· மதப்பொறுதி (மதச் சகிப்புத்தன்மை) ஒரு நற்செய்கை என்று இந்துக்கள் நம்பி யமை தற்கொலைக்கொப்பாகும் என்பதும்

· இந்துக்கள் அத்தகைய நற்செயல் கொள்கைகளைக் கைவிட்டுப் புதிய இந்து தர்மத்தை அரசியல் நலன் கருதிக் கைக் கொள்ள வேண்டுமென்பதும்.

· இசுலாமியருடன் போரிட்டு வென்ற இந்து மன்னர்கள் இசுலாமியப்பெண்கள் பால் காட்டிய அனுதாப அணுகுமுறை தவறென்பதும் சவர்க்கரின் கொள்கை களாக இருந்தன -

இதற்கு எடுத்துக்காட்டாக,

· ஆப்பிரிக்கப் பழங்குடி மக்களிடையே நிகழ்ந்த இனக்குழுப் போராட்டங்களில் வெற்றி பெறும் இனத்தவர் தோற்கடிக்கப் பட்ட இனத்தவரின் பெண்களைக் கவர்ந்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்; இல்லாதவிடத்து அவர்களைக் கொன்று விடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர் என்றும்  நாக மக்களும் அத்தகையமுறை யிலேயே செயற்பட்டனர் என்றும் அவர் களைப் பொறுத்தமட்டில், எதிரியின் பக்கத்தில் ஒரு பெண்ணின் சாவு அய்ந்து ஆண்களின் சாவுக்குச் சமம் என்றும்  கூறி ஞாயப்படுத்துகிறார்.

· இந்துப் பெண்கள் இசுலாமியரால் தொல்லைகட்கு ஆளாக்கப்பட்டபோது இசுலாமியப் பெண்களும் உடந்தையாக இருந்தமையால் அவர்களையும் நம்மு டைய எதிரிகளாகவே கருத வேண்டும் என்று கூறி,

· மேற் சொன்னவாறு இந்து மன்னர்கள் தோற்ற இசுலாமியர்களின் பெண்கள்பால் கழிவிரக்கம் காட்டாதிருந்திருந்தால் என்ன வாகியிருக்கும் என்று கேள்வி கேட்கிறார்.

· இசுலாமியர்களால் தொல்லைகளுக்கு ஆட்பட்டு இறந்த இந்துப் பெண்களை எண்ணிப் பாருங்கள் என்றும் அதற்காக இசுலாமியப் பெண்கள் அந்த முறையி லேயே பழிவாங்கப்பட வேண்டும் என் கிறார்.

· ஒரு தீச்செயல்  இன்னொரு தீச் செயலால்தான் முறியடிக்கப்பட வேண்டும். நியாய, தருமங்களைப் புறந்தள்ள வேண் டும் என்றும் பாலியல் வன்புணர்வு  என்பது நமக்குக் கிடைத்துள்ள ஓர் அரசியல் ஆயு தம் என்பதை உணர வேண்டும் என்கிறார்.

· கடந்த காலங்களில் இந்துக்கள் இசுலாமியப் பெண்கள் பால் தற்கொலைக்கு ஒப்பான கழிவிரக்கமும் பரிவும் கொண்டு இரக்கம் காட்டி அவர்களை விட்டுவிட்ட தாக, சவர்க்கர் குற்றம் சாட்டுகிறார், (பத்தி 452) . அதற்கு எடுத்துக்காட்டாக, போரில் வெற்றி பெற்ற மன்னன் சிவாஜி கல்யாண் பகுதியின் இசுலாமிய  ஆளுநரின் மரு மகளை எந்தத் தொல்லைக்கும் ஆட் படுத்தாமல் விட்டுவிட்டதையும்,  பேஷ்வா சின்னாஜி ஆப்தே, பாசேன் பகுதியின்  போர்த்துகீசிய ஆளுநர் மனைவியைப் பாதுகாப்பாக அனுப்பி வைத்ததையும் சுட்டிக் காட்டுகிறார்.(பத்தி 450)

· இசுலாமியரின் அடக்குமுறையில் இந்துப் பெண்கள் தொல்லைகட்கு ஆளா னதைப் போலவே, இந்து வெற்றியாளர் களும் இசுலாமியப் பெண்களை அதே  முறையில் தொல்லைகட்கு ஆளாக்கிட வேண்டும் என்று சவர்க்கர் வாதிடுகிறார்.

· இந்துக்கள் வெற்றி பெறும்போது, இந்துப் பெண்கள்  அனுபவித்த துயரநிலை இசுலாமியப் பெண்களுக்கும் நிகழும் என்னும்  நிலை வருமாயின் வருங்காலத்தில் இசுலாமியர்கள் இந்துப் பெண்களுக்குப் பாலியல் துன்புறுத்தலில் இறங்க மாட்டார் கள்.(451) என்கிறார் சவர்க்கர்.

· தொடக்கத்திலேயே இந்துக்கள் இந்தமுறையில் இசுலாமியப் பெண்களைப் பாலியல் வன்முறைக்கு ஆட்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தால், இன்று இந்துப் பெண்களின் நிலை மிக உயர்வாக இருந்திருக்கும் என்கிறார் சவர்க்கர் (455).

· இசுலாமியர் இந்தியாவிற்குள் நுழை யும் போதே ஆங்காங்கே போர்க்களங்களில் வெற்றி கண்ட இந்துக்கள், இசுலாமியப் பெண்களை இந்த முறையில்  தண்டித் திருந்தாலும் அவர்களைக் கட்டாய மதமாற் றத்திற்கு உள்ளாக்கியிருந்தாலும்  அவர் களை வசப்படுத்தியிருந்தாலும் இசுலாமி யர்கள் இந்துப் பெண்களிடம் தகாத முறை யில் நடந்துகொள்வதைத் தவிர்த்திருப் பார்கள் (455) என்கிறார்.

· மதச்சகிப்புத்தன்மை என்னும் முட்டாள்தனமான எண்ணத்தை இந்துத் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் ஊட்டும்போதே திணித்து விட்டதன் பயனை இப்போது அனுபவிக் கிறார்கள் என்று வருந்துகிறார் சவர்க்கர்.

பயன்பட்ட நூல்: வினாயக் தாமோதர் சவர்க்கர் Six Glorious Epochs of Hindu History

அத்தியாயம் 7

· இவருடைய படம் நாடாளுமன்றத்தின் மய்ய அரங்கத்தை அலங்கரிக்கிறது என் பது குறிப்பிடத்தக்கது.

·  இவரைத்தான் மோடி,

”நாம் வீர் சவர்க்கரை வணங்கிப் போற்றுவோம்.

வீர் சவர்க்கர் துணிவு, நாட்டுப்பற்று,  வலிமைவாய்ந்த இந்தியா என்னும் நோக்கம் ஆகியவற்றின் அடையாளமாகத் திகழ்கிறார்.

இந்திய நாட்டுருவாக்கத்தில் ஈடுபடும் வகையில் பலரை ஊக்குவித்துள்ளார்”

என்று சவர்க்கரின் பிறந்தநாள் (28, மே 2019) செய்தியாகப் புகழ்ந்துரைத்துள்ளார்.

· இப்போது கீழ்க்காணும் செய்திக்கு வருவோம்

” நாட்டில் இசுலாமியர் பிரச்சினைக்கு ஒரே ஒரு தீர்வுதான் உண்டு. பத்து இந்து சகோதரர்கள் ஒன்று சேர்ந்து, இசுலாமியத் தாய்மார்களையும் சகோதரிகளையும் நடுத்தெருவிற்கு இழுத்து வந்து கூட்டு வன்புணர்வு செய்து கொன்று அவர்களைக் கடைத்தெரு போன்ற பொது இடங்களில் மக்கள் பார்வையில் படும் வகையில் தூக்கிலிட வேண்டும்.

இந்தியாவைக் காப்பாற்ற வேறு வழி யில்லாததால் இசுலாமியத் தாய்மார்கள், சகோதரிகளை மானபங்கம் செய்வது ஒன்றுதான் வழி.”

- இதுதான் அவளுடைய இந்திப் பதிவில் கண்டுள்ள வாசகத்தின் தமிழாக் கம்.

இந்தச் செய்தி வெளியுலகில் பரவிய உடனே, சுனிதா சிங் அவர் வகித்த பதவி யிலிருந்து நீக்கப்பட்டுவிட்டார்  என்று மகிள மோர்ச்சாவின் தலைவர் ரகத்கர் கூறி முடித்துக் கொண்டார்.

ஒரு பெண் தான் பகைவர்களாகக் கருதும் ஓர் இனத்தின் தாய்மார்களையும் சகோதரிகளையும் பாலியல் கூட்டு வன் புணர்வு செய்யத் தன் இன ஆண்களைத் தூண்டுகிறாள் என்றால், இவர்கள் ஆட்சி யில் வருங்கால இந்தியா விலங்காண்டி களின் இந்தியாவாக மாறும் என்பது திண் ணம்.

படு மட்டமான, வெறித்தனமான தூண்டுதலுக்குத் தீர்வு வெறும் பதவி நீக்கம்தான் போலும்.  இந்தப் பெண் மீது இதுவரையில் சட்டப்படியான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. பாசிச சங்கி களின் முறையற்ற அராஜக அரசியலில் அதை நாம் எதிர்பார்க்கவும் முடியாது.

இத்தகைய வெறித்தனத்தின் ஊற்றுக் கண்ணாகத் திகழும் கோல்வால்க்கரும் சவர்க்கரும் செருமனியின் இட்லரின் நாசிசத்தையும் இத்தாலியின் முசோலியின் பாசிசத்தையும் முன்னெடுத்துக்காட்டாகக் கொண்டு இந்துக்கள்  செயற்பட வேண்டும் என்று தூண்டினர்.

”அவர்களுடைய (இசுலாமியர்) பகை மையும் கொலைவெறியும் முடிவுக்கு வந்து விட்டதா? அவர்கள் பாகிஸ்தான் பிரிவி னைக்குப் பிறகு இவற்றைக் கைவிட்டுத் திடுமென்று நாட்டுப் பற்றாளர்களாக மாறி விட்டார்கள்  என்று நம்புவது தற்கொலைக்கு ஒப்பானது - கோல்வாக்கர்.

”செருமானியர்கள்  இன்று உலகெங்கும் பேசப்படுகிறார்கள். செருமானியர் இனத் தின் (ஆரியம்?) தூய்மையையும் பண்பாட் டையும் காத்திட,  நாட்டிலிருந்து  யூதர்களை அறவே துடைத்தெறியும் முனைப்பில் ஈடுபட்டு உலகை அதிர்ச்சிக்கு ஆளாக் கினர். இதன் மூலம், அடிப்படையில் மாறுபட்ட இனங்களும் பண்பாடுகளும் ஒரே மண்ணில் ஒன்றிணைந்து வாழ இயலாதென்பதை எடுத்துக் காட்டியுள்ளன. அதுவே இந்துஸ்தானத்தில் உள்ள நமக்குப் நல்ல பாடம் ஆகும்” என்று கோல்வாக்கர் செர்மனியின் இட்லரை எடுத்துக் காட்டி, இந்தியாவில் இசுலாமியர்களும் இந்துக் களும் ஒன்றிணைந்து வாழ முடியாது என்று வெறுப்புணர்வைத் தூண்டினார். (M.S.Golwalkar, We or Our Nationhood Defined)



இட்லரின் நாசிசம் நமக்கு உகந்த ஊடச்சத்து என்றார் சவர்க்கர்.

”இட்லர் ஒரு நாசி என்பதால் ஒரு தீய சக்தி என்றோ மனித வடிவிலான பேய் என்றோ கருதுவதில் பொருளில்லை. நாசிச, பாசிசப் பாதைகளைத் தேர்ந்தெடுத்ததால் தான் செர்மனியும் இத்தாலியும் வலிமை வாய்ந்த நாடுகளாக உருவெடுத்தன. அந்த இரண்டு ‘இசம்களும்’  நமக்கு மிகவும்  உகந்த ஊட்டச் சத்துகள் - சவர்க்கர் (1940 இல் மதுரையில் நடைபெற்ற இந்து மகா சபையின் 22 ஆவது அமர்வில் ஆற்றிய தலைமை உரையில் ஒரு பகுதி)

இந்திய நாடாளுமன்றத்தில் பெரும் பான்மை பெற்றுத் திகழும் பாசிச சங்கிகள் சவர்க்கரும் கோல்வால்க்கரும் எட்கேவரும் காட்டிய வழியில் செல்லத் துடிக்கிறார்கள் என்பதை அவர்களுடைய கூற்றுகளும் செயல்களும் மெய்ப்பிக்கின்றன.

ஆர்.எஸ்.எஸ். சங் பரிவாரம் வெற்றி மிதப்பில் செய்ய வேண்டுவனவாகக் கொண்டுள்ள கொடிய வேலைத்திட்டங் களுள் ஒன்றாக, சவர்க்கரின் எண்ணங் களுக்கு வடிவம் கொடுக்க முனைந்தால் நாடு என்னவாகும். சிந்திப்பீர்.

- விடுதலை ஞாயிறு மலர், 13 .7 .19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக