குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது குடும்பத்தினருடன் ராஜஸ்தான் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண் டார். அப்போது அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள புஷ்கர் என்ற இடத்திலுள்ள பிரம்மா கோவிலுக்கு வழிபடச் சென்றார். அப்போது கோவில் பூசாரிகள் அவரை கோவிலுக்குள் நுழைய அனுமதிக்கவில்லை, ஆகையால் அவர் கோவிலுக்கு வெளியில் உள்ள படியில் அமர்ந்து வழிபாடு செய்தார். இந்த விவகாரம் சமூக வலை தளங்களில் பரவி யது. இதை பல சமூக ஆர்வலர்கள் கண் டித்தனர்.
ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீர் மாவட் டம், புஷ்கரிலுள்ள பிரம்மா கோவிலின் உள்ளே குடியரசுத் தலைவரை நுழைய விடாத காரணத்தால் அவர் கோவி லுக்கு வெளியே உள்ள படியில் அமர்ந்து குடும் பத்துடன் வழிபாடு செய்தார்.
இந்தநிலையில்குடியரசுத்தலைவர் அலுவலக ம்வெளியிட்டுள்ள அறிக்கை யில் குடியரசுத்தலைவரின் மனைவிக்கு மூட்டுவலிபாதிப்பு இருக்கிற காரணத்தால் கோவிலுக்கு உள்ளே நுழைய முடிய வில்லை, ஆகவே அவரும் குடியரசுத் தலைவரும் அவரது மகளும் கோவில் முகப்பில் அமர்ந்து வழிபாடு செய்தனர் என்று விளக்க அறிக்கை வெளியிட்டி ருந்தது,
உண்மைக் காரணம் என்ன?
இது தொடர்பாக அஜ்மீர் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சுமார் 50--க்கும் மேற்பட்ட படிகளைக் கொண்ட கோவிலில் எல்லா படிகளையும் கடந்து கோவில் கருவறை வரை சென்ற குடியரசுத் தலைவரின் மனைவிக்கு மூட்டு வலி காரணம் என்று சொல்வது மிகவும் அபத்த மானதாகும், இந்தியாவில் இன்றளவும் குடியரசுத்தலைவர் என்றாலும் அவர் தாழ்த்தப்பட்டவர் என்றால் தீண்டத் தகாத வர்களுக்கான மனுநீதி சட்டமே அவர் களுக்கும் உண்டு என்று கூறியிருந்தார்.
இந்தக் கோவிலில் தொடர்ந்து இதே நிலைதான்! மேலும் இக்கோவிலில் பல ஆண்டுகளாக தாழ்த்தப்பட்டவர்கள் அனு மதிக்கப்படவில்லை. இது தொடர்பாக பலமுறை சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் அரசிடமும் கோவில் நிர்வாகத்தினரி டமும் புகார் அளித்தும் எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை. 2012- ஆம் ஆண்டு இக் கோவிலுக்கு அருகில் உள்ள மற்றொரு கோவிலில் பள்ளி செல்லும் தலித் மாணவர்கள் கோவிலுக்கு வழிபடச் சென்றதை தடுத்து அவர்களை விரட்டிய நிகழ்வு பெரும் விவாதத்திற்குள்ளானது. இந்த நிலையில் குடியரசுத் தலைவருக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், அதை மறைக்கும் விதமாக குடியரசுத் தலைவர் அலுவலகமே விளக்கம் அளித்து அந்த நிகழ்வின் உண்மைத் தன்மையை மறைத்துள்ளது.
- விடுதலை ஞாயிறு மலர்,13.7.19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக