அரசியல் - பொருளாதார ஆதிக்கம் வெளிப்படையாகத் தெரிகிறது. சமுதாய - பண்பாட்டு ஆதிக்கம் வெளிப்படையாகத் தெரிவது இல்லை. உள்ளுறைந்து நிற்கிறது. வெளிப்படத் தெரியும் மேலாதிக்கத்தை கண்டிக்கவும், அதை எதிர்த்துக் கிளர்ந்தெழ வும், எளிதாக மக்களை திரட்ட முடியும், எளிதாகத் தெரியாத பண்பாட்டுச் சமுதாய மேலாதிக்கத்தை அகற்றுவதற்கு மக்க ளைத் திரட்டுவது கடினமானது.
பிரிட்டிஷ் அரசின் (தொடக்கத்தில் ஆங்கிலக் கிழக்கிந்திய குழுமத்தின்) மேலாதிக்கத்தை ஜோதிபா ஃபூலே (1827-1890), மற்றவர்களைப் போலவே எளிதாக இனங்கண்டார். அவருடைய சிறுவயது காலத்தில், பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து மகாராட்டிரத்தில் பல கிளர்ச்சிகள், சிறு போராட்டங்கள் நடந்தன. 1826இல் உமாஜி நாயக், 1830இல் புனே மாவட்ட மீனவர்கள், 1839 மற்றும் 1846இல் பவ் கரெ, சிமனாஜி ஜாதவ், நானா தர்பரே, 1848இல் பாபு மங்கரே மற்றும் ஏடோஜி மங்கரே ஆகி யோரின் போராட்டங்கள் இவ் வகைப்பட் டனவாகும். இக்கிளர்ச்சிகளின் தாக்கமும், உயர்நிலைப் பள்ளியில், பார்ப்பன ஆசிரி யர்கள் மற்றும் உடன் பயின்ற மாணவர் களின் எண்ணமும் ஜோதிபா ஃபூலேயின் மனதில் ஆங்கில ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற வேட்கையை விதைக்கக் காரணமாயிருந்தன. பேஷ்வாக்களின் ஆட்சி வீழ்ந்த பின்பு இத்தகைய ஒரு கருத் தையே பெரும்பாலான பார்ப்பனர்கள் பரப்பிக் கொண்டிருந்தனர். ஆனால் பார்ப்பனரின் திருமண ஊர்வலம் ஒன்றில் தமக்குப் பார்ப்பனர்கள் செய்த அவமான மும், சமுதாய நிலையைப் பற்றிய எதார்த்த நிலையும் ஃபூலேயின் மனநிலையை மாற்றின. சமுதாய மாற்றமைப்புப் பணிதான் மகாராட்டிரத்தில் முதலில் வேண்டப்படு வது என உணர்ந்தார்.
காங்கிரஸ் இயக்கத்தைச் சார்ந்தும் (1917-1919), பின் அதில் சேர்ந்தும் (1919-1925) பணியாற்றிய பெரியார் ஈ.வெ.ராமசாமி (1879- 1873), அரசியல் ஆதிக்கத்தை அகற்ற முக்கியத்துவம் கொடுத்து அந்த இயக்கத் திற்கு முதலில் ஆக்கம் தேடினார்.
அமெரிக்காவில் கொலம்பியா பல் கலைக் கழகத்தில் பயின்று கொண்டிருந்த பொழுது (1913-1916), அண்ணல் அம்பேத்கர் (1891-1956) இந்திய நாட்டின் அரசியல் விடுதலையைப் பற்றிய சிந்தனையில் மூழ்கிய நாட்டுப்பற்றாளராகவே இருந்தார்.
மகாத்மா ஜோதிபா ஃபூலே தமது பட்ட றிவால் உணர்ந்தது போன்றே, பெரியாரும் அம்பேத்கரும் தங்கள் பட்டறிவு தந்த படிப்பினையைப் பெற்றனர். சமுதாய ஆதிக்கம் நிலவுகிற இடத்தில் அரசியல் விடுதலையும், பொருளாதார சமன்மையும், உள்ளீடற்றனவாகவும், பயனற்றனவாக வும், நிலையற்றனவாகவும் ஆகிவிடும் என்பதைக் கண்டனர்.
ஆகையால் தங்களுடைய வாழ்வைச் சமுதாய மாற்றமைப்புப் பணிக்கு முழுமை யாக ஈடுபடுத்தினர்.
ஒரே சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் பிறவியின் அடிப்படையிலும், நிறத்தின் அடிப்படையிலும், மதத்தின் அடிப்படை யிலும் வேறுபாட்டு உணர்வுடன், வேறு படும் வகையில் நடத்தப்பட்டால், அச்சமு தாயத்தில் நல்லிணக்கமும் - ஒற்றுமையும் நிலவுவதற்கு வாய்ப்பில்லை. பிணக்கும், பிளவும், பிரிவுகளும் ஆதிக்கமும் அடக்கு முறையும் சுரண்டலும், அவற்றால் விளை யும் மோதலும் கலகமும் சமுதாயத்தைச் சீரழித்து, அதைச்சார்ந்த மக்களின் வாழ்வை பின்னோக்கியதாகவும் துன்பமு டையதாகவும் ஆக்குகின்றன.
குறிப்பாகப் பிறப்பால் ஏற்றத்தாழ்வும், இழிவும் இருக்கின்ற சமுதாயத்தில் எந்த அளவிற்கு மக்கள் தாழ்வாகக் கருதப்பட்டு அவ்வாறே நடத்தப்படுகிறார்களோ அந்த அளவிற்கு அவர்கள் மனித உரிமைகளை இழக்கிறார்கள்; அரசியல், பொருளாதாரம் பண்பாட்டு வாய்ப்புகள் மறுக்கப்பட்டவர் கள் ஆகிறார்கள்.
வேதியம், புராணியம், சனாதனம், பார்ப் பனியம் என வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்படும் இந்து மதம், சதுர் வர்ணத் தையும் ஜாதியத்தையும் புனிதப்படுத்தும் ஒன்றாகும். இவ்வாறு மத நம்பிக்கையின் பெயரால் கடந்த பல நூற்றாண்டுகளாக இந்தியத் துணைக்கண்டத்தின் ஆட்சியா ளர்களால் வருண - ஜாதி ஏற்பாடு முனைப் பாக நடைமுறைப்படுத்தப்பட்டது. அதை ஒரு அடிப்படை கடமையாக இந்திய அரசர்கள் பொதுவாக ஏற்றிருந்தனர். அவ் வாறு ஏற்காத மவுரிய அரசன் பிருகத்ரதன், கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் புஷ்யமித் திர சுங்கா எனும் பார்ப்பனத் தளபதியால் கொல்லப்பட்டான். பிற்காலத்தில் பேரரசர் ஹர்ஷர், பவுத்த மதத்தை ஆதரித்ததால் அதே ஆபத்திற்கு ஆளாக இருந்தார்; ஒருவாறு தப்பினார். இருப்பினும் தங்க ளுடைய கட்டுப்பாடான பவுத்த எதிர்ப்பு நிலைப்பாட்டை பயன்படுத்தி ஹர்ஷரின் பவுத்த ஆதரவுப் போக்கை பார்ப்பனர்கள் நீர்க்கச் செய்தனர். வர்ண தர்ம ஆட்சியை நீடிக்கச் செய்தனர்.
இந்திய துணைக் கண்டத்தின் வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்கு என எல்லாப் பகுதி களிலும் பார்ப்பனிய மனுதர்மத்தின் படியே அரசர்கள் ஆளவேண்டிய நிலைக்கு புரோ கிதக் கூட்டம் மத ஆதிக்கம் செலுத்தியது. கடவுளைப் பற்றிய கதைகளும், மத ஆதாரங்களான வேத, இதிகாச, புராண, தர்ம சாஸ்திரங்களும், வர்ண ஏற்றத் தாழ் வையும், ஜாதிப் பிரிவுகளையும் நியாயப் படுத்தின. மறுபிறவி முன்வினைப் பயன் முதலிய மதக் கோட்பாடுகள் அநியாயங் களுக்கு ஆதாரங்களாகக் காட்டப்பட்டன.
மனித சமனியத்தை வலியுறுத்திய இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த சுல்தான்களும், மொகலாயர்களும், நவாப்புகளும், நிஜாம் களும் ஆண்ட காலத்தில் கூட ஜாதியின் பாற்பட்ட பிறவி ஏற்றத்தாழ்வுகளும், பெண் கொடுமையும் நீடிக்கவே செய்தன.
ஆங்கில ஆட்சி ஏற்பட்ட பின்பு வர்ண தர்மத்தை நிலைநாட்டுவது ஆட்சியின் கடமையாக இல்லை. ஒரு குலத்திற்கு ஒரு நீதி என்ற வகையில் அமைந்த குற்றவியல் சட்டங்கள் தள்ளப்பட்டன. சட்டத்தின் ஆட்சி (Rule ofLaw) சட்டத்தின் பார்வை யில் அனைவரும் சமம் (All are equal in the eyes of Law) என்பதும் நீதி நிர்வாகத்தில் அடிப்படைகள் ஆயின. இருப்பினும் மதத் துறையிலும், நபர் சார்ந்த சட்டங்களிலும் (Personal Laws)வருண தர்மம் சார்ந்த இந்துமத சட்டங்கள் தொடர்ந்து பின்பற்றப் பட்டன. குடும்ப வாழ்வு. வாரிசுரிமை .கோயில். மடம், சமுதாய உறவு, அந்தஸ்து முதலியன தொடர்பான சட்டங்களும், நடப்புகளும் இந்து மதத்தின் சாஸ்திரங்கள், சம்பிரதாயங்கள், பழக்கவழக்கங்கள் முத லியவற்றின் கட்டுப்பாட்டில் இருந்தன. ஆகையால் ஆயிரக்கணக்கான ஜாதி களின் கூடாரமாகவே ஆங்கில ஆட்சி யிலும் இந்தியா தொடர்ந்தது.
சிலராக இருந்தாலும், மதம் மற்றும் சமுதாயத் துறையில் ‘பிராமணர்’ என்ற மேல் வருண நம்பிக்கையைப் பயன்படுத் திப் பார்ப்பனர்கள் மிக உயர் அந்தஸ்தை யும், அதிகாரத்தையும், செல்வாக்கையும், சலுகைகளையும் பிறவியின் காரணமாகப் பெற முடிந்தது. அத்துடன் கல்வியில் பல நூற்றாண்டுக்கால பாரம்பரிய முற்றுரி மையை அவர்களே பெற்றிருந்தனர். அவர்களுக்கு எவ்வித உடல் உழைப்பும் இல்லை; ‘தான, தர்மங்களின்’ பயன்களை முழுமையாக நுகர்ந்தவர்களும் அவர் களே. இந்தச் சூழலில் ஆங்கிலேயர் நிறு விய கல்வி நிறுவனங்களின் பயனையும் அவர்களே பெற முடிந்தது. நவீன ஆங் கிலக் கல்வியின் பயனாகப் பதவிகளைப் பெற்ற பார்ப்பனர்கள், நிருவாகங்களை நிரப்பினார்கள், அறிவு சார்ந்த தொழில் களிலும், ஊடகங்களிலும், ஆதிக்கம் செலுத்தினர். அந்த ஆதிக்கத்தை நிலை நாட்டிக் கொள்வதிலும், சூத்திர ஜாதியின ரையும் பஞ்சம ஜாதியினரையும், எப் பொழுதும் போலவே தாழ்ந்த மற்றும் இழிந்த நிலையிலேயே வைத்திருப்பதிலும் தங்கள் கருத்தை செலுத்தினர். அதற்கான சாதனங்களை உண்டாக்கினர்; நடப்புகளை மேற்கொண்டனர்.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்தியத் தேசிய இனங்கள் மறுமலர்ச்சியைக் காணத் தொடங்கின. மேலைநாட்டுக் கல்வி, மற்றும் நிருவாகத்தின் தாக்கத்தால் இந்தியாவில் புதிய விழிப்பு ஏற்பட்டது. மெய்மை சார்ந்த அறிவுத் தெளிவை உண்டாக்கும் கல்வி யைப் பெறும் வாய்ப்பு கிடைத்தது. புவியி யல், வேதியியல், இயற்பியல், வரலாறு, பொறியியல், வானியல், உயிரியல், உளவி யல் என்ற வகையில் பயன்மிகு படிப்புகள் அறிமுகமாயின. கதை அளப்புகளுக்கு மாற்றாக இந்தியத் திறனாய்வு புதிய முறையில் அறிமுகமாயிற்று. மத நம்பிக் கைகளையும், நடப்புகளையும் கண்மூடித் தனமாக ஏற்பதற்கு மாறாக, ஒப்பிட்டுப் பார்க்கும் போக்கு உண்டாயிற்று. தங்களு டைய நம்பிக்கைகளையும், நடப்புகளையும் வாழ்க்கை முறைகளையும் திறனாய்வுக்கு உட்படுத்தி, மாற்றவும் திருத்தவுமான நிலை உருவாயிற்று. புதிய மதிப்பீடுகள், கொள் கைகள், வேட்கைகள், இலக்குகள் முகிழ்த் தன. மறுவுலகச் சிந்தனைக்கு மாற்றாக, இவ் வுலக வாழ்வைச் செழுமைப்படுத்தக்கூடிய உரிமை, சமனியம், உடன்மை, Liberty. Equality. Fraternity எனும் முழக்கங்கள் எண்ணங்களைக் கவ்வின. ஆணுக்குப் பெண் என்றும் அடங்கிப் போக வேண்டும், மேல் வருணத்தாரின் நலனுக்கே சூத்திர வருணத்தார் பிறப்பிக்கப்பட்டுள்ளனர் - என்பன போன்ற மத நம்பிக்கைகள் கேள்விக்குறிகளாயின.
இந்தச் சூழலில் படித்தவர்களிடையே பிறந்த மறுமலர்ச்சியின் காரணமாக, மதத் திலும், சமுதாயத்திலும் மாற்றங்கள் தேவை என்ற விழைவு தோன்றியது. அதன் விளை வாக சீர்திருத்த இயக்கங்கள் அமைந்தன. அவை மேல்தட்டு மக்களுக்கு ஆனவை யாகவும், மிதமான போக்கு உடையன வாகவும் இருந்தன. உடன் கட்டை ஏற்று வதைத் தடுக்க (1829) ஆங்கில ஆட்சிக்குத் துணை நின்றவரும், பிரம்ம சமாஜத்தை நிறுவியவருமான ராம்மோகன் (1772-1833), சிலை வழிபாட்டையும், பல கடவுள் நம் பிக்கையையும் கைவிட வேண்டினார். (இவருடைய பெயருக்கு முன்னால் உள்ள ராஜா எனும் பட்டத்தை மொகலாயப் பேரரசு அவருக்கு வழங்கியது. பெயருக்குப் பின்னால் இருக்கும் ராய் என்ற சிறப்பை வங்காள நவாப் அவருக்கு அளித்தார்) அவருடைய நிலையை கேசவ் சந்த்ர சென் (1838-1884) ஆதரித்தார். வங்காளத்தின் மற்றொரு சீர்திருத்த வாதியான பண்டிட் ஈஸ்வர் சந்தர் வித்யா சாகர் (1820-1891) மற்றும் பம்பாயில் (மும்பையில்) வாழ்ந்த பார்சி சமூகத்தவரான பேராம்ஜி எம்.மலபாரி (ஙிமீலீக்ஷீணீனீழீவீ வி.விணீறீணீதீணீக்ஷீவீ, 1853 -1912) ஆகியோர், பெண்களின் கல்வி, குழந்தை மணத் தடுப்பு, விதவை மறுமணம் ஆகிய சீர்திருத்தங்களைச் செய்ய உழைத்தனர். தெலுங்கு மொழியின் மறுமலர்ச்சி எழுத் தாளரான கந்துகூரி வீரேசலிங்கம் பந்துலு (1848 - 1919) ஆந்திரத்தில் இப்பணியை செய்தார். நீதிபதியாகவும், கல்வியாளரா கவும் திகழ்ந்த மகாதேவ கோவிந்த ரானடெ (1842 - 1901) மகாராட்டிரத்தில் இவ்வகைப் பட்ட சீர்திருத்தத்தை பிரார்த்தனை சமா ஜம் என்ற அமைப்பின் வழியே செய்ய முற்பட்டார்.
மேல்மட்டத்தினரிடையே இத்தகைய மிதமான மத - சமுதாய மாற்றத்திற்கான முயற்சிகள் நடந்த பொழுது, மத மீட்பு (ஸிமீஸ்ணீறீவீsஸீ) முயற்சியும் நிகழ்ந்தது. மத மீட்பு முயற்சி, நாளடைவில் மதத்தை அரசிய லுடன் இணைக்கும் போக்கிற்கு இட்டுச் சென்றது. ராமகிருஷ்ணன் பரமஹம்சர் (1836 - 1886), சுவாமி விவேகானந்தர் (1863 - 1902), ஆரிய சமாஜத்தை நிறுவியவரும், சத்தியார்த் பிரகாஷ் எனும் நூலை (1877) எழுதியவருமான சுவாமி தயானந்த சரஸ் வதி (1825 - 83), ஆனந்த மடம், கிருஷ்ணா சரித்திரம், தர்ம தத்துவம், சிறீமத் பகவத் கீதா ஆகிய நூல்களை வங்காள மொழியில் எழுதிய பங்கிம் சந்திர சட்டோ பாத்யாயர் (1838 - 94), முதலியவர்களின் கருத்துக்கள் இந்து மதத்தின் பெருமையை விளம்பின; மத மீட்பு முயற்சிக்குத் துணையாயின. மதத்தை அரசியலுடன் கலப்பதற்கு வழி கோலின.
இதன் காரணமாக இந்து மதப் பின்னணியில் அரசியல் உரிமை கோரும் பழக்கம் உருவானது. நீதிபதியாக இருந்த வரும், பம்பாய் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்களில் முதல் இந்தியருமான காஷிநாத் திரம்பக் தெலாங் (K.T.Telang. 1850-93) அப்படிப்பட்டவர்களில் ஒரு முன்னோடி ஆவார். அரசியலில் தன்னுரி மையை நோக்கி முன்னேறுவதற்குச் சமுதாய சீர்திருத்தம் ஒரு தடையல்ல என்ற நிலைப்பாட்டை 1886இல் அவர் தெரி வித்தார். பாலகங்காதர திலகர் (1856 - 1920) சமனியம் சார்ந்த மத, சமுதாயச் சீர்திருத் தங்களையும் ,பகுத்தறிவின் அடிப்படை யிலான மாற்றங்களையும் எதிர்த்ததுடன், இந்துமத அடையாளங்களை உண்டாக்கி, அவற்றின் அடிப்படையில் அரசியலுக்கு பெருமக்களைத் திரட்டத் தொடங்கினார். பீஜப்பூர் சுல்தானையும், மொகலாய பேரரசர் அவுரங்கசீப்பையும் எதிர்த்துப் போரிட்டு ஓர் அரசை உண்டாக்கிய சத்திரபதி சிவாஜியை வீரம் மிக்க ஓர் இந்து அரசனாக அறிமுகப்படுத்தி மக்களுக்கு மத எழுச்சி ஊட்டினார். கணபதி வழி பாட்டைப் பிரபலப்படுத்தி ஆண்டுதோறும் ஆரவாரமான விழா எடுத்துக் கூட்டத்தைத் திரட்டி அரசியலுக்குப் பயன்படுத்தினார். இந்து மதப் பழைமையையும் ஆரிய நாகரிகத்தினையும் போற்றினார்.
ஆகையால் மத மீட்பு அல்லது மதத்தின் புதுப்பிப்பு எனும் நடப்பு, சீர்திருத்தங்கள் மிதமான அளவில் நிகழ்வதற்குக் கூட உத வும் வகையில் அமையவில்லை. வேதிய, சனாதன மதத்தின் கீழ் வர்ண தர்ம சமுதாய ஏற்றத்தாழ்வுகள், இழிவுகள், வாய்ப்புக் கேடுகள் தொடரும் நிலையிலேயே, பார்ப்பனிய உயர்ஜாதியாரின் மேலாதிக்கம் தொடரும் வகையில், அரசியல் உரிமை யைப் பெறுவதற்கான முயற்சிகள் நடந்தன.
இந்து மதக் கோட்பாடுகளையும் நம் பிக்கைகளையும், சம்பிரதாயங்களையும், நடப்புகளையும், மரபுகளையும் ஒட்டியோ அல்லது இயன்ற வரை மாற்றியோ சமுதா யத்தில் சீர்திருத்தங்களை செய்யும் முயற்சி கள் இத்தகைய நிலைக்குக் கொண்டு சென்றன.
ஆனால் இந்து மதத்தின் அடிப்படைக் கோட்பாடுகள், நம்பிக்கைகள், மரபுகள் முதலியன சமுதாயச் செம்மைக்கு ஊறு விளைவிப்பன என்றும், பிறவியில் ஏற்றத் தாழ்வுகளைக் களைய வேண்டுமானால், அதன் ஆதாரக் கொள்கையான வருண தர்மம், வினைப்பயன் ஆகியவற்றை ஒழித்து, மனித மாண்பு, சுயமரியாதை, உரிமை, சமனியம், மனிதநேயம் முதலிய வற்றின் அடிப்படையில் புதிய சமுதாயப் பண்பாட்டு உறவுமுறைகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியவர்கள் மகாத்மா ஜோதிபா ஃபூலே, பெரியார் ஈ.வெ.ராமசாமி. அண்ணல் அம்பேத்கர் ஆகியோர் ஆவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக