பக்கங்கள்

புதன், 17 மார்ச், 2021

சேரிகள்_ஏன்_ஊரைத்_தாண்டி_உள்ளன

#சேரிகள்_ஏன்_ஊரைத்_தாண்டி_உள்ளன

ஒடுக்கப்பட்ட மக்களின் குடியிருப்புகள் ஊரைத் தாண்டி இருப்பதற்குக் காரணம் வைதிக சைவ வைணவ ஆகமங்களே. 

ஆகம நூல்களின் உள்ள விதிகளின்படி கிராமங்களும் அதனுள் உள்ள கோயில்களும் தென்னிந்தியாவில் அமையப் பெற்றுள்ளதை அறிகிறோம். சைவ ஆகம நூல்களையும் வைணவ ஆகம நூல்களையும் படிப்போருக்கு இந்த உண்மை விளங்கும்.
தவிர ஆகமங்கள் இன்னன்ன சாதியார் கோயிலுக்குள் செல்வதற்கு அனுமதியில்லை என்றும், இன்னன்ன சாதியினர் கோயிலுக்குள் உள்ள பிரகாரம் வரையிலும், இன்னன்ன சாதியினர் கோயிலின் உள் பகுதியில் எங்கு வரை செல்லலாம் எனவும்,இன்னன்ன சாதியினர்  கர்ப்பகிரகம் வரையிலும் செல்லலாம் என்பதையும் வரையறுக்கிறது. 

இந்தப்பதிவில், ஆகம நூல்களைத் தழுவி எழுதப்பட்ட “சிவாகமங்கள் கூறும் சிவாலய தரிசனமும் சிவ விரதங்களும்” நூலில் உள்ள ஒரு பகுதியைக் காண்போம்;

****

வெளிப்பிரகாரத்திற்குப் புறத்தே
சிவாச்சாரியாரின் வாஸஸ்தானம் இடம்பெறும்.மேற்கே வேண்டுவது பரிகார கரின் வீடு, தெற்குப்பக்கத்தில் வைத்தியருக்கு இடமுண்டு.இதையடுத்து சோதிடத்தில் வல்லோர் இடம்பெறுவர். வாத்தியம்
வாசிப்பவர்கள் கிழக்கே வசிப்பர். சைவமகாசனங்கள் வசிப்பதற்கு
கிழக்கு சிறந்த இடமாகக் கூறப்படுகின்றது. மாவிரதர்களுக்குரிய(சைவர்களில் ஒரு வகை) திக்கு தென்கிழக்கு, பாசுபதர்களுக்கு தெற்கு, காளாமுகர்களுக்கு
தென்மேற்கு, பௌத்தர்களுக்கு மேற்கு, ஆருகதர்களுக்கு வடமேற்கு, பூர்மமீமாம்சர்களுக்கு வடக்கு, ஞானநெறிநிற்போருக்கு கிழக்கு, கிழக்கிற்கும் தெற்கிழக்கிற்கும் நடுவே இடம்
பெறுவது இன்னுமொரு கிணறு, தெற்கிலும், வடமேற்கிலும் பேணி அமையும். தெற்கிற்கும், தென்மேற்கிற்கும் இடையே மாட்டுத்
தொழுவம், தென்மேற்கிற்கும் மேற்கிற்கும் இடையே பிரசவசாலை,மேற்கிற்கும் வடமேற்கிற்குமிடையே நோய்தீர்க்கும் நிலையம்,வடக்கில் பாடசாலை, வடக்கிற்கும் வடகிழக்கிற்கும் நடுவில்
நெற்களஞ்சியம், வடகிழக்கிற்கும், கிழக்கிற்கும் நடுவில் வேதாத்யயன மண்டபம். அதற்குப் புறத்தே வெளியே உருத்திர கணிகை யருக்குரிய இடம். இவ்விடத்திலேயே பூ, எண்ணெய் ஆகிய பொருட்கள் விற்கும் வணிகர் உறைவதற்கு இடம் உண்டு.குயவர், சேணியர், மாமிசம் புசிப்பவர், நாவிதர், இடையர், காவல்
புரிவோர் இடம் பெறுவார். ஈசானத்தில் இருப்பது சுடலை.இதையடுத்து வடக்கில் இன்னும் வெளியே தச்சர், வண்ணான்
முதலியோருக்கு இடம் வகுக்கப்பட்டள்ளது. இவையனைத்திற்கும் வெளியே சண்டாளர்கள் வசிக்கும் இடம் இருக்கும்.

****

சிவ ஆலயங்களைக் கொண்டுள்ள பெரும்பாண்மையான ஊர்களில் கிராமங்களில் இந்த கட்டமைப்பு இருந்து வருகிறது என்பதை விளக்க வேண்டியதில்லை. அந்தந்த சாதியினர் குடியிருக்கும் தெருக்களின் வரிசைகளிலும் இன்று வரை பெரிய மாற்றம் நிகழ்ந்துவிட வில்லை.கோயில்களை ஒட்டி உள்ள தெருக்கள், அடுத்தடுத்துள்ள தெருக்களில் சாதி ஹிந்துக்களின் குடியிருப்புக்களை மட்டுமே இன்றளவும் காண முடிகிறது.வர்ணாசிரம பாகுபாடுகளை நடைமுறைப் படுத்துவதற்கு அன்றைய நாட்களில் பயன்பட்ட அதிகாரப் பூர்வமான சட்ட விதிகளே “ஆகமங்கள்”.

பி.கு: பின்னூட்டத்தில் “சிவாகமங்கள் கூறும் சிவாலய தரிசனமும் சிவ விரதங்களும்” நூலின் அட்டைப்படமும் சில பக்கங்களும்.
- தினகரன் செல்லையா முகநூல் பதிவு,15.3.21

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக