பக்கங்கள்

வியாழன், 13 அக்டோபர், 2022

சமற் கிருதக் கல்விக்கு எதிராக ராஜா ராம் மோகன் ராய்!

 ராஜா ராம் மோகன் ராய்!

பொது மக்களின் பார்வைக்கும் சிந்தனைக்கும் வராமல், சுயநலக் கூட் டத்தின் வாழ்வுக்கு மட்டுமே உதவும் தனித்த ஓர் உடைமையாகத் திகழ்ந்த ஒரு மொழியில் பொய்யும் வழுவும் புனைந்துரையும் மூடநம்பிக்கையும் கேடான கோட்பாடுகளும் குடிபுகுந் தன. ஆகையாற்றான் 1823-இல் கொல் கத்தாவில் சமற்கிருதக் கல்லூ ரியை ஏற்படுத்த முயற்சி நடந்தபொழுது அதை எதிர்த்து, ஒரு விண்ணப்பத்தை அப்பொழுதிருந்த ஆளுநர் ஆமர்ஸ்டு பிரபுவுக்கு ராம்மோகன் எழுதினார்: “ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தெரி யப்பட்டதையும், அத்துடன் வீணான மற்றும் வெறுமையான நுண்வாதங் களையும் இங்கு மாணவர் கற்பர்... அறியாமை இருட்டில் இந்த நாட்டை வைத்திருக்க வேண்டும் என்பது பிரிட்டிசு சட்டசபையின் கொள்கைத் திட்டமாக இருந்தால் அதற்குச் சமற் கிருதக் கல்வி மிகமிகப் பொருத்த மானதாகும்“

- - Page 817, Advanced History of India, R.C. Majumdar and two others


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக