பக்கங்கள்

புதன், 11 செப்டம்பர், 2019

அட, மன(ற)ர கழன்ற மனு 'நூலாரே!'

மின்சாரம்




ஒன்றைக் கொடுத்து ஒன்பதை வாங்கிக் கட்டிக் கொள்வதில் சில பொதி சுமக்கும் மிருகங்களுக்கு ஒரு வகையான சுகமே! இந்தப் போட்டியில் முதல் பரிசு 'துக்ளக்குக்கு'த்தான். அதனால் தான் அடிக்கடி கழுதை கார்ட்டூனைப் போட்டுக் கொண்டிருக்கும்.

இவர்களின் ஜெகத் குருவின் யோக்கியதையை  - சங்கதியைக் கழுவிக் கழுவி ஊத்தியாச்சு! ஜெயேந்திரருக்காக வக்காலத்து வாங்கி, எழுத்தாளர் அனுராதா ரமணன் மீது பழி தூற்றிய நிலையில் அந்த அம்மையார் கொடுத்த சாட்டையடி குருமூர்த்திகளின் தோலை உரித்துத் தொங்கப் போட்டது. இதை எல்லாம் 'விடுதலை' எடுத்து எழுதுகிறது. அதற்கு ஒரு வரி பதில் சொல்லத் துப்பில்லை.

ஆனால் ஆத்திரத்தை மட்டும் அடக்க முடியவில்லை. அதற்காக அந்த ஆத்திரத்தை எந்த வகையிலாவது சொரிந்து தீர்த்துக் கொள்ள வேண்டும் அல்லவா?

ஒவ்வொரு வாரமும் திராவிடர் கழகத் தலைவரைத் தீண்டாவிட்டால் ஆத்துலே போஜனம் கிடைக்காது போலி ருக்கு. இந்த வாரமும் (18.9.2019) எரிச்சலைக் காட்டியிருக்கு.

கேள்வி: பவள விழா நடத்திய தி.க. மாநாட்டில், வெளி யிடப்பட்ட தீர்மானங்கள் பற்றி துக்ளக் கருத்து?

பதில்: 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று கூறி, 'பிறப்பினால் எல்லோரும் ஒன்று' என்பது தன் முதன் மைக் கொள்கை என்கிறது தி.க. தீர்மானம். ஆனால், அது திருக்குறளிலிருந்து எடுக்கப்பட்டது என்பதை தி.க. மறைத்திருக்கிறது. ஏன்? திருக்குறளை பெரியார், மலம் என்று கூறிவிட்டாரே. (அப்படியா எங்கே கூறினாராம்?) அடுத்தது, 'யாதும் ஊரே யாவ ரும் கேளிர்' (எல்லாம் நம் நாடு - அனைவரும் நம் உற வினர்) என்பதும் தன் கொள்கை என்கிறது தி.க. ஆனால், அது புறநானூறிலிருந்து எடுக்கப்பட்டது என்று கூற அதற்குத் துணிவில்லை. காரணம், அடுத்த வரியிலேயே கர்ம விதியைக் கூறுகிறது புறநானூறு. முடிவாக 'உலகமே ஒரு குடும்பம்' என்பதும் தன் கொள்கை என்கிறது தி.க. ஆனால், அது தி.க. வெறுக்கும் சம்ஸ்க்ருத (ஆரிய நூலான) மகா உபநிஷத்திலிருந்து எடுக்கப்பட்டது. 'ஒருவர் நம் உறவினர், மற்றவர் வேற்று மனிதர்' என்று குறுகிய மனது உள்ளவர்கள் கூறுவார்கள். பரந்த மனது உள்ளவர்கள் - உலகமே ஒரு குடும்பம் என்று கூறுவார்கள்' என்று கூறுகிற மகா உபநிஷத், நம் நாடாளுமன்றத்தில் பொதித்து வைக்கப் பட்டிருக்கிறது. இதைத்தான் தி.க. தன் கொள்கை என் கிறது. தான் கூறியது மகா உபநிஷத்தில் இருக்கிறது என்று கூறினால் தி.க.வின் மானமே போய்விடும். தி.க.வின் பவளவிழாத் தீர்மானங்க ளின் மூன்று கொள் கைகளும் திருடப்பட்ட கருத்துக்கள்.

இதுதான் 'துக்ளக்'கின் கேள்வி பதில் பகுதி.

'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று திக பவள விழா மாநாட்டில் கூறப்பட்டதாம். இது திகவின் கொள்கையில்லை - திருக்குறளில் உள்ள கருத்து இது.

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்பது தன் கொள்கை என்கிறது தி.க.

அது புறநானூற்றிலிருந்து எடுக்கப்பட்டது.

உலகமே தன் குடும்பம் என்பதும் தி.க. வெறுக்கும் சமஸ்கிருத மகா உபநிஷத்திலிருந்து எடுக்கப்பட்டது. ஆக தி.க. சொல்லும் இந்த மூன்றுமே திருடப்பட்ட கருத்துக்கள்.

சரி... இருக்கட்டும். 'துக்ளக்' தன் கொள்கையாக - நோக்கமாக எடுத்து வைக்கும் ஒவ்வொன்றும் தன் சுயபுத்தியிலிருந்தே சொல்லுவதாக நம்ப வேண்டும்.

'துக்ளக்கும்' சரி, பார்ப்பனக் கும்பலுக்கும் சரி, ஒன்றைச் சொல்லும்பொழுது ஒரு ஆதாரத்தையும் எடுத்துக் காட்டும் புத்தியே கிடையாது. மனம் போன போக்கில் உளறித் தொலைப்பதுதான் அவாளின் வழமை.

நாம் கொடுக்கும் பதிலடி ஒவ்வொன்றுமே ஆதாரம் பேசும் - அது அவாளின் ஆயுதத்தைக் கொண்டே நன்னா மொத்தி எடுக்கும். 'விடுதலை'யையும், 'துக்ளக்'கையும் படிக்கும் எவருமே இந்த உண்மையை அறிவார்கள்.

பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்தை 'துக்ளக்' பின்பற்றி வருகிறதே; என்றைக்காகவது பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்தைத்தான் நாங்கள் பின்பற்றுகிறோம் என்று 'துக்ளக்' சொன்னதுண்டா?

மின்சார விளக்கை 'துக்ளக்' பயன்படுத்துகிறதே - தாமஸ் ஆல்வா எடிசன் கண்டுபிடித்த மின்சார விளக்கைத்தான் நாங்கள் பயன்படுத்துகிறோம் என்று குருமூர்த்தி எழுதிய துண்டா? ரைட் சகோதரர்கள் கண்டுபிடித்த விமானத்தில் தான் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்றார் என்று என்றைக்காகவது 'துக்ளக்' கும்பல் எழுதியதுண்டா?

மு.க.ஸ்டாலின் மேயராக இருந்த போது கட்டப்பட்ட மேம்பாலத்தின் வழியாகத்தான் காரை ஓட்டி வந்தோம் என்று எழுதியதுண்டா?

இந்த வார 'துக்ளக்'கின் அட்டைப் படத்தில் "அஸ்ஸலாமு அலைக்கும்" என்று கூறப்பட்டுள்ளதே, அது என்ன துக்ளக்கின் சொந்த கண்டுபிடிப்பா? எங்கிருந்து வந்தது என்று குறிப்பிடாதது ஏன்?

அடேயப்பா - திருவள்ளுவர் இவ்வளவு உயர்வாக எழுதி இருக்கிறார் என்றால் - வள்ளுவரின் அப்பன் பார்ப்பான் என்று எழுதும் திமிர் பிடித்த கூட்டத்தின் அகம்பாவம் இன்னும் அடங்கவில்லை என்றால் - அது அடக்கப்பட்டே தீரும் - அந்த அளவுக்கு இளைஞர்கள் இப்பொழுது வீறு கொண்டு எழுந்துள்ளனர்.

திருவள்ளுவர் கூறியுள்ளதையும், புறநானூறில் கூறியுள்ளதையும் தன் கொள்கை என்று தி.க. கூறியுள்ளது என்பது குற்றச்சாட்டா? விமர்சனமா?

குற்றச் சாற்று என்றால் அதனை எதிர்த்து எழுதாதது ஏன்? விமர்சனம் என்றால் எந்த விமர்சனத்தையும் முன் வைக்காதது ஏன்?

'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற திருவள்ளுவரின் கருத்தை ஏற்றுக் கொள்கிறோம் என்று 'துக்ளக்' கும்பலால் கூற முடியாது.

காரணம் கீதை என்ற உலக்கை அவர்கள் மண்டையில் ஒரு போடு போடும். நான்கு வருணங்களையும் நானே படைத்தேன் - சதுர் வருணம் 'மயாசிருஷ்டம்‘ என்றுதானே கீதையிலே கிருஷ்ணன் கூறுகிறார். அவர்கள் எப்படி குறளின் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதை ஏற்றுக் கொள்வார்கள்? கீதைக்கு எதிரான குறளின் மீதுள்ள ஆத்தி ரத்தை, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற கொள்கை யுடைய தி.க.வின் மீது காட்டுகிறார்கள் அவ்வளவு தான்!

"யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்பதையும் அவர் களால் ஏற்கவே முடியவே முடியாது.

கடலைத் தாண்டிப் போவதே தோஷம் என்று சாஸ்திரம் எழுதி வைத்திருக்கும் 'சாஸ்திராக்கள்' யாதும் ஊரே என்று சொல்ல முடியுமா?

"யாவரும் கேளிர்" என்றும் சொல்ல முடியாது. அவர்களுக்குள்ளேயே வடகலை, தென்கலை குஸ்திகள் கொஞ்சமா நஞ்சமா?

வடகலைக்காரனை தென்கலைக்காரன் கண்டால் சுவரில் முட்டிக் கொள்வானே - அதற்குப் பெயர் 'கண்டு முட்டு' - ஒருவன் இன்னொருவனைப் பற்றிக் காதில் கேட்டா லும் சுவரில் முட்டிக் கொள்வான் - அதற்குப் பெயர் “கேட்டு முட்டு‘.

இந்த யோக்கியதையில் யாவரும் கேளிர் என்று எந்த முகத்தை வைத்துக் கொண்டு பேசுவாராம்?

தங்கள் கலாச்சாரத்துக்கும், சாஸ்திர சம்பிரதாயத்துக்கும் எதிராக இந்தப் புறநானூறு வரி இருப்பதால் இந்தக் கொள்கையுடைய தி.க.வின் மீது தீரா ஆத்திரம் அலை மோதுகிறது - அதன் எரிச்சல்தான் இந்தக் கேள்விப் பதில்.

திருவள்ளுவர் கூறுவதையோ, புறநானூறு கூறுவ தையோ தி.க. ஏற்றுக்கொள்கிறது என்பது எப்படித் திருட்டாகும்?

நாகையிலிருந்து அய்ம்பொன்னாலான புத்த விகாரத்தைத் திருடி சீறிரங்கத்துக் கோயிலுக்கு மதில் சுவர் எழுப்பினான் திருமங்கை ஆழ்வார் என்றால் அந்த நேரத்தில் கடவுட்டன்மையுடையவராதலால், அவர் செய்கையை யாரும் குறை கூறார் என்று திருட்டுக்கு தில்லு முல்லு வக்காலத்து வாங்கும் வருணாசிரமக் கும்பல் "ஒழுக்கம் பொதுச் சொத்து - பக்தி தனிச் சொத்து" என்ற கொள்கையுடைய திராவிடர் கழகத்தின் செயலை திருட்டு என்று கூறுவது பித்தலாட்டத் தகடுதத்தத்தைத் தான் குறிக்கும்.

பெண்களைப் பற்றி தத்துப் பித்து என்று உளறி நாலாப்பக்கங்களிலும் நையப்புடைக்கப்படுகிறார் திருவாளர் குருமூர்த்தி; இதற்கெல்லாம் மூல காரணமே இந்தப் பெரியாரும், தி.க.வும், வீரமணியும் தானே என்ற ஆத்திரம் சும்மா புரட்டிப் புரட்டி எடுக்கிறது. இந்த ஆத்திரத்தாலே மரை கழன்று போய் விட்டது போலும்!

அய்யோ பாவம் - நமது அனுதாபங்கள்!

மானத்தைப் பற்றி 'துக்ளக்' கூட்டம் பேசலாமா?


உலகமே ஒரு குடும்பம் என்கிறது மகா உப நிஷத் அதிலிருந்து தன் கொள்கைகளை திருடியிருக்கிறது தி.க. என்று எழுதுகிறார் குருமூர்த்தி அய்யர்வாள்.

பரவாயில்லையே, மகா உப நிஷத்தை எல்லாம் படித்துவிட்டுத் தான் தி.க. எழுதுகிறது என்று ஒப்புக் கொண்டுவிட்டார் - அதுவரை பாராட்டவும் செய் யலாம். சரி, உலகமே ஒரு குடும்பம் என்று உங்கள் மகா உபநிஷத் கூறுகிறதே, அதனை நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்களா?

ஒரே குடும்பம் என்று ஆகிவிட்ட பிறகு ஜாதி ஏன்? கோத்திரம் ஏன்? எல்லாம் ஒன்றாகிட வேண்டியது தானே! தி.க.வை மட்டம் தட்ட வேண்டுமானால் அவாளுக்கு மகா உபநிஷத் தேவைப்படுகிறது.

உபநிஷத்தைப் பற்றி கதை அளக்கிறார்கள் - இவை மூலமா? தழுவலா? இது பற்றி சுவாமி சிவானந்த சரஸ்வதி என்ன சொல்லுகிறார்?

உபநிஷத்தை உண்டு பண்ணியவர்கள், புத்த பகவானது உயர்ந்த கொள்கைகள் அனைத்தையும், வேதமாகுமென்று, உறுதிப்படுத்துவதற்கு இந்த ஜாலத்தைக் காட்டி மக்களை மயக்குகிறார்கள்.

அல்லா உபநிஷத்து, கிறிஸ்து உபநிஷத்து என்றெல்லாம் கூட உண்டே!

உபநிஷத் சொன்னதைத்தான் தி.க. சொல்லுகிறது என்கிறதே 'துக்ளக்' - அதை நம்பினால் திகவை ஏன் எதிர்க்க வேண்டும்? ஆதரிக்க வேண்டியதுதானே!

உபநிஷத்தே திருட்டு என்கிறபோது, திருட்டைப் பற்றி ரொம்பத்தான் கவலைப்படுகிறது? இந்தக் கைபர்கள் கூட்டம். தி.க. கூறுவது உபநிஷத்திலிருந்து எடுக்கப்பட்டது என்றால் திகவின் மானமே போய்விடும் என்கிறது. மானத்தைப் பற்றியெல்லாம் மகாபாரதக் கும்பலா எழுதுவது? புத்தரிடமிருந்து திருடியது என்றால் இங்கே மானம் போவது யாருக்கு?

- விடுதலை நாளேடு, 11.9.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக