பக்கங்கள்

செவ்வாய், 24 செப்டம்பர், 2019

தேவாரம்



தேவாரம் பாடப்பட்டதன் நோக்கமே, பிறரைத் துன்புறுத் துவதுதான் என்பதனைத் தேவா ரத்தை நடுநிலை யுடன் படிக்கும் எவரும் எளிதில் உணர்ந்து கொள்வர். தேவாரத்தைப் படிக்கும்போது ஒரு வைணவன் பக்கத் தில் நிற்க மாட்டான் - ஒரு சமணன் நிற்க மாட்டான் - ஒரு புத்தன் நிற்க மாட்டான் - இன்னும் விளக்கமாகச் சொல்ல வேண்டுமானால், சமரச சன் மார்க்கம் பேசும் ஒரு சைவன் கூட அதன் பக்கத்தில் நிற்க மாட்டான் - அந்த அளவுக்கு வசை மொழிகளை வாரிவாரி இறைத்திருக்கிறார்கள் தேவாரத்தைப் பாடிய திருஞான சம்பந்தரும் பிற நாயன்மாரும்! தெருச் சண்டைக்கு நிற்பவன் வாயில்கூட வராத வசைமொழி கள் பல தேவாரம் பாடிய நாயன் மார்கள் வாயினின்றும் வந்திருக் கின்றனவே!

- “திராவிட நாடு" (14.10.1956)

 - விடுதலை நாளேடு, 15 .9 .19


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக