பக்கங்கள்

செவ்வாய், 24 செப்டம்பர், 2019

ஆரிய மாயை!



நாலு தலைச் சாமிகள், மூன்று கண் சாமிகள், மூன்று தலைச் சாமிகள், ஆயிரம் கண்சாமி, ஆறுதலைச்சாமி, ஆனை முகச்சாமி, ஆழிவாய்ச்சாமி, பருந்தேறும் சாமி, காளை ஏறும் கடவுள், காக்கை மீது பறக்கும் கடவுள், தலை மீது தையலைத் தாங்கி நிற்கும் தெய்வம், ரிஷி பத்தினிகளிடம் சுகமனுபவிக்க நடு நிசியில் போகும் தெய்வம் என்று புராண அட்டவணைகளிலே உள்ளனவே! நாம் இந்து என்று கூறிக் கொண்டு தொழ வேண்டுமே. இந்தச் செய்தியைக் கேட்டால், உலக நாகரிக மக்கள் நம்மை நீக்ரோக்களைவிட கேவலமானவர்கள் என்று கேலி செய்வார்களே! இந்தக் கண்ணறாவிக்கு என்ன செய்வது? இத்தகைய ஆபாசத்தை நம் தலையில் தூக்கிப் போட்டுக் கொள்ள, நமக்கு மனம் எப்படித் துணியும்? ஆகவேதான் நாம் இந்து அல்லவென்று கூறுகிறோம்.

'திராவிட நாடு' - (26.9.1943).

- விடுதலை நாளேடு, 15 .9. 19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக