பக்கங்கள்

வெள்ளி, 13 செப்டம்பர், 2019

மறைமலை அடிகள் கருத்துரை

மறைமலை அடிகள் பேசுகிறார்...

ஹிந்தி ஆரிய தர்மத்தை அடிப்படையாகக் கொண் டது. ஆரிய தர்மம் வர்ணாஸ் ரம தர்மத்தை, சாதி வேறு பாடுகளை, சாதி உயர்வு தாழ்வுகளை அடிப்படை யாகக் கொண்டது. தமிழர் கலாச்சாரமோ இதற்கு முற்றி லும் மாறுபாடானது.

அப்படி இருக்க, ஜாதி வேற்றுமைகளையே அடிப்படையாகக் கொண்ட ஹிந்தி மொழியைத் தமிழ்நாட்டில் புகுத்துவதென்றால் இங்கு கொஞ்சம் கொஞ்சமாக ஏற்பட்டு வரும் ஒற்றுமை மனப்பான்மையைக் கெடுக்க ஆரியர்களால் செய்யப்படும் சூழ்ச்சி இது என்றுதானே கொள்ள வேண்டியிருக்கிறது. நாம் ஹிந்தி வேண்டாம் என் றால் சமஸ்கிருதம் படியுங்கள் என்று கூறுவதன் கருத்து இதுதானே! இரண்டும் மக்க ளுள் வேற்றுமை உணர்ச்சி களை வளர்க்கும் மொழிகள் என்பதுதான் இதற்குக் கார ணம். தமிழர்களிடையே தோன்றியுள்ள புத்துணர்ச்சியை, பகுத்தறிவு உணர்ச்சியைக் கெடுக்க, நாசமாக்க, தம்மா லியன்ற எல்லா வகையாலும் தொல்லை கொடுக்க முற் பட்டு விட்டனர் என்பதன் அறிகுறிதான் இது.

(பெரியாருக்குப் பாராட்டு)

இதை ஆரம்பத்திலிருந்தே உணர்ந்து கொண்டுள்ள பெரியார் இராமசாமி அவர்களும் ஆரியத்தை இந்நாட்டிலிருந்து எவ்வகையிலேனும் ஒழித்தே தீருவதென்று கங்கணம் கட்டிக் கொண்டு முயற்சி செய்து வருகிறார்கள். இத் தொண்டு மிக விரைவில் வெற்றி காண இருக்கிறது என்பது இங்குக் கூடியுள்ள மக்கள் உணர்ச்சியால் நன்கு தெரியப்படுகின்றது. நான் சைவ சமயத்தில் பிறந்து விட்டேன். ஆகையால் இவருடன் ஆரம்ப காலத்திலிருந்தே ஒத்து வேலை செய்யும் வாய்ப் புக் கிடைக்காமற் போய் விட்டது.

சைவ சமயத்தவரைத் திருத்துவதையே எனது நோக்க மாகக் கொண்டு, சமஸ்கிருதம் கற்று சைவ சமய உண்மை களை ஆராய புகுந்தேன். பார்ப்பனர்களின் தந்திரங்களை, சூழ்ச்சிகளை அறிந்து சில வெளியீடுகளின் மூலம் அவைகளை அம்பலமாக்கினேன். பார்ப்பனர் தம்மை உயர் ஜாதி என்று சொல்லிக் கொள்ளத் தகுதியற்றவர்கள் என்பதை ஆதாரத்துடன் விளக்கிக் காட்டினேன். இதன் பயனாய் பார்ப்பனர்கள் என்னை `வேத விரோதி என்றும் `பார்ப்பனத் துவேஷி என்றும் பழித்துக் கூறி எம்ம வரிடத்திலேயே எனக்குப் பகைமையை மூட்டி விட் டனர். இதனால் நான் எடுத்த காரியம் எதிர்பார்த்த பல னைத் தராமல் போய் விட்டது என்றாலும் இந்த 55 ஆண்டு களில் சுமார் 40 நூல்கள் வரை தமிழில் வெளியிட்டேன், ஆங் கிலத்திலும் சில நூல்கள் வெளியிட்டுள்ளேன். இவை கள் இளைஞர் உள்ளத்தில் ஓரளவுக்கேனும் எழுச்சியை உண்டாக்க பயன்பட்டிருக் கும் என்று நினைக்கிறேன். செல்வந்தர்களும் மடாதி பதிகளும் ஆரிய தாசர்களாய் ஆகிவிட்ட போதிலும் இந் நாட்டு இளைஞர்கள், தமிழ் அணங்குகள் யாவரும் பெரியார் சொற்படி அறப்போர் துவக்கி ஹிந்தியை ஒழிப்பதில் விரைவில் வெற்றிகாண வேண்டுமென்று கூறிக் கொண்டு என் தலைமை உரையை முடித்துக் கொள்கிறேன்.

-------------- 17.1.1948-இல் சென்னையில் நடைபெற்ற மாகாண இந்தி எதிர்ப்பு மாநாட்டிற்குத் தலைமை வகித்து மறைமலை அடிகளார் ஆற்றிய உரை

நன்றி : தமிழ் ஓவியா

16-9-1943 அன்று அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உரையாற்றியபோது... ஒருவர், ‘‘திராவிட நாடு பற்றி தங்கள் கருத்து யாது’’ எனக் கேள்வி கேட்டார். அதற்கு அடிகள், ‘‘இந்தியா முழுவதுமே திராவிட நாடுதான்’’ என்றார்.

     நன்றி : பிரகாஷ்,  விகடன்

கடவுள், சமயம், கோயில், வழிபாடு, சமய நுல்களில் ஆழ்ந்த ஆர்வங்கொண்ட சிவத் தொண்டராம் அடிகள் தாம் பரப்பவிருந்த தமிழ் இன நாகரிக, மொழி சீர்திருத்தக் கருத்துக்கள் யாவற்றையும் ஈ.வே.ரா. பரப்பி வருவது கண்டு ஆழ்ந்த மகிழ்ச்சி கொண்டார்.

யான், ஆராய்ந்து எழுதி அரிதே அச்சிட்டு வெளிப்படுத்தும் கோட்பாடுகள் யாவும் கலைஞர்க்கும், புலவர்க்கும், பொது மக்களிற் சிறந்தார் சிலருக்குகே பயன் தருகின்றன. ஆனால், ஈ.வே.ராவின் கிளர்ச்சியோ சிற்றூர், பேரூர்களிலெல்லாம் பரவிப் பயன் விளைக் கின்றது. இதனால் எனது நோக்கங்களும், விருப்பங்களும் அவராலே எளிதில் எங்கும் பரவுகின்றன. என்னோக்கம் எனக்கு வருத்தம் தருதலின்றி எளிதே முற்றுரு கின்றன. ஆதலால், ஈ.வே.ரா. நெடிதினிது வாழ்க! அவர் முயற்சி வெல்க! என்று தம்மைக் காண வருவோரிடமெல்லாம் அடிகள் கூறவே, ஈ.வே.ராவை வாயார வாழ்த்திக் கொண்டிருந்தார்.
(நூல்: மறைமலை அடிகள் வரலாறு ஆசிரியர் மறை.திருநாவுக்கரசு

'கம்பராமாயணம் பற்றி அடிகள்’ என்று தலைப்பிட்டு அவர் எழுதுவன பின்வருமாறு :

நம் அடிகளோ, கம்பர் பாடல்கள் சிறந்த நல்லி சைப் புலமையால் எழுந்தன அல்லவென்றும், பண் டைத் தண்டமிழ்ச் சங்கப் பாடல்களோடு அப்பாடல் களை ஒப்பிட்டால், கம்பர் கவிகள் சிறந்து நில்லா என்றும், அவை பகுத்தறிவுக் கொவ்வாக் கதைகளால் - ஆரவாரமான - ஏராளமான பொருளற்ற கற்பனை களால் வரைதுறையின்றி யாக்கப்பட்டவை என்றும், கம்பரைப் பின்பற்றி எழுந்த ஏனைய காவியங்களும் அவர் முறையைப் பின்பற்றிச் சிறப்பிழந்தன என்றும், பாட்டுப் பற்றிய பண்டைத் தமிழர் மரபே கம்பரால் புறக்கணிக்கப்பட்டதென்றும், தமிழர் நாகரிக - இன உணர்வைத் தம் கதையால் கெடுத்துவிட்டார் என்றும் கருதினார்...

அத்துடனில்லாது அடிகள் தமிழர் நாகரிக சமய - இன உணர்வுக்கு மாறான - கம்பராமாயணத்தைப் பயிலுதலும், அவைக்களங்களில் அதனை விரித்தெ டுத்து ஓதிப் பரப்புதலும் தவறென்று தம் சொற்பொழிவு களிலும், எழுத்துகளிலும் வெளியிட்டும் எழுதியும் வந்தார். (மேற்படி நூல், பக்.568).

ஆக, தமிழர் நாகரிக - இன உணர்வைத் தம் கதை யால் கம்பர் கெடுத்துவிட்டார்; அதனால் கம்பராமாய ணத்தைப் பயிலுதலும் ஓதிப்பரப்புதலும் தவறென்று தமிழ்க்கடலாம் மறைமலையடிகள் சொன்னார். ‘தேவையற்ற அந்நூல் ஏன்? எரித்துவிடுங்கள்!’ என்று பெரியார் சொன்னார்.
நன்றி  : கவிஞர் தமிழேந்தி - செய்தி: தளபதி, மதுரை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக