பக்கங்கள்

வியாழன், 5 செப்டம்பர், 2019

பார்ப்பன புஷ்யமித்திரன் காலத்தில்தான் இராமாயணம் படித்தவர்களைத் தலைவெட்டிய கொடூரம்!!

அதிர்ச்சியூட்டும் தகவல்கள்


(இந்தியாவின் வரலாறு காலவரிசைப்படி)




இந்தியா மற்றும் உலக அகழ்வாராய்ச்சி மற்றும் வரலாற்று ஆய்வாளர்கள் குறிப் பிடப்படும் உண்மை இந்திய வரலாறு -

5000 ஆண்டுகளுக்கு முன்பு சிந்துவெளி நாகரிகம், (1902ஆம் ஆண்டிலிருந்து நீண்ட அகழ்வாய்வு செய்து ஆய்வுகளின் முடிவு களை கொண்டு முடிவு செய்யப்பட்டது.  அதே காலகட்டத்தில் கீழடி ஆதிச்ச நல்லூர் நாகரிகம் - சமீபத்தில் உறுதிசெய்யப்பட்டது - மேலும் ஆய்வு தொடர்கிறது.

3000 ஆண்டுகளுக்கு முன்பு சிந்து வெளி நாகரிகம் திடீரென்று மெல்ல மெல்ல அழியத்துவங்கியது, ஆரியர்கள் சிறு சிறு குழுக்களாக இந்துகுஷ் மற்றும் கைபர் கணவாய் வழியாக இந்திய தீபகற்பத்தில் நுழைதல்...

2500-ஆம் ஆண்டு கங்கைச்சமவெளி ராஜ்யங்கள் தோன்றுதல். பெரு ராஜ்யங் களுக்குள் உட்பட்டிருந்த ஒரு சிறுராஜ்ஜி யத்தின் மன்னருக்கு மகனாக புத்தர் பிறப்பு - "புத்தர் காலம்" என்று கூறுவார்கள்

2200 மவுரியர்களின் காலம்

1700 குப்தர்களின் காலம்

ஆனால், ஆர்.எஸ்.எஸ் வரலாறு என்ன கூறுகிறது?

10000 ஆண்டுகளுக்கு முன்பு வேத காலம்.

7000 ஆண்டுகளுக்கு முன்பு இராமா யண காலம்.

5000 ஆண்டுகளுக்கு முன்பு மகாபாரத காலம் - துவாரகையில் கிருஷ்ணன் ஆட்சி.

4000 ஆண்டுகளுக்கு முன்பு சரஸ்வதி நதிக்கரை நாகரிகம்,

2000 ஆண்டுகளுக்குப் பிறகு, கங்கை சமவெளி நாகரிகம்

(இவர்கள் கூறும் பட்டியல் எல்லாம் கற் பனைகளாக எழுதப்பட்டவையே) எடுத்துக் காட்டாக, கிருஷ்ணன் ஆண்டதாகக் கூறும் துவாரகை குறித்து சுதந்திரத்திற்குப் பிறகு குஜராத் கடற்கரைப் பகுதியில் துவங்கி இன் றைய காலம் வரை தொடர்ந்து அகழாய்வு செய்ததில் எந்த ஒரு சான்றும் கிடைக்க வில்லை. துவாரகை குறித்து ஆங்கிலேய அகழாய்வு அறிஞர்கள் அங்கு அகழாய்வு செய்வது வீண் என்று கூறிவிட்டனர். 2003-ஆம் ஆண்டு வாஜ்பாய் ஆட்சியில் நவீன கருவிகள் கொண்டு இஸ்ரோ உதவியுடன் அகழாய்வு செய்தும் துவாரகை பகுதியில் முன்பு ஒரு நகரம் இருந்ததற்கான எந்த ஒரு தடயமும் கிடைக்கவில்லை.

சிந்துவெளி நாகரீகத்திற்கு முன்பு இந்தியா முழுவதும் ஒரே கலாச்சாரம் கொண்ட மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பதற் கான சான்றுகள் இன்றும் உள்ளன, எடுத்துக் காட்டாக, தெற்கே நாகர்கோவில், நாகனூர், பாகிஸ்தான், பங்களாதேஷ் என இந்திய தீபகற்பம் முழுவதும் பெரிய நகரம், சிறிய நகரம் சிற்றூர் என நாகம் என்ற பெயரில் 18000-த்திற்கும் மேற்பட்ட ஊர்கள் உள்ளன. ஒரு பகுதி மக்கள் தாங்கள் செல்லும் பகுதிக்கு தங்கள் ஊர் பெயரையே சூட்டுவர் என்பது வரலாற்றுச் சான்றாக உள்ளது, இதனடிப்படையில் சிந்து சமவெளிக்கு முன்பு இந்திய தீபகற்பம் முழுவதும் ஒரே இனம் வாழ்ந்து வந்தது, அதன் பிறகு ஆரியர்களின் வருகை காரணமாக இனக் குழுக்கள் சிதைந்து கலப்பு ஏற்பட்டு நாடு முழுவதும் பிரிவுகள் ஏற்பட்டன, இருப் பினும் இவர்களால் அன்று முன்னோர்கள் சூட்டிய வரலாற்று பெயர்களை அழிக்க முடியவில்லை.

மொழிக்கு வருவோம்!

மொழி மக்கள் வாழும் இடத்தைப் பொறுத்தே உச்சரிக்கப்படும். தமிழை ஒற்றே, வட இந்தியா முழுவதும் இருந்த கடிபோலி, பாலி போன்றவை இருந்தன. இது மக்களால் பேசப்பட்டு வந்தது, நமது தட்ப வெட்ப நிலையைப் பொறுத்து தடிப்பான உச்சரிப்புகளே அதிகம் உண்டு - நெருப்பு, சோறு, ஆறு, மரம், வயல் வரப்பு என்றவாறு.

ஆனால் சமஸ்கிருதத்தில் அக்னி, போஜன், நதி, விருக்‌ஷம், க்ருஷம், க்ருஷு மென்மையான உச்சரிப்புகள் நமது காலச் சூழலுக்கு ஒத்துப்போகாத வார்த்தைகள். இதிலிருந்து சமஸ்கிருதம் வெளியிருந்து வந்த மொழி ஆயினும் பொதுவில் உச்சரிப்பு சிக்கல் தொடர்பாக பெருவாரியான மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகவே அந்த மொழி வந்ததில் இருந்தே செத்த மொழியா கத்தான் இருந்தது,

கி.மு.180 சுங்கன் புஷ்யமித்திரன் என்ற பார்ப்பனரால் மவுரியப் பேரரசு முடிவிற்கு வந்தது. அதன் பிறகு தான் ராமர் கதைகள் உருவாக்கப்பட்டன.



புஷ்யமித்திரன் வரலாறு தான் இராமா யணமாக மாற்றப்பட்டு - ராமனாக மாற்றப் பட்டான் என்று சில வரலாற்று ஆய்வா ளர்கள் கூறுவார்கள். இது உண்மையாக இருப்பதற்கு ஒரே ஒரு சான்று, பார்ப்பனர் களைத் தவிர வேறு யாருமே கல்வி கற்கக் கூடாது என்றும், அப்படியாரும் கல்வி பயில முற்பட்டால் அவர்களின் தலையை வெட் டிக்கொண்டுவருவோருக்கு தங்கக் காசுகள் பரிசாக தருவேன் என்று அறிவித்தான். அதன் விளைவாக பவுத்த துறவிகள் சங்கத் தில் பயின்றவர்களின் தலைகள் தொடர்ந்து வெட்டப்பட்டன, அந்தத் தலைகளைக் கொண்டுவந்து மன்னர் அரண்மனைக்கு முன்பு காண்பித்துவிட்டு அதை சுத்தியலால் உடைத்து ஆற்றில் போட்டுவிடுவார்கள். பிளக்கப்பட்ட மண்டை ஓடுகள் தொடர்ந்து ஆற்றில் பாத்திரங்களைப் போல் மிதந்து ஓடியதால் சராயுது என்று அழைக்கப்பட்ட நதி பிற்காலத்தில் சராயூ என்று மருவி இன்றுகூட சராயூ என்று அழைக்கப்படு கிறது. கற்றவர்களின் தலையை வெட்ட உத்தரவிட்ட புஷ்யமித்திரனின் வரலாற்று நிகழ்வை வைத்துத்தான் ராமாயணத்தில் சம்பூகன் தலையை வெட்டும் நிகழ்வை சேர்ந்துள்ளனர். புஷ்ய மித்திரன் அனைத் துப் பவுத்த நூல்களை அழித்து வேதம் என்ற பெயரில் பல சமஸ்கிருத புராணக் கதைகளை எழுத உத்திரவிட்டான். அன்றி லிருந்து தான் சமஸ்கிருத காலம் துவங்கு கிறது, அதாவது கிறிஸ்து பிறப்பதற்கு 100 ஆண்டுகளுக்கு முன்பு.. இதற்குச் சான்றுகள் புஷ்யமித்திர னின் வாழ்க்கை வரலாற்றில் இருந்தே தெளிவாகத் தெரிகிறது, அதற்கு முன்பு சமஸ்கிருதமே இல்லாத பகுதியில் வேதங் கள் மட்டும் யார் எழுதினார்கள்? அதைப் படிப்பவர்கள் பேசுபவர்கள் யார் என்ற கேள்வி எழும்.

வரலாற்றில் புலம்பெயர்பவர்கள் தங் கள் வேதங்களைக் கொண்டு செல்வார்கள் என்பதற்கு யூதர்கள் சான்றாக உள்ளனர். மோசே தனது இனக்குழுவுடன் இடம் பெய ரும் போது, தனக்கு முன்பு எழுதப்பட்ட பழைய ஏற்பாடு கதைகளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வதற்குப் பெரிதும் ஊக்கம் கொடுத்தார். ஆகவே தான் அவரை ஏசுவின் பிறப்பிற்குப் பிறகு எழுதப்பட்ட புதிய ஏற்பாடு என்ற நூலிலும் அவரைப்பற்றி அதிகம் எழுதி நன்றி தெரிவித்துள்ளனர். மோசேவிற்கு முன் பிருந்த பழைய ஏற்பாடு நூலில் உள்ள பல கதைகள் மகாபாரதத்திலும் அப்படியே வருகின்றன, இதிலிருந்தே ஆரியர்கள் வருகை 3000 ஆண்டுக்குப் பிறகு என்றும் அவர்கள் மோசேவின் கூட்டத்தில் இருந்து பிரிந்து வந்தவர்கள் என்றும் உறுதிசெய்யப் படுகிறது. ஆரியர்கள் வெளியிலிருந்து வந் தவர்கள் என்பதற்கு மற்றுமொரு சான்று; மோசே கூட்டத்தார் பெருங்கழுதைகளில் பயணப்பட்டு பல தேசங்கள் சென்றார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது குதிரைகளின் பயன்பாட்டை மோசேவிடம் இருந்து பிரிந்துவந்த கூட்டத்தினர் பயன் படுத்தினர் என்றும் சிந்து வெளி நாகரீகத்தில் குதிரைப் பயன்பாடு இல்லை என்பதும் அனைவரும் அறிந்ததே.

சிந்துவெளி நாகரிகத்திலும் அதனைத் தொடர்ந்து கங்கைச் சமவெளி நாகரிகத்தி லும் கிடைத்த பொதுப்பயன்பாட்டுக்கான கல்வெட்டுகள் அனைத்துமே பாலி, பிராமி மற்றும் அபிலேகி போன்றவைகள் ஆகும். இதில் எங்குமே சமஸ்கிருதம் இருந்ததாக ஒரு சான்று கூட கிடையாது,

பாலி மொழி திபெத்தோ பர்மான் என்று மருவி, பின்னர் சீனம், மங்கோல், பர்மியம் மற்றும் தாய்ப் பகுதிகளில் பேசப்பட்டுவந்த உள்ளூர் மொழியுடன் கலந்து சீனமொழி யாகவும், பர்மிய மொழியாகவும், தாய் மொழியாகவும், இதர தென்கிழக்கு ஆசிய மொழியாகவும் மாறியது.

இதில் எங்குமே சமஸ்கிருதம் இல்லை.



சுல்தான்கள் மற்றும் முகலாயர்கள் வருவதற்கு முன்பு பாலி, தமிழ் மற்றும் சில வட்டார மொழிகள் பேசப்பட்டு வந்தன. சுல்தான்களுக்குப் பிறகு சிந்தி மொழி, பார்ஸி போன்றவையும் மொகலாயர்க ளுக்குப் பின்பு சிந்தி பார்ஸி மொழிகள் சிறுத்து உருதுமொழி ஆகி விட்டது, அதன் பிறகு உருது உள்ளூர் மொழிக்கலப்பு உரு வாகி இந்துஸ்தானி உருவானது. இந்த இந் துஸ்தானியில் தான் சமஸ்கிருதம் திணித்து இந்தி என்ற ஒன்றை உருவாக்கினார்கள்.

வங்கமொழியும் கூட திராவிட மொழி யின் கிளைதான், இதை புகழ்பெற்ற வர லாற்று மொழி ஆய்வியலாளர்     டி டி கோசம்பி உறுதிசெய்துள்ளார். அவர் கூறும் போது - இந்திய மொழிகளில் மிகவும் கரடுமுரடான மொழி என்றால் அது வங்கம் தான்; அவர்கள் மொழியைப் போலவே அவர்கள் வணங்கும் கடவுளையும் ஆக் ரோசமான துர்க்கையாகவே வணங்கினர், ஆனால் சமஸ்கிருதம் என்பது இதற்கு அப்படியே எதிர்மறையான ஒன்று ஆகும். ஆகவே வங்க மொழி சமஸ்கிருதத்தில் இருந்து பிரிந்தது என்று கூறுவது பாலை வனத்தில் மாமரம் ஒன்று செழித்து வளர்ந் திருந்தது, அதில் சுவையான மாம்பழங் களைச் சாப்பிட்டேன் என்று கூறுவதற்குச் சமம் என்று கூறியுள்ளார்.

மூன்று தலைமுறை மொழி ஆய்வியல் குடும்பத்தில் பிறந்த இவர் தனது மூன்றாம் தாத்தா பதிவு செய்த கல்வெட்டு ஆய்வு களை முழுமையாக ஆய்வு செய்து நூலாக வெளியிட்டார்.

- விடுதலை ஞாயிறு மலர், 10. 8 .19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக