புவனேசுவர், செப்.11 என்னுடைய திறமை யும் பெற்றோரின் ஆதரவுமே என்னை விமானியாக்கியுள்ளது. இதில் நான் எந்த கடவுளுக்கு நன்றி கூறத்தேவையில்லை என்றார் மதுமிதா லக்ரா.
ஒடிசா மாநிலம் மலகன்கிர் கிரா மத்தைச் சேர்ந்தவர் அனுபிரியா மது மிதா லக்ரா. 27 வயதான அனுபிரியா பழங்குடியின சமூகத்திலிருந்து முதல் பெண் விமானியாக தேர்வு செய்யப் பட்டுள்ளார். இவரது தந்தை ஒடிசா மாநில காவல்துறையில் காவல்துறை அதிகாரியாக உள்ளார்.
சிறுவயதில் இருந்தே விமானியாகி வானத்தில் பறக்கவேண்டும் என்ற ஆசையில் அதற்காகப் படித்துள்ளார். அதன்படி, மத்திய அரசின் விமான பயிற்சி மய்யத்தில் சேர்ந்து விமான பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். மிகுந்த பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் பலரின் உதவியால் படித்துள் ளார் அனுபிரியா.
மும்பையில் ஜூலையில் நடைபெற்ற பயிற்சி மற்றும் தேர்வில் வெற்றி பெற்றதையொட்டி, அனுபிரியா இந்த மாதம் முதல் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் முதன்முதலாக விமா னத்தை இயக்கும் பழங்குடியினப் பெண் என்ற பெருமையை அனுபிரியா மது மிதா லக்ரா பெற்றுள்ளார்.
அனுபிரியாவின் முயற்சிக்கு ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் அவரது சாதனை அளவற்ற மகிழ்ச்சியை அளிப்பதாகவும், மற்ற பெண்களுக்கு அவர் ஒரு சிறந்த உதாரணமாகச் செயல் படுவார் என்றும் கூறியுள்ளார்.
தந்தை காவல்துறை அதிகாரியாக இருந்தாலும் அவர் மட்டுமே குடும்பத் தின் ஒரே ஒரு சம்பாதிக்கும் நபராக உள்ளார். அவரும் சமீபத்தில் தான் பதவி உயர்வு பெற்று அதிகாரியானார். இந்த நிலையில் தனது விமானி கனவை நிறைவு செய்ய தன்னுடைய திறமை யோடு சில பொதுநல அமைப்புகளின் உதவியோடு ஏழ்மை நிலையைக் கடந்து பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் இத்தகைய கனவை எட்டியுள்ள அனுபிரியாவிடம் முதல்வர் வாழ்த்து குறித்து ஊடவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது கடவுளுக்கு நன்றி கூறுங்கள் என்று அவருடன் அமர்ந்திருந்த ஒருவர் கூறச் சொன்னார். அதற்கு பதிலளித்த அவர், ‘‘என்னுடைய திறமையும் மற்றும் பெற்றோரின் ஆதரவுமே என்னை விமானி ஆக்கியுள்ளது. இதில் கட வுளுக்கு நான் ஏன் நன்றி கூறவேண்டும்'' என்று கூறினார்.
- விடுதலை நாளேடு, 11 .9.19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக