பக்கங்கள்

புதன், 11 செப்டம்பர், 2019

அறிவியலைக் கொச்சைப்படுத்தும் அநாகரிகக் கூத்து


அறிவியல் படும்பாடு:


சந்திரயான் 2 - லேண்டர் வெற்றிக்காக யாகங்களாம்! பூசைகளாம்!! ஆனாலும் தோல்வியே!!!


புதுடில்லி, செப்.10 சந்திரயான் 2 லேண்டர் நிலவில் தரையிறங்கு வதற்கான பெருமுயற்சிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். உலகமே எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தது. இதில் வெற்றி கிடைத்தால் இந்தியாவுக்குப் பெருமைதான். ஆனாலும், தோல்வி ஏற்பட்டது என்பது வருத்தத்திற்குரியதே. ஆனாலும், வீடு தீப்பற்றி எரியும்போது, சுருட்டுக்கு நெருப்புக் கிடைத்தது என்பதுபோல, இந்து மத வியாபாரிகள் சிறப்பு யாகங்களையும், சிறப்பு வழிபாடுகளையும் நடத்துகிறார்கள். இதில் வருந்தத்தக்கது என்னவென்றால்,  இஸ்ரோ சந்திரயான் திட்டத்தின் தலைவரும், இஸ்ரோ விஞ்ஞானிகளும் இதில் ஈடுபட்டதுதான் மிகப்பெரிய கேலிக்கூத்து.

விவரங்கள் பின்வருமாறு:



மங்களூருவில் உடுப்பி கிருஷ்ணா மடத்தில் யாகம்.




யாகம் நடத்தியதற்கு நன்றி கூறும்  சந்திரயான் திட்டத்தின் தலைவர் சிவன்.




ராஜஸ்தானில் உள்ள இஸ்ரோ கிளை அலுவலகத்திற்கு வெளியே நடந்த யாகம்.




உத்தரப்பிரதேசம் வாரணாசியில் உள்ள பாணினி பெண்கள் கல்லூரியில் சந்திரயான் 2- இல் பொருத்தப்பட்ட விக்ரம் ஆய்வு வாகனம் நிலவில் வெற்றிகரமாக இறங்கி ஆய்வு செய்யவேண்டும் என்ற நோக்கில் வேதப்பாரம்பரிய குடும்பத்தில் இருந்து வந்த மாணவிகள் தலைமையில் யாகம்.




சந்திராயன் 2 ராக்கெட் மாடலை  வைத்து இஸ்கான் அமைப்பினர் கிருஷ்ணர் கோவிலில் நடத்திய யாகம்.




மும்பையில் பாபா அணு ஆராய்ச்சி நிலைய பணியாளர்கள் சார்பில் யாகம்.




காணாமல் போன விக்ரம் ஆய்வுக்கலனை விரைவில் கண்டுபிடித்து செயல்படவைக்க இஸ்ரோ பணியாளர் குடும்பத்தினர் மங்களூருவில்  யாகம்.




கோவை அலங்கார மாரியம்மன் கோவிலில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் யாகம்.


- விடுதலை நாளேடு, 10. 9 .19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக