பக்கங்கள்

வெள்ளி, 6 செப்டம்பர், 2019

காந்தியாரை பார்ப்பனர் மகாத்மா ஆக்கினதும், சுட்டுக் கொன்றதும் ஏன்?

காந்தியாரை பார்ப்பனர் எதற்காக மகாத்மா ஆக்கினார்கள்?


தோழர் காந்தியவர்கள், தனது கொள் கையை வெளியிட்டதில் :

1. நான் ஒரு சனாதன இந்து.

2. வேத - புராண - இதிகாச முதலிய தர்ம சாஸ்திரங்களில் எனக்கு நம்பிக்கை உண்டு.

3. பகவான் அவதாரங்களில் எனக்கு நம்பிக்கை உண்டு.

4. மறு பிறப்பில் எனக்கு நம்பிக்கை உண்டு.

5. வேத சாஸ்திரங்களில் கூறியுள்ள வர்ணாசிரம தர்மங்களில் எனக்கு நம்பிக்கை உண்டு.

6. விக்கிரக ஆராதனையில் எனக்கு நம்பிக்கை உண்டு என்று கூறினார், எழுதினார்; அதன்படி நடந்தார். ஆகவேதான் அவர் மகாத்மா ஆக்கப்பட்டார்.

 

காந்தியாரைப் பார்ப்பனர் ஏன் சுட்டுக் கொன்றனர்?


1. கடவுள் என்று ஒரு வஸ்து இருப்பதாக எனக்கு நம்பிக்கை இல்லை .

2. இந்து மதம் என்பதாக ஒரு மதம் இல்லை .

3. அல்லாவும் - இராமனும் எனக்கு ஒன்றுதான்.

4. பார்ப்பனர்கள் படிக்கவேண்டிய அவசியமில்லை .

5 வேதத்தைப் போலவே குர்ரானையும் மதிக்கிறேன்.

6. பலாத்காரமாய் சுவாதீனம் செய்து கொண்ட முஸ்லிம் பள்ளி வாசலை அவர்களுக்கு காலிசெய்து கொடுத்து விடவேண்டும், என்று சொல்லிவிட்டார்; ஆதலால் சுட்டுக்கொல்லப்பட்டார். புத்தரை விரட்டி, புத்த மதத்தைக் கொன்ற பார்ப்பனர் அவரை எப்படி விஷ்ணுவின் 10ஆவது அவதாரம் என்றார்களோ, அது போல் காந்தியாரை சுட்டுக் கொன்று விட்டு கொளுத்தி, அவர் சாம்பலை வைத்து கோவில் கட்டுகிறார்கள்.

காந்தியாரை ஒழித்தால் தான் தாங்கள் பதவி பெற்றுக் கொள்ளை அடிக்கலாம் என்று கருதியவர்கள் - ஒழிக்க, கொல்ல உடந்தையாக இருந்த இவர்கள் யாரோ அவர்கள் தான் பேச்சுக்குப் பேச்சு காந்தி பேரைச்சொல்லிக் கொண்டு அவர் பேரால் ஓட்டு கேட்கிறார்கள். பார்ப்பனர் தந்திரத்திற்கு ஈடாக உலகில் வேறு யார் தந்திரத்தையும் கூற முடியாது.

- விடுதலை ஞாயிறு மலர், 31. 8. 19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக