சிந்தனைச் சிற்பி ம.சிங்காரவேலர் (18.2.1860 - 11.2.1946) தமிழகத்தில் தோன்றிய சிந்தனையாளர்களுள்ளும், போராளிக ளுள்ளும் தலை சிறந்தவர். இவர் தொடக்க காலத்தில் காங்கிரஸ் கட்சியில் சென்னை மாவட்ட செயற்குழு உறுப்பின ராகவும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயற்குழு உறுப்பினராகவும், தொண்டர் படைத்தளபதியாகவும் இருந்தவர். காங் கிரஸ் கட்சியில் இருந்தபோது 1925ஆம் ஆண்டில் சென்னை யானைக்கவுனி பகுதி யிலிருந்து சென்னை நகராண்மைக் கழகத் தின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் சென்னை மாநகராட்சியின் உறுப்பி னராக இருந்தபொழுது பல வரலாற்று சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.
இந்தியத் துணைக்கண்டத்தில் பொது வுடைமை இயக்கம் கால் கொள்வதற்கு முன்பே, தனியார் துறைகளை மக்கள் நலம் கருதி, அரசுடமை ஆக்க வேண்டும் என்று முதன்முதலில் உறுதியாக உழைத்தவர் அவர்.
சிங்காரவேலர் பல அரசியல் சமுதாய செயல்பாடுகளிலும், அறிவுத் துறைகளிலும் அவர் இந்திய துணைக் கண்டத்திலேயே முன்னோடியாக விளங்கியுள்ளார். இந்தியா வில் 26.12.1925இல் பொதுவுடைமை இயக் கத்தை வெள்ளை ஆதிக்கத்தின் போதே கான்பூரில் பொதுவுடைமை இயக்கத்தின் கொடியை ஏற்றித் தொடங்கி வைத்தவர் அவரே. அன்று முதல் அவரது இறுதிக் காலம் வரை போர்க்குணம் மிக்க பொது வுடைமை தலைவராகவே விளங்கினார்.
இந்தியாவில் முதன்முதலாக 1923ஆம் ஆண்டில் தொழிலாளர் திருநாளான ‘மே’ தினத்தை இரு இடங்களில் சென்னையில் கொண்டாடியவர் இவர்.
மாமேதை லெனின் காலமான பொழுது அதற்காக இரங்கல் தீர்மானத்தை காங்கிரஸ் நிறைவேற்ற வேண்டுமென முதன்முதலில் வழிகாட்டியவர் அவர். மற்றும் பாசிசம் நாசிசம் ஆகியவற்றின் பேராபத்தை அவர் நன்குணர்ந்து அவற்றைக் குறித்து அரிய கட்டுரைகளை வரைந்துள்ளார். பஞ்சாப் படுகொலை நிகழ்ந்த போதும், சைமன் கமிஷன் வருகையின்போதும் ஒத்துழை யாமை இயக்கத்தின் போதும் அனைத்து மக்களின் கருத்தை திரட்ட நீதி வேண்டி வீதிக்கு வந்து போராடியவர் அவர். இத் தனை தனி ஆளுமைகளையும், சிறப்புக ளையும் பெற்றவராகச் சிங்காரவேலர் இருந்ததால்தான், புரட்சிக்கவிஞர் பாரதி தாசன் சிங்காரவேரை “போர்க்குணம் மிகுந்த சொல் முன்னோடி, பொதுவுடை மைக்கு ஏகுக அவன் பின்னோடி” என்று அவரைப் போற்றிப் பாராட்டினார். அரசி யல் செயல்பாடுகளைப் போலவே, எழுத் துத் துறைகளிலும் சிங்காரவேலர் முன் னோடியாக விளங்கியுள்ளார். சென்னை மாநகராட்சியில் நகராண்மைக் கழக உறுப்பினராக பொறுப்பேற்றவர்களுள் முதன்முதலில் தாய்மொழியில் பேசியவர் இவரே. மற்றும் அவரவர் தாய்மொழியில் அவரவர் பேசத் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றிய பெருமையும் அவருக்கு உண்டு.
சிங்காரவேலர் ஆங்கிலத்திலும் தமிழிலும் சிறந்த எழுத்தாளர், பல மொழி அறிந்தவர். அவர் இந்து, நியூ இந்தியா, சமதர்மம், புரட்சி, குடிஅரசு, புது உலகம், லேபர்கிசான் கெஜட் முதலிய இதழ்களில் எழுதி வந்ததோடு லேபர்கிசான் கட்சியை யும் அமைத்தார். தொழிற்சங்கங்கள் இயங் குவதற்கு வழிகாட்டியாகவும் இருந்தார். சென்னை நகராண்மைக் கழக உறுப் பினராக இருந்த போது மக்களுடைய அன்றாடக் குறைகளைத் தீர்த்துவைப்பதில் அக்கறை காட்டினார். விலைவாசி ஏற்றம், கடைகள் (கொத்தவால் பசார், மூர்மார்க் கெட்) மூடப்படுதல் ஆகியவற்றை எதிர்த்து மக்கள் கிளர்ந்தெழுந்தபோது ஆதரித்து முன்னின்றார். உள்ளாட்சி மன்றங்களை மக்கள் நலன்களைப் பெருக்கும் போராட் டக் கருவிகளாகக் கருத வேண்டும் (Instruments of struggle) என்னும் மார்க்சியக் கோட்பாட்டை நடைமுறைப்படுத்திக் காட் டிய பெருமை சிங்காரவேலரைச் சாரும்.
சிங்காரவேலர் பொதுவுடைமைக் கொள்கைகளைப் பரப்புவதற்காகக் காங் கிரஸ் கட்சியையும், சுயமரியாதை இயக் கத்தையும், பயன்படுத்திக்கொண்டார். அமெரிக்கச் சிந்தனையாளரான இங்கர் சால் எம்.என்.ராய் கருத்துகள் அதிகம் பேசப்பட்டன. சுயமரியாதை இயக்கம் ஜாதி வேறுபாடுகளையும், மூடப்பழக்க வழக் கங்களையும் சமூக, ஏற்றத்தாழ்வுகளையும், சாடிப் பிரச்சாரம் செய்த காலத்தில் எதிர் மறைப் போக்குகளிருந்து அதனை விடு வித்து ஆக்கப்பூர்வமான பகுத்தறிவு வயப் பட்ட பொதுவுடைமைச் சமுதாயமும் தேவை என்பதனை ம.சிங்காரவேலர் வலி யுறுத்திப் பல கட்டுரைகளையும் நூல்களை யும் படைத்தார். சிங்காரவேலரின் எழுத்தாற் றலாலும், சொல்லாற்றலாலும் பணியினா லும் கவரப்பட்ட தந்தை பெரியாரின் சிந்தனையும் பொருள் முதல்வாதத்தின் பக்கம் திரும்பியது. புதிய சமுதாயம் கண்ட லெனினையும் சோவியத் நாட்டையும் மனமாரப்பாராட்டத் தலைப்பட்டார். சோவியத் நாட்டின்பால் பற்று உருவான காரணத்தினால் 1931ஆம் ஆண்டு தந்தை பெரியார் எஸ்.இராமநாதன் உடன்வர சோவியத் நாட்டுக்கும் வேறு பல நாடுகளுக்கும் சென்று 1932ஆம் ஆண்டு நாடு திரும்பினார். ம.சிங்காரவேலரின் தூண்டுதலும் இதற்குக் காரணமாக அமைந் தது என ஊகிப்பது தவறில்லை. 1932ஆம் ஆண்டு டிசம்பர் 28, 29 அன்று ம.சிங்கார வேலர் பங்கு பெற்ற ஈரோடு மாநாட்டில் சுயமரியாதை சமதர்மக் கட்சி அமைக்கப் பட்டது. இது சுயமரியாதை இயக்க வரலாற் றில் மிகச் சிறந்ததொரு அத்தியாயம். தந்தை பெரியார் செல்வாக்குப் பெருகிற்று. பல இடங்களில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் நாத்திகர், பகுத்தறிவு, பொது வுடைமை மாநாடுகள் நடைபெற்றன. 175 கிளைகளுக்கும் அதிக மாகச் சுயமரியாதை இயக்கக் கிளைகள் இயங்கத் தொடங்கின.
சுயமரியாதை இயக்கத்தில் பொதுவுடை மைப் பிரச்சாரமும் சிந்தனைச்சிற்பி சிங் காரவேலரின் படைப்புகளும் பிரிட்டிஷ் அரசைக் கதிகலங்க வைத்தன. சர். ஏ.டி. பன்னீர் செல்வம், சர். கேவி ரெட்டி நாயுடு, சர். ஆர். கே. சண்முகம் செட்டியார், பொப் பிலி ராஜா போன்றோர் அஞ்சினார்கள். 1934 ஆம் ஆண்டு மார்ச் 4 அன்று முதன்முதலில் தமிழ்நாடு சுயமரியாதைச் சமதர்ம மாநாடு நடைபெற்றது.
சமூகச் சீர்திருத்த இயக்கமான சுய மரியாதை இயக்கம் கண்ட பெரியார் 1932ஆம் ஆண்டு சோவியத் நாடு சென்று வந்த பிறகு தமிழ்ச் சமுதாயத்தில் உருவான எழுச்சிக் கண்டு பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் அச்சம் கொண்டனர். நீதிக்கட்சி தலைவர் களைப் பயன்படுத்திக்கொண்டது அரசு. பெரியாரும் சுயமரியாதை இயக்கத் தலை வர்களும் நிர்ப்பந்தத்துக்கு உள்ளாயினர். அடக்குமுறைக்கு உள்ளானவர்கள் என்று அச்சுறுத்தப் பெற்றனர். அடக்குமுறைக்கு ஆளானால் பெரியாரின் சமூக சீர்திருத் தங்களும் பாதிக்கப்படும் என்று எச்சரித்து, சமூக சீர்திருத்தமே முதன்மையானது எனக்கருதி தந்தை பெரியார் ஒரு சமூகச் சீர்திருத்தத் திட்டம் தீட்டி, தமிழ்நாடு காங்கிரசுக்கும், நீதிக்கட்சிக்கும் அனுப்பி வைத்தார்.
நீதிக்கட்சி இதற்காகவே எதிர்பார்த்துக் காத்திருந்தது போலத் திட்டத்தை ஏற்றுக் கொண்டது. கலகலத்துப் போயிருந்த நீதிக் கட்சியைப் பெரியார் ஆதரிக்க வேண்டியவ ரானார்.
தந்தை பெரியார் நீதிக்கட்சியில் சேரும்போது அக்கட்சி மக்கள் செல்வாக் கிழந்து ஆதரவற்றிருந்தது. பெரியார் வருகையால் உயிரூட்டப் பெற்றது.
1925 முதல் 1936 வரையிலான காலக் கட்டத்தில் சிங்காரவேலர் வரைந்த கட்டு ரைகளும் எழுதிய நூல்களும் பொருள் பொதிந்தவை. ஆங்கிலத்தில் கூறுவ தானால் “Creative Period” எனலாம். இன்றைக்கும் அவை பொருந்துமென உணரலாம். சிங்காரவேலர் கருத்துக்களின் வீச்சு சுயமரியாதை ஏடுகள் மூலம் மக்களை சென்று அடைந்தது. இதே காலகட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் சமதர்மம், பெண் விடுதலை என்பனவற் றைப் பற்றி தீவிரமாக பிரச்சாரம் செய்து வந்தார்.
சிங்காரவேலரைப் பெரியார் உயர்வாக மதித்துச் சிறப்பித்துப் பாராட்டி, சுயமரி யாதை இயக்க மாநாடுகளில் அவரது படங்களை திறந்து வைத்து பாராட்டி உரை நிகழ்த்தியுள்ளார்.
தமிழகத்தில் புதிய சமத்துவ சமுதாயம் அமைக்கும் பொருட்டு உழைத்தவர்களின் முன்னோடியாக விளங்கியவர்களில் தந்தை பெரியாரும் - சிங்காரவேலரும் முக் கியமானவர்கள். சிங்காரவேலரின் நினைவு நாளில் இதை நினைவுக்குக் கொண்டு வருவது சிறப்பானதாகும்.
தமிழகத்தில் முதன்முதலில் பவுத்த சங்கம் அமைத்து ஜாதி வேறுபாடுகளையும், தீண்டாமையையும் களைய வாரந்தோறும் கருத்தரங்கங்களை இராயப்பேட்டையில் தொடர்ந்து நடத்தியவர் அவர். தமிழ்த் தென்றல் திரு. வி.க. அவர்கள் “டார்வினி சத்தையும், மார்க்சியத்தையும் சிங்கார வேலரிடம் தான் கற்றேன்” என்று தம் “வாழ்க்கைக் குறிப்புகள்” என்ற நூலில் குறிப்பிட்டிருப்பது இங்கு நினைவு கூரத் தக்கது.
மார்க்சியப் பொருளாதாரத்தை சுருக்க மாக “மூலதனம்“ என்றும் நூலில் விலகி யதைப் போன்றே கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கைகளையும் வரலாற்றுப் பொருள் முதல் வாதத்தையும் தமிழில் முதன்முதலில் வரைந்து காட்டியவர் அவரே.
சிங்காரவேலர் எழுதிய கட்டுரைகளை யும், நூல்களையும் விஞ்ஞானம், மூடநம் பிக்கை குறித்து அவரது கட்டுரையையும் தனித்தனி நூலாகத் தந்தது தந்தை பெரியாரின் குடிஅரசு பதிப்பகமாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக